தன் டிரேட் மார்க் வசீகர புன்னகை யுடன் வரவேற்கிறார் சூர்யா, இன்றைய
தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோ! ‘அஞ்சான்' சூர்யா, ‘தி
இந்து’வுக்காக அளித்த ‘மாஸ்' பேட்டி..
‘அஞ்சான்’ படத்துக்காக முதல் முறையாக லிங்குசாமியுடன் இணைந் திருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
லிங்குசாமி சார் காஃபி மாதிரி.. அவரோட எனர்ஜி லெவல் நமக்கும் ஒட்டிக்கும்.
காஃபி, கோப்பைக்கு தகுந்த மாதிரி தன் வடிவத்தை மாத்திக்கிற மாதிரி, இவரும்
படத்துக்கு படம் தன்னை மாத்திக்குவார். இப்ப ‘அஞ்சான்’ல என் கேரக்டருக்கு
எது அழகா வரும், சரியா வரும்னு பார்த்து பாத்து பண்ணியிருக்கார்.. அதனாலேயே
அவ்ளோ லவ்லியா வந்திருக்கான் ‘அஞ்சான்’. ஸ்டைல் ஆஃப் மேக்கிங்ல
இதுவரைக்கும் பாக்காத புது லிங்குசாமி சாரை நீங்க பாக்கலாம்..
6 மாச ஷூட்டிங் போனதே தெரியலை. அவ்ளோ ஜாலியா ரகளையா இருந்துச்சு.
ஃபிரண்ட்ஸ் கூட பிக்னிக் போன மாதிரி ரொம்பவே அனுபவிச்சு வேலை பார்த்தோம்.
பொழுதுபோக்குங்கிற பேர்ல தரத்தை குறைச்சுடக்கூடாது, அதுக்காக
கடுமையாகவும் இருந்துடக் கூடாது. காசு கொடுத்து படம் பாக்க வர்ற ரசிகன்
திருப்தியா போகணும்னு நெறைய மெனக்கெட்டிருக்கோம். தியேட்டருக்கு வர்ற
ரசிகர்களை ‘அஞ்சான்’ நிச்சயம் ஏமாத்தமாட்டான். என் வெற்றிப் பட வரிசையில்
இவனுக்கு முக்கிய இடம் உண்டு.
நீங்கள் புதிய இயக்குநர்களோடு இணையாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
‘மௌனம் பேசியதே’ படத்தில் அமீருடன் சேர்ந்திருக்கிறேன். ‘ஜில்லுனு ஒரு
காதல்’ படத்தின் இயக்குநர் ஒரு அறிமுக இயக்குநர்தான். கதைகள் சரியாக
பொருந்தும்போது கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன். இன் றைக்கு கதைக்களம்,
ரசிகர்கள் எதிர் பார்ப்பு இப்படி நிறைய விஷயங்கள் சரியாக வருகிறதா என்று
பார்த்து தான் ஒரு படத்தை தொடங்க வேண்டி யிருக்கிறது
. ஒரு கதையை தொட்டால்
10 மாத உழைப்பு, வணிக ரீதியாக 50, 60 கோடிக்கு மேல் வர்த்தகம் என்ற நிலை
இருக்கு. நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறைய பேருக்கு பதில் சொல்ல
வேண்டியிருக்கு. அதனால் நாம் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கவேண்டும்.
என் படத்தின் கதைகள் என்னை முன்நிறுத்தி இருக்க வேண்டும் என்பதில்லை. என்
படம் என்னைவிட பெரிதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அப்படி என்றால் கதையை மட்டும் நம்பித்தான் நீங்கள் களம் இறங்கு வீர்களா?
கண்டிப்பாக கதைதான் முக்கியம். ஒரு கதையை கேட்கும்போதே இயக்குநர் அதற்காக
எவ்வளவு தூரம் வேலை பார்த்திருக்கார் என்பது தெரியும். கதையை அழகாக
சொல்பவர்கள் 100 சதவீதம் நன்றாக படம் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
நன்றாக படம் எடுப்பவர்கள் சரியாக கதை சொல்ல முடியாமலும் போகிறது.
கிட்டத்தட்ட அது ஒரு டேக் மாதிரி. 2.30 மணி நேரம் தடம் மாறாமல் நம்மை கவர
வேண்டிய கட்டாய மும், சூழலும் இருக்கு. தியேட்டரில் ரசிகர்களை எப்படி
ஆர்வமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒரு காட்சியை விவரிக்கும்போதும்
சொல்ல வேண்டியிருக்கும். சில நேரத் தில் காட்சி எழுத முடியும், சில நேரத்
தில் காட்சியை சொல்லத்தான் முடியும்.
ஹாலிவுட்டில் கதையை எழுதிக்
கொடுத்துவிடுகிறார்கள்.அதைப் படித்துவிட்டு பிறகு நடிப்பது பற்றி
முடிவெடுப்பார்கள். இங்கே சமயத்தில் எங்களுக்கு விளக்க மட்டும்தான்
செய்கிறார்கள். ஒரு நடிகராக அந்த கதை எந்த வடிவத்தில் இருக்கும், அதற்குள்
எவ்வளவு விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கு என்பதைப் பார்த்துதான் நான் முடிவு
செய்கிறேன்.
டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக பக்கங்களில் இணையாமல் இருக்கி றீர்களே?
நேரமில்லை. ஏதோ வந்தோம், பகிர்ந்தோம் என்று இருந்துவிடக் கூடாது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் சரியான தகவலை பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்க
வேண்டும். அதற்காக ஒரு சிறிய டீமை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் இறங்குவேன்.
விளம்பரப்படங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்களே?
ஒரு நடிகன் எவ்வளவு தூரம் போக முடியும் என்பதற்கு விளம் பரங்கள்தான்
மைல்கல். ஷாரூக்கான் இன்று உலகம் முழுக்க பிரபலமாக இருப்பதற்கு அவரது
விளம்பரப் படங்களும் ஒரு கார ணம். ஒரு விளம்பர ‘பிராண்ட்’டுக்கு நம்ம
குணாதிசயங்கள், மதிப்பு, நம்ம கொள்கை எல்லாமும் இணைகிற மாதிரி இருக்க
வேண்டும். அப்படி இருந்தால்தான் நம்மை தேர்வு செய்வார்கள். இவர் சொன்னா
சரியாக இருக்கும் என்பதை நம்பித் தான் விளம்பரப்படங்களை எடுக்கிறார்கள்.
ஒரு பிராண் டுக்கு விளம்பரம் செய்யும்போது கூடுதல் வருமானத்துடன் ஒரு
மரியாதையும் கிடைக்கிறது. அதை ஒரு வித மதிப்பான விஷயம் என்று நினைக்கிறேன்.
நடிப்புக்கு இடையிலும் ‘அகரம் பவுண் டேஷன்’ நிறுவனத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறீர்கள். உங்களின் அடுத்த திட்டம் என்ன?
இரண்டு ஆண்டுகளாக யோசித்து வரும் விஷயம்தான். 10, 12-ஆம் வகுப்பு களோடு
படிப்பை விட்டுவிடுகிற பிள்ளை களின் எதிர்காலம் என்ன என்பது இங்கே
கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களிடமும் பல்வேறு திறமைகள் இருக்கும்.
அதைக் கண்டுபிடித்து அவர்களை அந்தத் துறையில் ஊக்கு விக்கும் முயற்சியில்
கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி களுக்கு போகாமல் படிப்பை
துண்டித் துக்கொள்கிற பிள்ளைகளுக்கு அவர்க ளுக்கு ஆர்வம் உள்ள துறைகளில்
பயிற்சி அளிக்க புதிய திட்டம் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன்.
உங்கள் குழந்தைகளின் படிப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் நீங்கள் எந்த வகையில் உதவியாக இருக்கிறீர்கள்?
பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்று மில்லை. அவர்களை இப்போ ‘ஜோ’ தான்
கவனிச்சிக்கிறாங்க. முடிந்த வரை சனி, ஞாயிறுகளில் நேரம் ஒதுக்க முயற்சி
செய்கிறேன். கடந்த 4, 5 ஆண்டுகளாக அது நடக்க வில்லை. குழந்தைகளோட பத்து
வயது வரைக்கும் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நான்
விரும்புகிறேன். இனி அது நடக்கும்.
தெலுங்குப் படத்தில் நடிக்கப் போறீங்களாமே?
அதை ஒரு நன்றிக்கடனாகத்தான் நினைக்கிறேன். என்னோட ஒரு படம் அங்கு ரிலீஸ்
ஆனால் அதை டப்பிங் படமாக பார்க்காமல் நேரடிப் படமாகத் தான் அங்குள்ளவர்கள்
பார்க்கிறார்கள். அவ்வளவு அன்பும் ஆதரவும் எனக்கு அங்கே கிடைத்திருக்கிறது.
‘ஏன் இங்கு ஒரு படம் பண்ணக்கூடாது?’ என்று நிறைய பேர் கேட்கவும்
செய்றாங்க. இப்போ அதுக்கான வேலைகளில் இருக்கிறேன்
.
வெங்கட்பிரபுவோடு இணையும் புதிய படத்தின் கதை எந்த கட்டத்தில் உள்ளது?
இந்த மாதம் தொடங்குகிறோம். ப்ளீஸ்... ‘அஞ்சான்’ ரிலீஸுக்கு பிறகு அதைப் பற்றிப் பேசுவோமே.
உங்களுடைய கனவுப் படம்?
அப்படி எதுவும் இல்லை. குழந்தை களுக்கான படங்கள் தற்போது இல்லையோ என்று
அடிக்கடி தோன் றும். பொழுதுபோக்கு அம்சங்களோடு குழந்தைங்களுக்கான ஒரு படம்
கொடுக்க ஆசை உள்ளது.
நீங்கள் புதிதாக தொடங்கியுள்ள ‘2டி எண்டர்டெயினர்’ தயாரிப்பு கம்பெனி எந்த மாதிரியான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்?
இந்த கதையில் நான் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கும் படங்கள் நிச்சயம்
இருக்கும்.. குழந்தைகள் விரும்புகிற குடும்ப படமாக முத லில் தொடங்குவோமே
என்று இயக்குநர் பாண்டிராஜ் சாரோட இந்தப் படத்திலிருந்து
தொடங்கியிருக்கிறோம்.
உங்கள் அம்மாவுக்காக கட்டி வரும் பிரம்மாண்ட வீடு எந்த அளவில் இருக்கிறது?
வேலைகள் நடந்து வருது.இன்னும் நிறைய செலவு இருக்கு. அதை பொறுமையாக செய்து வருகிறோம்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment