Sunday, August 31, 2014

புதியதோர் உலகம் செய்வோம் - சினிமா விமர்சனம்

லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை உங்கள் வீட்டில் இருந்து ஒழிக்க தொடங்குங்கள்...'' எனும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாமின் வாக்கியத்தை வைராக்கியமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம்!

லஞ்சம் வாங்கும் அப்பாக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் அம்மாக்களையும், குழந்தைகள் திருத்தும் குதூகலமான கதை தான் ‛புதியதோர் உலகம் செய்வோம்' படம்!

ஆஜித், பிரவீன், அனு, யாழினி ஆகிய நான்கு இளம் சிறரார்களும் நண்பர்கள். ஆஜித், பிரவீன் இருவரது அப்பாக்களும் செய்யும் ஊழலால், சிறுவர்களது தோழியின் குடும்பம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அப்பாக்களுக்கு துணையாக இந்த விஷயத்தில் இருக்கும் தங்களது அம்மாக்களையும், தவறு செய்த அப்பாக்களையும் ஆஜித், பிரவீன் இருசிறுவர்களும் எப்படி திருத்த முயற்சிக்கிறார்கள் என்பது தான் புதியதோர் உலகம் செய்வோம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

ஆஜித், பிரவீன், அனு, யாழினி உள்ளிட்ட நால்வரும் நன்றாக நடித்திருக்கின்றனர். நான்கு குழந்தைகளுமே நன்கு பாடக்கூடியவர்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பாடி பரிசு பெற்றவர்கள் என்பது தெரியும். நால்வரும் நடிப்பு விஷயத்திலும் வெளுத்து வாங்கியிருக்கின்றனர். அப்பாவின் லஞ்ச பணத்தை அடித்து அதை நல்ல காரியத்திற்கு செலவிடும் ஆஜித் மனதை தொடுகிறான். அதேநேரம் சற்றே உருவம் பெரிதான பிரவீனின் இயற்கை உபாதைகளை எல்லாம் காமெடி என்ற பெயரில் படமாக்க முயன்றிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. மற்றபடி இந்த நான்கு சிறுவர்களுடன் வரும் இமான் அண்ணாச்சியின் காமெடி கதாபாத்திரம் ‛நச்' என்று இருக்கிறது. இவர் தான் இப்படத்தின் பெரும்பலம்! தனி டிராக்கில் சுவாரஸ்யம் கூட்டும் இந்த நான்கு சிறுவர்களது ஆசிரியரின் லவ் ஸ்டோரி, கணேஷின் வில்லத்தனம் எல்லாம் கலந்துகட்டி நம்மை இருக்கையோடு கட்டி போடுகிறது.

பிரவீன் சைவியின் இசை, பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் நாகராஜன் ராஜாவின் திரைக்கதை, வசனம், பி.நித்தியானந்தத்தின் இயக்கம், எல்லாம் சேர்ந்து ‛புதியதோர் உலகம் செய்வோம்' படத்தை பாதி புதுமையாக செய்திருக்கிறது. ஆனாலும், ஊழல், லஞ்சம் ஒழிப்பு என்று அடிக்கடி வருவதால் சற்றே பிரச்சாரநெடி அடிக்கிறது. இயக்குநர் பி.நித்தியானந்தம் இதை இன்னும் கவனமாக தவிர்த்திருந்தார் என்றால் முழுக்க முழுக்க ‛‛புதியதோர் உலகம்'' செய்யப்பட்டிருக்கும்!
 
 
 
 thanx -dinamalar

ஷங்கர் படம் vs முருகதாஸ் படம்

1. 10 பாக்கெட் கொண்ட பேமிலி பேக்கேஜ் 1000 ரூபா


 ஸார் லூஸ் ல தருவீங்களா?


 காசு குடுத்தா லூசா இருந்தாலும் தருவோம் # ரீமிக்ஸ்






=========================


2  டாக்டர்.அடிக்கடி மருதாணி வெச்சுக்கிட்டா மரு சரி ஆகிடுமா?


விட்டா ஆணிவேரை அரைச்சு சாப்ட்டா கால் ல ஆணி சரி ஆகிடுமா?னு கேட்பே போல


========================


3  டாக்டர்.அடிக்கடி சினிமாவுக்குப்போனா கண்ணுக்குக்கெடுதலா?



 போனா தனியாப்போய்க்கோ.நர்சைக்கூட்டிட்டுப்போய்ட்டா நான் என்ன பண்ண?



===============


4
எதுக்காக டாக்டர் டேபிள் ல இருந்த டேப்லட்டை எடுத்துட்டு வந்தே?


 மறக்காம டேப்லட் எடுத்துக்கனும்னு அவர் தான் சொன்னார்


===============


5 உயர் தர அசைவ உணவகம் னு போர்டு இருக்கே அசைவத்துல என்ன உயர் தரம்? 


தரமான சைவ உணவான அருகம்புல்லை மட்டும் சாப்பிட்ட ஆட்டை வெட்டி சமைப்போம்

====================


6
டாக்டர்.அடிக்கடி யாரையாவது திட்டணும் போலவே இருக்கு.என்ன பண்ண? 


ஏம்மா.வீட்ல புருசன் எதுக்கு இருக்காரு? திட்டு வாஙகத்தானே? ஸ்டார்ட் ம்யூசிக்


===================


7 சின்னதா பிஸ்நஸ் பன்னனும் எதாவது ஐடியா இருந்தா குடுங்கப்பா...."




ஒரு ஐடியா வுக்கு 500 ரூபா சார்ஜ்


=================


8 பிசிக்ஸ் மிஸ் பிந்துமாதவி = ஆப்பிள் கீழே விழுந்ததும் நியூட்டன் என்ன செஞ்சார்? 


லொள் மாணவன் = புது ஐ போன் வாங்கிட்டு ஆப்பிள வித்திருப்பார்
=================

9
DRஉங்க அட்வைஸ் படி டெய்லி பேக் பைப்பர் விஸ்கி ஒரு குவாட்டர் குடிச்சேன்.


யோவ்.நான் எப்போ அப்டி சொன்னேன்?


BP கம்மியா இருக்குன்னீங்ளே ?


================

10  நேர்முகத்தேர்வில்


 வணக்கம் சார்.

 வாங்க.உங்க பேர் என்ன?


 வணங்கா முடி சார்


இப்பதான் வணக்கம் வெச்சீங்க?


==================


11  கவுண்டமணி = டேய்.நான் ஒரு சிற்பி மாதிரிடா


செந்தில் = அண்ணே.நான் எஸ் ஏ ராஜ்குமார் மாதிரி


================


12  படத்தோட கதை என்ன?


பல ஹிட்ஸ் கொடுத்த என் கிட்டயே கதை கேட்டா எப்டி? "


WIN"ணைத்தாண்டி வருவாயா?


=============

13  சார்.ஸ்டாக் இருக்கும் வரை தான் இந்த அல்வா சேல்ஸ்


சும்மா அடிச்சு விடாதீங்க.ஸ்டொமக் இருக்கும் வரை சேல்ஸ் இருக்கும்


=============


14  டாக்டர்.குக்கர் ல சாப்பாடு வெச்சு சாப்ட்டா இதய நோய் வருமாமே?


 அப்போ குக்கர் ல இருந்து சாப்பாட்டை எடுத்து பிளேட்ல வெச்சு சாப்டுங்க


===============


15 ரஜினி, விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு?


 குஷ்பு பதில் # அவர் ஆதரவு என்னைக்கும் சுந்தர் சி க்குத்தான்


================


16 டவுன் பஸ்சில=் ஏப்பா.மரம் மாதிரி நிக்கறியே?நகர்ந்து வழி விடேன்.


மிஸ்! ஏன் மரங்கொத்திப்பறவை மாதிரி இந்த வெட்டு வெட்றீங்க?


=================

17
பொண்ணு சமந்தா மாதிரி இருக்கும்.


 அய்யய்யோ.டவுசரோட சுத்துமா? இது ஆவறதில்லைங்க


==============


18 முருகதாஸ் = தீபாவளிக்கு ஷங்கர் படம் வருதே.கத்தியை போஸ்ட்போன் பண்ணிடலாமா?


விஜய் = இணைய வாசிகள் நம்மை போஸ்ட் மார்ட்டம் பண்ணிடுவாங்க்ளே?


==================

19 விஜய் = மலையோட ஏன் மோதனும்? ஐ க்கு வழி விட்டு பொங்கலுக்கு கத்தி ரிலீஸ் பண்ணிடலாமே?


முருகதாஸ் = அது இன்னமும் டேஞ்சர்.தல யோட மோதனும்


=================


20 முத ரீல் ல வில்லன் ஹீரோவை மிரட்றான்.அடுத்த ரீல் ல ஹீரோ வில்லனை மிரட்றாரு


விஜய் = நேத்து லைக்கா நிறுவனம் நம்மை மிரட்டுச்சே அந்த மாதிரியா?


==================

காதல் 2014 - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்


தமிழ்சினிமாவில், இதுநாள் வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக நான்கைந்து இளைஞர்களில் ஒருவராக நடித்து வந்த ஹரீஷ், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம், ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்த மணிகண்டன், வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், 4-பேரால் பலாத்காரம் செய்யப்படும் கதாநாயகி நேகா, 4-பேர் பாராட்டும்படி வெற்றி வீராங்கனையாக மாறிடும் திரைப்படம்... என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''காதல் 2014''

கதைப்படி, நட்பாக இருக்கும் இரண்டு குடும்பத்தில் பிறந்த இளைஞனும், இளைஞியும் சிறுவயது முதலே நட்பாக இருக்கின்றனர். ஓட்டப்பந்தய வீராங்கனையாக துடிக்கும் நாயகிக்கு எல்லா விதத்திலும் உதவுகிறார் நாயகன். நாயகனும், நாயகியும் கல்லூரி பருவத்தில் தங்களை அறியாமல் காதலில் விழ, காதலில் ஒளிந்திருக்கும் காமம், இருவரையும் ஆள்அரவமற்ற காட்டிற்கு அழைத்து செல்கிறது. அங்கு எதிர்பாராத சூழலில் 'பாய்ஸ்' மணிகண்டன் உள்ளிட்ட 4 போதை ரவுடிகள், நாயகனின் கண்முன்பே நாயகியை கற்பழிக்கின்றனர். அதில் அப்செட்டாகும் நாயகனின் உதவி இல்லாமலே நாயகி அந்த நால்வரையும் எப்படி பழிதீர்த்து தன் வீராங்கனை லட்சியத்தை அடைகிறாள் என்பது தான் ''காதல் 2014'' படத்தின் கதை மொத்தமும்!

ஹரீஷ், நேகா, 'பாய்ஸ்' மணிகண்டன், அப்புக்குட்டி, 'பசங்க' சிவக்குமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜாபாண்டி, ஷிவானி, சின்ன கருப்பு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதில் நாயகர் ஹரீஷ் உயிரை கொடுத்து நடித்திருப்பது புரிகிறது.

நாயகி நேகா, சின்ன சிநேகா எனும் அளவிற்கு நடிப்பிலும், இளமை துடிப்பிலும் பிச்சி பெடலெடுத்திருக்கிறார்.

பைசலின் இசை, ரித்தீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், புதியவர் சுகந்தனின் எழுத்தில் இருக்கும் நெளிவும், சுழிவும் இயக்கத்தில் சற்றே கம்மியாக இருப்பதால் ''காதல் 2014'' - ''காதல் 2004'' ஆக சற்றே பழமையாக தெரிகிறது!
 
 
thanx - dinamalar

சிவப்பு எனக்கு பிடிக்கும் - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

பாடலாசிரியர் யுரேகா, யுரேகா சினிமாஸ் ஸ்கூல் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து, இயக்கியுமிருக்கும் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை ப(பா)டம் தான் ‛‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'' திரைப்படம்!

‛‛பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை தடுப்பதற்கு மும்பை மாதிரி, சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி உருவாக்கப்பட வேண்டும், அரசு பாலியல் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும், பாலியல் கல்வி பள்ளிகளில் அவசியம் கொண்டு வரப்பட வேண்டும்... உள்ளிட்ட கோரிக்கைகளை, கோரிக்கைகளாக காட்டிக் கொள்ளாமல் வலியுறுத்தி வெளிவந்திருக்கும் டாக்குமெண்ட்ரி ஓ...சாரி, திரைப்படம் தான் ‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'!

பாலியல் தொழிலாளி சான்ட்ரா எமியை, எழுத்தாளர் யுரேகா தான் எழுதும் ஒரு நாவலுக்காக சந்தித்து பேசுகிறார். சான்ட்ரா தான் சந்தித்த பல்வேறு விதமான வாடிக்கையாளர்களைப்பற்றி யுரேகாவிடம் பகிர்ந்து கொள்கிறார். அதை கதையாக்கும் யுரேகாவின் வாழ்க்கையிலும் ஒருவிதமான பாலியல் சோகம் குடி கொண்டிருக்கிறது. அது என்ன? ஏது...? சான்ட்ரா எமியின் எதிர்காலம் என்ன.? என்பதை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

நாயகி சான்ட்ரா எமி, ஆயிரம் சோகங்களை சுமந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பாலியல் தொழிலாளிகள் மாதிரி இல்லாமல் சோகமாக சீரியல் நாயகி மாதிரி சீரியஸாக தெரிவதும், திரிவதும் கடுப்பேற்றுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் புரோக்கர், தொழில் நடத்தும் பெண்மணி உள்ளிட்டோர் ‛வாவ்' சொல்ல வைக்கும்விதமாக நடித்திருந்தாலும், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை ஆபாசமில்லாமல் படம் பிடிக்கிறேன் பேர்வழி என அந்தமாதிரி கதையில், அந்த மாதிரி சீன்களை காட்டாமல் வெறுப்பேற்றுகிறார் இயக்குநர்...

மகேஷ்வரனின் ஒளிப்பதிவு, சிவசரவணன், அனீஷ் யுவானி இருவரது இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், இயக்குநர் யுரேகாவின் நடிப்பில் இருக்கும் தெளிவும், அழுத்தமும், இயக்கத்தில் இல்லாததும், ஊருக்கு ஊர் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற இயக்குநரின் வாதமும், படத்தை பின்னோக்கி இழுத்து செல்வதாக தெரிகிறது!

மொத்தத்தில், இயக்குநர் யுரேகாவிற்கு பிடித்த ‛‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'' எல்லோருக்கும் பிடிக்குமா தெரியவில்லை!!
 
 
thanx - dinamalar 

கள்ளக்காதலிகள் vs கல்லாக்காதலிகள்

1  முத்தம் ஒன்று தருவாய் என்று நம்பி வந்தேன் அருகில் வருவாய்! தருவாய் உன் ஒரு மாத வருவாய்





==============


2 முருகதாஸ் = இந்த தீபாவளிக்கு கத்தி யும் ஐ யும் மோதுது


ஷங்கர் = "ஐ" ஆம் வெய்ட்டிங் ;-)))


==============


3
கல்லாவை நிரப்பிச்செல்வதால் பெரும்பாலான கள்ளக்காதலிகள் கல்லாக்காதலிகள்


==============


4 அன்பே! சமந்தா ! உன் டவுசர் ஸ்டில்லைத்தாண்ட மறுக்கிறதே என் சிஸ்டத்தின் பிரவுசர்


==============


5  தாலி கட்டிட்டா எந்தப்பிரச்னை வந்தாலும் சகித்துக்கொள் என்பதன் சுருக் தான் சகி


=============


6  உன் உள்ளங்கை குழாப்புட்டு .விரல்கள் உதிரிப்புட்டு #,நொறுக்குத்தீனி யின் ஹனி



=================


7  வாழை இலை வெற்றிலை மாதிரி ருசியா இருந்தா ஹோட்டல் ல சாப்பாடு சாப்டுட்டு இலையையும் சாப்ட்ரலாம்.5 ரூபா இலை வீணாப்போகுது


==============


8  மனம் தொடு கரம் தொடு சிகரம் தொடு



==============


9 கேப்டன் ன் அஸ்திவாரர்கள் 1 எஸ் ஏ சந்திரசேகர் 2 ஆர் சுந்தர்ராஜன் 3 ஆர் கே செல்வமணி 4 இப்ராஹிம் ராவுத்தர் 5 லியாகத் அலிகான்்


=====================


10  உலகில் உள்ள நடிகர்களிலேயே நாயகியின் இடையில் இடைஞ்சல் இல்லாமல் பம்பரம் விட்ட ஒரே நாயகன் கேப்டன் தான்


===============


11 லெக் பைட் எனப்படும் புது பைட் உத்தியை தமிழ் சினிமாவில் முதலில் தந்தவர் கேப்டன் தான் .சிறையில் பூத்த சின்ன மலர்


===============


12 கேப்டன் ன் டாப் 3 லவ் & பேமிலி ஸ்டோரி 1 அம்மன் கோவில் கிழக்காலே 2 வைதேகி காத்திருந்தாள் 3 வானத்தைப்போல


கேப்டன் ன் டாப் 5 ஆக்சன் பிலிம் 1 கேப்டன் பிரபாகரன் 2 செந்தூரப்பூவே 3 ஊமை விழிகள் 4 புலன் விசாரணை 5 வல்லரசு


================


13
ஆட்டோ வில் பயணிக்கையில் நாம் போடும் ட்வீட்ஸ் எல்லாம் ஆட்டோ ட்வீட்.அதை நீங்க RT பண்ணி ஷேர் செஞ்சா.அது ஷேர் ஆட்டோ ட்வீட்


======


14 என் வீட்டைப்பார் என்னைப்பிடிக்கும் என அழைத்தேன்.பார்த்தாள்.ஹ்வுஸ் ஓனரைப்பிடித்திருக்கிறது என்றாள் # வா "ரணம்" 1000


========


15 
பொறுப்பில்லாமல் அரசியல் தலைவர்களை வரம்பு மீறி விமர்சித்து விட்டு பின் பிரச்சனை வந்ததும் அதற்காக வருந்தாதீர்



=================


16 அன்னை தெரேசா போல் உங்கள் வாழ்க்கையையே சேவைக்கு அர்ப்பணிக்க முடியவிட்டாலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை சேவைக்கு ஒதுக்கவும்


================


17  "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பக் வீட்டு பிகர் ட்ட ஐ டெக்ஸ் மை கடன் வாங்கி வைப்பது # வேற்று மை யில் ஒற்று மை்



=================


18 நான் ஈ படம் ஹிட் ஆனது எப்டின்னா ஈ படத்தை எடுத்தா அது எபிக் # E PIC(TURE)= EPIC


===============

19 ஒவ்வொரு வேளையும் அரை வயிறு உணவு மட்டும் உட்கொண்டால் உனக்கு ஆயுசு 100


================


20  சாப்பிடும்போது காய்கறி ,பொரியல் ,கூட்டு எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டாலும் அது கூட்டுக்குடும்பம் தான்


==========

Saturday, August 30, 2014

உப்புமா கம்பெனி -கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட் 2

1  சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்: ராமதாஸ் # ராத்திரி 11 டூ காலை 6 மூடித்தானே இருக்கு?னு சமாளிப்பாங்ளோ?



===============



2 அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்த மம்தா சிங்கப்பூர் செல்வது ஏன்? அருண் ஜெட்லி..# இது செலவீடுதானே னு நினைச்சிருப்பார்



================



3 உலகின் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 14வது இடம்: ரேங்கர் இணையதளம் கருத்து # நல்லா பாருய்யா.அந்தாள் தான் நெ 1



================



4 சென்னையில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.. # " தீர்த்த"க்கரைதனிலே டாஸ்மாக் பாரினிலே



===============



5  ஜெயலலிதாவை போல மாறப்போகிறேன்... கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு!! # தமிழ் இனத்தலைவரைத்திட்டி தினம் ஒரு அறிக்கை விடுவாரோ?



================



6 எப்பப் பார்த்தாலும் குடித்து விட்டு சண்டை.. கழுத்தை அறுத்துக் கணவரைக் காலி செய்த மனைவி! @ கரூர் # சபாஷ்.சம்சா"ரம்",அபா"ரம்"பம்



===============



7 எந்த சாதிக்காரனும் வேணாம். இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்கலிங்கா பஞ்ச் # எந்த சாதிக்காரனும் வேணாம் சாதிக்கறவன் போதும் .்னா இன்னும் டாப்பா இருந்திருக்கும்



=============

 

 


 பீகார் இடைத்தேர்தல்: லாலு- நிதிஷ்குமார் கூட்டணி முன்னிலை; BJPக்கு பின்னடைவு# இதே மாதிரி விலைவாசி ஏறிடடிருந்தா இந்தியா பூரா பின்னடைவுதான்



===============



9 எம்ஜிஆர் ,ரஜினிக்கு அடுத்து விஜய் தான் -சீமான் # சார் சார் பகலவன் க்கு கால்ஷீட் குடுத்துடுங்க சார்.பய புள்ள பம்முது



====================



10 
எனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை -அழகிரி # வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை னு குத்தாட்டம் போட்டுக்கூப்டனுமோ?"



================



11  ரூ 10 லட்சம் கட்டுங்க.இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்்- கேரள நீதிமன்றம் # கவுதமியையே கட்னவரு இந்த சின்னத்தொகையை கட்டமாட்டாரா?



=========



12  டங்கன்தான் எங்களுக்கு 'பாஸ்', சாஸ்திரி வெறும் 'மேஸ்திரி'தான்.. டோணி அதிரடி! # துவைச்சுக்காயப்போட்டு இஸ்திரி பண்ணிட்டாரு



========





13 2016’ ஸ்டாலின் ஆண்டாக இருக்கவேண்டும்: திமுக முன்னாள் அமைச்சர் # ஜெ வுக்கே ஜெயம்.



================



14  பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த செசன்சு கோர்ட்டு நீதிபதி பணி இடமாற்றம் # புது இடத்துல புது ஸ்டாfகிட்டே பழைய தப்பையே செய்வார்்



================

 

 

15 அனுமதியின்றி துப்பாக்கி:ஒருவர் கைது # நல்லா.விசாரிங்கய்யா.விஜய் ரசிகர்.அதான் துப்பாக்கி டிவிடி வெச்சிருந்தேன்னு சொல்லிடப்போறார்

 

 

=================



15
2016-ல் திமுக ஆட்சி அமைய எழுச்சியுடன் உழைக்க வேண்டும் - மு க # ஏற்கனவே இங்கே மக்கள் தொகை ஜாஸ்தி.



================



16 ஆன் லைன் விமர்சனங்களால் ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படுமோனு பயமா இருக்கு என்ன சார்? அஞ்சான் னு டைட்டில் வெச்ட்டு இப்டி அச்சப்படலாமா?

 

 

===============

 

 

17

: ஜெ. தனது செல்வாக்கு மூலம் பெரியார், அண்ணாவுக்கு பாரத ரத்னா வாங்கித் தர வேண்டும்" - தமிழருவி!# அவ்ளோவ் பெரிய அம்மாடக்கரா அவங்க?

 

 

================

 

 

18 சமந்தாவுக்கு நான் மட்டும் குறைச்சலா? பிகினி போட்டியில் குதித்த திரிஷா! # ஜட்டியாளர்கள் சாரி போட்டியாளர்கள் எல்லாரும் வரிசையா நில்லுங்க

 

 

================

 

19

கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட் 2க்கு பார்த்திபன் ரெடி.. பெயர் உப்புமா கம்பெனி! # இவ்ளோ வேகமாவா?,ரொம்ப தப்புமா

 

 

 

=================

 

 

20 அனைவர் கைகளிலும் வங்கி பாஸ்புக்! திட்டத்தை துவக்குகிறார் மோடி!!# பாஸ்புக் இருக்கும் ,செக் புக் இருக்கும்.ஆனா பேலன்ஸ் மட்டும் இருக்காது

 

 

=================

 

 

சட்டை மேல எவ்ளோவ் பட்டன் ? குஷ்பூ vs சமந்தா

1. பொண்ணுங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல 5 am க்கு அலாரம் வெச்சு எந்திரிச்சா அதுக்கு முன் 12 க்கே 10,000 பேர் சொல்லிடறாங்க


===================

2 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் அடிக்கடி கோவிச்சுக்கிட்டு நைட்ல அவங்கம்மா வீட்டுக்குப்போய்டறாங்க.இதுல சோகம் என்னான்னா காலைலையே வந்துடறாங்க


=================

3
ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் வெவ்வேறு சாமியா இருந்தாலும் எல்லோருக்கும் ஆன குள தெய்வம் பிள்ளையார் சாமிதான்

==============

4  உள்ளூர் லயே ஒழுக்கமா இருக்கறவங்களுக்கு எபோலோ ,எய்ட்ஸ் எந்த நோயும் வராது


================


5  எப்பவும் " தண்ணி" லயே மிதந்து கேப்டன் மாதிரி கண் சிவந்த மாடர்ன் பிகர்கள் எல்லோரும் கயல் விழிகளே!


=====================


கொஞ்ச நாள் FB பக்கமே வராம இருக்கும் சிலர் என்ன ஆனாங்கனு யோசிச்சுட்டு இருக்கும்போது திடீர்னு என்ட்ரி குடுத்து ்நான் அப்பாவாகப்போறேன் கறாங்க


=================


7  கிடைச்ச 2 செமீ இடத்துலயே சந்தன பவுடர் அடிச்சு ஒரு போஸ் ,ரோஸ் பவுடர் அடிச்சு இன்னொரு போஸ் னு 2 டிபி வெச்சுக்கறாங்க ;-)


================


8 சட்டை மேல எவ்ளோவ் பட்டன் ? குஷ்பூ = எண்ணிப்பாத்துக்கோ.எண்ணிலடங்காது. சமந்தா = ஒண்ணில் அடங்காது


====================


9  ட்ரைவ் inஹோட்டல் மாதிரி கோவில் பிரசாதம் சாப்டுட்டே சினிமா பார்க்கற மாதிரி டெம்ப்பிளேட் தியேட்டர் கட்டுனா சவுகர்யமா இருக்கும்.செய்வீர்களா


===============


10  கத்தி நியூ லுக் ல நரம்பு புடைக்க இளைய தளபதி போஸ் பிரமாதம்.ரட்சகன் ல நாகார்ஜூன் இதே போஸ் குடுத்துட்டார்னு யாரும் சொல்ல முடியாது


====================


11  சொந்த டிபி வைக்காம போக்கு காட்டி வரும் பெண் ட்வீட்டர்களே.இன்னைக்கு பிரதோசம் .நல்ல நாள்


===============


12 நடுநிலையா பாக்கும்போது துப்பாக்கி யை விட கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்லாருக்கு.விஜய் இன்னும் யூத்தா தெரியறார்


=================


13
Finally Audio Launch confirmed on Sep 15 = 15 9 2014 = கூட்டுத்தொகை =4 = விக்ரம் = ஷங்கர் = மெகாஹிட் = 4



=================


14 வெள்ளி எனில் பெரும்பாலான பெண்கள் புடவை கட்டிக்கொள்கிறார்கள்.ஆனால் கணவனை கட்டிக்கொள்ள அன்று மட்டும் தடை விதிக்கிறார்கள் # சாமி குத்தம்


==================


15  கெட்டும் பட்டணம் சேர்.. கெட் டுகெதர் லைப்க்கும் பட்டணம் சேர்



================

16 சின்னதம்பி பிரபு வுக்கே முன்னோடி மங்கம்மா சபதம் கமல் தான்.தாலி ன்னா என்னன்னே தெரிதல.மத்ததெல்லம் மஜாவா நடத்தறார் # வசந்த் டிவி


================


17  அஞ்சான் இயக்குன லிங்குசாமிய விடுங்க.2 பீஸ்ல வந்த சமந்தாவ விடுங்க.இந்தப்படத்துக்கு U சர்ட்டிபிகேட் குடுத்தாரே சென்சார் ஆபீசர்.அவரை பிடிங்க



==================

18  தயிர் சாதம் சாப்பிடும்போது விதவை நினைவு வந்தால் மாதுளை முத்துக்களைத்தூவி சுமங்கலி ஆக்கலாம்


=================



19 இந்தப்பொண்ணுங்க எல்லாம் பவுடரே அடிக்காம ஷைனிங்கா இருக்காங்க.நாம 2 கோட்டிங் பவுடர் அடிச்சும் மாநிறமாத்தான் இருக்கோம்.என்ன டிசைன் இது?


=====================

20  முதல்வர் கனவில் மிதப்பவரே!,தொண்டர் அடிப்பொடி ஆள்வாரே!தலையில் அடிக்கும் தவப்புதல்வரே!,ராவான பிறந்தநாள் வாழ்த்து


25 8 14 


=====================


Friday, August 29, 2014

இரும்புக்குதிரை - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு   பைக் ஆக்சிடெண்ட்ல  தன் அப்பாவை இழந்துடறார். அதனால அவருக்கு  பைக் ஓட்டறதுனாலே  பிடிக்கறதில்லை . அவர் பீட்சா டெலிவரி பண்ணும்   கடைல பார்ட் டைம்  ஜாப் பண்ணிட்டு இருக்கார் . 

அப்போதான் அவர்  கண்ணுக்கு  ஹீரோயின்  தட்டுப்படறார் . இப்போ ஹீரோவோட மெயின் ஜாப்பே  ஹீரோயின்  பின்னால  சுத்துவதுதான். ஹீரோயினுக்கு   ஹீரோ  மேல  லவ் எல்லாம்  இல்லை . ஆனாலும்  அதும்  கூடவே  சேர்ந்து  சுத்துது . 


 பைக் ல ரைடு  உடுவது  ஹீரோயினுக்குப்பிடிக்கும் . அதனால  ஹீரோவை  ஒரு பைக் வாங்கச்சொல்லுது . பைக்  ஷோ  ரூம் ல  போய்  அட்டகாசமா  ஒரு செகண்ட்  ஹேண்ட் பைக் வாங்கறாங்க . 

 அந்த  பைக் ல   ஜாலியா  ஒரு ரைடு  போகும்போது   வில்லன்  கரெக்டா எண்ட்ரி ஆகி  ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறார். 

 டக்னு  இடைவேளை . 

 அடேங்கப்பா . பிரமாதமான கதையா  இருக்கேனு    யோசிச்சுட்டு   செகண்ட்  ஆஃப்  பார்த்தா   இன்னும்   பிரமாதமான  கதை


 அதாவது அந்த  செகண்ட்  ஹேண்ட்  பைக்  வில்லனோடது . வில்லனோட  தம்பி  அந்த  பைக்கை  ஒரு பந்தயத்துல  ஹீரோ   கிட்டே தோத்துடறாரு. வில்லனுக்கு அந்த  பைக்னா  உயிரு . உயிருக்கு  உயிரான  பைக்கை  தம்பி இப்டி அநாமத்தா  தொலைச்ச்ட்டாரு. பொதுவாவே  உடன் பிறப்புன்னாலே   பிரச்சனை  தான் . 

அண்ணன்  திட்டுவார்னு பயந்து   தம்பி  தற்கொலை பண்ணிக்கறார். ( அய்யோ அம்மா செண்ட்டிமெண்ட்  செம்மல் ) ஹீரோ   வில்லன்  கூட பைக் ரேஸ் ஓட்டி ஜெயிக்கறாரா? தோக்கறாரா?னு தியேட்டர்ல  போய் அதுவரை  படம்  ஓடிட்டு  இருந்தா  பார்த்து  தெரிஞ்சுக்குங்க 



 ஹீரோவா   அதர்வா. ஆள்  செம  ஹேண்ட்சம் .  அப்பா  முரளியை  விட செம பர்சனாலிட்டி . வாரணம் 1000  சூர்யாவுக்கு  டஃப் ஃபைட்  குடுக்கும் அளவு  சிக்ஸ் பேக் பாடி .  அவர்  சிரிக்கும்போது    ஒரு அப்;பாவிக்குழந்தை  சிரிப்பது  போல்  செம  க்யூட் . காலேஜ்  கேர்ள்ஸ்  க்ரேஸ் ஆவது  உறுதி 


ஹீரோயினாக   ப்ரியா ஆனந்த் . அழகான  அவர்  கூந்தலை அலங்கோலம் ஆக்கி கேவலமா   ஒரு  ஹேர் ஸ்டைல் . ஓப்பன் டைப் கேர்ள் என்பதால் பாப்பா  எங்கே  போனாலும்   லோ கட் டிரஸ்  போட்டுட்டுதான்  போறாப்டி. அடிக்கடி  நடக்கும்போது  ஒரு குதி  குதிச்சா மாதிரி நடக்குது . அது மேனரிசமா? ஸ்டைலா? அல்லது  பார்க்காதவங்க  எல்லாம் நல்லா பார்த்துக்குங்கனு குதிச்சு  காட்டுதா  தெரியலை . 


 சைடு  நாயகியா  அரேபியன்  ஹார்ஸ்  , திருப்பதி லட்டு  லட்சுமிராய் எனும்  ராய் லட்சுமி . ஒரே  ஒரு குட்டைப்பாவாடை ( ஸ்கர்ட்டாம் )  ஸ்லீவ்லெஸ் சர்ட் ( உலகத்திலேயே ஸ்லீவ் லெஸ் சட்டை  போட்டது இந்த பாப்பா தான் )  மட்டும்  போட்டுட்டு அசால்ட்டா வருது . ட்விட்டர்ல  ஒரு வாரமா  செம எக்சைட்மெண்ட் . ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் -னு  ஓவரா அலப்பறை பண்ணீங்களே மேடம் , இதுக்குத்தானா?  முடியல 


 வில்லனா  ஏழாம் அறிவு வில்லன் . அவர்  வரும்போது ஆடியன்ஸ்  கை  தட்றாங்க . க்ளைமாக்ஸ்     ஃபைட்  நல்லாருக்கு  . இன்னும் நல்லா  பண்ணி  இருக்கலாம்.


ஹீரோவோட  அம்மாவா  தேவதர்ஷினி . யங்கா தான்  இருக்கு . ஓப்பனிங் சீன் ல   ஜாகிங்க்  போகும்போது  கூட வரும்   ஃபிகர்  ஓக்கே


படத்துக்கு  வசனம்  நர்சிம் . பிரபல  ட்வீட்டர் . சக  ட்வீட்டரா  வரவேற்கிறேன் .ஒரு மொக்கை படத்துக்கு  இந்த அளவு  சிரத்தை எடுத்து  வசனம்  எழுதிய  அவர் ஆற்றலைக்கண்டு  வியக்கேன்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   பாலகுமாரன் -ன்  நாவல்  டைட்டிலை அவர் கிட்டே அனுமதி வாங்காமலேயே  நைசா  எடிட் பண்ணி  யூஸ்  பண்ணிக்கிட்ட விதம் 


2 கதைக்குத்தேவை  இருக்கோ  இல்லையோ  , நாயகிகளா  2 பேரை   கம்மியான      டிரஸ் ல  உலவ விட்டது 



3 பாடல்கள்  தாமரை . 2 பாட்டு  நல்லாருக்கு .ஒரு மெலோடி  . ஒரு   குத்தாட்டப்பாட்டு   செம ஹிட் ஆகும் 


4  செஸ் போர்டில்  ஹீரோ  ஹீரொயின்  ராணியை வெட்டுவதும் அதைக்கண்டு   ஹீரோயின்  சிரிக்கையில்  ஹீரோ   டமால் ஆகும்போது  ஹீரோ செஸ்  போர்டில் உள்ள  ராஜா  கீழே  விழுவதும்   குட் டச்


5   அவ்ளவ்  பெரிய  பிரச்சனை  ஓடிட்டு  இருக்கும்போது  அந்த டமார  கிழவி “ நாராயணன்  ஏன்  கோபமா  இருக்கான் ?  “ என  கேட்பது சரியான சிச்சுவேஷன்  காமெடி 





இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 .  அண்ணன் பைக்கை   சூதாட்டத்துல  தோத்துட்டா  யாராவது  தற்கொலை செஞ்சுக்குவாங்களா? வீட்டை  விட்டு  ஓடுனா மேட்டர்  ஓவர் . உலகத்தை  விட்டே  ஓடனும்னா  கடன்  தொல்லை  இருக்கனும், அல்லது ஏதாவது  காதலி எனும் கடன் காரி  தொல்லை  இருக்கனும் .

2  ஹீரோ , ஹீரோயின்  கூட பைக்ல  போகும்போது  7 பேர்  புடை  சூழ  வில்லன்  ஹீரொவை அட்டாக் பண்ணி  ஹீரோயினை கடத்திட்டுப்போறார். அதுக்குப்பதிலா அவர் பைக்கை எடுத்துட்டுப்போய் இருந்தா அப்பவே  படம்  ஓவர் . ஹீரோயினை கடத்தி  வெச்சு  பைக்கை  குடுத்துட்டு அவளை  கூட்டிட்டுப்போ  என  கேட்கும்போது   ஆடியன்ஸ்  சிரிக்கறாங்க பாஸ் ,. கொஞ்சம்  கூட மெச்சூரிட்டி  இல்லாத   திரைக்கதை .  (  இதை சமாளிக்க படத்தில் வரும் ஒரு கேரக்டரே இதே  கேள்வியை  வில்லன் கிட்டே கேட்பது  போலவும்  அதுக்கு  ஒரு ச்சோப்ளாங்கி பதிலை  வில்லன்  சொல்வதும்  செம் காமெடி  ) 


3  பொல்லாதவன்  படம்  கூட பைக்கை   பேஸ் பண்ணி வந்த படம்  தான் . அதில் எவ்வ்ளவு  நுணுக்கமாக  , துல்லியமாக  உணர்வுப்பூர்வமா  கதை  சொல்லி  இருப்பார்  வெற்றி மாறன் ?  இதுல  இயக்குநர்  சொதப்பிட்டார்



மனம் கவர்ந்த வசனங்கள்

1. வா.எங்க கூட் ஜாகிங் 2 ரவுண்ட் . ஜெகன் = நோ.நேத்து நைட்டே 4 ரவுண்ட் முடிச்ட்டேன் # இ கு

2. உங்க பையன் லேப்டாப் ல கண்ட கண்ட இங்லீஷ் பட்ம் டவுன் லோடு பண்ணி வெச்சிருக்கான். டேய்.தமிழ்ப்படமா பாருடா # இ கு

3. அவனவன் குடிக்கறதே பீலிங்சை மறக்கத்தான்.நீ என்னடான்னா சரக்கடிச்ட்டு பிளாஸ்பேக் பீலிங் காட்றியே # இ கு

4. சார்.பால் மேல விழுந்துடுச்சா? உடம்பு னு 1 இருந்தாதானே மேல படும்? -மனோபாலா # இ கு

5. ஏன் பைக்கை நிறுத்தலை? பிரேக் பிடிக்கலை. பாத்தா புது பைக் போல் தெரியுது? ஐ மீன் நான் பிரேக் பிடிக்கல # இ கு

6. பொண்ணுங்களுக்கு காம்ப்ளிமெண்ட் பண்ணாத்தான் பிடிக்கும் ,U R cute னு sms அனுப்பு # இ கு

7. மிஸ்! நாளைக்கும் வருவீங்ளா? தெரில .வரனுமா? # இ கு

8. நாம வெச்சிருக்கும் பைக் ஊர்ல எவனும் வெச்சிருக்கக்கூடாது.ஓட்டும்போது ஊரே திரு.ம்பிப்பார்க்கனும் # இ கு

9. பொண்ணு மேல இந்தளவ்வுக்குக்கூட இன்ட்ரஸ்ட் இல்லின்னா லைf வேஸ்ட் #இ கு

10. நாம பக்கத்துல இல்லாதபோதும் ஒரு பொண்ணு நம்மைப்பத்தியே நினைச்சா அதான் லவ் # இ கு

11. உன்னைத்தான் பிடிக்கலைனு சொல்லிட்டாளே?,விட்ரு ஆனா எனக்கு அவளை ரொம்பப்பிடிக்குமே? # இ கு

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


பிரபல ட்வீட்டர் நர்சிம் தான் டயலாக் .அட்ரா விசிலை # இரும்பு குதிரை


ஓப்பனிங் சீன் ல் ஹீறோவின் அம்மா தேவதர்சினி ஜாகிங் போகுது.கூட ஒரு பக் வீட் பிகரு # இ கு

3.  அரபிக்குதிரை லட்சுமிராய் ஓப்பனிங் சீன் ல குத்தாட்டம்.செம.ஆனா பாடல் வரி ஹலோ பிரதர் னு வருது.தங்கச்சியா? # இ கு

4.  அதர்வா சிக்ஸ் பேக் காட்றாரு.ஏ சென்ட்டர் கேர்ள்ஸ் கை தட்டுதுங்க்.இந்தியா ஜொள்ளரசு ஆகிடும்டோய் # இ கு

5. பிகரு அழகா? செம அழகு. அப்போ கண்டிப்பா மூளை இருக்காது.சும்மா மொக்கை போடு# இ கு

6. மல்கோவா மாம்பழம் மாதிரி லட்சுமிராய் பக்கத்துல இருக்கு.அது தோழியாம்.ப்ளம்ஸ் பழம் போல் சின்னதா இருக்கு ப்ரியா ஆனந்த்.அது காதலியாம் # இ கு

7. ப்ரியா ஆனந்த் கழுத்து செக்கச்செவேல் னு இருக்கு.தோள் ,சோல்டர் எல்லாம் மாநிறமா இருக்கு.பவுடர் போட்டா புல்லா போடனும் # இ கு

8. லட்சுமிராய் ஒரு பிராவும் ஒரு டவுசரும் போட்டுட்டு ஆபீசுல வேலை செய்யுது.பாண்டிச்சேரில அப்டி ஒரு ஆபீச் இருக்கா? # இ கு

9. இரும்பு குதிரை = இடைவேளை.இது வரை கதை னு 1 கண்ல தட்டுப்படலை.கிளாமரை ஒப்பேத்திட்டாங்க.


சி பி கமெண்ட்  -
இரும்பு குதிரை= கதையே இல்லாத அட்டர் பிளாப் படம் = விகடன் மார்க் = 39,ரேட்டிங் = 2 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2  /  5
   


  1. Irumbu Kuthirai is an upcoming Tamil action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, Priya Anand, Johnny Tri Nguyen, Raai Laxmi. 

  2. Director: Yuvaraj Bose
  3. Music composed by: G. V. Prakash Kumar
  4. Producer: Kalpathi Aghoram
  5. Production company: AGS Entertainment

சலீம் - சினிமா விமர்சனம்


 ஹீரோ ஒரு டாக்டர்.நேர்மையானவர். நிதானமானவர்.அவருக்கு மேரேஜ் பிக்ஸ்  ஆகுது.நிச்சயம் ஆன்  பொண்ணு கோபக்காரப்பொண்ணு.அவசர புத்தி.( பொதுவாவே  பொண்ணுங்க அப்டித்தான். இது கொஞ்சம் ஜாஸ்தி )சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபம்,அவசரம்.போன் பண்ணும்போது ஹீரோ போனை எடுக்கலைன்னா கோபம்.ஹாஸ்பிடல் ல ஏதாவது அவசர ஆபரேசன் பண்ணும்போது போன் பண்ணறப்ப  போனை எடுக்கலைன்னா கோபம் .

ஒரு நாள் ஹீரோயின் தோழிகளுக்கு   ஒரு பார்ட்டி வைப்பதா  ஹீரோ சொல்றார்.அந்த பார்ட்டிக்கு வராம கேஸ்  விஷயமா 
ஹாஸ்பிடல்ல இருந்துட றார்.2 பேருக்கு ம் பிரேக்கப் ஆகும் சூழ்நிலை.


ஒருநாள்  டாக்டர் கார்ல போகும்போது  வழில ஒரு பொண்ணு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுக்காட்டில் கிடக்குது.காப்பத்தறார்.

பணம்  இல்லாததால  ஆபரேசன் பண்ண மேலிடம் ஒத்துக்கலை. இவர் தானே தன்  சொந்த  செலவுல ஆபரேஷன் பண்றார்.

அந்த பொண்ணை  ரேப் பண்ணவன்   ஹோம்  மினிஸ்டர் பையன் .  மைனர்  வேற . சட்டத்தின்  முன்  நிறுத்துனா நைஸா  எஸ் ஆகிடுவான் . அதனால அவனை  எப்படி சட்டப்படி   ஹீரோ பழி வாங்கறார் என்பதே  கதை


ஹீரோவா   விஜய் ஆண்ட்டனி . பிள்ளையார் சதுர்த்தி  ரிலீஸ் என்பதாலோ என்னவோ  எல்லா சீனிலும்   மண்ணு மாதிரி  நிக்கறார் ( மன் மோகன் சிங்க் மன்னிக்க )  முதல் படமான நான் படத்தில்  அப்டி இருந்தது  அந்த கேரக்டருக்கு ஓக்கே . எல்லாப்படத்துக்கும் அது  செட் ஆகுமா? ஹோட்டல் ரூமில்   ஒரு ஆக்சன்  காட்சியில்  சுறுசுறுப்பா நடிச்சிருக்கார் . சபாஷ்


 ஹீரோயினா  யாரோ  தெலுங்கு முத்தின கத்திரிக்கா . ஏதோ அக்‌ஷா வாம் . தேக்சா மாதிரி  இருக்கு . நக்மா சாயலில்  இருந்தாலும்  அது பாக்க  ஹீரோவுக்கு  பெரியம்மா  மாதிரி  இருக்கு .  நல்ல  ஃபேமிலி  கேர்ள்  போல . தேவையே  இல்லாம  அடிக்கடி  குனியுது . சொந்த  ஊர்  குனிய  முத்தூரா  இருக்கும் .


வில்லனா  வரும்  அந்த  ஹோம்  மினிஸ்டர்  நடிப்பு  கலக்கல் .  டெபுடி  போலீஸ்  கமிசனரா வருபவர் நடிப்பு   குட்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1    ரொம்ப  நிதானமா  திரைக்கதை யை அமைச்சது .  தெளீவான காட்சி அமைப்புகள் 


2  டெல்லியில் நடந்த  கேங்க்  ரேப்பில்  அந்த மைனர்  பையன் எஸ் ஆவது பலருக்கும்  செம கடுப்பு ., அந்த   மேட்டரைக்கதைக்களமா  வெச்சிருக்கார் .  குட் 


 3  போஸ்டர்  டிசைன்  . டி வி  விளம்பரங்கள்  கன கச்சிதம் . 


4   போலீஸ் ஆஃபீசர்  ஹீரோவுக்கு   ஃபோன் செய்யும்போது  நைசாக   “ வில்லன்  மைனர் . பார்த்துக்கோ என  சூதானமாக தகவல்  தருவது  சாணக்கியத்தனம் ( இப்டித்தான்  தமிழ் இனத்தலைவர்  “ அனைவரும் ஒற்றுமையா  இருக்கனும்”னு மக்களூக்கு  மெசேஜ்  தருவது  போல் தன் 2 மகன்களுக்கும்  செய்தி பாஸ் பண்ணுவார்  )




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.   ஹீரோயின்  தனக்கு  நிச்சயம் ஆன மாப்ளை  ஒரு டாக்டர் என்பது  தெரிந்தும்  ஓவராய் அலம்பல்  பண்ணுவது  செயற்கை . டாக்டர்னா  , போலீஸ் ஆஃபீசர்னா   அடிக்கடி  இப்டி வீட்டுக்கு  வர  முடியாம  இருக்கும்னு  தெரியாதா? 


2   முன்  பாதி  நிதானமாகச்செல்லும்   திரைக்கதை  பின் பாதியில்ம்  வேகம்  எடுக்கிறது . ஆனா நம்பகத்தன்மை கம்மி 


3  போலீஸ் ஆஃபீசரிடம்  ஹீரோ  ஒரு கார்  கேட்கறார் ./   அதை  ஃபாலோ பண்ண   பல ஏற்பாடு  செஞ்ச  போலீஸ்   ஹீரோ அந்தக்கார்  வேணாம்  . வேற கார் தாங்க  என கேட்டதும்  அடடா இப்டி மாத்திக்கேட்பார்  என எதிர்பார்க்கலை என  மினிஸ்டரிடம்  பேசுவது  சிறுபிள்ளைத்தனம். இதைக்கூட   கெஸ்  பண்ண  முடியலைன்னா    நீங்க என்ன  போலீஸ்  ? 


4   அந்தப்பெண்  காட்டில்   மாஸ்  ரேப்  செய்யப்படுவது  மிக சூசகமாக காட்டப்படுது . பாதிப்பு அழுத்தமா  ஆடியன்ஸ் மனசுல  பதியல .



மனம் கவர்ந்த வசனங்கள்



1. MP=நான் தான் போன் ல் அவன் கிட்டே பேசிட்டு இருக்கனே எதுக்கு குறுக்க ஐயா நொய்யா ன்னுட்டு இருக்கே? அவன் போனை வெச்சு பலநேரம் ஆகுது #சலீம்

2. அரசியல்வாதிங்க எப்போ போலீசை அடியாளா நினைக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே போலீசுக்கான மரியாதை போச்சு. #சலீம்

3. ஹோம் மினிஸ்டர் = அங்கே என்ன புடுங்கிட்டு இருக்கியா? கமிசனர் = ஏன்?நீங்களும் வந்துதான் புடுங்கறது # சலீம்

4. கமிசனர் = டேய்.உனக்கு என்னதாண்டா வேணும்? மரியாதை. சார்.என்ன வேணும் உங்களுக்கு? சூடா ஒரு டீ #,சலீம்

5. குத்தாட்டம் போட லேடியை FIX் பண்ணுங்க.வேணாம்கலை.அதுக்காக கலா மாஸ்டர் தங்கச்சி மாதிரி பொண்ணை எல்லாம் கூட்டிட்டு வந்தா எப்டி? முடியல.# சலீம்

6. 2 வருசம் ஜெயில் வாழ்க்கை வாழ் றதை விட இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் மனசுக்குப்பிடிச்ச வாழ்க்கை வாழப்போறேன் # சலீம்

7. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா?ஏன் என்னைப்பிடிக்கலை? எனக்குத்தேவைப்படும்போது நீங்க பக்கத்துல இருக்கறதில்லை # சலீம்

8. பணம் வர்ற கேஸ் எல்லாம் பிரைவேட் க்கு.ஏழைங்கன்னா கவர்மென்ட் ஹாஸ்பிடல்க்கா?நல்லா இருக்குடே உங்க நியாயம்?# சலீம்

9. காதல்ங்கறது ஹைவேஸ்ல கார்ல வேகமாப்போறமாதிரி.கொஞ்சம் அசந்தா ஆளைக்காலி பண்ணிடும் # சலீம்

10. நீங்க ஏன் சூர்யா மாதிரி சிக்ஸ்பேக் வைக்கக்கூடாது? உனக்கு சூர்யான்னா ரொம்பபிடிக்குமா? ம்ஹூம்.சிக்ஸ்பேக் னா பிடிக்கும் # சலீம்

11. செத்துப்போன மாத்திரையைத்தந்திருக்கே? வாட்? எக்ஸ்பியரி டேட் முடிஞ்ச டேப்லட் # சலீம்

12. ஏய்! மேட்டர்டி. வாட்? டாக்டர்டி # சலீம்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

1. ரேப் பண்ணிட்டு மைனர் தான் னு சிறார் ஜெயில் ல 2 வருசத்துல ரிலீஸ் ஆகிடும் பிராடுகளுக்கான சவுக்கடி #,சலீம்

2. பின் பாதி படம் கமல் ன் உன்னைப்போல் ஒருவன் ,கார்வண்ணன் ன் பாலம் போல் ட்ரை.மயிலைப்பார்த்து வான் கோழி ஆடிய கதை #,சலீம்

3. சலீம் = இடைவேளை வரை ஸ்லோ முதல் படமான நான் அளவு த்ரில்லர் இல்லை.சுமார்தான் # சலிம்

4.  மிக நிதானமான திரைக்கதை.ஸ்லோ & ஸ்டெடி வின் த ரேஸ் பார்முலாவா ?# சலீம்

5. கேமரா எப்பவும் டாப் ஆங்கிள்லயே இருக்கு.ஹீரோயின் ஜாக்கெட் எப்பவும் லோ ஆங்கிள் ல யே இருக்கு.வித்தியாசமான கோணத்தில் படமாக்கப்பட்டதோ? #சலீம்

6. உன்னைக்கண்ட நாள் முதல் பாட்டு ஒளிப்பதிவு கலக்கல்.விஜய் ரேஞ்சுக்கு விஜய் ஆன்ட்டனி பில்டப் # சலீம்

7. ஹீரோயின் குப்புறக்கா படுத்துட்டு டைரி படிக்குது. கண்ணுக்கு கெடுதல் அவங்களுக்கு.கண்ணுக்கு குளிர்ச்சி நமக்கு # சலீம்

8. ஹீரோயின் இன்ட்ரோ.முகம் முத்தலா இருக்கே? சரி.சமாளிப்போம்.முகமா முக்கியம்?, எம் ஏ பிலாசபி # சலீம்


சி பி கமெண்ட்- சலீம் = ரேப்பிஸ்ட்டை பழி வாங்கும் சாதா கதை.முன் பாதி ஸ்லோ.பின் பாதி ஸ்பீடு .நான் அளவு இல்லை.விகடன் =41,ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =    2.5 /  5 





Vijay Antony as Salim

Aksha Pardasany as Nisha

Azam   Sheriff as Sam

  R. N. R. Manohar


   Premgi Amaren 



a









a







a








a








a






a








  

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (29. 8 .2014 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

சலீம் ,இரும்பு குதிரை,மேகா,சிவப்பு எனக்கு பிடிக்கும் ,காதல்.2014 ,புதியதோர் உலகம் செய்வோம் ,வெச்சுக்கவா,த நவம்பர் மேன் ,நிஞ்சா டர்டில்ஸ் ,rabaasa# 29 8 14

1.

சலீம், நான் படத்தின் 2ம் பாகமா? மழுப்பும் விஜய் ஆண்டனி!
1

Vijay Antony not reply is Salim movie is sequel of Naan
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தாஸ்னி நடிக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர் என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல்களும், டிரைலரும் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவைகள் அச்சு அசலாக விஜய் ஆண்டனியின் முந்தைய படமான நான் போலவே இருந்தது.

நான் படத்தை போலவே இந்தப்படத்திலும் பாடல்கள் அமைந்துள்ளது. குறிப்பாக மாக்காயல மாக்கயால பாட்டுபோல இதிலும் ஒரு கிளப் டான்ஸ் வருகிறது. அந்த பாட்டின் ஊடே விஜய் ஆண்டனி முறைத்தபடி நடந்து செல்கிறார். நான் படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் பெயர் சலீம். இந்தப் படத்திலும் அவர் பெயர் சலீம். அதில் டாக்டருக்கு படிப்பார், இதில் டாக்டர். மூன்று நிமிட டிரைய்லரிலேயே இரண்டு படத்துக்கும் இத்தனை ஒற்றுமை. அப்படி என்றால் இரண்டு மணி நேர படத்தில் எத்தனை இருக்கும் என்பதுதான் கேள்வி. இதை அவரிடம் கேட்டால் இப்படிச் சொல்கிறார்.

" சலீம் நான் படத்தின் இரண்டாம் பாகமா, தொடர்ச்சியா என்று கேட்டால் ஆமாம் என்றும் சொல்ல முடியாது. இல்லவே இல்லை என்றும் சொல்ல முடியாது. இரண்டு படத்துக்கும் சில விஷயங்கள் ஒத்துப்போகலாம். ஆனால் இதன் கதை களமே வேறு. அதுபற்றி இப்போது விளக்கமாக சொல்ல முடியாது படம் வந்ததும் தெரியும் என்று மழுப்பலாகவே சொன்னார்.



 2  இரும்பு குதிரை
பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்கள். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அதர்வா பைக் ரேஸ் ஓட்டுபவராக வருகிறார்.

இரும்பு குதிரை படத்தை சென்சார் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் பார்க்க உள்ளனர். அதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி அதாவது பண்டிகை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். 

3

மேகா

புதிய கோணத்தில் காதல் சொல்லும் மேகா!

New movie Mega
புதிய கோணத்தில் காதலை சொல்லும் சினிமாவாக மேகா படம் உருவாகி வருகிறது. ஜி.பி.ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார் தயாரிக்கும் படம் மேகா. அஸ்வின், சிருஷ்டி தாங்கே, அங்கனா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், பழனிபாரதி எழுதியுள்ளனர்.

மேகா குறித்து படத்தின் டைரக்டர் கார்த்திக் ரிஷி கூறுகையில், புதிய கோணத்தில் சொல்லப்படும் காதல் கதை இது. புதிய இசை வடிவில், படம் உருவாக வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா ஹங்கேரி சென்று, சிம்பொனி இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கினார். அவரும், யுவன் சங்கர் ராஜாவும் தலா 2 பாடல்களை பாடியிருக்கின்றனர். படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது, என்றார்.


4 சிவப்பு எனக்கு பிடிக்கும்

மலையாள தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்து நடிகையானவர் சான்ட்ரா. தமிழ் தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்த பிரஜனை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி இருவரும் தொலைக்காட்சியை துறந்து சினிமாவில் கவனம் செலுத்துகின்றனர்.
சான்ட்ரா தமிழில் நாயகியாக நடித்த படம், சிவப்பு எனக்கு பிடிக்கும். இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பாலியல் தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பது முதலான கருத்துக்களை கொண்ட படம் இது.
இந்நிலையில் இந்தியில் ஆண்டனி டிசோசா இயக்கும் படத்தில் இம்ரான் ஹஸ்மியை காதலிப்பவராக சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சான்ட்ராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கதைப்படி இந்த கதாபாத்திரம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண். அந்த வேடத்துக்கு சான்ட்ரா பொருத்தமாக இருப்பார் என அவரது புகைப்படத்தைப் பார்த்து ஆண்டனி டிசோசா சான்ட்ராவை அணுகியுள்ளார். சின்ன வேடம் என்றாலும் இம்ரான் ஹஸ்மியுடன், இந்திப் படத்தில். யோசிக்கவேயில்லை சான்ட்ரா. உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தி சினிமாவில் இம்ரானுக்கு முத்தக் கலைஞன் என்றொரு பெயரும் உண்டு. இவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும் முத்தக் காட்சி இடம்பெறும். சில படங்களில் நாயகிக்கு பல டஜன் முத்தங்கள் வாரி வழங்கியுள்ளார். முத்த விஷயத்தில் கமலை இவர் எப்போதோ ஒவர்டேக் செய்துவிட்டார்.
இந்தப் படத்திலும் இம்ரான் - சான்ட்ரா முத்தக் காட்சி உள்ளது. கதைக்கு தேவைப்பட்டதால், முக்கியம் என்பதால் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்துள்ளார் சான்ட்ரா.
5 காதல் 2014
Kadhal 2014 explores sexual violences
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது காதல் களியாட்டங்கள் பெருகிவிட்டதால்தான் என்பதை அடித்துச் சொல்லும் படமாக தயாராகி இருக்கிறது காதல் 2014 என்ற படம். மாத்தியோசி, முத்துக்கு முத்தாக படங்களில் நடித்த ஹரிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். சினேகாவின் முகச் சாயல் கொண்ட நேகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாய்ஸ் மணி கண்டன் வில்லனாக நடித்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடி செய்கிறார். வருகிற 29ந் தேதி படம் ரிலீசாகிறது.

"நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் பெருகி விட்டது. காரணம் காதல்தான். டில்லியில் நள்ளிரவு ஒரு பஸ்சில் காதலன் கண் முன் காதலி கற்பழிக்கப்படுகிறாள். 12 மணிக்கு நள்ளிரவில் காதலர்களுக்கு என்ன சார் வேலை. கிழக்கு கடற்கரை சாலை சவுக்கு காட்டுக்குள், பீச்சின் ஒதுக்குபுறமான இடத்துக்குள், நெடுஞ்சாலைகள், தனி வீடுகள் இப்படி எங்கெங்கும் பாலியல் வன்முறைகள். காரணம் காதலர்களின் அத்து மீறல்கள்.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் நேகாவை ஒரு காட்டுக்குள் காதல் செய்ய அழைத்து செல்கிறார். காதலிக்க நடுக்காடுதான் வேண்டுமா. அவரது நோக்கம் அங்கு வைத்து அவரை அடைந்து விட முடியதா என்பதுதான். ஆனால் அங்கு வந்த பாய்ஸ் மணிகண்டன் தலைமையிலான கும்பல் கேங் ரேப் செய்து விடுகிறது. குற்ற உணர்ச்சியால் ஹீரோ துடிக்கிறான். மனமும், உடலும் வலிக்க ஹீரோயின் துடிக்கிறார் இறுதியில் என்ன தீர்வு என்பது கதை. இப்படிப்பட்ட நல்ல கதைக்கு, வன்முறையோ ஆபாசமோ இல்லாத கதைக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. என்கிறார் இயக்குனர் சுகந்தன்.
 
6

புதியதோர் உலகம் செய்வோம்

Puthiyathor Ulagam Seivom movie team meet APJ Abdul Kalam
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆசி வழங்கினார்.
"நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும்" என்று அப்துல் கலாம் வாழ்த்தினார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பத்து வயதுப் பையன் ரோஷன் தன் தந்தையைப் பார்த்துப் பேசிய வசனத்தை, நேரில் உணர்ச்சி பொங்க பேசி நடித்துக் காட்டியதைப் பார்த்து டாக்டர் கலாம் உருகிப் போனார். ஆஜித், அனு, யாழினி, சந்தோஷ் பாலாஜி, சூர்யேஸ்வர் ஆகியோர் இப்படத்திலுள்ள "தேசம் எங்கள் தேசம்" பாடலின் சில வரிகளைப் பாடியதைக் கேட்டு மிகவும் ஆனந்த மடைந்தார்.

இச்சந்திப்பின் போது, படத்தின் கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய கே.எஸ்.நாகராஜன் ராஜா, தயாரிப்பாளர் எம்.எஸ்.ஜெய்க்குமார், இணைத் தயாரிப்பாளர் பிரியா ஜெய்க்குமார், டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சமூக சேவகர் அப்துல்கனி ஆகியோர் உடனிருந்தனர்.
7 வெச்சுக்கவா
 

 தி நவம்பர் மேன்

The November Man is being dubbed in tamil
பிரபல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் ப்ரோசன் நடித்திருக்கும் படம் தி நவம்பர் மேன். அவருடன் லுக் பிரயோ, ஓல்கா குர்லியங்கோ நடித்திருக்கிறார்கள். ஸ்பீசிஸ், ரெக்ரூட் ஆஃப் பேங் ஜாப் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்டன் இயக்கி இருக்கிறார்.இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

நம்பர் ஒண் சி.ஐ.ஏ ஏஜெண்டான பிரைஸ் ப்ரோசன் தன் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையை சுவிட்சர்லாந்தில் அமைதியாக கழிக்கிறார். அப்போது அமெரிக்க அரசு ஒரு முக்கிய வழக்கின் சாட்சியான ஒரு சிறுவனை பாதுகாக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்கிறது. சின்ன பையன்தானே என்று அதை ஏற்றுக் கொள்ளும் அவருக்கு வருகிறது அடுத்தடுத்த சிக்கல். அந்த பையனை அவரிடமிருந்து கைப்பற்ற சர்வதேச அளவில் ஒரு நெட்ஒர்க்கே செயல்படுகிறது. ஏன் எப்படி என்று அவர் இறங்கும்போதுதான் சி.ஐ.ஏவில் உள்ள பல கறுப்பு ஆடுகளை அவர் கண்டுபிடிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் இல்லாத ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை.

உலகம் முழுவதும் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 29ந் தேதி ரிலீசாகிறது. கோத்ரா மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 
 9
டீன்ஏஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டில்ஸ் (Teenage Mutant Ninja Turtles) யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 65 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்படியொரு வசூலை பாராமவுண்டே எதிர்பார்க்கவில்லை. உலகம் முழுவதும் இந்தப் படம் ஞாயிறுவரை 97.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
நிஞ்சா டர்ட்டில்ஸுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த உடனேயே படத்தின் சீக்வெலை அறிவித்தது பாராமவுண்ட் ஸ்டுடியோ. முதல் பாகத்தை இயக்கியவர்தானா இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என்பது பற்றியெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை.
அதற்குள் சீக்வெலை அறிவித்து, 2016 ஜுன் 3 படம் வெளியாகும் என வெளியீட்டு தேதியையும் தெரிவித்திருக்கிறார்கள்.
எல்லாம் டாலர் மழை படுத்துகிறபாடு.
 
10 Rabhasa is a 2014 Telugu film written & directed by Santosh Srinivas. This film produced by Bellamkonda Suresh and Bellamkonda Ganesh Babu on Sri Lakshmi Narasimha Productions features N. T. Rama Rao Jr., Samantha Ruth Prabhu and Pranitha Subhash in the lead roles and Nassar, Jayasudha & Brahmanandam in key roles.[1] S. Thaman composed the music for the film.[2] While Shyam K. Naidu handled the cinematography, Kotagiri Venkateswara Rao provided the editing for the film.[3] Director V. V. Vinayak provided voice-over for a few sequences in the film.[4]
thnx - dinamalar  , maalaimalar , web duniya