ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். அவருக்கு ஒரு சம்சாரம். அவங்க வீட்ல சாரி பங்களாவுல கணக்குப்பிள்ளையா வேலை செய்யறவரு பண்ணையார் சம்சாரத்தைக்கணக்குப்பண்ணிடறாரு. தினசரி 2 காட்சிகளா பல வருசங்களா வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த கில்மா சினிமாவை கணக்குப்பிள்ளையோட சம்சாரம் நேர்ல லைவ் ஷோவா பார்த்துடுது.
பார்த்தவ கமுக்கமா போலீஸ்க்குப்போகாம புருஷன் கிட்டே சும்மா வாய் சவடால் விடுது. வம்பு எதுக்குன்னு புருஷன் பொண்டாட்டியை டக்னு கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிடறான் .
அவனுக்கு ஒரு பையன் , ஒரு பொண்ணு . அவங்க இவனை வெறுக்கறாங்க .பையன் அப்பா கிட்டே சவால் விட்டு தங்கையை கூட்டிக்கிட்டு தனியா வாழப்போய்டறான்.
வளர்ந்து பெரிய ஆள் ஆகி அவன் ஹீரோ ஆகிடறான் . தங்கச்சியை கண்ணும் கருத்துமா பார்த்துக்கறான். தங்கச்சி வயசுக்கு வந்ததும் பல பசங்க சுத்தி சுத்தி வர்றாங்க .
ஏதோ ஒரு பிரச்சனைல மெடிகல் செக்கப் செய்யும்போது தங்கை கர்ப்பம்னு தெரியுது
1. காடுக்குள்ளே ஏதோ ஒரு பெண்ணை ரேப் செஞ்ச வில்லனை காட்டிக்குடுத்து ஜெயிலுக்கு அனுப்பியதால் ஹீரோவைப்பழி வாங்க வில்லன் தங்கயை ரேப்பிட்டாரா?
2 தங்கை பின்னாலயே நாய் மாதிரி சுத்திட்டு இருந்த ஒரு ஸ்டூடண்ட் செஞ்ச தப்பா ?
3 கூடவே இருந்த நண்பன் காதல் ஆசை காட்டி கரெக்ட் பண்ணிட்டானா?
அப்டினு ஹீரோவோட நாமும் சேர்ந்து யோசிக்கும் போது இடை வேளை
நண்பன் தான் காரணம்னு தப்பா நினைச்சு ஹீரோ நண்பனை கொலை பண்ணிடறார். தங்கயைக்கொலை பண்ண ஊருக்கு ஒதுக்குப்புறமா கூட்டிட்டுப்போறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை .
அநேகமா எங்கேயோ நடந்த உண்மைச்சம்பவம் , அல்லது ஏதோ ஒரு தெலுங்கு நாவலைத்தழுவி இந்தக்கதை உருவாக்கப்பட்டிருக்கு . எப்படின்னா காட்சி அமைப்பில் சினிமாத்தனம் இல்லாம ஏதோ நிகழ்ந்த சம்பவத்தை நேரில் பார்ப்பது போலவே இருக்கு
சீரியல் பார்க்கும் சிங்கங்களுக்கு விஜய் டி வி ல வந்த மகாராணி , அவள் ஆகிய சீரியல்கள் நினைவிருக்கும் . அவற்றை இயக்கிய தாமரைக்கண்ணன் தான் தாமர கண்ணன் ஆகிட்டார் . அவர் தான் பட இயக்குநர் . இது அவருக்கு முதல் படம் . நல்ல முய்ற்சி . இவர் மலையாளத்தில் 18 வருடங்கள் செம ஹிட் படங்கள் கொடுத்த ஐ வி சசி யிடம் இணை இயக்குநராக பணி புரிந்தவர் .
கூத்துப்பட்டறையில் பயின்ற ஸ்ரீ பாலாஜி இதில் முதல் முதலாக ஹீரோவாக . வழக்கமான தமிழ் சினிமா வில்லேஜ் ஹீரோ எப்படி இருப்பாரோ அதே போல் . சீவாத தலை , ஷேவ் செய்யாத தாடி , லுங்கி என வருகிறார் . பிரமாதம் என சொல்லவும் முடியலை , குறையும் சொல்ல முடியலை . சராசரியான நடிப்பு . க்ளைமாக்ஸ் காட்சியில் ,மட்டும் கலக்கிட்டார் .
நாயகி யாக லீமா . இவர் ஆல்ரெடி காயத்ரி , மதராசப்பட்டிணம் , யாழ், சொகுசுப்பேருந்து இவற்றில் நடித்தவர் தான் . கிராமப்பெண் என்ற இலக்கணத்தை மீறி இவருக்கு ஓவர் மேக்கப் . பொதுவா வில்லேஜ் கேர்ள் எனில் பியூட்டி பார்லர் உதவி இல்லாமல் சாதா ஒப்பனையே போதும் .
ஹீரோவின் தங்கையாக வரும் நர்த்தகி 15 வயசு நந்தியாவட்டைப்பூ . குழந்தைத்தனமான முகம் . பிரகாசமான எதிர் காலம் உண்டு .அப்பாவித்தனமான நடிப்பில் ஸ்கோர் அள்றார்.
வில்லனாக வருபவர் ஓக்கே ரகம் .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ஆட்டுப்பாறை எனும் கிராமத்தில் முழுப்படப்பிடிப்பும் நடத்தி செலவே இல்லாம மினிமம் பட்ஜெட்ல படத்தை முடிச்சது
2 ஹீரோவின் தங்கையாக வரும் நர்த்தகி யை புக் செய்தது
3 படம் முழுக்கவே ஒரு எதிர்பார்ப்புடன் நகர்த்தி சென்றது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. கிராமங்களில் பல கிழவிங்க , பெருசுங்க கை வைத்தியம் பார்ப்பாங்க . சும்மா கை மணிக்கட்டைப்பிடிச்சே கர்ப்பமா? இல்லையா?னு பார்த்துடுவாங்க . ஹீரோவின் தங்கை கர்ப்பம் எனில் அவங்க ஏன் கண்டு பிடிக்கலை ? அல்லது ஹீரோ ஏன் அதுக்கு முயற்சி செய்யலை ?
2 ஹீரோ அடிக்கடி பக் வீட் ஆயா கிட்டே தன் தங்கயை ஒப்படைச்சுட்டு போறார் . அந்த ஆயா கிட்டே ஏன் கேட்கலை ? செக் பண்னச்சொல்லி ?
3 ஹீரோவின் அப்பா , அம்மாவை கொலை செய்து தூக்கில் தொங்கியதாக செட்டப் செய்த போது நாக்கு வெளீல தொங்கலை . உடனே கிராம மக்கள் ஏன் போலீஸ்க்கு தகவல் சொல்லலை ?
4 இத்தனை பிரச்சனை நடந்தும் ஒரு சீனில் கூட பண்ணையாரை ஏன் காட்டவே இல்லை ? மிக்சர் கம்பெனில பிசியா?
5 தங்கை கர்ப்பம் என்பதை நம்பும் ஹீரோ அதை கன்ஃபர்ம் செய்ய ஏன் இன்னொரு ஹாஸ்பிடல் போகவே இல்லை ?
6 தன் தங்கை கர்ப்பம் இல்லை என்பதை உணரும் ஹீரோ அந்த மெடிக்கல் ஷாப் இளைஞனை அடையாளம் அறியும் காட்சி நாடகத்தனம் . வெறும் மணிக்கட்டை வைத்து அவனை அடையாளம் கண்டு பிடிப்பது கஷ்டம்
7 க்ளைமாக்சில் தங்கயை வீட்டிலேயே கொலை செய்யாமல் காட்டுக்கு அழைத்துச்செல்வது , அங்கே கொடியில் கட்டி வைப்பது , வில்லன் ரேப் பண்ண வருவது எல்லாம் நம்ப் முடியாத நாடகத்தனம்
8 36 கிலோ வெயிட் கூட இல்லாத அந்த 15 வயசுப்பிஞ்சுப்பொண்ணு காட்டெருமை மாதிரி இருக்கும் வில்லனை அரிவாளால் வெட்டுவது நம்ப முடியலை . அதை காட்சியாக காட்டாமல் குறிப்பால் உணர்த்துவதும் நம்பகத்தன்மைக்கு பங்கமே .
மனம் கவர்ந்த வசனங்கள்
1. இனி என்னை வேவு பாக்காதே ! புரியுதா?
அப்போ நீங்க என்ன ஆம்பளை அவிசாரியா?
2 சாராயம் குடிக்கறது , பொண்டாட்டியை அடிக்கறது இது தவிர என்ன தெரியும் இந்த கிராமத்துப்பட்டிக்காட்டான்களுக்கு ?
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
படம் பார்க்கும் போது ட்வீட்ஸ் எதும் போடலை . எதிர் சீட்ல ஒஎஉ காலேஜ் லவ் ஜோடி யும் , ஸ்கூல் லவ் ஜோடியும் வந்திருந்தாங்க . திரையில் ஓடும் படத்தை விட இந்தப்படம் நல்லார்ந்ததால், தடங்கலுக்கு மகிழ்கிறேன்
சி பி கமெண்ட் -சூறையாடல் - தவறான புரிதலால் நண்பனைக்கொலை செய்யும் ஹீரோவின் கதை - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் = 2.25 / 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 40
குமுதம் ரேட்டிங்க் = ok
aAnu Lekshmi
டிஸ்கி - 1
வடகறி - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_591.html
2
நேற்று இன்று - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_5435.html
3
வெற்றிச்செ ல்வன் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/
0 comments:
Post a Comment