Friday, September 19, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19 9.2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

19 9 14 ரிலீஸ் ரிசல்ட் கணிப்பு வரிசைப்படி 1 அரண்மனை ( திகில் *காமெடி ,A.B.C) 2 ஆடாம ஜெயிச்சோமடா (த்ரில்லர் கா மெடி B) 3 ஆள் (B), 4 ரெட்ட வாலு



1  அரண்மனை-

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை. 


இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.


“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி அரண்மனை எங்கு தேடியும் அமையவில்லையாம். மேலும் தேடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்த சுந்தர்.சி ஐதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். 


மிகப் பிரமாண்டமான இந்த அரண்மனையை கோடி ரூபாய் செலவில் 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு, பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி. 
அரண்மனை படத்தில் தான் சம்பந்தப் பட்டுள்ள காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று வந்துள்ள செய்திகளை நடிகை ராய் லக்ஷ்மி மறுத்துள்ளார். மேலும், அவருக்கும் இயக்குனர் சுந்தர்.சி.க்கும் பனிப்போர் நிலவுவதாகவும் வெளியாகியுள்ளது வெறும் வதந்திதான் என்றும் அவர் கூறியுள்ளார்.



இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ள அவர், தான் முழுவதும் அந்தப் படத்தைப் பார்த்ததாகவும், தான் நடித்துக் கொடுத்த எந்தக் காட்சியும் வெட்டப்படவில்லை என்றும், தனக்கும் சுந்தர்.சி.க்கும் எந்தவிதக் கருத்துமோதலும் தகராறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் அழகாக வெளிவந்துவிட்டது, இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.


இரும்புக் குதிரை, அரண்மனை இரண்டின் வெற்றியையும் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
அரண்மனை ஹாரர் படமாக இருந்தாலும் சுந்தர்.சியின் வழக்கமான காமெடிகளும் இப்படத்தில் இருக்குமாம். தெய்வசக்தி நிறைந்த பெண்ணாக ஹன்சிகா இப்படத்தில் நடித்திருக்கிறாராம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் அவருக்கு இருக்குமாம். இப்படத்தில் முக்கிய வேடமொன்றிலும் சுந்தர்.சி நடித்திருக்கிறார்.


வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரண்மனை படத்தை அண்மையில் தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். படத்தில் வன்முறை, ஆபாசம் இல்லை என்பதால் அரண்மனை படத்துக்கு தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தனர்.



ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அரண்மனை படத்தில் பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். குழந்தைகளுடன் பெரியவர்களும் அமர்ந்து பார்க்கும் படம் என்ற அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.



யு/ஏ சான்றிதழ் கொடுத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே அரண்மனை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கவலையில் இருக்கிறார்கள்.


ஒரு படத்தை இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து தயாரிப்பார்கள்.. இது வழக்கமானதுதான். ஆனால் இரண்டு பேர் சேர்ந்து ஒரு படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள் வேலையைச் செய்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதே..?



வினய், ஹன்ஸிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடிப்பில் சுந்தர் சி தயாரித்து இயக்கியிருக்கும் ‘அரண்மனை’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து திரையிடப் போகிறார்களாம். இன்றைக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.




நேற்றுவரையிலும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த அரண்மனை படத்தை திரையிடப் போவதாக சொல்லி வந்தது. அதற்குள் ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. திரு.இராம.நாராயணனின் மறைவுக்கு பின்பு அவருடைய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.




இராம.நாராயணன் படங்களைத் தயாரிக்காமல் இருந்தபோது விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி திரையிட்டு வந்தார். அந்த அனுபவத்தில் அவருக்கென்று சில குறிப்பிட்ட திரையரங்குகள் எப்போதும் காத்திருக்கும். அவைகளோடு இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸின் படங்களை திரையிடும் வழக்கமான தியேட்டர்களும் இந்த அரண்மனைக்காக புக் ஆகியிருக்கும் போல தெரிகிறது..!



ஆக.. இந்த ‘அரண்மனை’ நல்ல வெள்ளிசத்தில்தான் வரப் போகிறது..!


அரண்மனை - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/09/blog-post_38.html



2  ஆடாம ஜெயிச்சோமடா -
இயக்குனர் பத்ரி தனது சொந்த கம்பெனி மூலம் தயாரித்து, இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா.
“வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. இப்படத்தில் கருணாகரன், பாபி சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், அபிஷேக், விச்சு, கெளதம், சித்ரா லட்சுமணன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து காமெடி கதையம்சத்தில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தமிழ்ப்படம், சென்னை 28, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை - படங்களின் நாயகன் சிவா, இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.
சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.  இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 19ஆம் தேதி படம் வெளியாகிறது.




தில்லு முல்லு ரீமேக் ஹிட் படம்தான். ஆனாலும் பத்ரிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் சும்மா இருப்பது. தானே தயாரிப்பாளராகிவிட்டார். இவரது படங்கள் பி அண்ட் சி ஆடியன்சுக்குதான் பிடிக்குமாம். அதனால் தன்னோட கம்பெனிக்கு பி அண்ட் சி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தனது சொந்த கம்பெனி தயாரிப்பில் டைரக்ட் செய்யப்போகும் படத்துக்கு ஆடாம ஜெயிப்போமடா என்று டைட்டில் வைத்திருக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகர்களாக அறிமுகமான பாலாஜி, சிம்ஹா, கர்ணா, ஆகியோர் ஹீரோக்கள், அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஹீரோயின். எழுத்தாளர் சாண்டியல்யன் பேரன் ஷான் ரோல்டன் மியூசிக் டைரக்டராக அறிமுகமாகிறார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை-28 மாதிரி லோக்கல் கிரிக்கெட் காமெடி கதையாம். ஒரு டீம் கிரிக்கெட் ஆட்டத்தில் பல பிராடுகளைச் செய்து சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடும். அந்த டீமின் போங்காட்டத்தை கண்டுபிடித்து நிஜ டீம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதுதான் படத்தோட ஸ்டோரியாம்
- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/15665/cinema/Kollywood/Director-Bathiri-turn-as-director.htm#sthash.fUbhUhvf.dpuf
தில்லு முல்லு ரீமேக் ஹிட் படம்தான். ஆனாலும் பத்ரிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் சும்மா இருப்பது. தானே தயாரிப்பாளராகிவிட்டார். இவரது படங்கள் பி அண்ட் சி ஆடியன்சுக்குதான் பிடிக்குமாம். அதனால் தன்னோட கம்பெனிக்கு பி அண்ட் சி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தனது சொந்த கம்பெனி தயாரிப்பில் டைரக்ட் செய்யப்போகும் படத்துக்கு ஆடாம ஜெயிப்போமடா என்று டைட்டில் வைத்திருக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகர்களாக அறிமுகமான பாலாஜி, சிம்ஹா, கர்ணா, ஆகியோர் ஹீரோக்கள், அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஹீரோயின். எழுத்தாளர் சாண்டியல்யன் பேரன் ஷான் ரோல்டன் மியூசிக் டைரக்டராக அறிமுகமாகிறார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை-28 மாதிரி லோக்கல் கிரிக்கெட் காமெடி கதையாம். ஒரு டீம் கிரிக்கெட் ஆட்டத்தில் பல பிராடுகளைச் செய்து சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடும். அந்த டீமின் போங்காட்டத்தை கண்டுபிடித்து நிஜ டீம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதுதான் படத்தோட ஸ்டோரியாம்
- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/15665/cinema/Kollywood/Director-Bathiri-turn-as-director.htm#sthash.fUbhUhvf.dpuf

தில்லு முல்லு ரீமேக் ஹிட் படம்தான். ஆனாலும் பத்ரிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் சும்மா இருப்பது. தானே தயாரிப்பாளராகிவிட்டார். இவரது படங்கள் பி அண்ட் சி ஆடியன்சுக்குதான் பிடிக்குமாம். அதனால் தன்னோட கம்பெனிக்கு பி அண்ட் சி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தனது சொந்த கம்பெனி தயாரிப்பில் டைரக்ட் செய்யப்போகும் படத்துக்கு ஆடாம ஜெயிப்போமடா என்று டைட்டில் வைத்திருக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகர்களாக அறிமுகமான பாலாஜி, சிம்ஹா, கர்ணா, ஆகியோர் ஹீரோக்கள், அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஹீரோயின். எழுத்தாளர் சாண்டியல்யன் பேரன் ஷான் ரோல்டன் மியூசிக் டைரக்டராக அறிமுகமாகிறார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை-28 மாதிரி லோக்கல் கிரிக்கெட் காமெடி கதையாம். ஒரு டீம் கிரிக்கெட் ஆட்டத்தில் பல பிராடுகளைச் செய்து சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடும். அந்த டீமின் போங்காட்டத்தை கண்டுபிடித்து நிஜ டீம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதுதான் படத்தோட ஸ்டோரியாம்




ஆடாம ஜெயிச்சோமடா  - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/09/blog-post_28.html

 



3  ஆள் -
சுசி கணேசனின் உதவியாளர் ஆனந்த கிருஷ்ணா இயக்கி வரும் படம் "ஆள்". இதில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திகா ஷெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.

சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை செய்யும் விதார்த், சென்னைக்கு தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். அவரை இங்கு ஒரு கும்பல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்ய சொல்கின்றனர். அதி பயங்கரமான அந்த காரியத்தை அவர் செய்கிறாரா? அவரை ஏன் அந்த கும்பல் செய்ய வைக்கிறது என்பதற்கு சிக்கிமில் நடந்த ஒரு சம்பவம் காரணம். இதுவே படத்தின் கதை.

இப்படத்தை ஆக்ஷ்ன் கம் த்ரில்லராக இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணா. ஜோகன் இசையமைக்கிறார், உதய்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ தயாரிக்கிறார். 








  • படம் : ஆள்
  • நடிகர் : விதார்த்
  • நடிகை : ஹார்த்திகா ஷெட்டி
  • இயக்குனர் :ஆனந்த கிருஷ்ணா 

  • சேரனின் சி2ஹெச் நிறுவனம் திரைப்படங்களை டிவிடி களாக மாற்றி வீட்டிற்கே கொண்டு சேர்ப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பல இயக்குநர்களும் பாராட்டு தெரிவித்து மட்டுமல்லாமல் தங்கள் படங்களின் டிவிடி உரிமையை சி2ஹெச் நிறுவனத்துக்கு அளித்துள்ளனர். இந்த நிலையில் சௌந்தர்யன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விடியல் ராஜு தயாரித்த ஆள் படத்தின் டிவிடி உரிமை சி2ஹெச் நிறுவனத்துக்கு இல்லை என்று கூறியுள்ளார்.


    மைனா விதார்த்தின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கிய ஆள் படத்தின் தமிழக உரிமையை ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் வாங்கி இருந்தார். வேறு சில படங்களையும் அவர் வாங்கி இருந்ததினால் அவற்றை வெளியிட்ட பிறகு ஆள் படத்தை வெளியிட போவதாக தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறார் சதீஷ்குமார்.



    ஆள் படத்தின் தயாரிப்பாளரான விடியல் ராஜு ஆள் படத்தை வெளியிட சதீஷ்குமார் முயற்சி செய்யவில்லை என்பதால் அவர்களின் ஒப்பந்தத்தை தளர்த்தி விட்டு, தானே ஆள் படத்தை வெளியிட்ட முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையில், சி2ஹெச் நிறுவனத்துக்கு ஆள் படத்தின் டிவிடி உரிமையை தருவதாக சதீஷ்குமார் கூறி இருந்தார் ஆனால் விடியல் ராஜு அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.

     
    ரெட்ட வாலு :சிம்பு, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘வாலு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி ராமையாவிடம் உதவியாளராக பணியாற்றிய தேசிகா என்பவர் இயக்கும் படத்துக்கும் ‘வாலு’ என பெயரிடப்பட்டது. மாதக்கணக்கில் நிலவிவந்த இந்த பெயர் குழப்பத்துக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தேசிகா தனது படத்துக்கு ‘ரெட்ட வாலு’ என்று பெயர் மாற்றிக் கொண்டதன் மூலம் சிக்கல் தீர்ந்தது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:


    படத்தில் ஹீரோ அகில், ஹீரோயின் சரண்யா இருவரும் குறும்புத்தனமும், அரட்டையும் நிறைந்த வாலுத்தனமான கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். இதனால் ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டது.  எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். சிலரால் மட்டுமே அதை சாதிக்க முடிகிறது. பலருக்கு அது பகல் கனவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன, தீர்வு உண்டா என்பதற்கு படம் பதில் சொல்லும். தம்பி ராமையா, கோவை சரளா, ‘பசங்க’ சிவகுமார், செந்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வைரமுத்து பாடல்களுக்கு செல்வ கணேஷ் இசை. ஜெய இளவரசன் தயாரிக்கிறார்.


    FILE
    தமிழ் சினிமாவில் இரண்டு கோஷ்டிகள் உண்டு. கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை. கோடம்பாக்கம் என்றால் தென்னக கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் சினிமா கனவுடன் ரயிலோ லா‌ரியோ ஏறியவர்கள். ஆழ்வார்பேட்டை என்றால் கொஞ்சம் இன்டலெக்சுவல் டைப். கமல், மணிரத்னம் போன்றவர்களின் அலுவலகங்கள் ஆழ்வார்பேட்டையில் இருப்பதால் வந்த பெயர் இது. சினிமாவுக்கு இன்டெலக்சுவல் எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக ஆத்மார்தம் தேவை.

    ஓகே. இந்த சின்ன அறிமுகம் தமிழ் சினிமாவின் இரண்டு போக்குகளை தெ‌ரியப்படுத்துவதற்காக மட்டுமே. தேசிகா இயக்கியிருக்கும் ரெட்ட வாலு படத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அகில், சரண்யா நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தால் கிராமத்துப் படம் போல தெ‌ரிகிறது. ஆனால் இது ஆழ்வார்பேட்டையில் நடந்த உண்மைச் சம்பவம் என்கிறார் தேசிகா.

    எனக்குத் தெ‌ரிந்த கதை, கதை மாந்தர்கள் என்பதால் செயற்கைத்தனம் இல்லாமல் ஒவ்வொருவரும் இயல்பாக அந்த கேரக்டராகவே வாழும்படி படத்தை எடுத்திருக்கிறேன் என்றார் நம்பிக்கையுடன். உண்மை கதை நடந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறாராம்.

    அப்பா மகளுக்கு இடையேயான பாசத்தை சொல்லும் இந்தப் படத்தில், தனது நடிப்பு தன்னையே கலங்கடித்துவிட்டதாக தம்பி ராமையா தெ‌ரிவித்திருக்கிறார்.

    எங்களுக்கும் அதுதான் கொஞ்சம் உதறலாக இருக்கு.

     



    5  மைந்தன்

    சினிமா டிஜிட்டல் மயமானதின் அடுத்த கட்டமாக பிராந்திய, வட்டார சினிமாக்கள் விரைவில் உருவாகலாம். வட்டார சினிமா என்றால் மதுரை சினிமா, திருநெல்வேலி சினிமா, கோயம்புத்துர் சினிமா… என்று அந்தந்த வட்டாரங்களிலேயே அந்தந்த ஊர் நடிகர்கள், கலைஞர்கள் பங்கேற்று அங்கேயே படம்பிடித்து, அங்கேயே தயாரித்து, அங்கேயே போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து அங்கே உள்ள தியேட்டர்களிலேயே வெளியிடப்படலாம். பின்னர் அங்கே அந்த படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டால், ரசிக்கப்பட்டால், பின் மற்ற வட்டாரங்களுக்கும் அது பரவலாக வெளியிடப்படலாம்.
    அப்படி ஒரு படமாக “மைந்தன்” படம் உருவாகி விரிந்திருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவின் மையம் என்பதாக சென்னை தான் இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா, இலங்கை… போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் டெலிபிலிம்களும் சில பெரிய படங்களும் எடுக்கப்பட்டாலும் அதை அங்கேயே ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால், இப்போது வெளிநாடுகளிலும் உலக தமிழ் ரசிகர்களுக்கான பெரிய திரை வணிக தமிழ் படங்கள் உருவாகிறது என்பது வரவேற்க வேண்டிய விஷயம்.


    மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் பிரபலமான ஊடக நிறுவனமாகிய ஆஸ்ட்ரோ நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.


    தமிழ் தவிர மலாய், சீன, படங்களையும் தயாரிக்கிறது இந்த நிறுவனம். தயாரிக்கத் தொடங்கியுள்ள து. தமிழில் ‘அப்பளம்’  படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக வெற்றியையும் பல விருதுகளையும் பெற்றது. இரண்டாவது படமாக ‘மைந்தன்’ தயாரித்துள்ளது. சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார்.



    “மைந்தன்” திரைப்படம் முழுக்க மலேசிய கலைஞர்களும், நடிகர்களும் பங்கேற்க மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.



    படங்கள் எங்கு உருவானாலும், தமிழகம் தான் உலக தமிழ் திரைப்படங்களுக்கான வணிக மையம் என்பதால்… படத்தின் இசையை சென்னையில் வெளியிட்டு, படத்திற்கான பப்ளிசிட்டியை தொடங்கியுள்ளனர் மைந்தன் படக்குழுவினர்.



    இது ஆரோக்கியமான விசயம். பொருள் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியமே அல்ல, பொருளின் தரமும், அதற்கான மக்களின் விருப்பமும் ஒரே புள்ளியில் இணைந்தால் தயாரித்த இடத்தைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.


    எந்த சந்தையில் பொருளை கடைவிரித்தால் பொருள் வியாபாரமாகுமோ அங்கே கடை விரிப்பது இன்னும் ஆரோக்கியமான விசயம்.


    அப்படிப்பார்த்தால் தமிழ் சினிமா உலகச்சந்தை மையமாக இருக்கும் சென்னைக்கு,  இனிவரும் காலங்களில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா,  இலங்கை,  துபாய்… போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தமிழ் படங்கள் அடுத்தடுத்து வரலாம். வரவேண்டும்.



    தமிழ் சினிமாக்கள் உலகத்தின் பல இடங்களில் தயாரிக்கப்படுகிறது என்றால் தமிழ் சினிமாவின் வணிக எல்லை இன்னும் அதிகரிக்கலாம். இந்தி சினிமா அளவுக்கு இல்லை என்றாலும் இப்போது இருப்பதை விட இன்னும் சற்றே பெரிதாகலாம்.


    அதோடு உலகத்தமிழர்களுக்கு இடையேயான பண்பாட்டு, வாழ்வியல் மற்றும் மொழி பரிமாற்றமும் நடக்கலாம்.


    அந்த வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கும் “மைந்தன்” திரைப்படக்குழுவினருக்கும் ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள்.


    மைந்தன் இசை வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குனர் S.P.முத்துராமன், சமுத்திரக்கனி, நடிகர் விமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்கள்.





    6  தமிழ்செல்வனும் கலைச்செல்வியும்

    கார்த்தி- அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் 'அலெக்ஸ்பாண்டியன்'. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்த பாண்டியன் 'தமிழ்செல்வனும் கலைச்செல்வியும்' என்ற படத்தை இயக்கிவருகிறார். கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே பார்த்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

    புது தயாரிப்பு நிறுவனமான 'மயில் மாஸ் மீடியா' இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மதுரை, கோவைப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. கதாநாயகனாக ராஜேசும் கதாநாயகியாக அனாமிகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகேந்திரன், பாப்சுரேஷ், தில்ஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    சந்த்ரா இசையில் எல்.ஆர். ஈஸ்வரி ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒஸ்தி படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





    7 AAGADU - (TELUGU)

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் மகேஷ் பாபு நடித்துக் கொண்டு வரும் படம் ஆகடு.
    இந்த படத்தில் ஆக்ஷனோடு கலந்து நிறைய காமெடி காட்சிகளும் இடம் பெற்றள்ளன.
    சாதாரணமாக ஸ்ரீனு வைட்லா அவர்கள் படத்தில் எப்போதும் பிரம்மா நந்தம் அவர்களுக்கும், எம்.எஸ். நாராயணன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் காட்சிகள் வைத்து படம் இயக்குவார்.
    ஆனால் ஆகடு படத்தில் மகேஷ் பாபுவிற்கும், பூசானி கிருஷ்ணா முரளி அவர்களுக்கும் ஸ்பெஷல் காட்சிகள் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்.
    மேலும் படத்தின் ஹைலைட்டே இருவரும் வரும் காட்சிகள் தான் என்று கூறுகிறார் இயக்குனர்.



    மாவடுவை மாற்றி எழுதியது போல் தெரிந்தாலும், ஆகடு என்பதுதான் சரி. தெலுங்கில் இதற்கு ‌நிறு‌த்தமா‌ட்டே‌ன் எ‌ன்பதுதா‌ன் அர்த்த‌ம். மகேஷ் பாபு அடுத்து நடிக்கப் போகும் படம் இதுதான்.
    FILE

    ஸ்ரீனி வைட்லா நடிப்பில் மகேஷ் பாபு நடிக்க விரைவில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதிஹாசனின் பெயர் அடிபடுகிறது.

    தமன்னா இதுவரை மகேஷ் பாபு ஜோடியாக நடித்ததில்லை. மேலும் ஸ்ரீனி வைட்லாவும் மகேஷ் பாபும் கடைசியாக இணைந்த தூக்குடு படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. 





     thanx -http://www.tamilnewsnow.com/tamil-cinema-mainthan/

    thanx - dinamalar. dinamani , malaimalar,, all cine magazines,webdunia ,cine ulakam



    0 comments: