1. தலைவா ஓடி இருக்க வேண்டிய படம் - விஜய் # ஆல்ரெடி செம ஓட்டம் ஓடுன நாயகன் ,தளபதி ல இருந்து எடுத்தாளப்பட்டது எப்டிங்க்ணா ஓடும்
=================
2 அரசு பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த 3 ஆசிரியர்கள்
இடைநீக்கம் # பாலியல் கல்வித்திட்டத்துக்காக பாத்தோம்னு சமாளிப்பாங்க்ளோ?
====================
3 சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நான் ஆசைப்படவில்லை! - விஜய் # ஆசையே அவப்பெயருக்குக்காரணம்
=====================
4 நான் எந்த டிவியையும் பார்ப்பதில்லை! - விஜயகாந்த் # கேப்டன் டிவியை கேப்டனே பார்க்கறதில்லைன்னா எப்டி?
=====================
5 நான் எந்த பத்திரிகையையும் படிப்பதில்லை! - விஜயகாந்த் # படிக்கத்தெரியாது னு சொல்லுங்க.படிக்கறதில்லை னு அடிச்சு விடாதீங்க
=====================
6 கண்ணாடி போட்டால் ஒரு மார்க்கமாக நான் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்! -
விஜயகாந்த் # தண்ணி யில் இருப்பவர்க்கு நீங்க தான் லேண்ட் மார்க்
======================
7 விஜயகாந்தை சந்திக்க வந்த தொண்டர்களை வாயை ஊதிக் காட்டச் சொல்லப்பட்டது! # விசில் அடிக்கத்தெரிஞ்சாதான் விடுவாங்க்ளோ?
==================
8 மனைவி யிடம் அன்பு கொண்டவர்கள் மனைவியின் செல்போன் கால் க்கு வைக்கும் ரிங்க் டோன் பெரும்பாலும் " மாமோய்.நீங்க எங்கே இருக்கீங்க?
=====================
9 யாருக்கும் தலை வணங்க மாட்டேன் - விஜய்காந்த் # பெருமாள் கோவில் ல கிரீடம் வைக்கும்போது ,சலூன் ல ஹேர் கட் பன்றப்ப?
==================
10 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவகாசம் தேவை: வெங்கய்யா நாயுடு # 5 வருஷம் போதுங்க்ளா?
======================
11 அரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெ பதில் # மக்கள் பிரச்சனையைப்பத்தி கவலைப்படாம சும்மா வெட்டி அறிக்கை விடுவோர் எல்லோரும்
=====================
12 ஜெ-வுடன் வார்த்தைப் போட்டியை விரும்பவில்லை: கருணாநிதி # எந்தப்போட்டியிலயும் நாம அவரை ஜெயிக்க முடியலையே தலைவா?
==================
13 அன்புமணி கோரிக்கையை ரயில்வே அமைச்சர் ஏற்காதது வருத்தம் அளிக்கிறது:
ராமதாஸ் # ஜாதி அரசியல்வாதிகளை மோடி கண்டுகொள்ளாதது மகிழ்ச்சி அளிக்கிறது
=====================
14 ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (sms) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும்-செய்தி # அதுக்கு சார்ஜ் ஒரு sms க்கு 3 ரூபாவா?
====================
15 சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ
வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள் # இது ஒரு “தொடர்” கதை ஆகுமோ?
======================
16 அனிருத் வளர்ச்சியால் எனக்கு பெருமை: தனுஷ் நெகிழ்ச்சி # 2 பேரும் தோற்றத்தில் ஒல்லி .தேற்றத்தில் ( தேத்துவதில் )கில்லி
==========================
17 நயன் தாரா வை கடத்துவேன்-பிரபல நடிகர் மிரட்டல் (மாலைமலர்) # எதுக்கு ரிஸ்க்? பார்ட்டி க்கு வாங்கன்னா அவரே வந்துடுவாரே?புவர் பாய்
================
18 கமுக்கமாக 6 கம்பெனிகளை இழுத்து மூடிய சோனியா மருமகன் ராபர்ட் வதேரா! # கட்சியையே இழுத்து மூடப்போறாங்க.கம்பெனி எம்மாத்திரம் ?
=====================
19 அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொன்னேனா?: கே. எஸ். ரவிக்குமார்
விளக்கம் # இப்போ சமாளிச்சுதான் ஆகனும்.லிங்கா சான்ஸ் பறி போய்டுமே?
======================
20 திருமணம் நடந்த இரவே புதுமனைவியை டைவர்ஸ் செய்த சவுதி மாப்பிள்ளை # கோர்ட் டைம் 6 மணி க்கே முடிஞ்சிடுமே? லாஜிக் இடிக்குதே?
========================
0 comments:
Post a Comment