தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹிட் பேய் சினிமா ஜெகன் மோகினி.பின் முனி காஞ்சனா, ,சந்திரமுகி,யார்?,யாமிருக்கபயமே.திகில் கம் பேய்ப்படங்க்க்ளுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி உண்டு.உருட்டுக்கட்டை காமெடி ஸ்பெசலிஸ்ட்டான சுந்தர் சி முதன் முதலாக திகில் கம் பேய்ப்படத்துக்கு வந்திருக்கார்.எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்ப்போம்.
பேய்ப்படத்துக்கு எப்பவும் ஒரே கான்செப்ட் தான். ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு வீடு அல்லது பங்களாவுக்கு யாராவது குடி வருவாங்க.அங்க ஒரு பேய் குத்த வெச்சுக்காத்திருக்கும்
கோவை சரளா அரண்மனை வாரிசு. அரண்மனைல இருக்கும் வேலைக்காரனான மனோபாலாவை இழுத்துக்கிட்டு ஓடிடுது.ஆளைக்கண்டுபிடிச்சு மாளிகைக்கு கூட்டிட்டு வராங்க.
அங்கே ஜமினின் மத்த வாரிசான ஆண்ட்ரியா புருசன் வினய் கூட இருக்காரு
அந்த மாளிகை ல ஏதோ பேய் நடமாட்டம் இருக்கு . காமெடி வேணுமேங்கறதுக்காக சந்தானம் ஆஜர் ஆகறாரு . பேயைக்கண்டு பிடிக்கும் வக்கிலா சுந்தர் சி வர்றாரு.
இவங்க பண்ணும் காமெடி அலப்பறைகள் தான் இடைவேளை வரை .
ஃபிளாஸ் பேக்
வினய் யை காதலிக்கும் ஹன்சிகா ஊர்ப்பெரியமனுஷங்க செய்யும் கோயில் கொள்ளையைப்பார்த்த சாட்சி . அவங்க 4 பேரும் சேர்ந்து ஹன்சிகாவைக்கொலை பண்ணிடறாங்க .
ஹன்சிக பேயா மாறி வர்றதுக்குள்ளே வினய்க்கு ஆண்ட்ரியா கூட மேரேஜ் ஆகிடுது .
சூரிய கிர\ஹணத்து அன்னைக்கு வினய் கூட பேய் “சேர்ந்தா” நிரந்தரமா அவர் கூடவே இருக்கலாம். இதுதான் பேயோட பிளான் .
காசா? பணமா? 2 பேரும் சேர்ந்துட்டுப்போறாங்கன்னு விடாம கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம பூசாரிங்க கூட சேர்ந்து சுந்தர் சி எப்படி அந்த கில்மா பிராசஸ் சை தடுக்கறார்? என்பதுதான் க்டுப்படிக்கும் க்ளைமாக்ஸ் ( சிரிப்புதான் . கில்மாவை யார் எங்கே எப்போ தடுத்தாலும் நாம கடுப்பாகிடுவோம் . சீன் போச்சே? )
சந்திர முகி படம் எனும் மயிலைப்பார்த்து வான் கோழி ஆட்டம் போட்ட கதை தான் . ஆனா வான் கோழி காமெடி ல பழம் தின்னு கொட்டை போட்ட சுந்தர் சி என்பதால் ஏ பி சி என எல்லா செண்ட்டர்ல யும் மீடியம் ஹிட் ஆகும் அளவு குவாலிட்டி
ஹீரோவா வினய் . இவர் ஆண்ட்ரியா , லட்சுமிராய் , ஹன்சிகா என 3 ஹிரோயின்களோடு சுத்துவது , கமெண்ட் அடிப்பது எல்லாம் நம்மைக்கடுபடிக்கிறது ( யாரோ ஒரு பொண்ணு கூட ஒருத்தன் கடலை போட்டாலே தமிழன் கடுப்பாவான் . அட்டர் டைம்ல 3 பேர் கூட கடலை போட்டா? )
லட்சுமிராய் இந்தப்படத்துக்கு ஊறுகாய் மாதிரி . சும்மா வந்துட்டு காட்டிட்டுப்போகும் ஷோ கேஷ் கேரக்டர் . சும்மாவே பாப்பா காட்டு காட்டுனு காட்டும் . கிளாமர் ரோல்-னா கேட்கனுமா? பின்னுது .
ஹன்சிகா தான்ன் பின் பாதி நாயகி . ரொம்ப பாவமான கிராமத்து கேரக்டர் . நோ கிளாமர் . அய்யோ பாவம் . ஒரு வேளை சிம்பு கண்டிஷன் போட்டிருப்பார் போல . காத்துல கூட முந்தானை விலகலை . அட போங்கப்பா
லிப் லாக் லெஜ்ண்ட் ஆண்ட்ரியா தான் படத்தின் மெயின் குயின் . குற்றாலத்துல மெயின் ஃபால்ஸ் மாதிரி . பேயாக மாறியதும் அவர் நடிப்பு பிரமாதம் . அதுவும் க்ளைமாக்சில் வினயை ரேப்ப அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆடியன்சிடையே அமோக ஆதரவு . ஆ ஆ அப்படித்தான் விடாதே ரேப்பு ரேப்பு அப்டிங்கறாங்க . அய்யோ ராவணா !!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் தான் படத்தின் ரிலாக்ஸ் க்கு . படம் நெடுக வந்து பஞ்ச் பேசறார் , அங்கங்க சூரிக்கு கவுண்ட்டர் தர்றார்
படத்தில் 2 பாட்டு சுமாரா இருக்கு .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 சுந்தர் சி , வினய் , ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், , சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளத்தை சரியாக வேலை வாங்கியது
2 காமெடி சூப்பர் ஸ்டாரான சந்தானம் இதுல ஒரு ரோல் பண்ணி இருப்பது படத்தின் பெரிய +.
3 அரேபியன்
குதிரை என வர்ணிக்கப்படும் லட்சுமிராய் வரும் காட்சிகள் எல்லாம்
திகிலால் பயந்த ரசிகனுக்கு பஞ்சாமிர்தம் சாப்பிட்டதிருப்தி
4 போஸ்டர் டிசைன் , டி வி ப்ரமோ என அனைத்து மார்க்கெடிங் உத்திகளும் ஓக்கே ரகம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 நீண்ட நாட்களாகப்பூட்டப்பட்ட பங்களா வில் புறாக்கள் பறப்பது எப்படி ?
2 சந்தானம் அண்ட் கோ மாளீகை வெளில எல்லார்ட்டயும் பேசிட்டு இருக்கும்போது பகல் . சூரிய வெளிச்சம் . அப்பவே அப்படியே கேமரா அரண்மனை உள்ளே போகும்போது இருட்டு ஆல் லைட்ஸ் ஆன். எப்படி?
3 கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசான ஜமீன் பார்ட்டி வில்லன் சரவணன் எப்படி சாதா நோக்கியா 1100 மாடல் போன் வெச்சிருக்கார் ?
4 படத்தில் உள்ள அனைவருக்கும் ஆண்ட்ரியா உடம்பில் ஹன்சிகா பேய் இருக்குனு தெரியுது. ஆனா காதலன் வினய்க்கு மட்டும் தெரியலையே? எப்படி ?
லிப் லாக் லெஜெண்ட் பேய் ஆண்ட்ரியா விடம் சில கிளு கிளு கேள்விகள்
1 . ஏம்மா ஜெகன் மோகினி . ஹன்சிகாவா இருக்கும்போது உன்னை கொலை பண்ணிட்டாங்க செத்துட்டே . ரைட் . பேயா மாற 2 வருசம் ஆகுமா? வினய்க்கு மேரேஜ் ஆகும்போது ஏன் தடுக்கல?
2 வினயை அடையனும்க்றதுதான் உங்க லட்சியம்னா ஆண்ட்ரியா வா சத்தம் இல்லாம மேட்டரை முடிக்காம ஏன் ஆர்ப்பாட்டம் பண்ணி காட்டிக்குடுக்கறிங்க ?
3 வந்த வேலையே வினயை ரேப் பண்றதுதான் . அதுக்கு அதிக பட்சம் 10 நிமிசம் ஆகுமா? எதுக்கு மெனெக்கெட்டு அத்தனை நாள் அந்த பங்களாவில் தங்கி எல்லாரையும் பயமுறுத்திட்டு இருக்கே?
4 பேயா வரும்போது கோயில் உள்ளே போக முடியலை . ரைட்டு . ஆனா குங்குமம் மட்டும் வெச்சது எப்படி ?
மனம் கவர்ந்த வசனங்கள்
பாட்டிக்கு ஸீரியஸ்.ஆம்புளன்ஸ்க்கு போன் போடு.
சந்தானம் =108 க்கு போன் போட்டா ஏண்டா 1008 தடவை இம்சை பன்றீங்கங்கறாங்க
சந்தானம் டூ மனோபாலா = முருங்கைக்காய் சாப்ட்டா மூடு வரும்பாங்க.முருங்கைக்கா மாதிரி இருந்துட்டு மூடு வந்தவனை இப்போதான் பாகறேன்
எல்லாரும் காதலிச்சு பைத்தியம் ஆவாங்க இவன் பைத்தியம் ஆகி இப்ப லவ் பண்றான் -,சந்தானம் டூ மனோபாலா
லட்சுமிராய் = அத்தை.பின்னால கொஞ்சம் பாருங்க
கோவை சரளா = கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு
அய்யோ.என் பின்னால் இல்ல.எனக்குப்பின்னால் பாருங்க
மனோபாலா = எல்லாரும் நினைக்கற மாதிரி நான் சண்டை போட கம்பெடுக்கலை.நிக்க முடியல.ஒரு சப்போர்ட்டுக்கு இந்த கம்பு
சுந்தர் சி = சாப்பிட என்ன இருக்கு?
சந்தானம் = குஷ்பூ இட்லி இருக்கு
சந்தானம் பஞ்ச் = கெட்ட பையன் சார் இந்த பால் பாண்டி
சந்தானம் உள்குத்து பஞ்ச் டூ சூரி
=,இவன்லாம் எனக்கு காம்ப்ப்ட்டிசனே கிடையாது.ஏதோ கேப் ல வந்துட்டான்
உலகத்துல இருக்கற எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு வீக் பாய்ன்ட் இருக்கும்
லட்சுமிராய் = இங்கே பாத்ததை வெளில சொல்லிட மாட்டியே?
சந்தானம்.=,சத்தியமா சொல்ல லை்.டவுட்னா நீ கட்டி இருக்கும் டவலை கழட்டிப்போடு.தாண்டறேன்
காதல் விசயத்துல மட்டும் நீ கஜினி முகமதா மாறனும்
சந்தானம் =மாயா இந்து தானே? நான் ஏன் முஸலீம் ஆகனும் ?
சந்தானம் = என் பாட்டி சாதா பாட்டி அல்ல????
ஜமீன் தார்க்கு வைப்பாட்டி
சந் = குழந்தைக்கு பாடம் சொல்லித்தாடான்னா கிட்டப்பார்வைனு அளப்பே.இப்ப்போ 500 அடி தொலைவில் நிற்கும் பிகரோட இடுப்பு மச்சம் மட்டும் தெரியுதா?
சந் = டேய்.என்னடா பண்றே?
காதலி மேல கல் எறிஞ்சு விளையாடறேன்
சந் = அவ என்ன குளமா? கிணறா?,கல் போட்டு விளையாட?
பேயைப்பாத்தா செவுள் ல அடிப்பேன்னியாமே?
சந் = அய்யோ.இல்லீங்.பந்தைக்கூட சுவத்துல அடிச்சது இல்ல.என்னை விட்டுடுங்க
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
சிவப்பு பனியன் போட்ட லட்சுமிராய் ஓப்பனிங் அசத்தல்கள்
வினய் தான் ஹீரோவாம்.அதைக்கூட ஜீரணிச்சுக்கலாம்.ஜோடி லிப் லாக் லெஜெண்ட் ஆன்ட்ரியா.அய்யய்யோ
காரைப்பல் கட்டழகர் வினய் சிரிக்கறாரு.அடடே
அரண்ம்னை = லட்சுமிராய் ,ஆன்ட்ரியா கிளாமர் ,சந்தா னம் காமெடி ,மனோபாலா காமெடி யுடன் கலகலப்பான இடைவேளை
சி பி கமெண்ட்-அரண்மனை - முன் பாதி காமெடி , பின் பாதி கதை , கிளாம்ர். ஏ பி சி யில் மீடியம் ஹிட் - விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 /5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.5 / 5
நெய்வேலி மகாலட்சுமியில் படம் பார்த்தேன்
ஆடாம ஜெயிச்சோமடா - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 09/blog-post_28.html
ஆடாம ஜெயிச்சோமடா - சினிமா விமர்சனம்
a
a
a
a
1 comments:
இந்த மாதிரி எல்லாம் விமர்சனம் எழுதி எங்களைக் காக்கும் (படம் பார்க்காமல்) சிபி அண்ணனுக்கு நெம்ப நன்றி.. ஆனந்த விகடன் எல்லாப் படத்துக்கும் நாற்பதுக்கும் மேல் தான் தர்றாங்க போல..
Post a Comment