நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலைஞர் டி வி யில் பல குறும்படங்களை இயக்கியவர் திருப்பூர் ராம் . அவரது மாஸ்டர் பீஸ் காமெடி ஸ்டோரி 8 நிமிடப்படம் ஒன்றை ( உச்சம் ) 142 நிமிடப்படமாக எடுத்திருக்கார். அது எப்படி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் .
முண்டாசுப்பட்டினு ஒரு கிராமம் . இந்த ஊர்ல ஒரு மூட நம்பிக்கை. அதாவது யாராவது ஃபோட்டோ எடுத்துக்கிட்டா அவங்க செத்துடுவாங்க . இந்த நம்பிக்கை எப்படி அவங்க மனசுல வேர் போல் பதிஞ்சது என்பதற்கு ஒரு ஃபிளாஸ்பேக் கதை இருக்கு .
அப்படிப்பட்ட கிராமத்துக்கு நம்ம ஹீரோ வர்றார். அவர் ஒரு ஃபோட்டோ கிராஃபர் . கிராமத்தில் ஒரு பெருசு இப்பவோ அப்பவோனு இழுத்துட்டு இருக்கு . அவரை ஃபோட்டோ பிடிக்கனும். அது தான் ஹீரோவுக்கு தரப்பட்ட வேலை .
பொதுவா நாம கேமராவில் எந்த இயற்கைக்காட்சியைப்படம் பிடிச்சாலும் அது நல்லா க்ளிக் ஆகிடும் . அதுவே படம் பிடிச்சது ஒரு பொண்ணா இருந்தா அந்தப்பொண்ணே க்ளிக் ஆகிடும் .
பெரிசு வீட்டில் ஹீரோயின் . ஹீரோ ஹீரோயினைப்பார்க்கறார். மெட்ராஸ் ஐ வந்தவவங்க கண்ணைப்பார்த்தா மெட்ராஸ் ஐ வருதோ இல்லையோ , இப்பவெல்லா,ம் ஹீரோ ஹிரோயினைப்பார்த்து 10 விநாடில லவ் வந்துடுது .
இவங்க லவ் என்னாச்சு ? இது ஒரு டிராக்.
பெருசுவை ஃபோட்டோ எடுத்தது சரியா விழலை. டெட் பாடியை எரிச்சுடறாங்க . இப்போ ஃபோட்டோ தர்லைன்னா கிராமத்து ஜனங்க பின்னிடுவாங்க . அதனால என்ன ஐடியா பண்றாங்கன்னா சினிமா ப்படத்துல நடிக்கும் ஆசை கொண்ட ஒரு சினிமாப்பைத்தியத்தை அந்த டெட் பாடி மாதிரி கெட்டப் ரெடி பண்ணி ஃபோட்டோ எடுக்கறாங்க . கடைசில பார்த்தா அந்த சினிமாப்பைத்தியத்தோட சித்தப்பா தான் டெட் பாடி . உண்மை தெரிஞ்ச அவன் என்ன பண்றான் ? இது ஒரு டிராக்
கிராமத்துல ஒரு விண் கல் வந்து விழுது . அது சாமின்னு மக்கள் கொண்டாடுறாங்க .அந்த விண்கல் ல பல விலை மதிக்க முடியாத கனிமப்பொருட்கள் இருக்கு .சாதா கனிமம் இல்ல . கனிமொழி ஒண்ணே முக்கால் லட்சம் கோடி அளவுக்கு இல்லைன்னாலும் தங்கம் , வைரம் மாதிரி காஸ்ட்லியான கனிமம் . அந்த அபூர்வக்கல்லை அபேஸ் பண்ணப்பார்க்கும் ஒரு பண்ணையார் இது 3 வது டிராக் .
மேலே சொன்ன 3 டிராக்கையும் ஒரு கதையில் இணைச்சிருக்காங்க
ஹீரோவா விஷ்ணு . நல்ல நடிப்பு . ஆனால் கதை நடக்கும் கால கட்டம் 1982 என்பதால் அவருக்கு சுதாகர் காலது விக் ஸ்டைல் . லேசா உறுத்துது . அதை எல்லாம் திரைக்கதையும் , வசனமும், காமெடி காட்சிகளிம் சரி பண்ணிடுது .
ஹீரொயினாக நந்திதா. அடக்க ஒடுக்கமான கேரக்டர் . ஹீரோவை இவர் ல வ் பண்றாரா ? இல்லையா? என்பதை ரொம்ப இழுத்தடித்து கேப்டன் பிஜேபி கூட்டணியை அறிவிக்க லேட் செய்தது போல் காத்திருக்க வைப்பது சோதனை .
ஹீரோவின் நண்பராக காளி . குறும்படங்களில் ஹீரோவாக வந்தவர் . இதில் ஹீரோவுக்கு ந்ண்பர் இவர் டயலாக் டெலிவரி கலக்கல் . நல்ல டைமிங்க் சென்ஸ்
டெட் பாடிக்கு பினாமியாக வரும் முனீஷ் கந்த் கலக்கலான காமெடி நடிப்பு . கேமரா பயம் என்றால் கிலோ என்ன விலை? என கேட்பார் போல . மனிதர் பின்னிப்பெடல் எடுத்துட்டார் . வாவ்!!
சாமியாராக வருபவரும் செம காமெடி நடிப்பு .
ஆர்ட் டைரக்டர்க்கு படத்தில் நல்ல ஹோம் ஒர்க். கதை நடக்கும் இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் . இயக்குநர் நம்ம ஏரியா திருப்பூர் என்பதால் திரையில் இயல்பாய் ஒரு நேட்டிவிட்டி வந்து விடுகிறது . இசை சராசரிக்கும் மேல் . ஒளிப்பதிவு , எடிட்டிங்க் ஓகே ரகம் .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. இண்ட்டர் நெட்டில் முண்டாசுப்பட்டி போசில் விஐபி களை போட்டிய்யில் கலந்து கொள்ள வைத்தது நல்ல உத்தி . குறுகிய காலத்தில் நம்ப முடியாத ரீச்
2 அறிமுக இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பி ஜி எம் மில் பல புதுமைகளை முயற்சித்து இருக்கார் ,. அவருக்கு ஒரு ஷொட்டு . ராசா மக பாட்டு வைரம்
3 க்ளைமேக்ஸ் காட்சியில் அந்த காமெடிக்கலக்கலான முத்திரை இயக்குநரின் அக்மார்க் முத்திரை
4 பொட்டிக்கடைக்காரன் பொண்ட்டாட்டி யை ஊரில் பாதிபேர் க்ரெக்ட் பண்ணுவது , பூசாரியுடன் அவர் ஓடிப்போவது வெடிச்சிரிப்பு . அந்த கள்ளக்காதல் காமெடி டிராக்குக்கு லேடீஸ் ஆடியன்சின் வரவேற்பு ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கு
5 பூசாரியை வைத்தே , அந்த மூட நம்பிக்கையை வைத்தே கதையை நகர்த்திய விதம் , முனீஸ்காந்த்தின் அபார நடிப்பு
6 கிராமத்தில் இருக்கும் எல்லா வீட்டுக்கதவிலும் “ திரும்பிப்போ “ என எழுதி வைத்திருப்பது எதற்கு என விளக்கும் காட்சியில் காமெடி அதகளம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. நாயகி பள்ளியில் +2 படிக்கும் வகுப்பில் ஒரு காட்சி . அதில் போர்டில் பதிவு 35 எனவும் வருகை 32 எனவும் காட்டறாங்க . ஆனா லாங்க் ஷாட்டில் காட்டும் போது ரொம்ப கம்மியான பொண்ணுங்க தான் இருக்காங்க
2 சாவு நடந்த இழவு வீட்டில் நாயகன் , நாயகி காதல் வளர்க்கும் காட்சிகள் இப்போது பல படங்களில் வந்து விட்டபடியால் சலிப்பு ஊட்டும் தேக்க நிலை
3 நாயகி ரூமில் படுத்திருக நாயகன் வீட்டின் மேல் கூரையில் ஓட்டைப்பிரித்து ரூட் விடுவது ஜெயம், படத்தில் பார்த்தாச்சு
4 மெயின் கதை டெட் பாடி ஆள் மாறாட்ட காமெடி தான் . அதை இழுக்க கதையை வளர்த்த ஹீரோ - ஹீரோயின் காதல் கதை , விண்கல் கதை வலுவந்தமாக செருகபட்டதால் அது மெயின் கதையின் காமெடியை பாதிக்கிறது . முழுக்க முழுக்க இதை ஒரு காமெடிப்படமாகவே எடுத்திருக்கலாம்
5 வயாக்ரான் போல் பவர் ஃபுல்லானது பூனை சூப் என வரும் வசனமும் , காட்சி அமைப்பும் உவ்வே !
6 ஹீரோ ஹீரோயின் இடையே காதல் காட்சிகள் பெரிதாக மனதில் பதியவில்லை . சிக்கிரம் லவ் சீனை முடியுங்கப்பா, காமெடி சீன் போடுங்க என சொல்லும் அளவு காமெடி டாமினேட் செய்வதால் , காதல் காட்சியில் ஆழம் இல்லாததால் திரைக்கதை தடுமாறுகிறது
மனம் கவர்ந்த வசனங்கள்
1. எங்க அய்யாவை சிங்கம் மாதிரி ஃபோட்டோ எடுக்கனும்
அதுக்கு காட்டுக்குதான் போகனும்
2 இவரு பெரிய நேரு பரம்பரை . சாம்,பலை இந்தியா பூரா தெளிச்சுட்டுப்போறாரு . முப்போகமும் விளைஞ்சிடும்
3 ஒரு டீ சொல்லு
டீ
4 பாரதிராஜா படமா இருந்தா பாடை ல போகும் வேஷமா இருந்தாலும் செய்வேன்
5 விடிஞ்சாலும் விடிஞ்சிடு,ம் - இதுதான் நான் நடிச்ச படம் எப்பூடி ? டைட்டில்; ?
கிழிஞ்சாலும் கிழிஞ்சிடும்
6 துரு புடிச்ச துப்பாக்கிக்கு பூனை சூப் எதுக்கு ? பூனை சூப் வீணா போச்சு
7 டீ சாப்பிடறீங்களா ?
ம் \\\
கடைல போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வாங்க . நான் வெயிட் பண்றேன்
8 சும்மா போற சனியனை சுனைக்குள்ளே கூப்ட்ட கதையா
9 ஏண்டா லேட் ?
பைக் ஸ்லோ \\
இதுக்கு நீ நடந்தே வந்திருக்கலாம்
சி பி கமெண்ட் -முண்டாசுப்பட்டி - மயிலின் தோகை போல் நீளமான , ஆனால் அழகான திரைக்கதை ,முன் பாதி ஆமை போல் ஸ்லோ - விகடன் மார்க் = 43 , ரேட்டிங்க் = 3 / 5 . ஏ செண்ட்டர்ல ஓரளவு ஓடிடும், பி சி க்கு அடுத்த படம் இன்னும் நல்லா பண்ண வாழ்த்துகள்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =43
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங்= 3 / 5
a
a
கரூர் எல்லோரா - அஜந்தா காம்ப்ளெக்ஸ் pic.twitter.com/5ivDRAuG9n
a
கரூர் எல்லோரா - அஜந்தா காம்ப்ளெக்ஸ்
2 comments:
படம் இன்னும் பார்க்கலை... நாளைக்குத்தான் பார்க்கணும்.. உங்க விமர்சனம் பார்க்கலாம்ன்னு சொல்லுதே..
உங்க பிளாக்கை படிப்பதற்கு விளம்பரங்கள் ரொம்ப தடையா இருக்கு
அதை கொஞ்சம் கவனிங்க பாஸ்
Post a Comment