சலீம் ,இரும்பு குதிரை,மேகா,சிவப்பு எனக்கு பிடிக்கும்
,காதல்.2014 ,புதியதோர் உலகம் செய்வோம் ,வெச்சுக்கவா,த நவம்பர் மேன் ,நிஞ்சா டர்டில்ஸ் ,rabaasa#
29 8 14
1.
சலீம், நான் படத்தின் 2ம் பாகமா? மழுப்பும் விஜய் ஆண்டனி!
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவருக்கு
ஜோடியாக அக்ஷா பர்தாஸ்னி நடிக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர்
என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல்களும், டிரைலரும்
சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவைகள் அச்சு அசலாக விஜய்
ஆண்டனியின் முந்தைய படமான நான் போலவே இருந்தது.
நான்
படத்தை போலவே இந்தப்படத்திலும் பாடல்கள் அமைந்துள்ளது. குறிப்பாக மாக்காயல
மாக்கயால பாட்டுபோல இதிலும் ஒரு கிளப் டான்ஸ் வருகிறது. அந்த பாட்டின் ஊடே
விஜய் ஆண்டனி முறைத்தபடி நடந்து செல்கிறார். நான் படத்தில் விஜய்
ஆண்டனியின் கேரக்டர் பெயர் சலீம். இந்தப் படத்திலும் அவர் பெயர் சலீம்.
அதில் டாக்டருக்கு படிப்பார், இதில் டாக்டர். மூன்று நிமிட டிரைய்லரிலேயே
இரண்டு படத்துக்கும் இத்தனை ஒற்றுமை. அப்படி என்றால் இரண்டு மணி நேர
படத்தில் எத்தனை இருக்கும் என்பதுதான் கேள்வி. இதை அவரிடம் கேட்டால்
இப்படிச் சொல்கிறார்.
" சலீம் நான் படத்தின்
இரண்டாம் பாகமா, தொடர்ச்சியா என்று கேட்டால் ஆமாம் என்றும் சொல்ல முடியாது.
இல்லவே இல்லை என்றும் சொல்ல முடியாது. இரண்டு படத்துக்கும் சில விஷயங்கள்
ஒத்துப்போகலாம். ஆனால் இதன் கதை களமே வேறு. அதுபற்றி இப்போது விளக்கமாக
சொல்ல முடியாது படம் வந்ததும் தெரியும் என்று மழுப்பலாகவே சொன்னார்.
2 இரும்பு குதிரை
பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’.
இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்
‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றியிருக்கிறார்.
பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்கள். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அதர்வா பைக் ரேஸ் ஓட்டுபவராக வருகிறார்.
இரும்பு குதிரை படத்தை சென்சார் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் பார்க்க உள்ளனர். அதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி அதாவது பண்டிகை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

3
புதிய கோணத்தில் காதலை சொல்லும் சினிமாவாக மேகா படம் உருவாகி வருகிறது.
ஜி.பி.ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார்
தயாரிக்கும் படம் மேகா. அஸ்வின், சிருஷ்டி தாங்கே, அங்கனா ராய் உட்பட பலர்
நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா
இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், பழனிபாரதி எழுதியுள்ளனர்.
மேகா குறித்து படத்தின் டைரக்டர் கார்த்திக் ரிஷி கூறுகையில், புதிய கோணத்தில் சொல்லப்படும் காதல் கதை இது. புதிய இசை வடிவில், படம் உருவாக வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா ஹங்கேரி சென்று, சிம்பொனி இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கினார். அவரும், யுவன் சங்கர் ராஜாவும் தலா 2 பாடல்களை பாடியிருக்கின்றனர். படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது, என்றார்.
மேகா
புதிய கோணத்தில் காதல் சொல்லும் மேகா!
மேகா குறித்து படத்தின் டைரக்டர் கார்த்திக் ரிஷி கூறுகையில், புதிய கோணத்தில் சொல்லப்படும் காதல் கதை இது. புதிய இசை வடிவில், படம் உருவாக வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா ஹங்கேரி சென்று, சிம்பொனி இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கினார். அவரும், யுவன் சங்கர் ராஜாவும் தலா 2 பாடல்களை பாடியிருக்கின்றனர். படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது, என்றார்.
4 சிவப்பு எனக்கு பிடிக்கும்
மலையாள தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்து நடிகையானவர்
சான்ட்ரா. தமிழ் தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்த பிரஜனை இவர்
காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி
இருவரும் தொலைக்காட்சியை துறந்து சினிமாவில் கவனம் செலுத்துகின்றனர்.
சான்ட்ரா தமிழில் நாயகியாக நடித்த படம், சிவப்பு எனக்கு பிடிக்கும். இதில்
அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பாலியல் தொழிலை
அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பது முதலான கருத்துக்களை கொண்ட படம் இது.
இந்நிலையில் இந்தியில் ஆண்டனி டிசோசா இயக்கும் படத்தில் இம்ரான் ஹஸ்மியை
காதலிப்பவராக சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சான்ட்ராவுக்கு வாய்ப்பு
கிடைத்துள்ளது. கதைப்படி இந்த கதாபாத்திரம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு
குடும்பப் பெண். அந்த வேடத்துக்கு சான்ட்ரா பொருத்தமாக இருப்பார் என அவரது
புகைப்படத்தைப் பார்த்து ஆண்டனி டிசோசா சான்ட்ராவை அணுகியுள்ளார். சின்ன
வேடம் என்றாலும் இம்ரான் ஹஸ்மியுடன், இந்திப் படத்தில். யோசிக்கவேயில்லை
சான்ட்ரா. உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தி சினிமாவில் இம்ரானுக்கு முத்தக் கலைஞன் என்றொரு பெயரும் உண்டு. இவர்
நடிக்கும் எல்லாப் படங்களிலும் முத்தக் காட்சி இடம்பெறும். சில படங்களில்
நாயகிக்கு பல டஜன் முத்தங்கள் வாரி வழங்கியுள்ளார். முத்த விஷயத்தில் கமலை
இவர் எப்போதோ ஒவர்டேக் செய்துவிட்டார்.
இந்தப் படத்திலும் இம்ரான் - சான்ட்ரா முத்தக் காட்சி உள்ளது. கதைக்கு
தேவைப்பட்டதால், முக்கியம் என்பதால் முத்தக் காட்சியில் நடிக்க
சம்மதித்துள்ளார் சான்ட்ரா.
5 காதல் 2014
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது காதல்
களியாட்டங்கள் பெருகிவிட்டதால்தான் என்பதை அடித்துச் சொல்லும் படமாக
தயாராகி இருக்கிறது காதல் 2014 என்ற படம். மாத்தியோசி, முத்துக்கு முத்தாக
படங்களில் நடித்த ஹரிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். சினேகாவின் முகச் சாயல்
கொண்ட நேகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாய்ஸ் மணி கண்டன் வில்லனாக
நடித்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடி செய்கிறார். வருகிற 29ந் தேதி
படம் ரிலீசாகிறது.
"நாட்டில் எங்கு பார்த்தாலும்
பாலியல் வன்முறைகள் பெருகி விட்டது. காரணம் காதல்தான். டில்லியில்
நள்ளிரவு ஒரு பஸ்சில் காதலன் கண் முன் காதலி கற்பழிக்கப்படுகிறாள். 12
மணிக்கு நள்ளிரவில் காதலர்களுக்கு என்ன சார் வேலை. கிழக்கு கடற்கரை சாலை
சவுக்கு காட்டுக்குள், பீச்சின் ஒதுக்குபுறமான இடத்துக்குள்,
நெடுஞ்சாலைகள், தனி வீடுகள் இப்படி எங்கெங்கும் பாலியல் வன்முறைகள். காரணம்
காதலர்களின் அத்து மீறல்கள்.
படத்தில் ஹீரோ,
ஹீரோயின் நேகாவை ஒரு காட்டுக்குள் காதல் செய்ய அழைத்து செல்கிறார்.
காதலிக்க நடுக்காடுதான் வேண்டுமா. அவரது நோக்கம் அங்கு வைத்து அவரை அடைந்து
விட முடியதா என்பதுதான். ஆனால் அங்கு வந்த பாய்ஸ் மணிகண்டன் தலைமையிலான
கும்பல் கேங் ரேப் செய்து விடுகிறது. குற்ற உணர்ச்சியால் ஹீரோ
துடிக்கிறான். மனமும், உடலும் வலிக்க ஹீரோயின் துடிக்கிறார் இறுதியில் என்ன
தீர்வு என்பது கதை. இப்படிப்பட்ட நல்ல கதைக்கு, வன்முறையோ ஆபாசமோ இல்லாத
கதைக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. என்கிறார் இயக்குனர்
சுகந்தன்.
6
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆசி வழங்கினார்.
புதியதோர் உலகம் செய்வோம்
"நல்ல
கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.
இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில்
இத்திரைப்படம் வெளிவர வேண்டும்" என்று அப்துல் கலாம் வாழ்த்தினார்.
படத்தின்
கிளைமாக்ஸ் காட்சியில் பத்து வயதுப் பையன் ரோஷன் தன் தந்தையைப் பார்த்துப்
பேசிய வசனத்தை, நேரில் உணர்ச்சி பொங்க பேசி நடித்துக் காட்டியதைப்
பார்த்து டாக்டர் கலாம் உருகிப் போனார். ஆஜித், அனு, யாழினி, சந்தோஷ்
பாலாஜி, சூர்யேஸ்வர் ஆகியோர் இப்படத்திலுள்ள "தேசம் எங்கள் தேசம்" பாடலின்
சில வரிகளைப் பாடியதைக் கேட்டு மிகவும் ஆனந்த மடைந்தார்.
இச்சந்திப்பின்
போது, படத்தின் கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய கே.எஸ்.நாகராஜன்
ராஜா, தயாரிப்பாளர் எம்.எஸ்.ஜெய்க்குமார், இணைத் தயாரிப்பாளர் பிரியா
ஜெய்க்குமார், டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சமூக
சேவகர் அப்துல்கனி ஆகியோர் உடனிருந்தனர்.
7 வெச்சுக்கவா
8
பிரபல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் ப்ரோசன் நடித்திருக்கும் படம் தி நவம்பர்
மேன். அவருடன் லுக் பிரயோ, ஓல்கா குர்லியங்கோ நடித்திருக்கிறார்கள்.
ஸ்பீசிஸ், ரெக்ரூட் ஆஃப் பேங் ஜாப் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்டன் இயக்கி
இருக்கிறார்.இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர்
ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.
நம்பர் ஒண் சி.ஐ.ஏ ஏஜெண்டான பிரைஸ் ப்ரோசன் தன் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையை சுவிட்சர்லாந்தில் அமைதியாக கழிக்கிறார். அப்போது அமெரிக்க அரசு ஒரு முக்கிய வழக்கின் சாட்சியான ஒரு சிறுவனை பாதுகாக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்கிறது. சின்ன பையன்தானே என்று அதை ஏற்றுக் கொள்ளும் அவருக்கு வருகிறது அடுத்தடுத்த சிக்கல். அந்த பையனை அவரிடமிருந்து கைப்பற்ற சர்வதேச அளவில் ஒரு நெட்ஒர்க்கே செயல்படுகிறது. ஏன் எப்படி என்று அவர் இறங்கும்போதுதான் சி.ஐ.ஏவில் உள்ள பல கறுப்பு ஆடுகளை அவர் கண்டுபிடிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் இல்லாத ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை.
உலகம் முழுவதும் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 29ந் தேதி ரிலீசாகிறது. கோத்ரா மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தி நவம்பர் மேன்

9
டீன்ஏஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டில்ஸ் (Teenage Mutant Ninja Turtles)
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 65 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப்
பிடித்துள்ளது. இப்படியொரு வசூலை பாராமவுண்டே எதிர்பார்க்கவில்லை. உலகம்
முழுவதும் இந்தப் படம் ஞாயிறுவரை 97.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
நிஞ்சா டர்ட்டில்ஸுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த உடனேயே படத்தின்
சீக்வெலை அறிவித்தது பாராமவுண்ட் ஸ்டுடியோ. முதல் பாகத்தை இயக்கியவர்தானா
இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என்பது பற்றியெல்லாம் இன்னும் முடிவு
செய்யவில்லை.
அதற்குள் சீக்வெலை அறிவித்து, 2016 ஜுன் 3 படம் வெளியாகும் என வெளியீட்டு தேதியையும் தெரிவித்திருக்கிறார்கள்.
எல்லாம் டாலர் மழை படுத்துகிறபாடு.
10 Rabhasa is a 2014 Telugu film written & directed by Santosh Srinivas. This film produced by Bellamkonda Suresh and Bellamkonda Ganesh Babu on Sri Lakshmi Narasimha Productions features N. T. Rama Rao Jr., Samantha Ruth Prabhu and Pranitha Subhash in the lead roles and Nassar, Jayasudha & Brahmanandam in key roles.[1] S. Thaman composed the music for the film.[2] While Shyam K. Naidu handled the cinematography, Kotagiri Venkateswara Rao provided the editing for the film.[3] Director V. V. Vinayak provided voice-over for a few sequences in the film.[4]
thnx - dinamalar , maalaimalar , web duniya
0 comments:
Post a Comment