Friday, August 15, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (15 8 .2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.அஞ்சான்- லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.

லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

அஞ்சானில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது. இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மும்பை ஷூட்டிங்கின்போது சமந்தாவுக்கு சரும நோய் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட்டது. அவர் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அவர்தான் நடிக்கிறார் என்பதை லிங்குசாமி உறுதியாக கூறியிருக்கிறார்.

அஞ்சான் என்றால் அஞ்சாதவன், எதற்கும் அஞ்சாதவன் என்று பொருள். சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே சென்னை திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் சென்னை வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ்.

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் ‘அஞ்சான்’.


லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துளார். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. வரும் 15ஆம் தேதி அஞ்சான் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே இந்த படம் தான் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சென்னையில் மட்டும் 37 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சென்னையில் இப்படத்தின் விநியோகஸ்த உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட காலமாகவே பட தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் திருட்டு DVD-களுக்கு அஞ்சான் படம் மூலம் ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.


முழுக்க முழுக்க ரெட் டிராகனில் பதிவாகியுள்ள இப்படத்தை உலகம் முழுவதும் டிஜிட்டல் திரைகளில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இது படத்தின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் திருட்டு DVD-கள் வடிவெடுக்கும் விதத்தையும் அதில் இருக்கும் ‘கோட்’களை கொண்டு தயாரிப்பாளருக்கு காட்டிக் கொடுத்து விடுமாம். தென்-இந்தியாவில் இம்முறையில் வெளியாகும் முதல் படம் அஞ்சான் என்பது குறிப்பிடத்தக்கது.


அஞ்சான் 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் திரைப்படமாகும். இது அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயரிக்கிறது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், விவேக், மனோஜ் பாஜ்பாய் நடிகின்றனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15, 2014 வெளியிட திட்டமிட்டுள்ளனர். இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் வெளியாகவுள்ளாது

#‎அஞ்சான்‬ புதிய டிரைலர்: யூடியூப்பில் 3 நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்தனர்
‪#‎சூர்யா‬ - ‪#‎சமந்தா‬ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஞ்சான்’. லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. 


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் புதிய டிரைலர் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 10 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 


இந்த டிரைலர் வெளியான மூன்று நாட்களிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


சிங்கம் படத்திற்கு சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.


சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. காக்க காக்க, சிங்கம், சிங்கம்2 படங்களின் வரிசையில் சூர்யாவின் ஆக்ஷ்ன் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படுமாம். சூர்யா, இதில் ராஜூபாய், கிருஷ்ணா என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவேடம் தாதா கேரக்டர்.


படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் நீளம் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சான் படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் வகையில் தயாராகிவுள்ளதாம். தற்போதெல்லாம் படத்தின் நீளம் அதிகம் இருப்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை. அதனால், படத்தின் நீளத்தை சராசரியாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.


சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் நீளம் 170 நிமிடங்கள்தான். ஆனால் இந்தப் படத்தையே நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். அந்த வரிசையில் அஞ்சான் படமும் இணைந்திருப்பதால் படத்தின் நீளத்தை தற்போதே குறைப்பார்களா, அல்லது ரிலீஸானப் பிறகு வரும் ரிப்போர்ட்டை வைத்து குறைப்பார்களா என்பது தெரியவில்லை.


 2  கதை திரைக்கதை வசனம் இயக்கம் -
ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் கவுரவ வேடத்திலும், புதுமுகங்கள் முக்கிய வேடத்தில் நடித்து ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்.


இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 1ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைக்கு ‘ஜிகர்தண்டா’, ‘சரபம்’ மற்றும் ‘சண்டியர்’ போன்ற படங்களும் ரிலீஸுக்கு வருவது உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி தனது படத்தை ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்திக்கு ஒத்தி வைத்தார் பார்த்திபன். இந்நிலையில் ஆகஸ்ட் 29ல் ‘இரும்புகுதிரை’, ‘சலீம்’, ‘மெட்ராஸ்’ ஆகிய மூன்று படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக இருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்திற்கு போட்டியாக களமிறக்கவுள்ளார் பார்த்திபன். இதேநாளில் தான் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படமும், முத்துராமலிங்கன் இயக்கத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்த ‘சிநேகாவின் காதலர்கள்’ படமும் ரிலீஸாக உள்ளன. சூர்யா படத்திற்கு போட்டியாக தன் படத்தை களமிறக்குவது குறித்து பார்த்திபன் அண்மையில் நடந்த சிகரம் தொடு இசை வெளியீட்டு விழாவில் விளக்கமளித்துள்ளார்.


கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் வெளியான அன்றுதான் எனது ‘புதிய பாதை’ படமும் வெளியானது. அன்றைய விளம்பர போஸ்டர்களில் ‘எல்லாரும் அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்கப் போங்க… டிக்கெட் கிடைக்காதவங்க என் புதிய பாதை படத்துக்கு வாங்க’ என்று போட்டிருந்தோம். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதையேதான் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் சொல்கிறேன். ‘எல்லோரும் சூர்யாவின் அஞ்சான் படத்திற்கு போங்க. டிக்கெட் கிடைக்காதவங்க என் படத்துக்கு வாங்க” என்கிறார் பார்த்திபன். இதையேதான் அன்றைய விளம்பரங்களில் போடப் போகிறாராம்..!


பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல்.
தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 
ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம்.
அல்போன்ஸ் ஜோ‌சப், சரத், விஜய் ஆண்டனி, எஸ்.தமன் என்று நான்கு பேர் இசையமைத்துள்ளனர். மதன் கார்க்கி, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 படம் திரைக்கு வருகிறது.

 3  சினேகாவின் காதலர்கள்-

சினேகாவின் காதலர்கள் சினேகாவின் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்

snehavin kadhalargal is not snehas story says director
பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி.தயாரிக்கிறது. அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோயினாக நடித்த அத்வைதா இதில் ஹீரோயின் மற்ற அனைவரும் புதுமுகங்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் கோவையில் 25 நாட்கள் முடிந்திருக்கிறது.

"பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதுதான் கொடைக்கானலில்  படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் இரண்டு நாட்கள் தவிர எங்களுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. படத்தின் முக்கிய கேரக்டர் ஹீரோயின்தான். அவர்தான் சினேகா. அந்த கேரக்டருக்கு சுமார் 200 பேர் வரை பார்த்து இறுதியாக அத்வைதா தேர்வு செய்யப்பட்டார் அவர் இப்போது கீர்த்தி என்று பெயர் மாற்றி உள்ளார். படத்தின் தலைப்பை பார்த்து விட்டு பலர் இது நடிகை சினேகாவின் கதை என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. கேரக்டர் பெயர் சினேகா என்பதைத் தவிர வேறெந்த தொடர்பும் கிடையாது. ஒரு இளம் பெண்ணின் வாழக்கையில் கடந்து செல்லும் சில ஆண்களைப் பற்றிய கதை. அந்த ஆண்களில் அந்த பெண் யாரை தன் துணையாக தேர்வு செய்கிறாள். ஏன் என்பது மாதிரியான கதை. 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளது" என்றார் இயக்குனர் முத்துராமலிங்கன். 
Sneha fear of Snehavin kadhalarkal
பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து கமல்ஹாசன் வரை ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தார். பின்னர், தனது மார்க்கெட் சறுக்கிக்கொண்டு வந்த நேரத்தில் விஜயசாந்தி பாணியில் பவானி ஐபிஎஸ் என்றொரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து தனக்குள் இருந்த ரப் அண்ட் டப் சினேகாவை வெளியே கொண்டு வந்தார்.

அதையடுத்து, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோதிலிருந்தே தான் காதலித்து வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசி ஆனார் சினேகா. இருப்பினும் நடிப்பு ஆசை அவரை ஆட்டுவிக்க, சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிப்பவர், உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில், திடீரென்று சினேகாவின் காதலர்கள் என்ற டைட்டீலில் ஒரு படத்தைப்பற்றிய செய்திகள் வெளியாகின. சினேகாவின் காதலர்கள் என்றதும், திருமணத்துக்கு முன்பு அவர் காதலித்தவர்களைப்பற்றிய கதைதானோ என்று நினைத்து அந்த செய்தியை அனைவரும் ஆர்வத்துடன் படித்தனர். ஆனால், அது வேறொரு சினேகாவைப்பற்றிய கதை. அந்த படத்துக்கும் நடிகை சினேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை செய்தியில் படித்தும் சலித்துக்கொண்டனர்.

ஆனால், இந்த செய்தி சினேகா வட்டாரத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. அதென்ன சினேகாவின் காதலர்கள். ஏதாவது வம்பு புடிச்ச செய்தியாக இருக்குமோ என்று அவர்கள் அவசர அவசரமாக அந்த செய்தி பரபரப்புடன் படித்துள்ளனர். இது வேறு சினேகாவைப்பற்றிய கதை என்று அமைதியடைந்திருக்கின்றனர்.

என்றாலும் சினேகாதான் ரொம்ப பதறிப்போனாராம். அதனால் அவுட்டோரில் இருந்த அவரிடம் இது வேறு படத்தின் கதை. படத்தில் நடிக்கும் கேரக்டரின் பெயர் சினேகாவாம் அதைத்தான் டைட்டீலாக்கி உள்ளனர். நீ பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று அவரை ஆசுவாசப்படுத்தினார்களாம்.


4  SINGAM RETURNS -

சிங்கம் ரிட்டர்ன்ஸ் சுதந்திர தினத்தில் வெளியீடு!

Singham Returns releases on Independence day
ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன் என்ற பெரியல் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான், கரீனா கபூர் நடித்து வருகிறார்கள். ரோகிஷ் ஷெட்டி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடபட்டு லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது. படத்தை ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். "காக்கி சீருடை அணிந்தவர்களைப்போல பொதுமக்களும் தேச பற்றுடன் நடந்து கொண்டால் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள். சிங்கம் ரிட்டன்ஸ் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அஜய் தேவ்கன் டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.
 
Bookmark and Share



thanx - all cinema, web

0 comments: