தினமலர் விமர்சனம்
பிரபல
பத்திரிகையாளரும், மக்கள் தொடர்பாளருமான முத்துராமலிங்கன் இயக்குநர்
அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்., ‛தமிழன் டி.வி. உரிமையளர் ‛தமிழன்
கலைக்கூடம் எனும் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, முதன்முதலாக
தயாரித்திருக்கும் திரைப்படம்... என மீடியா பிரபலங்களின் கூட்டணியில்
உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ‛சிநேகாவின் காதலர்கள் என பிரபல நடிகையின்
பெயரை டைட்டிலாக்கி இருப்பதும், ஆரம்பத்திலிருந்தே இந்தப்படத்திற்கு
எக்கச்சக்க எதிர்பார்ப்பையும், நடிகை சிநேகா சைடில் எதிர்ப்பையும்
கூட்டியது, காட்டியது! அந்த எதிர்ப்பையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும்
‛சிநேகாவின் காதலர்கள் திரைப்படம் எந்தளவிற்கு சரிகட்டி இருக்கிறது என்பதை
இனி பார்ப்போம்...
கதைப்படி படத்தின் கதைக்கும்,
நடிகை சிநேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு இடத்தில் படத்தின்
நாயகி கீர்த்தி, ‛‛சிநேகான்னா நான் மட்டும் தான் சிநேகாவா.? அள்ளிக்கோ,
அள்ளிக்கோ அண்ணாச்சி கடை விளம்பரத்துல வரும் சிநேகாவுல தொடங்கி
தமிழ்நாட்டுல ஆயிரக்கணக்கான சிநேகா இருக்கமாட்டாங்களா? என்ன.?! எனக்
கேட்கும் இடத்தில், நடிகை சிநேகாவிற்கு பதில் சொல்லியிருக்கும் இயக்குநர்,
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்திருக்கிறார்?
பார்ப்போம்...
கிட்டத்தட்ட எதிர்படும்
ஆண்களிடமெல்லாம், ‛ஐலவ்யூ சொல்லும் டைப் அழகான இளம்பெண் ஹீரோயின் சிநேகா
எனும் கீர்த்தி ஷெட்டி(அத்வைதா). அம்மணியின் பருவ வயதில் சந்தோஷ் எனும்
திலக், பாண்டியன் எனும் ரத்தினக்குமார், இளவரச எனும் உதயக்குமார், எழில்
எனும் அதிப் உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் கடந்து போகிறார்கள், அவர்களுடன்
காதல் வயப்படும் சிநேகா-கீர்த்தி, இறுதியாக யாரை கரம்பிடிக்கிறார் ஏன்?
எதற்கு என்பது தான் சிநேகாவின் காதலர்கள் படத்தின் மொத்த கதையும். சுருங்க
சொல்வதென்றால், இப்படத்தை கதாநாயகி பாய்ண்ட் ‛ஆப் வியூ அண்ட் லவ்
ஆட்டோகிராப் எனலாம்!
சிநேகாவாக வரும் கீர்த்தி
ஷெட்டி தன் பாத்திரத்தை உணர்ந்து உள்வாங்கி பக்காவாக நடித்திருக்கிறார்.
ஆனால், உயரம் சற்றே குறைவு, உருவம் சற்றே பெரிது என்பது தான் சின்ன மைனஸ்.
மற்றபடி நடிப்பும், துடிப்பும் அம்மணியிடம் ‛நச் சென்று நிரம்பி வழிகிறது!
வரட்டும், வளரட்டும்!
சந்தோஷ் - திலக்,
பாண்டியன் - ரத்தினக்குமார், இளவரசு - உதயக்குமார், எழில் - அதிஃப்
உள்ளிட்ட நான்கு, கதையின் ஓ சாரி கதாநாயகியின் நாயகர்களில் பாண்டியனாக
வரும் ரத்தினக்குமாரும், இளவரசாக வரும் உதயக்குமாரும் திரும்பிபார்க்க
வைக்கின்றனர். சுதா, கணேஷ் மணி, வடிவேல் சூர்யா, சிம்புச்செல்வன்
உள்ளிட்டவர்களும் அவர்களது நடிப்பும் கூட ஓகே!
இரா.பிரபாகரின் இசையில் நெல்லை பாரதியின் ‛‛யாதும் ஊரே... எல்லோரையும் கேட்க வைக்கிறது.
சிநேகாவின்
காதல் கதையில் சென்ஸிட்டீவான தர்மபுரி இளவரசன்-திவ்யாவின், காதல் -
மோதலையும் கலந்து கட்டி கதை சொல்லியிருக்கும் இயக்குநர்
முத்துராமலிங்கனின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்றாலும், ஹீரோயின்
நாடகத்தன்மையில் பேசிக் கொண்டே இருப்பதும், எழுத்தாளர்கள் பாலகுமாரன்,
ஜெயகாந்தன் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களை அடிக்கடி மேற்கொள்காட்ட
இழுப்பதும், இலக்கியம் பேசுவதும் சற்றே பழைய ஸ்டைலில் படம் பண்ணியிருப்பதாக
தோற்றம் தருகிறது! மற்றபடி, ‛சிநேகாவின் காதலர்கள் சிலிர்ப்பு காதலர்களாக
இல்லாவிட்டாலும் சிரிப்பு காதலர்களாய் இல்லாதது ஆறுதல்!
மொத்ததத்தில்
‛சிநேகாவின் காதலர்கள் டைட்டிலில் இருக்கும் நச்-டச் ஸ்கிரீன்ப்ளேயில்
இல்லாதது ‛ப்ச் சொல்ல வைக்கிறது! அதேநேரம் கதையே இல்லாமல் வரும் தற்போதைய
படங்களை நினைக்கும்போது நல்ல கதையம்சமுள்ள படமாக வந்திருக்கும்
‛சிநேகாவின் காதலர்களுக்கு ‛இச் சும் கொடுக்கலாம்!
‛‛சிநேகாவின் காதலர்கள் - ‛‛சில்லரை காதல (ர்கள்) ல்ல!
thanx -dinamalar
- நடிகர் : திலக்
- நடிகை : அத்வைதா
- இயக்குனர் :முத்துராமலிங்கம்
1 comments:
Thank u sir
Post a Comment