1. லஸ் கார்னர் ல் நகைக்கடை வைத்தால் நெக்லஸ் கார்னர் ஆகி விடும்
==================
2 அன்பே! வளர்மதி! உனக்கு மூளை தினம் தினம் வளர்ந்துட்டே இருக்குமா?
====================
3 பொதுவா பொண்ணுங்க கிட்டே அவங்க செய்யும் தப்பை நாம சுட்டிக்காட்டுனா
கண்டுக்கமாட்டாங்க.இன்னொரு பெண் மூலம் சொன்னா கேட்டுக்குவாங்க #தமிழச்சிடா
=====================
4 கம்மல் திருகாணி இவ்ளவ் நீளமாப்போட்டிருக்கும் நீளவேணி! நீ தலையை திருப்பும் திருப்புறசுந்த்ரி ஆகும்போது குத்தாதா?
================
5 பஸ்ல ஒரு பிகரு 3 மீட்டர் மஞ்சள் கயிறை மணிக்கட்டில் கட்டி இருக்கு.மாரியம்மன் கோவில் வேண்டுதல் போல.இதை லவ்வினா அவசரத்தாலி ரெடி
=======================
6 டவுன் பஸ்ஸில் பூ வைத்த பூவையர் ஏறி விட்டால் மணம் வீசும் மல்லிகைப்பூ பந்தல் ஆகிவிடாதோ !
======================
7 வேட்டி விவகாரம் முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் வேட்டி கட்டி ஒரு நாள்
பாராளுமன்றம் போக வேண்டும் . ஹிந்தி கற்பதை விட வேட்டி கட்டுவது எளிது
=======================
8 உப்புமா க்கு இங்க்லீஷ்ல என்ன?னு யாராவது கேட்டா ஒரு நொடி கூட யோசிக்காம சால்ட்மா -னு சொன்ன கூட்டம்யா நாம எல்லாம் ;-))
=========================
9 ஸ்வீட் கேர்ள் -னு எல்லாரும் சொல்லனும்கறதுக்காக டெய்லி லட்டு , ஜிலேபி, மைசூர்பாக்னு ஸ்வீட்டா சாப்பிடுவாள் தமிழச்சி
=========================
10 வாய்மை எனப்படுவது லிப்ஸ்டிக் எனில் கண் மை எனப்படுவது ஐஸ்டிக் தானே?
======================
11 1001 எலுமிச்சம்பழ மாலை கோர்த்துட்டு இருக்காங்க ் ஒரு அம்மா.சமயபுரம்
மாரியம்மனுக்கு சூட்ட.100 லெமன் சாதம் கழறி ஏழைகளுக்கு தந்திருக்கலாம்
================
12 காமராஜர் பிறந்த தினம்.எளிமையின் இலக்கணம்.முடிந்த வரை எளிமையுடன் வாழ்வோம்.எளியோர்க்கு இயன்ற அளவில் உதவுவோம் ( 15 7 2014 _)
================
13 நாம பசியோட இருக்கும்போது FBல யாராவது இதை சாப்ட்டேன்னு போட்டோ அப்டேட்ஸ்
பார்க்கும்போதுஅட்ரஸ் கேட்டு அங்கே போய் அதை பிடுங்கி சாப்பிட்ரனும்
================
14 பொண்ணுங்க மனசு அலிபாபா குகை மாதிரி.பாஸ்வோர்டு தெரிஞ்சாதான் உள்ளே போக முடியும்.
இதுல சோகம் என்னான்னா 40 பேரு தெரிஞ்சு வெச்சுக்கறாங்க
=================
15 இரு கால்களும் இல்லாதவர் ரயிலில் தவழ்ந்து வந்து ரயில் பெட்டியில் சீமாற்றால் கூட்டி பிச்சை கேட்கிறார்.நெஞ்சை நெகிழ வைக்கிறது
================
16 நமக்கு அது இல்லை இது இல்லை என குறை கூறுவதை விட்டு விட்டு நம்மை மிக ஆரோக்யமாக பரிபூரணமாகப்படைத்த இயற்கைக்கு நன்றி நவிலுவோம்
=================
17 குழந்தையாய் நாம் இருக்கும்போதும் ,வளர்ந்த பின் நோயுற்ற பொழுதுகளில்
நமக்கு பணி விடை செய்வதிலும் சலித்துக்கொள்ளாதவர்கள் நம் பெற்றோர்
=================
18 கர்ம வீரர் காமராஜர் இறக்கும் முன் கடைசியாகப்பேசியது ( தன் உதவியாளரிடம் )
"வைரவா!விளக்கை அணைத்து விடு!"
==============
19 ரஜினி ரசிகன் கோச்சடையான் எனில் அவன் காதலி ஜடையில் பூ வைத்திருந்தால் பூச்சடையாள்!
==============
20 பூக்களை நாரில் இறுக்கிக்கட்டுவது மென் முறை எனவும் ,ஊசியால் காம்பை குத்தி கோர்ப்பது வன்முறை எனவும் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்!
==================
0 comments:
Post a Comment