1. பயங்கர ஆயுதங்களுடன் திமுக ஒன்றியச் செயலாளர் கைது: கரகாட்ட மோகனாம்பாளுடன் தொடர்பா? # 37 ல ஜெயிச்சும் ஒரு பொய்க்கேஸ் கூட போடலைன்னா எப்டி?
=================
2 நோயாளியின்றி சைரன் ஒலித்தபடி சென்ற ஆம்புலன்ஸ்: மடக்கிப் பிடித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் # நல்லா விசாரிங்க, டிரைவரே பேஷண்ட்டா இருந்தா?
=================
3 தே.ஜ. கூட்டணி தேமுதிகவுக்கு சாதகமா? பாதகமா?- ஆய்வு நடத்த விஜயகாந்த் உத்தரவு # உத்தரவு போட்டுட்டு அண்ணன் டாஸ்மாக் போய்ட்டார் போல
=================
4 பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல வாய்ப்பு # மோடி அங்கே போகும்போது ஒபாமா நைசா இங்கே வந்துடனும்
==================
5 உத்தரப் பிரதேசத்தில் பெண் நீதிபதி அவர் உறவினர்கள் இருவரால் பலாத்காரம் - செய்தி # சொந்தக்காரர்களோடு பெண் பேசவே கூடாதும்பாங்க்ளோ?
=====================
6 பிரதமர் ஆனபின் மோடியின் முதல் பயணம் பூட்டானுக்கு # டான் டான் னு எல்லா வேலையும் பூ மாதிரி நடக்கும்னு சிம்பாலிக்கா சொல்றாரோ?"
===============
7 குஜராத்தில் அதிக எடையில் விளையும் மாம்பழம் # இது இயற்கையான விளைச்சல்.பிஜேபி பாமக கூட்டணி ராசினு யாரும் அடிச்சு விடாதீங்க
=============
8 கலைஞர் டிவி-யின் ரூ.200 கோடி பரிவர்த்தனையில் எனக்குத் தொடர்பில்லை - ஆ.ராசா # அப்போ அந்த 200 கோடியை காக்கா தூக்கிட்டு வந்து போட்டுடுச்சா?
================
9 நாடாளுமன்றத்தில் அறை இல்லாமல் அத்வானி அவதி # அர்விந்த் கேஜ்ரிவால்க்கு குடுத்தமாதிரி அறை தராம இருந்தா சரி
==================
10 இனப்படுகொலைஎன்று ஜெ கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம் # செஞ்சதை சொல்லிக்காட்டுனதுக்கே கோபம் வருதே ,எங்களுக்கு எவ்ளவ் கோபம் வரும்
=================
11 அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. # சென்னை வெண்ணை -னு டைட்டில் வெச்சா வரிவிலக்கு
===================
12மின்னணு முறையில்ATMபாதுகாப்பு: பாரத ஸ்டேட் வங்கி விரைவில் அறிமுகம் # இனி இதுல திருடனும்னா எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிச்சாதான் முடியுமா?
=======================
13 என்னை சந்திக்க முடியாததுக்கு மோடி வருத்தம் தெரிவித்தார்-கேப்டன் #
மாபியா மாதிரி இருக்கீங்கனு சொன்னத மாப் கீஜியே னு சொன்னதா நினைச்ட்டாரு
=====================
14.எனது தாத்தா பஞ்ச கல்யாணி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்-சரத்குமார்
# அது வும் அம்மா அம்மானு அம்மா புகழ் பரப்புதா?
==================
15 'களை'களை பிடுங்கி எறிவேன்-ஞானதேசிகன்# ம் .இப்ப தான் கட்சி களை கட்டுது
================
16 திண்டுக்கல்லில் பெட்ரோல் கலந்த குடிநீர்: பொது மக்கள் அதிர்ச்சி:# எதுக்கு
ஜெர்க் ஆகனும்? பைக் ல போட்டு ரவுன்ட் அடிக்கவேண்டியதுதானே"
========================
17 என்னை சந்திக்க முடியாததுக்கு மோடி வருத்தம் தெரிவித்தார்-கேப்டன் #
தலைவலி கேஸ் வருது.சாரிடோன் எடுன்னதை சாரி சொன்னதா நினைச்ட்டாரோ?
====================
18 2ஜி வழக்கால்தான் காங்கிரஸ்க்கு கெட்ட பெயர்- ஞானதேசிகன் # ஆமா.ஈழத்தமிழர்களை கொன்றதில் நல்ல பேரா?
================
19 திமுக தோல்வியை கண்டு துவண்டு போய் மூலையில் முடங்கும் இயக்கமல்ல... மு.க.ஸ்டாலின் # குபேர மூலை ல தான் எப்பவும் நாம ஒதுங்குவோம்
================
20 சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும்"- சுப்பிரமணியன் சுவாமி# டெய்லி கண்ணாடில பார்ப்பாராம்
================
0 comments:
Post a Comment