Monday, July 14, 2014

டாக்டர்.டெய்லி ஒரு லிட்டர் ரோஸ்மில்க் குடிச்சா நான் கலர் புல் பிகரா மாறிடுவேனா?


Embedded image permalink
1. ஜட்ஜ் = இந்து மதக்கடவுளை அவமானப்படுத்துனீங்களாமே?



 லேடி= நோ யுவர் ஆனர்.என் புருசனை மட்டும் தான் அவமானப்படுத்துனேன்.அவன் பேரு ராம்


=======================


2  பத்தே நிமிடத்தில் செய்யனும்,நிறைய வேலை இருக்க கூடாது, சாப்பிடவும் நல்லா இருக்கனும்.என்ன செய்ய?


பக்கத்து  வீட்டில் ஓசி கேட்கவும்


======================


3  டாக்டர்.பார்க் ல ,பீச்ல காதலிப்பவரை பார்த்தால் ் எரிச்சலா இருக்கு.ஏன்?



நீங்க ஏன் அவங்க லவ் பண்றதை வேடிக்கை பார்க்கறீங்க?


================

4  சார்.நம்ம பிளான் சக்சஸா? புக் சர்க்குலேஷன் குப் னு ஏறி இருக்குமே?



ம்க்கும்.மானம் தான் கப்பல் ஏறுச்சு


======================


5 ஜட்ஜ் = லேடி எம் பி யோட நெக்லசை திருடி இருக்கே? திமிரா?



கைதி=,தொழில் தர்மம் யுவர் ஆனர்.என் கண்ணுக்கு நெக்லஸ் தான் தெரிஞ்சுது


=======================



6    சாப்பிட்டஉடனே படுக்கக்கூடாது


நான் சாப்பிடறதே படுத்துக்கிட்டேதான்  டாக்டர்



======================


7  டாக்டர். காதலர்கள் திருமணம் செஞ்சிகிட்டா காதல் செத்துடுமா என்ன?

 ஆமா, காதலிச்சவங்களையே பண்ணிக்கிட்டா லவ் புட்டுக்கும்



============================


8  உங்க மெயில் பாஸ்வோர்டா உங்க குழந்தை பேரா வெச்சிருக்கீங்க?



நோ.யாருக்கும் தெரியாம என் பேரை வெச்சுட்டேன் # எப்பூடி?


================


9 ஜோசியர் = உங்களுது சுத்த ஜாதகம் இல்லையே.?



 நல்லா பாருங்க.மெரூன் கலர் அட்டை போட்டு லேபிள் எல்லாம் நீட்டா ஒட்டி இருக்கேன்



===================


10 சார்.உங்க பேங்க் ல கரன்ட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்



அது அடிக்கடி போய்டும்.யூபிஎஸ் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்கறீங்க்ளா?


=================

11 டாக்டர்: தெத்துப்பல் பெண்களிடம் அதீத கவர்ச்சி இருக்குமாமே?உண்மையா?



முகத்துலயா?


===================


12  சாரி சார்.இந்த சீட் ல ஆள் வரும் .


மிஸ்! அடுத்த ஸ்டாப் ல ஏறும் பலாக்காய் வர்ற வரை இந்த ஸ்டாப் ல ஏறுன கிலாக்க்காய் உக்காந்தா தப்பில்லையே?


=================


13 ஜட்ஜ் = ஷாக் அடிக்கும் டிரஸ் போட்டிருந்தும் உன் கற்பு எப்டி ஸ்வாஹா ஆச்சு?



லேடி = யுவர் ஆனர்.அவன் புத்திசாலி நான் குளிக்கும்போது வந்தான்



\====================


14 டாக்டர்.பத்மாசனம் செய்யும்போது என் 2 உள்ளங்காலும் வலிக்குது.



அதெப்டி?பத்மா ஆசனம் செஞ்சா பத்மாவுக்குத்தானே வலிக்கும்?



================



15 டியர்.இன்னைக்கு ஒத்தை ஜடை போட்டுக்கவா?



உனக்கு எது "சவுரி"யமோ அதை போட்டுக்கோ!



====================



16 Dr,மஞ்சள் பொடி,சுக்கு,மிளகு,திப்பிலி போன்ற 13 வகையான பொடிகளுடன் பனங்கற்கண்டு சேர்த்த பால் குடிச்சா இருமல் சரி ஆகிடுமா?



 பர்ஸ் காலி ஆகிடும்



=================


17 டாக்டர்.டெய்லி ஒரு லிட்டர் ரோஸ்மில்க் குடிச்சா நான் கலர் புல் பிகரா மாறிடுவேனா?



மிஸ்! பிகரா இருந்தா 10% சான்ஸ்.இருக்கு



=================



18  டாக்டர்.நீங்க திருப்பூரா?



ஆமா.எப்டித்தெரியும்?



தையல் போடும்போது ஜிக்ஜாக் டிசைன் ல போட்டு விடறீங்களே?



====================


19  சரக்கடிச்சுட்டு சைக்கிள்ல போனா போலீஸ் புடிப்பாங்களா ?"



 சைக்கிளை மட்டும் பிடிச்சு வெச்சுக்கிட்டு ஆளை அனுப்பிடுவாங்க



===================



20 டாக்டர்.இரும்புச்சத்து ரொம்ப கம்மியா இருக்கு.



ஜிங்கிள மணி ஜிங்கிளமணி சிரிச்சுப்புட்டா நெஞ்சில் "ஆணி" பாட்டை டெய்லி 3 டைம் கேளு



====================

0 comments: