1. ராமானுஜன்
மோகமுள், பாரதி, பெரியார் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஐ.ஏ.எஸ்
அதிகாரி ஞானராஜசேகரன் அடுத்து இயக்கி வரும் படம் ராமானுஜன். ஈரோட்டில்
பிறந்து கும்பகோணத்தில் வளாந்து, தனது கணித அறிவால் உலகை வென்ற தமிழன்
கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை கதை. ஜெமினி, சாவித்திரி தம்பதிகளின் மகன்
அபிநய் ராமானுஜனாக நடிக்கிறார். பாமா அவரது மனைவியாகவும், சுஹாசினி அவரது
தாயாராகவும் நடிக்கிறார்கள். ராமானுஜர் வாழ்ந்த ஈரோடு, கும்பகோணம், சென்னை,
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடந்தது.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் படமாக்கப்பட்ட ஒரே படம் ராமானுஜன்தான்.
படத்தை பற்றி இயக்குனர் ஞானராஜ சேரகன் கூறியதாவது: ஆங்கிலேயர் நம்மை அடிமையாக்கி வைத்திருந்தபோது நம்மை முட்டாள்கள் என்றும் அடிமைகள் என்றும் கருதி வந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்களைவிட அறிவில் சிறந்தவாராக உருவானவர் ராமானுஜன். அவரை அறிவாளியாக ஒத்துக் கொள்ளாத ஆங்கிலேய அரசு அவரை சராசரி மனிதனாக காட்ட பல முயற்சிகளை எடுத்து அவரை துன்புறுத்தியது. ஆனால் அவரையும் அடையாளம் காட்டியது ஜி.எச் ஹார்டி என்ற ஆங்கில பேராசிரியர். அவர்தான் ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகளை உலகக்கு காட்டியவர்.
சொந்த குடும்பத்தாலேயே அங்கீகரிக்கப்படாதவர் ராமானுஜன். ஒரு சினிமாவுக்கான சகல விஷயங்களும் அவரது வாழ்க்கையில் இருக்கிறது. அதனால்தான் படம் எடுக்க துணிந்தேன்.
5 DAWN OF THE PLANET OF THE APES-
மீண்டும் வருகிறது குரங்குப் படை!
2011ம் ஆண்டு வெளிவந்த ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் உலக அளவில்
கலக்கிய படம். மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள்,
அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம்
கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன் டாலர்களை வாரிகுவித்த படம்
இப்போது
வெளிவருகிறது இதன் இரண்டாம் பாகம். டாவ்ன் ஆப்தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்.
அதாவது குரங்கு சாம்ராஜ்யத்தின் விடியல். முதல் பாக கதையில் இருந்து 10
வருடங்களுக்கு பிறகு நடப்பது மாதிரியான கதை. முதல் பாகத்தில் குரங்கு
படைகளை திரட்டும் சீசர் என்னும் மனிதகுரங்கு. இந்த பாகத்தில குரங்கு
படைக்கு தலைவனாகிறது. 2 ஆயிரம் மனித குரங்குகளை கொண்டு தனி சமுதாயத்தை
அமைக்கிறது. அவற்றுக்கு எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்கிறது. குரங்கு
சாம்ராஜ்யம் அமைந்தால் மனித இனம் அழிந்து விடும் என்று கருதும் மனித
ராணுவம் அதனை எதிர்த்து போராடுகிற கதை. கிட்டத்தட்ட இது மனிதன், குரங்கு
படைகளின் யுத்தக் கதை.
குரங்குகள் அனைத்தும்
அனிமேஷன்கள், மனித கேரக்டர்களாக ஆன்டி செர்கிஸ், கேரி ரூசல், கேரி
ஓல்டுமேன், மேன் நடித்துள்ளனர். மேட் ரீவ்ஸ் இயக்கி உள்ளார். டுவண்டியன்த்
சென்ஞ்சுரி பாக்ஸ் தயாரித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள விட்டா டிஜிட்டல்
நிறுவனம் 1200 கிராபிக்ஸ் காட்சிகளை இதற்காக உருவாக்கி உள்ளது. ஜூலை 11ந்
தேதி உலக நாடுகளில் ரிலீசாகிறது. இந்தியாவில் ஜூலை 18ந் தேதி ரிலீசாகிறது.
குரங்கு படையும், மனிதர்களும் மோதுவதை 3டியிலும், தமிழிலும் பார்க்கலாம்.
ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்
நன்றி - தினமலர் , தினமணி , மாலைமலர். மற்றும் அனைத்து சினிமா இணைய தளங்கள்:
0 comments:
Post a Comment