Tuesday, July 08, 2014

ரயில்வே பட்ஜெட் 2014: சிறப்பு அம்சங்கள் ,ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள்: முழு பட்டியல்

கோப்புப் படம்
கோப்புப் படம் 

ரயில்வே பட்ஜெட் 2014: சிறப்பு அம்சங்கள்

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இது.
பயணிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும் என்ற ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* பயணிகள் ரயில் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இல்லை.
* மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.
* அதிவேக ரயில்களுக்காக வைர நாற்கரத் திட்டம்.
* 9 மார்க்கங்களில் மணிக்கு 160-ல் இருந்து 200 கி.மீ. வரை ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்.
* இ-டிக்கெட் சேவை: ஒரு நிமிடத்துக்கு 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரேநேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்ப மேம்பாடு.
* முன்பதிவு முறைகள் சீரமைப்பு: மொபைல் போன்கள், தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படுதல்.
* ஆன்லைனிலேயே பிளாட்ஃபார்ம், முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி.
* ரயில் நிலையங்களில், ஒரே டிக்கெட்டில் வாகன நிறுத்தம் - பிளாட்ஃபார்ம் சீட்டு.
* பெண்கள் ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே பெண் போலீஸார்; 4000 பெண் போலீஸார் நியமனம்.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வறை வசதி.
* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பேட்டரி மூலம் இயங்கும் கார் வசதி.
* ஐ.வி.ஆர்.எஸ் மூலம் உணவுத் தரம் குறித்து கருத்துப் பகிரும் வசதி.
* எஸ்.எம்.எஸ்., போன் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதி.
* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவகங்கள்.
* துப்புரவுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் உயர்வு.
* தூய்மையை கண்காணிக்க சிசிடிவிக்கள் பொருத்தப்படும்.
* ரயில் நிலையங்களை மேம்படுத்த கார்ப்பரேட் நிதியம்.
* அனைத்து ரயில்களிலும் ஆர்.ஓ. சுத்திகரிப்பு வசதி பொருந்திய குடிநீர் குழாய்கள்.
* மெயின்லைன், புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவு வசதி.
* 58 புதிய ரயில்கள் மற்றும் விரிவுபடுத்தப்படும் சேவைகளின் எண்ணிக்கை 11.
* மும்பையில் 2 ஆண்டுகளில் கூடுதலாக 864 அறிமுகம்
* ரயில்களின் இயக்கம் தவிர, மற்ற ரயில்வே திட்டங்களின் அன்னிய நேரடி முதலீடு.
* ரயில்வே கட்டமைப்பு திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் இன்டர்நெட் வசதி.
* ஏ., ஏ1 பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wi-Fi) வசதி.
* தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளுக்கான ரயில்வே பல்கலைக்கழகம்.
* பி.பி.பி. மாதிரி மூலமாக சில ரயில் நிலையங்கள் சரவதேசத் தரமாக்கப்படும்.
* பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, பார்சல் சேவைக்கு தனி முனையங்கள்.
* தலா ஒரு பயணிக்கான ஒரு கிலோ மீட்டர் பயணத்தில் ஏற்படும் வருவாய் இழப்பு, கடந்த 13 ஆண்டுகளில் 10 பைசாவில் இருந்து 23 பைசாவாக அதிகரிப்பு.
* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சூரிய மின்சக்தி.
* முன் எப்போதும் இல்லாத அளவில், 2014-15 நிதியாண்டின் திட்ட வரைவு ரூ.65,455 கோடி.
* 2014-15 நிதியாண்டுக்கான செலவினங்கள் ரூ.149,176 கோடி என கணிப்பு. 




நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டை இன்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். 



இதில், தமிழகத்தில் 4 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் 


அறிவிக்கப்பட்டுள்ளன. 5 ஜன சாதாரண ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 குளிர்சாதன வேக ரயில்கள், 27 துரித ரயில்கள் 8 பாசஞ்சர் ரயில்கள், மெயின் பாதையில் 2 மின்சார ரயில் சேவை, 5 டீசல் ரயில் சேவைகள் ஆகியவை இதில் அடங்கும்.
மேல்மருவத்தூர், வேளாங்கன்னி, ஜலவார் போன்ற கோயில் திருவிழாக் காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகரிக்கும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவிடப்படும் சிறப்பு ரயில் சேவை தொடரும் என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார். புதிய ரயில்களின் முழு விவரம்:
ஜன்சாதரண் ரயில்கள்:
1. அகமதாபாத்- தர்பங்கா ஜன்சாதரண் விரைவு ரயில் (சூரத் வழியாக)
2. ஜே.நகர் - மும்பை ஜன்சாதரண் விரைவு ரயில்
3. மும்பை - கோரக்ப்பூர் ஜன்சாதரண் விரைவு ரயில்
4. சஹாரசா - ஆனந்த் விஹார் ஜன்சாதரண் விரைவு ரயில் (மொத்திஹரி)
5. சஹாரசா - அமிர்தசரஸ் ஜன்சாதரன் விரைவு ரயில்
ப்ரீமியம் ரயில்கள்:
1. மும்பை சென்ட்ரல்- புது டெல்லி ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்
2. ஷலிமர்- சென்னை ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்
3. செக்கந்திராபாத்- ஹஸ்ரத் நிஜாமூதீன் ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்
4. ஜெய்ப்பூர்- மதுரை ப்ரீமியம் விரைவு ரயில்
5. காமக்யா- பெங்களூரு ப்ரீமியம் விரைவு ரயில்
ஏ.சி விரைவு ரயில்கள்:
1. விஜயவாடா- புதுடெல்லி விரைவு ரயில் (தினமும்)
2. லோக்மான்ய திலக்- லக்னோ (வாராந்திரம்)
3. நாக்ப்பூர்- அமிர்தசரஸ் (வாராந்திரம்)
4. நஹர்லாகுன்- புதுடெல்லி (வாராந்திரம்)
5. நிஜாமூதீன்- புனே (வாராந்திரம்)
விரைவு ரயில்கள்:
1. அகமதாபாத்- பாட்னா விரைவு ரயில் (வாராந்திரம்) வாரணாசி வழியே
2. அகமதாபாத்- சென்னை விரைவு ரயில் (வாரம் இருமுறை) வசாய் சாலை வழியே
3. பெங்களூரு- மங்களூரு விரைவு ரயில் (தினம்)
4. பெங்களூரு- ஷிமோகா விரைவு ரயில் (வாரம் இருமுறை)
5. பந்த்ரா- ஜெய்ப்பூர் விரைவு ரயில் (வாராந்திரம்) நாக்டா, கோட்டா வழியே
6. பிதர்- மும்பை விரைவு ரயில் (வாராந்திரம்)
7. சப்ரா- லக்னோ விரைவு (வாரம் மூன்று முறை) பால்லியா, காஸிப்பூர், வாரணாசி வழியே
8. ஃபேரோஸ்ப்பூர்- சண்டிகர் விரைவு ரயில் (வாரம் 6 முறை)
9. கவுகாத்தி- நஹர்லகுன் இண்டர்சிட்டி விரைவு ரயில் (தினம்)
10. கவுகாத்தி- முர்காங்க்சேலேக் இண்டர் சிட்டி விரைவு ரயில் (தினம்)
11. கோரக்ப்பூர்- ஆனந்த் விஹார் விரைவு ரயில் (வாராந்திரம்)
12. ஹபா- பிலாஸ்ப்பூர் விரைவு ரயில் (வாராந்திரம்) நாக்ப்பூர் வழியே
13. ஹசூர் சாகெப் நந்தத்- பிகானேர் விரைவு ரயில் (வாராந்திரம்)
14. இந்தூர்- ஜம்மு தாவி விரை ரயில் (வாராந்திரம்)
15. காமக்யா- கத்ரா விரைவு ரயில் (வாராந்திரம்) தர்பங்கா வழியே
16. கான்பூர்- ஜம்மு தாவி விரைவு ரயில் (வாரம் இருமுறை)
17. லோக்மான்ய திலக்- அஸாம்கர் விரைவு ரயில் (வாராந்திரம்)
18. மும்பை- காசிபத் விரைவு ரயில் (வாராந்திரம்) பல்ஹர்ஷா வழியே
19. மும்பை- பலிடன்னா விரைவு ரயில் (வாராந்திரம்)
20. புதுடெல்லி- பாதிண்டா ஷதாப்தி விரைவு ரயில் (வாராந்திரம்)
21. புதுடெல்லி- வாரணாசி விரைவு ரயில் (தினம்)
22. பாராதீப்- ஹவுரா விரைவு ரயில் (வாராந்திரம்)
23. பாராதீப்- விசாகப்பட்டினம் விரைவு ரயில் (வாராந்திரம்)
24. ராஜ்காட்- ரேவா விரைவு ரயில் (வாராந்திரம்)
25. ராம்நகர்- ஆக்ரா விரைவு ரயில் (வாராந்திரம்)
26. டாடா நகர் பைய்யப்பனாஹலி விரைவு ரயில் (வாராந்திரம்) பெங்களூரு வழியே
27. விசாகப்பட்டினம்- சென்னை விரைவு ரயில் (வாராந்திரம்)
பயணிகள் ரயில்:
1. பிகானர்- ரேவாரி (தினசரி)
2. தர்வாத்- தந்தேலி (தினசரி) அல்னாவர் வழியே
3. கோரக்ப்பூர்- மெண்டிப்பத்தார் (தினசரி)
4. ஹத்தியா- ரூர்கேலா
5. பிந்தூர்- கஸ்ரக்காட் (தினசரி)
6. ரங்கப்பரா வடக்கு- ராங்கியா (தினசரி)
7. யெஷ்வந்த்ப்பூர்- தும்க்குர் (தினசரி)
MEMU (மெயின்லைன் எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் சேவைகள்:
1. பெங்களூரு- ரமனாகரம் (வாரம் 6 முறை)
2. பல்வால்- டெல்லி- அலிகர் DEMU
DEMU (டீசல் எலெக்ட்ரிகல் மல்டிபிள் யூனிட்) சேவைகள்:
1. பெங்களூரு- நீல்மங்கலா (தினசரி)
2. சப்ரா- மந்துவாதீ (வாரம் 6 முறை) பாலியா வழியே
3. பாராமுலா- பனிஹல் (தினசரி)
4. சாம்பல்ப்பூர்- ரூர்கேலா (வாரம் 6 முறை)
5. யெஷ்வந்த்ப்பூர்- ஒசூர் (வாரம் 6 முறை)
ரயில் சேவைகளில் விரிவாக்கம்:
1. 22409/22410 ஆனந்த் விஹார் சாசாராம் கரீப் ரத் விரைவு ரயில் (சேரும் இடம்: கோவா)
2. 12455/12456 டெல்லி சராய் ரோஹில்லா ஸ்ரீகங்கா நகர் விரைவு ரயில் (சேரும் இடம்: பிகானர்)
3. 15231/15232 கோனிடியா முசாபர்நகர் விரைவு (சேரும் இடம்: பரூனி )
4. 12001/12002 புதுடெல்லி போபால் ஷதாப்தி விரைவு (சேரும் இடம்: ஹபீப்கஞ்சி)
5. 54602 லூதியானா- ஹெஸ்ஸார் (சேரும் இடம்: கோரக்ப்பூர் )
6. 55007/55008 சோன்பூர்- பக்தாங்கஞ் (சேருமிடம்: கோரக்ப்பூர்)
7. 55072/55073 கோரக்ப்பூர்- தாவே (சேரும் இடம்: சிவான்)
8. 63237/63238 பக்சார்- முகல்சராய் MEMU (சேரும் இடம்: வாரணாசி)
9. 63208/63211 ஜாஜா- பாட்னா MEMU (சேரும் இடம்: ஜசிதி)
10. 64221/64222 லக்னோ ஹர்தாய் MEMU (சேரும் படம்:ஷாஜஹான்ப்பூர் )
11. 68002/68007 ஹவுரா- பேல்தா MEMU (சேரும் இடம்: ஜலேஸ்வர்) 


நன்றி - த  இந்து

0 comments: