சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி போராடும் நேரம் வந்து விட்டது: இயக்குநர் வசந்தபாலன்
சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி போராட்டும் நேரம் வந்து விட்டதாக
இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
திருட்டு விசிடி எதிராக போராடியதற்காக நடிகர் விஷாலை பலரும் பாராட்டி
வருகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷாலை
பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அப்பதிவில், "திருட்டு விசிடிக்கு எதிரான விஷாலின் இந்த முயற்சிக்கு என்
வாழ்த்துக்கள்.விஷாலை போன்று ஒவ்வொரு கதாநாயகனும் இயக்குநரும் ஏன் ஒவ்வொரு
சினிமாக்காரனும் களத்தில் இறங்கினால் தான் இந்த திருட்டு விசிடி பிரச்சினை
ஒரு முடிவுக்கு வரும். ஆம்னி பஸ்ஸில் ஏன் அரசு நெடுந்தொலைவு பேருந்துகளில்
திருட்டு விசிடி ஒளிப்பரப்புகிறார்கள்.
சென்னை கோயமுத்துரர் தவிர அனைத்து சிறு நகரங்களில் சனிக்கிழமை
மாலைக்காட்சி, இரவுக்காட்சி, ஞாயிறு மாலைக்காட்சியை தவிர திரையரங்குகளில்
கூட்டமே இல்லை.இருபது பேர், நாற்பது பேர், என்பது பேர் காட்சிக்கு காட்சி
பார்க்கிறார்கள்.பெரிய ஹீரோக்களின் (ரஜினி.அஜீத்,விஜய்.சூர்யா).படங்களுக்கு
கூட்டம் வருகிறது.மற்ற அனைத்து கதாநாயகர்களின் நிலைமை மிக மோசம்.படம்
நல்லாயிருக்கிறது என்ற செய்தி பரவி கூட்டம் திரையரங்குக்கு வர நாள்
ஆகிறது.பெருநகரங்களை தவிர சிறு நகரங்களில் திரையரங்குகளில் படம் ஓடி
சம்பாதிப்பது சிறு படங்களுக்கு பெரும் கனவு தான்.
சேட்டிலேட் விற்பனையையும் சென்னை நகரத்தில் படம் ஓடுவதையும் நம்பி தான்
சினிமா இருக்கிறது.ஆடியோ பிசினஸ் இல்லை.இதில் U/A...A படங்களுக்கு 30% வரி
விதிப்பு வேறு சினிமாவை ஆட்டிப்படைக்கிறது..
youtubeல் நம் டிரைலரை 21 லட்சம் பேர் பார்த்து விட்டார்கள் என்ற
கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் இந்த 21 லட்சம் பேர் நம் படத்தின் பாடல்களை
இலவசமாக டவுண்லோடு செய்து கேட்பார்கள் என்று அர்த்தம். படம் வெளிவந்தால்
இந்த 21 லட்சம் பேரும் திரையரங்குக்கு வருபவர்கள் அல்ல. பாதி பேர்
முடிந்தால் நம் படத்தையும் டவுண்லோடு செய்து பார்த்துவிடுவார்கள் என்று
தான் அர்த்தம். youtube ஹிட்டிற்காக நாம் சந்தோசப்பட ஒன்றுமில்லை
நண்பர்களே.
அடுத்து, சினிமா போஸ்டர்களின் முலம் விளம்பரத்தை நிறுவமுடியாத நிலை வேறு.
ஏனெனில் போஸ்டர் ஒட்டுவதற்கான சுவர்கள் குறைந்து விட்டன. கட்டுப்பாடுகள்
பெருகி விட்டன. ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒரு நாள் கூட சுவரில் இருப்பதில்லை
அதைக்கிழித்துவிட்டு அதன் மீது அடுத்த போஸ்டர் ஒட்டப்படுகிறது.பிளக்ஸ்
விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என்ற தடை வேறு .தனியார் தொலைக்காட்சிகளில்
விளம்பரம் செய்வது தான் ஓரே வழி. அதன் விளம்பர செலவு மிக அதிகமாக
இருக்கிறது. சில கோடிகளை முழுங்குகிறது. நாம் இலவசமாக கொடுக்கும் பாடல்களை
காமெடி காட்சிகளை சண்டை காட்சிகளை விதவிதமாக பிரித்துபிரித்து பல்வேறு
நிகழ்ச்சிகளில் போடுகிறார்கள். ஆனால் நாம் விளம்பரமுன்னு போய் நின்றால் பல
லட்சங்களை கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி
நம் வாழ்வாதாரத்திற்கு போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று
கூறியிருக்கிறார்.
நன்றி - த இந்து
- selvarajan. from PONDICHERRYபடம் எடுப்பது முதல் டப்பிங் -எடிட்டிங் என்று அனைத்தும் இவர்களது கட்டுபாட்டில்தானே இருக்கிறது ? அப்புறம் எப்படி --எந்த வழியில் ஒரு படம் [ திருட்டு ]கேசட்டாக வெளியாகிறது என்பதை இவர்கள் கண்டிபிடிக்க என்ன நடவடிக்கை இது வரை எடுத்து இருக்கிறார்கள் ? கருப்பு ஆடு இவர்களுக்குள்ளேயே இருக்கும்போது ---அதற்க்கு முதலில் போராடட்டும் ---அப்புறம் இவர் களம் இறங்கட்டும் !Points325
- ars from SIVAKASIவசந்தபாலன் முதலில் திரை அரங்குகக்ளில் புதியபடம் வெளிவரும் அன்று 200 ரூபாய் 300 ரூபாய் என்று டிக்கெட் விலை இருப்பதை பற்றி என்றாவது சிநதிததுண்டா. மக்களுக்கு சினிமாவின் மேல் விருப்பம் உள்ளது. ஆநாள் இவ்வளுவு அதிகமாக பணம் கொடுத்து திரியாரங்குகளை போய் படம் பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.அதை எப்படி சரி செய்வது என்று சந்தியுங்கள் பெறகு போராடலாம்.உங்களது பொருளுக்கு நீகள் வைத்திருக்கும் விலை மேக அதிகம்.அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் .Points390
- SSethu from VELLOREபொதுமக்களை தியேட்டர் பக்கம் இழுக்க கண்டிப்பா நடவடிக்கை எடுக்கவேண்டும் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவன் கூட தீயேடர் முதலாளிய நடந்கொண்டு சினிமாபர்க்கவருபவர்களை விரட்டிகொண்டு அசிங்கம நடந்துகொள்ளும்போது எப்படி கூட்டம் வரும் முதலில் பொது மக்களை தியேட்டர் பக்கம் இழுக்கும் வழியை ஏற்படுத்தவேண்டும்Points425
- மல்லன் from CHENNAIதமிழ் சினிமாக்களால் இந்த சமூகத்திற்கு கிடைத்த நன்மை என்ன. சில கோடிபேர்களின் பணத்தைப் பிடுங்கி சில ஆயிரம்பேர் கொழுத்ததன்றி வேறு என்ன நடந்தது. சீரழிவு அரசியல்வாதிகளையும், நுகர்வுவெறியினையும் பொறுப்பற்ற இளைஞர்கூட்டத்தை மட்டமான உணர்வுகளின் பக்கம் திருப்பி கெடுத்ததையும் அன்றி வேறென்னதான் செய்தது. இத்தனை பாலியல் குற்றங்களுக்கும் பெண்போக எண்ணங்களை தூண்டிவிடும் சினிமாக்களன்றி வேறு யார்தான் காரணம். இந்த சினிமாஉலகம் ஒழிந்தால்தான் என்ன? சமூகத்திற்கு என்ன பாதிப்பு வந்துவிடும்.Points485மூர்த்தி moorthy Up Voted
- Ratan from CHENNAIசென்றவாரம் நாகர்கோயில் தங்கம் தியேட்டரில் வடகறி படம் பார்க்கப்போனேன்.. 25 ரூ டிக்கெட் 100 ரூ-கு விற்கிறார்கள். இதில் சீட்டில் மூட்டைப்பூச்சி வேறு. ஒலி அமைப்பு படு மோசம்... இப்படி இருந்தால் யார் தியேட்டருக்கு வருவார்கள். மக்களுக்குச் சேரும் வரிவிதிப்பைப் பற்றி அங்கலாய்க்கும் வசந்தபாலன் இதுபோன்ற தியேட்டர்களையும் சாடினால் நியாயமானதாக இருக்கும்... பிகு: திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால் ஒருபக்க அநியாயத்தை மட்டுமே எதிர்ப்பது எந்த விதத்திலும் பலன் தராது...2 days ago · (17) · (0) · reply (0)
- Sadha Sadhanandavel from VELLOREபோராடுங்களேன், குறைந்தபட்சம் உங்கள் பிரச்சினைகளுக்காக. சாதாரண மக்கள் தினம் தினம் தன் பிழைப்புக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் இருப்பதாலோ என்னவோ, திரைத்துறையினர் கருப்பு கண்ணாடிகளுக்குப்பின் எப்போதும் ஒளிந்து கொள்வதாக தோன்றுகிறது.Points170
1 comments:
Good review
Post a Comment