கோடம்பாக்கத்துக்கு இது பாகம் 2 சீசன் . ஆனானப்பட்ட கமல் ல இருந்து ஆளான தாமரை ஷோபனா வரை ஆல்ரெடி ஹிட் ஆன படம்னா அதனோட 2 வது பாகத்துல நடிப்பது தான் ஃபேஷன் . அந்த வரிசைல கள்ளக்காதல் ஸ்பெஷல் கதையான இலக்கணப்பிழை படம் சி செண்ட்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைத்தொடர்ந்து கல்லா கட்ட ஆசைப்பட்ட தயாரிப்பாளர் அதன் 2 ம் பாகத்த எடுத்திருக்காங்க.
இந்த உலகப்படத்தோட கதை என்னான்னு பார்ப்போம் .
ஓப்பனிங் ஷாட்ல ஹீரோயின் சின்னப்பசங்களோட ஐஸ் நெம்பர் 1 விளையாடுது . இது மாதிரி காட்னாத்தான் ஹீரோயின் ஒண்ணும் தெரியாத சுப்பி , திறக்காத புது மை டப்பினு ஆடியன்ஸ் நினைச்சுக்குவாங்க . அடுத்த ஷாட்ல யே வாய்க்கா மேட்டுல பச்சைக்கலர் பாவாடை கட்டிக்கிட்டு குளிக்குது . ஏன்னா இது ஒரு பரிசுத்த மான பொண்ணாம். மலையாளத்துலயும் சரி , எல்லா மொழில யும் சரி இந்த மாதிரி சீன் படத்துல ஹீரோயின் ஓப்பனிங் ஷாட்ல குளிப்பாங்க .
என்னடா இவன் கதையைச்சொல்லாம சீனைச்சொல்லிட்டு இருக்கானே? -னு நினைப்பவங்களுக்கு இதுல எல்லாம் ஏது கதை ?
ஹீரோயினுக்கு அவங்க வீட்லயே கூடவே இருக்கும் மாமா பையனை பிடிக்கலை . ஆள் கரிச்சட்டி மண்டையனாட்டம் இருக்கானாம் .
குளிச்ட்டு வரப்பு மேட்டுல நடந்து போகும்போது கேவலமான , பக்கிரி மாதிரி இருக்கும் ஹீரோவைப்பார்த்து கெக்கே பிக்கேனு சிரிக்குது . அவனும் இந்த டொக்கு ஃபிகரைப்பார்த்து சிரிக்கான் . 2 பேரும் தெர்ய்வீகக்காதலை வாய்க்கா மேடு , வயல்காட்டு சந்து பொந்து ல அரங்கேற்றம் பண்றாங்க .
என்னமோ விஜய் -ன் கத்தி டீசர் , சூர்யா வின் அஞ்சான் டீசர் விடற மாதிரி பில்டப் எல்லாம் கொடுத்த்து படத்தோட கில்மா சீன் இடைவேளை அப்போ வருது.
எதிர் பாராத விதமா 2 பேரும் தப்பு பண்ணிடறாங்க. மேட்டர் முடிஞ்சதும் ஹீரோ அவரு சொந்த ஊரு கிளம்பறார்.
இடைவேளை
இடைவேலை( ளை)க்குப்பின் படம் ஒரே சோக மயம். பாப்பா மாசம் ஆகிடுது . 3 மாசம் வரைக்கும் அந்த பன்னாடை கிட்டே இருந்து எந்த தகவலும் வர்லை . ஹீரோயின் அம்மா தற்கொலை பண்ணிக்குது .
ஹீரோயின் நைசா அவ மாமா பைய கிட்டே என்னை கட்டிக்கிடறியா?னுகேட்குது . குழந்தைக்கு இனிஷியல் பிரச்சனை வந்துடக்கூடாதேனு
அந்த தத்தியும் சரிங்கறான். தியாகமாம். அடங்கொய்யால .
இவங்க 2 பேருக்கும் எப்போ சீன் வரும்னு பெஞ்ச் ரசிகர்கள் காத்துக்கிட்டு இருக்கும்போது அந்த மாமா பையனுக்கு குளிர் ஜூரம் வருது . காய்ச்சல் வந்தா டாக்டர்ட்ட கூட்டிட்டுப்-போக வேண்டியதுதானே? அந்த ஹீரோயின் வீட்டுக்கதவை தாழ் போட்டுட்டு அவன் கை கால் எல்லாம் தேய்ச்சு விட்டு சூடேத்துது இதுல ஆடியன்ஸ் லைட்டா காட் ஆகறாங்க
அடுத்து அருவி தண்ணீர் பாயறதைக்காட்றாங்க , சிம்பாலிக் ஷாட்டாம் .
இப்போ மாமா பையனும் மேட்டரை முடிச்சுட்டாம்
இப்போ தான் திரைக்கதைல திருப்பம் . ஓடிப்போன ஹீரோ ரிட்டர்ன் வர்றான் சொர்ணமுகி ஆர் பார்த்திபன் மாதிரி .
இப்போ ஹீரோயி ன் யாருக்குச்சொந்தம் , முத முதலா நிலா வில் கால் , கை எல்லாம் வெச்ச ஆர்ம்ஸ்ட்ராங்க்குக்கா? 2 வது முறை கை வெச்ச கரிச்சட்டி மண்டையனுக்கா?
விபரம் அறிய வெள்ளித்திரையில் காண்க
சபாஷ் . சி பி திருந்திட்டான் . பட சஸ்பென்சை காப்பாத்திட்டான்னு யாரும் நினைக்காதீங்க . இதுக்கு மேல சீன் இருக்காதுன்னு தமிழனுக்கு தெரியும் . அதனால அந்த சீனோட கிளம்பியாச்சு
1 போஸ்டர் டிசைன் சூப்பர் . ஹீரோயின் செலக்சன் பரவால்லை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 முதல் பாகமான இலக்கணப்பிழை ல கள்ளக்காதல் மேட்டர் இருந்தது டைட்டிலுக்கு மேட்ச் ஆச்சு. இதுல 2 மே நேர்மையான காதல் தானே? காதலனுக்கு ஒரு வாட்டி , மாமா பையனுக்கு ஒரு வாட்டி உடல் தானம் பண்றா. இதுல என்ன இலக்கணப்பிழை?
2 ஹீரோயி பேரு சரோஜா . ஆனா அவ எப்போ பூக்க்டை சரோஜா ஆனா? அவளும் சரி , ஊர்ல யும் சரி யாருமே பூக்கடை வைக்கலை . சரோஜா வைத்தா 2 பேரு வெச்சிருந்தாங்க . டைட்டிலில் பூக்கடை எதுக்கு?
மனம் கவர்ந்த வசனங்கள்
1 chee
2 mmmm
3 eai
4 aah
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
இந்த மாதிரி படத்துக்கு கான்செண்ட்ரேஷன் ரொம்ப முக்கியம் அதனால ட்வீட்ஸ் போட முடியல
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 20
குமுதம் ரேட்டிங்க் = ok
சி பி கமெண்ட்-பூக்கடை சரோஜா வின் இலக்கணப்பிழை பாகம் 2 = பாடாவதிப்படம்.வேஸ்ட். ஒரே சோகம். ரேட்டிங் = 1 / 5 ( 5 சீன் எதிர்பார்த்தேன்.1 தான்)
1 comments:
அண்ணே, சூப்பர்;
Post a Comment