Friday, August 22, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (22 8 .2014 ) 3படங்கள் முன்னோட்ட பார்வை

1.ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி -  பரத், நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பாகந்தசாமி, மோகன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். வருகிற 22–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. 


படம் குறித்து பரத் கூறியதாவது:– 


ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஜாலியான காமெடி படம். தமிழில் காமெடி படங்கள்தான் நன்றாக ஓடுகின்றன. ரசிகர்கள் அதுபோன்ற படங்களையே விரும்பி பார்க்கிறார்கள். இந்த படமும் அப்படியே வந்துள்ளது.
காதல், காமெடி, நடனம், சண்டை என எல்லாமும் இருக்கும். 27 காமெடி நடிகர்கள் உள்ளனர். படம் முழுவதும் தொய்வின்றி கலகலப்பாக நகரும். இந்த படத்தில் யாரையும் புண்படுத்துவது போன்ற காட்சிகள் இல்லை. 

‘சித்த வைத்தியம்’ மீது இளம் தலைமுறையினருக்கு எதிர்முறையான எண்ணம் உள்ளது. அதை இந்த படம் மாற்றும். சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை பறைசாற்றும் படமாகவும் இருக்கும். கதையில் ஒரு பகுதியாக தான் சித்த மருத்துவம் இருக்கும். மற்றபடி இது முழு நீள காமெடி படம். 

erode -
ராயல்,அன்னபூரணி ,ஸ்ரீநிவாசா


கபடம்- ஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘கபடம்’

சென்னை,ஆக.19 (டி.என்.எஸ்) யு சான்றிதழ் பெறும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வரி சலுகை தருவதால், ஏராளமான சிறு முதலீட்டு படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகிறது. இப்படங்கள் தணிக்கை துறையிடம் யு சான்றிதழ் வாங்குவதற்காகவே தங்களுடைய படங்களின் காட்சிகளை மிக பக்குவமாக கையாளுகிறார்கள். அப்படி தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுப்பதாக இருந்தாலும், அவர்கள் ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டு யு சான்றிதழை பெற்றுவிடுகிறார்கள்.

இந்த நிலையில், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு சிறு முதலீட்டு படம், தைரியமாக ஏ சான்றிதழுடன் வெளியாகிறது.

அஜீத் அறிமுகமான ‘அமராவதி’ மற்றும் ‘தலைவாசல்’ ஆகிய படங்களை தயாரித்த சோழ பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்சும், மவுண்டன் மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து ‘கபடம்’ என்ற படத்தை தயாரித்துள்ளன.

இந்த படம், எதிர்மறையான எண்ணங்களை கொண்ட ஒரு இளம் ஜோடியை பற்றிய கதை. அந்த இளம்ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பிறகு இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கைகள் இளைஞனுக்கு பிடிக்காமல் போகிறது. அவளை திருத்திவிடலாம் என்று முயற்சிக்கிறான். முடியாததால், அவன் என்ன செய்கிறான்? என்பதே கதை.

படத்தின் கதை-திரைக்கதை எழுதி ஜோதிமுருகன் இயக்குகிறார். எம்.கே.மணி வசனம் எழுதியிருக்கிறார். சச்சின்  அங்கனாராய் இருவரும் இளம் ஜோடிகளாக நடித்து இருக்கிறார்கள்.



இப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் ஏ சான்றிதழ் உடனே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்

ஸ்ரீகிருஷ்ணா



3  THE EXPENDABLES 3-
ஹாரிஸன் போர்ட் அவ்வப்போது, எனக்கு அவன் உயிரோடு வேணும் என்பதோடு சரி. கிளைமாக்ஸில் ஒரு ஹெலிகாப்டரில் வந்து தன் பங்குக்கு கொஞ்சம் நொறுக்குகிறார். அர்னால்டுக்கு ஸ்டாலோனை பிக்கப் ட்ராப் செய்யும் வேலை. டயலாக் எல்லாம் கிடையாது ஒரேயொரு நாள் வந்து சண்டையிட்டுப் போங்க என்று ஜெட் லீயை அழைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜேசன் ஸ்டெதம் மட்டும் அதிக நாள் கால்ஷீட் தந்திருக்கிறார். வெஸ்லி ஸ்னைப்ஸின் அறிமுகம் அட்டகாசம். கிடா வெட்டுற கத்தியில் தாடியை ஷேவ் செய்வது, கட்டிடங்களுக்கிடையே தாவுவது என்று அவரது எபிஸேnட் முழுக்க சாகசம்தான். 
the expendables 3
பெண் வாசனையே இல்லாத படமா என்று யாரும் திருஷ்டி கழிக்கக் கூடாதே. யங் டீமில் பாரில் பவுன்சராக இருக்கும் ஒரு பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலோன். எத்தியோப்பியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவுக்கு அலர்ஜியான நாடுகளாக தேடிப்பிடித்து படமாக்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் குண்டு தீர்ந்ததும் துப்பாக்கி தூக்கி எறிந்துவிடுவார்கள் (துப்பாக்கி என்ன யூஸ் அண்ட் த்ரோவா?) இதில் காரியம் முடிந்ததும் ஹெலிகாப்டரை குண்டு வைத்து தகர்த்துவிடுகிறார் ஸ்டாலோன். அடுத்த பாகத்தில் தூங்கி எழுந்ததும் வீட்டை வெடி வைத்து தகர்ப்பார்களோ என்னவோ.
இதுவரை வந்த மூன்று பாகங்களில் இரண்டாவதுதான் பெஸ்ட். அதற்கு காரணம் படத்தை இயக்கிய சைமன் வெஸ்ட். கான் ஏர் போன்ற அட்டகாசமான ஆக்ஷன் படங்களை இயக்கியவர். மூன்றாவது பாகத்தை ரெட் ஹில் என்ற ஒரேயொரு படத்தை இயக்கிய பாட்ரிக் க்யூக்ஸ் (Patrick Hughes)  இயக்கியிருக்கிறார். ஸ்டாலோனின் திரைக்கதைக்கு இதற்கு மேல் என்ன முக்கினாலும் எதுவும் செய்ய முடியாது. 
த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 அமெரிக்காவில் வருகிற 15 ஆம் தேதியும், இந்தியாவில் இந்த மாதம் 22 ஆம் தேதியும் வெளியாகிறது. கார்கள், பீரங்கிகள், கட்டடங்கள் விதவிதமாக நொறுங்குவதை பார்க்க இதுவொரு நல்ல வாய்ப்பு.
 erode vsp
thanx  - dinamalar . dinamani , maalaimalar , web dunia and all cine sites

0 comments: