Saturday, July 19, 2014

சதுரங்க வேட்டை -சினிமா விமர்சனம்


நீங்க  ஈமு  கோழி திட்டத்துல பணம் போட்டவ்ரா?  மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்க் ல  ஏமாந்தவரா? ஆம் வே ஏஜெண்ட்டா? நீங்க  ஒரு அரசியல் வாதி  கிட்டே ஏமாந்து  இருக்கீங்களா? சாமியார் கிட்டே ஏமாந்து  இருக்கீங்களா?  மேலே சொன்ன எந்தகேள்விக்காவது ஆமா என்பது உங்க பதில் எனில் உங்களை அவசியம்  கவரும் இந்தப்படம் . 


 மெகா ஹிட் படங்களைக்கொடுத்து  பின் கால மாற்றத்தால் நகைச்சுவை நடிகர் ஆகி விட்ட இயக்குநர் மனோ பாலா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து  கலக்கி  இருக்கும்  முதல்  படம் . இயக்கம்  புதுமுக இயக்குநர் .அதனால் என்ன ? திரைகக்தை  புதுசா  இருக்கே?  பட்டி  தொட்டி எங்கும் கலக்கப்போகும் இந்தப்படத்தைப்பத்தி பார்ப்போம் . 


 ஹீரோ   ஒரு  ஏமாற்ருப்பேர்வ ழி . அவரோட  லட்சியம் பணம் சம்பாதிப்பது . கத்தி  இல்லாம , ரத்தம்  இல்லாம  மூளையை  மூலதனமா வெச்சு  பண்ர எல்லா   டகால்டி வேலைகளிலும் அண்ணன்  பி ஹெச் டி . 


 முதல் கட்டமா  4  கோடி மதிப்புள்ள  மண்ணுள்ளிப்பாம்பு , இது ஆண்மை விருத்திக்கு நல்லதுன்னு  பொய் சொல்லி  ஒரு  பிஸ்னெஸ்  டீல் பண்றாரு . 

 அடுத்து  மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்  எனும் பேரில்  ஊரை அடிச்சு உலையில் போடறாரு . ஆண்டாண்டு காலமா திராவிட்க்கட்சிகள் மட்டும் தான் ம்க்களை  மொட்டை அடிக்கனுமா? இந்த மாதிரி   மாஸ்டர் பிரெயின் மன்னார்கள்  கூட அடிக்கலாம்  தானே? 


 இந்த  டுபாக்கூர் கம்பெனில  வேலை கேட்டு  ஹீரோயின்  எண்ட்டர் ஆகறாரு . அவரையும் , அவர் அ;ப்பாவித்தனத்தையும்  தன் பிஸ்னெஸ்க்கு  யூஸ் பண்ணிக்கறார்   ஹீரோ . 


 ஹீரோவால பாதிக்கப்பட்ட    சில பேர்   ஒண்ணு சேர்ந்து அவரை கார்னர் பண்றாங்க . இது வரை அவர் சேர்த்த   சொத்துக்களை  எல்லாம்  கொடுத்தாத்தான்  அவரை  உயிரோட  விடுவோம்னு  மிரட்றாங்க .இதுதான் சாக்குன்னு  ஹீரோவோட  கூட்டாளிகள் அவரை  டீல் ல விட்டுட்டு  கேப்டன் கட்சி எம் எல் ஏக்கள் அதிமுக ல சங்கமம் ஆன மாதிரி தனியா செட்டில் ஆகறாங்க. ஹீரோ  இதுவரை சம்பாதிச்ச  எல்லாப்பணமும் கொவிந்தா .

 இப்போ  ஹீரோவுக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை . வில்லன் க்ரூப் கூட ஒரு  டீல். 100  கோடி பிராஜக்ட் 1 முடிச்சுத்தர்றேன்  என்னை உயிரோட  விட்டுடுங்கறார்./ வில்லன்  டபுள்  கேம் ஆடறாரா?  ஹீரோ  ஜெயிச்சாரா? என்பதை  செம த்ரில்லிங்காக , செம ஸ்பீடாக  திரைக்கதையில் அசத்தி  இருக்கும்  படம்  தான்  இந்த சதுரங்க வேட்டை


இந்தித் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான  நட்டு எனும் நட்ராஜ், “நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக” ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நாயகனாக  பட்டாசைக்கிளப்பி  இருக்கார் .ல் அவரோட  டயலாக்  டெலிவரி ஸ்டைல் பிரமாதம் . காட்சிக்கு காட்சி வசனத்தால் கை தட்டலை அள்ளிய படங்களான  விதி , பராசக்தி , அமைதிப்படை லிஸ்ட்டில்  இதுவும் சேரும்  என்றால் அது  மிகை அல்ல.


ஹீரோயினாக  இஷாரா . அச்சு அசல்  கிராமத்துபெண் போன்ற பாந்தமான  தோற்றம் , வசன  உச்சரிப்பில் பட்டிக்காட்டுத்தனம்  என அவரும்  தன் பங்கு  சிக்சரை  விளாசுகிறார்.


குணச்சித்திர நடிகர்களில் ரகுவரன் , பிரகாஷ் ராஜ் அளவு  திறமை இருந்தும் சரியாக வாய்ப்புக்கிடைக்காத பிரமாதமான நடிகர்களில்  ஒருவரரான  ஒளிப்பதிவாளர் இளவரசு  இந்தப்படத்தில்  ஓப்பனிங் காட்சியில் பேராசை டபுள் டெக்கர்  செட்டியாராகவே வாந்திருக்கிறார் . அவர் காட்டும் பதட்டம், பாடி லேங்குவேஜ் படம் பார்ப்போரையும்  தொற்றிக்கொள்கிறது

 போலீஸ் ஆஃபீசராக வரும்  பொன் வண்ணன்  பெரிதாக  எதையும் சாதிக்க வில்லை . இந்த திரைக்கதை   ஹீரோவின்  ஒன் மேன்  ஷோ என்பதால்  மற்ற கேரக்டர்கள்  சொதப்பினாலும்  பாதிப்பு  இருக்காது









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ஒவ்வொரு காட்சியும்  அரங்கம் அதிரும் கை க்தட்டல் காட்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக   திரைக்கதையை  அமைத்த விதம் அபாரம் .  “செட்டியாரும் டபுள் டெக்கரும், போர்ஷனில்  ஆண்மையை  விருத்தி ஆக்கும் மண்ணுள்ளிபாம்பு பிச்னெஸ் மோசடி ,  எம்எல்எம் பிஸ்னெஸ்சில் பாத்ரூம்  தண்ணீரை மந்திர  நீர் அக்கி விற்பது ,  பணம்அச்சடித்த ஆயுதம், இரிடியம் என்ற ரைஸ் புல்லிங்”  என   ஸ்டெப் பை ஸ் டெப்பாக    ஹீரோ  மோசடி செய்யும்போது   அனல் பறக்கிறது . எல்லாவற்றிற்கும்  மகுடம் வைத்தது  போல்  ஈமு  கோழி  மோசடி



இந்தபப்டத்தின்    முதல் பங்கு  திரைக்கதை ஆசிரியர்   கம் வசன்கர்த்தா  கம் இயக்குநர்  வினோத் . படத்தில்  ஒவ்வொரு வசனத்துக்கும்   கை  தட்டல்



3   இப்படத்தின்  ட்ரெய்லர் படம்  வெளியாகும்  முன்பே  கவனத்தைக்கவர்ந்து  தியேட்டருக்கு  இழுத்து வரப்போதுமான காரணி ஆக அமைந்து விட்டது 


4 இப்போ  ஃபீல்டில்  இருக்கும் மாஸ்  ஹீரோக்கள்  செய்யத்தயங்கும்  படத்தை   நடராஜை  வைத்து  இயக்கியது .




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.   இவ்வளவு  பிரமாதமாக  பண  மோசடிக்கு  திட்டம்  இடும் ஹீரோ  மாட்டிக்கிட்டா என்ன செய்வது ? அப்போ ஆல்டர்நேட் ஐடியா என்ன? என சிந்திக்காமல்  இருப்பாரா? 


2  தனது  ஐடியாக்கள் , கொள்கைகளை இப்படி  அசால்ட்டா  ஒரு கிரிமினல் ஆள் பி ஏக்களுக்கு  சொல்லித்தருவாரா? 


3 ஹீரோயினுக்கு  ஹீரோ மேல் காதல்  வந்தது  ஓக்கே. ஆனா ஹீரோவுக்கு காதல் வந்திருக்கா?  அவரை பகடைக்காயா உபயோகிக்க்கிறாரா? என்பதை     தெளிவுபடுத்தாதது  ஏன்?


பொன் முட்டையிடும் வாத்து  போன்ற ஐடியா  டிப்போ வான ஹீரோவை  தனி அறையில் அடைத்து வாழ்நாள்  பூரா  மிரட்டி மிரட்டி ஐடியாவை வாங்கிக்கொள்ளாமல்   பிசாத்து  100  கோடி  கிடைத்ததும்   அவரைக்கொல்ல  நினைப்பது எப்படி ? 


5  நிறை மாத  கர்ப்பிணி மனைவியை  தனந்தனி காட்டுக்குள் விட்டு வர  ஹீரோ துணிவது எப்படி ? ஹாச்பிடலில் பாதுகாப்பாக  விட்டால்  தான் வருவேன் என வில்லன்களிடம் கண்டிஷன் போடவில்லையே ஏன் ? 


6   கோபுரக்கலசத்தை  திருடியவர் அதையே ஆல்டர் பண்ணி  க்ளைமாக்சில்  யூச் பண்ணாமல் புது கலசம் ரெடி பண்ணுவது ஏன் ? 

7   எலா போலீஸ்  ஸ்டேஷனிலும் ஹீரோ  உருவம்  கொண்ட  ஃபோட்டோ விநியோகிக்கப்பட்டு  எச்சரிக்கப்பட்ட  நிலையில்  ஹீரோ அசலாட்டா க வலம் வருவது எப்படி ?



மனம் கவர்ந்த வசனங்கள்

1. நல்லவனா வாழ்ந்தா செத்த பின் சொர்க்க வாழ்க்கை வாழலாம்.கெட்டவனா வாழ்ந்தா வாழும்போதே சொர்க்க வாழ்க்கை # சதுரங்க வேட்டை நெகடிவ் டயலாக்



====================

2  ஒரு பொய் சொன்னா அதுல ஒரு உண்மையும் கலந்திருக்கனும்.அப்போ தான் நாம சொன்னது பொய் னு தெரியாது # சதுரங்க வேட்டை ( நெகடிவ் டயலாக் )


==========================


3  இந்த உலகத்துலயே ரொம்ப ஈசியான வேலை தப்பான வழில பணம் சம்பாதிப்பதுதான் # ச வேட்டை ( நெகடிவ் டயலாக்)


======================



4  பணம் சம்பாதிக்க 1000 வழி இருக்கு.முதல்ல உங்களை மாதிரியே பணம் சம்பாதிக்க பேராசை உள்ள ஆட்களை பிடிக்கனும்.ஏமாத்தனும் # ச வே



5  அந்தப்பொண்ணுக்கு அளவுக்கு அதிகமா கருணை காட்றீங்க 



கருணையைக்கூட காசாக்கும் வித்தை தெரிஞ்சவன் நான்.வெயிட் & சி # ச வே


6   நல்லா விசாரிச்ட்டேன் மாப்ளை.ITITI னு ஒரு பேங்க்கே இல்லை..அந்த பேங்க் டம்மி செக் குடுத்து நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டான் #,ச வே


7  ஏமாத்தறது தான் என் தொழில். 


அது தப்பில்லையா சார்? 


குற்ற உணர்ச்சி இல்லாம செய்யும் எதுவும் தப்பில்லை # ச.வே 



8 காசில்லாத்வனோட உடம்பை வெச்சு கத்துக்க .காசிருக்கறவன் கிட்டே சம்பாதி #,ச வே



9  ஒயிட் &,ஒயிட் போட்டுட்டா தப்பு பன்றதுக்கு தனி தைரியம் வந்துடுதுல்ல? #,ச வே



10  யாரோ செஞ்ச தப்புக்காக ஏன் அப்பாவிகளை ஏமாத்தறீங்க? 



இந்த சமூகம் எனக்கு என்ன குடுத்ததோ அதை அப்டியே திருப்பி தர்றேன் #,சவே 



11   THE MONEY IS ALWAYS ULTIMATE # சவே



12  நானா யாரையும் போய் ஏமாத்தலை.ஏமாறத்தயரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன் #,ச வே



13  பணத்தை எல்லாம் எங்கே வெச்சிருக்கே? 


சம்பாதிக்க வழி தெரியாதவன் தான் சேமிச்சு வெப்பான் # ச.வே 



14   நிதி நம்ம கைல இருந்தா போதும்.நீதியை ஈசியா வாங்கிடலாம் # சவே



15  தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்குவம் னு சொல்லி ஓட்டு கேட்டு ஜெயிக்கறாங்க.ஆனா 10 வருசம் ஆகியும் நாடு அப்டியேதான்இருக்கு. கேஸ் போடமுடியுமா? #சவே


16  ஜட்ஜ் = உனக்கு யார்யா காந்தி பாபு னு பேர் வெச்சது ?



 நீதி நேர்மை நாணயத்தோட இருக்கனும்னு அம்மா அப்பா வெச்ச பேருங்க


17 ஒருத்தன் உன்னை ஏமாத்தினா ஒரு வகைல அவன் உனக்கு குரு மாதிரி.எப்படி ஏமாத்தறது னு சொல்லித்தர்றானில்ல? # ச வே


18  ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் கிட்டே கருணையை எதிர்பார்க்கக்கூடாது.அவன் கிட்டே இருக்கும் காசு ் ஆசையைத்தூண்டனும் #,ச.வே


19 
இலையை எண்ணுடா ன்னா தலையை எண்ணற வேலை உனக்கெதுக்கு ? # ச.வே


20  தப்பு செஞ்சு சம்பாதிச்ச பணம் எந்த அளவு சந்தோஷம் தருதோ அதே அளவு ஆபத்தும் தரும். இதை நீ துரத்தப்படும்போது உணர்வாய் ! # ச.வே


21  ரைஸ் புல்லிங் = இருக்குங்கறதை இல்லாததா ஆக்கனும்.இல்லாததை இருக்கு னு காட்டனும்.புரிஞ்சுதா?


 ம்ஹூம் அப்பசரி.புரியலைன்னா plan.சக்சஸ்


22  சுவாமி ! நீங்க சொன்னதை வீட்ல கலந்தாலோசிச்சுட்டு நாளை பதில் சொல்றேன் .

கூடாது.தீட்டு.பெண்களிடம் சொல்லக்கூடாது #,ச.வே 


23  உனக்கு கோபமே வராதா?


 எதுக்கு கோபம் ? மத்த்வங்ககிட்டே அன்பு காட்டுவது .அன்பை உணர வைப்பது இதானே வாழ்க்கை ? # ச வே 


 



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


சதுரங்க வேட்டை = 114 நிமிடங்கள் கூட்டுத்தொகை 6 வருது.செஸ் கட்டம் =64 ,8ன் வர்க்கம். வெற்றியை எட்டு மா? னு பார்ப்பம்



ஆண்மை விருத்தியை அதிகரிக்கும் என டுபாக்கூர் விட்டு மண்ணுள்ளிப்பாம்பை விற்கும் காட்சி கலக்கல் காட்சி அமைப்பு # ச வே


3 பேராசை பிடித்த செட்டியார் டபுள் டெக்கராக ஒளிப்பதிவாளர் கம் குணச்சித்திர நடிகர் இளவரசு வின் நடிப்பு கலக்கல் ரகம் # ச வே


4 மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் கில் ந்டக்கும் பித்தலாட்டங்களை துகில் உறியும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுது # ச வே


5  கேன்சரை குணப்படுத்தும் அபூர்வ நீர் னு சொல்லி பாத்ரூம் பக்கெட் தண்ணியை பாட்டில் ல அடைச்சு விற்கும் காட்சி செம #,ச.வே


பெருந்துறை ஈமு கோழி மோசடி காட்சி தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்


7  அபாரமான வசனங்கள் ,விறு விறுப்பான திரைக்கதை.ஆல் சென்ட்டர் ஆடியன்சின்் ஏகோபித்த கை தட்டல்களுடன் சதுரங்க வேட்டை இடைவேளை



8  பாதி விலைக்கு தங்கம் னு ஆபர் சொல்லி சேட் நகைக்கடையில் ப்ப்ளிக்கிடம் ஆட்டையைப்போடும் காட்சி அபாரம் #,ச வே




சி பி கமெண்ட்  -சதுரங்க வேட்டை - புதுமையான திரைக்கதை ,பிரமாதமான வசனங்கள்.ஆல்.சென்ட்டர் ஹிட் -


விகடன் மார்க் =45 ,


ரேட்டிங் = 3.25 / 5




டிஸ்கி -

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/07/blog-post_18.html




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 45





குமுதம் ரேட்டிங்க் = நன்று


 ரேட்டிங் =  3.25   /  5
  

0 comments: