ஹீரோயின் ஓப்பனிங்க் சீன்லயே கள்ளக்காதலனுடன் பெட்ரூம்ல ஏதோ ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிட்டு( !!) இருக்கும் போது புருஷன் போன் பண்றார். ஆனா பாப்பா எடுக்கலை. ஏன்னா எடுத்தா எங்கே இருக்கே?னு கேட்பாரு , பொய் சொல்ல வேண்டி வரும் . எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லாத பொற் தாமரையா வளரனும்னு ஆசைப்படறாரு போல .
1ம் தெரியாத பாப்பா வராததால ஹீரோ தன் குழந்தையை ஸ்கூலில் விட ரயில் ல போறார். அது மெட்ரோ ரயில் . சுரங்கப்பாதைல ஏதோ தண்ணி கசியுது-னு லேபர் சொல்லியும் ஹையர் ஆஃபீசர் கண்டுக்கலை . மப்புல உளர்றான் -னு அலட்சியப்படுத்திடறாங்க . பொதுவாவே ஹையர் ஆஃபீசர் , டேமேஜர் இவங்க எல்லாம் தனக்குக்கீழே வேலை செய்பவனை மதிக்க மாட்டாங்க ., அவங்க சொல்றதை கேட்டுக்க மாட்டாங்க .
எங்கேயும் எப்போதும் படத்தில் வருவது போல் ஒரு லவ் ஜோடி . நம்ம ஹீரோ , பொண்ணு , அந்த கள்ளக்காதலன் எல்லாரும் அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யறாங்க . மாபெரும் விபத்து ஏற்படுது.. அந்த குகைல மாட்டிக்கிட்டு அவங்க எல்லாம் எப்படி தப்பிக்கறாங்க என்பதே சுவராஸ்யமான திரைக்கதை .
இந்த மாதிரி கதைகள் எவர் க்ரீன் ஃபார்முலா . மக்கள் ரசிப்பாங்க
ஹீரோவா செர்ஜி புஸ்கி பலிஸ் நல்ல நடிப்பு . மனைவி தனக்கு துரோகம் பண்றா எனும் ஆத்திரம் , கள்ளக்காதலன் தன்னை நக்கல் அடிக்கும்போது ஆவேசம் , நெருக்கடியான சூழ்நிலைகளீல் சமயோசித நடவடிக்கை என நல்லா பண்ணி இருக்கார்
ஸ்வெட்லானா கோட்சென்கோவா தான் நாயகி . கள்ளக்காதலனுடன் கில்மா , வாக்குவாதம் ஆகிய காட்சிகளில் தத்ரூபமாக நடித்துள்ளார் . அனுபவம் பேசுதோ என்னவோ ?
அந்த குழந்தை கூட நல்லா நடிச்சிருக்கு
வில்லனா வரும் கள்ளக்காதலன் ஓக்கே ரகம்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. திரைக்கதை அமைத்த விதம் காட்சிகளை படமாக்கியது எல்லாமே நேரில் விபத்தைப்பார்ப்பது போலவே அருமையான படமாக்கம்
2 மெட்ரோ சுரங்க ரயில் பாதைகளில் விபத்து நடந்தால் ரயிலை விட்டு இறங்கி டிராக்கில் நடக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு ஊட்டும் விதமா நல்லா காட்சி அமைச்சிருக்கார்
3 நாயகி தன் கள்ளக்காதலனுடன் வாக்குவாதம் செய்யும் காட்சி செம
4 காதலியி ஆஸ்துமா ட்ரபுளால் அவஸ்தைப்படும்போது காதலன் அவள் தவற விட்டை மருந்தை தன் உயிரைப்பணயம் வைத்து எடுத்து வரும் காட்சி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 குகைக்குள் புகுந்த அவ்வளவு தண்ணீரையும் லிக்விட் ஹைட்ரஜன் மூலம் அழித்து விடலாம் என்பதை வெறும் வசனமா வெச்சு எஸ் ஆகாம அதை பிரம்மாண்டமா காட்சிப்படுத்தி இருக்கலாம்
2 பொதுவா குழந்தை முன் எந்த அப்பாவும் தன் பலகீன த்த காட்டிக்க மாட்டார் ., ஆனா ஹீரோ தன் நடவடிக்கைகளால் தவளை மாதிரி மகளிடம் மாட்டிக்கறாரே அது எப்படி ?
3 நாயகி தன் குழந்தைக்காக துடிக்கறார் . அங்கேயும் இங்கேயும் ஓடறார் . எல்லாமே கலைஞர் ஈழத்தமிழர் நலனுக்காக மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் மாதிரி ஏனோ தானோ நு இருக்கு. அவர் தன் உயிரைப்பணயம் வைத்து குழந்தை , கணவனை காப்பாற்ற முயல்வது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம்
மனம் கவர்ந்த வசனங்கள்
1 காசு,பணம் ஒருத்தர் கிட்டே எவ்ளவ் இருந்தாலும் வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு குடுப்பினை வேண்டும்.அது எல்லார்க்கும் கிடைச்சுடறதில்லை #METRO
2 டூ வீலர் ல போனா ஆபத்துனு ரயில் ல வந்து இந்த விபத்தில் மாட்டிக்கிட்டேன்.
ஒண்ணு நடக்கனும்னு விதி இருந்தா அது நடந்தே தீரும்
3 நம்மோட வலியை மத்தவங்க கிட்டே சொல்லலாம்.ஆனா அந்த வலியை உணர வைக்க முடியாது.நம்மால் மட்டுமே நம் வலியை உணர முடியும்
4 எல்லாரும் விபத்துல மாட்டிக்கிட்டு உயிருக்குப்போராடிட்டு இருக்கோம்.இங்க
வந்தும் ஒருத்தன் திருடிட்டு இருக்கான் பாருங்க.அடேய் ! ;-) #METRO
5 மிஸ்! 4 மாசமா விடாம உங்களை பாலோ பண்ணிட்டு இருக்கேன்.நீங்களும் என்னை நோட் பண்ணிட்டு இருக்கீங்க.என்னைப்பத்தி என்ன நினைக்றீங்?
BJP னு#METRO
6 ஆம்பளை எப்பவும் ஆம்பளையாவே இருக்கனும்.வீட்டு வேலை எல்லாம் செய்யக்கூடாது.செஞ்சா யாரும் மதிக்க மாட்டாங்க # நெகடிவ் ராங்க் டயலாக் @METRO
7 கண்ட்டிநியூவா ரிங்க் விட்டுட்டே இருக்கார்.
இங்கிதம் தெரியாதவன்.இப்டி ஒரு புருஷனை வெச்ட்டு எப்டித்தான் காலம் தள்ளறியோ? #கள்ளக்காதல்@METRO
8 பணம் சம்பாதிப்பது மட்டும் புருஷனோட கடமை இல்லை.மனைவியோட தேவை என்ன?னு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு அவளை சந்தோஷமாவெச்ருக்கனும #METRO்
சி பி கமெண்ட் -METRO (2013) - பாதாளச்சுரங்க ரயில் விபத்து பற்றிய விறுவிறுப்பான படம்.பேமிலியுடன் பார்க்கலாம் -ரேட்டிங் = 2.75 / 5
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.75 / 5
இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் சிதம்பரம் மாரியப்பா தியேட்டர்
இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் சிதம்பரம் மாரியப்பா தியேட்டர் pic.twitter.com/EpVqKaj1Tu
3 comments:
I Want to see the movie
I Want to see the movie
I want to see the movie.
Post a Comment