ஹீரோ ஒரு மெடிக்கல் ரெப் . சாதா பேசிக் மாடல் மொபைல் வெச்சிருக்கார் . கூட இருக்கும் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஐ ஃபோன் வெச்சிருந்தாத்தான் ஃபிகர் உஷார்ப்படுத்த முடியும்னு உசுப்பேத்தி விடறாங்க . ஆனா அவரால வாங்க முடியலை. அப்போ அநாமத்தா ஒரு ஐ ஃபோன் இவர் கை ல மாட்டுது . அந்த ஃபோனை கமுக்கமா ஆ ராசா கணக்கா அமுக்கிடறாரு . அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருது என்பது தான் திரைக்கதை .
நாட்ல இப்போ பெருகி வரும் போலி மருந்து தயாரிக்கும் கும்பல் பற்றிய விழிப்புணர்வு கதையை த்ரில்லர் மூவியா கொடுத்திருக்காங்க .
ஹீரோவா ஜெய் . அவருக்கு அப்பாவியான மிடில் கிளாஸ் இளைஞன் வேடம் அட்டகாசமாப்பொருந்துது . அவரது டயலாக் டெலிவரி , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம் டபுள் ஓக்கே . அடுத்த கட்டத்துக்கு தயார் ஆகிட்டார் . சபாஷ் பாஸ் .
ஹீரோயின் பலாச்சுளை க்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட கோவைபழ உதட்டு அழகி ஸ்வாதி . தெத்துப்பல் தெரிய அவர் சிரிக்கும்போது உங்க டூத் பேஸ்ட் ல சுண்ணாம்பு அதிகமா இருக்கா?னு கேக்கத்தோணுது . வழக்கம் போல் ஆடை வடிவமைப்பு கண்ணியம் . பாடல் காட்சிகளில் பாந்தம் .
ஹீரோயினுக்குத்தோழியாக யாரோ ஒரு புதுமுகம் . அடடே சொல்ல வைக்கிறார் . நாம எந்தக்காலத்தில் பொண்ணுங்களை அடச்சே என சொல்லி இருக்கோம் ?
ஹீரோவின் நண்பராக ரேடியோ ஜாக்கி ஆர் ஜே பாலாஜி நல்ல எண்ட்ரி . லோ பட்ஜெட் சந்தானம் ஆக வாய்ப்பு உண்டு . அவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகளைப்புரிந்து கொள்ளவே ஒரு பயிற்சி தேவை . ஆனாலும் ரசிகர்கள் ஒரு குத்து மதிப்பா சிரிச்சு வைக்கறாங்க .
ஹீரோ ஹீரோயின் தோழியை லவ்வுவது , பின் தோழியை ஃபாலோ பண்ணுவது , பின் பல்டி அடிச்சு ஹீரோயின் க்கு ரூட் விடுவது , இதனால் தோழிகளுக்கிடையே ஈகோ வருவது என கலகலப்பான காதல் கா மெடி டிராக் படத்தின் முற்பாதியை மிகச்சுலபமாக நகர்த்தி விடுகிறது
பின் பாதியில் கதை த்ரில்லர் மூவி , சேசிங்க் காட்சிகள் என பர பரப்புக்குத்தாவும் போது விறு விறுப்பு
பின் பாதியில் பாடல் காட்சிகள் தேவையே இல்லை . கட் பண்ணி ட்ரிம் பண்ணி இருக்கலாம்
கஸ்தூரி ஹீரோவுக்கு அண்ணியா பரிதாபமா வர்றார் . அய்யோ பாவம் . வில்லனுக்கு எல்லாம் பெரிதா வேலை இல்லை
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. டைட்டிலுக்கும் , படத்துக்கும் சம்பந்தமே இல்லை என அவங்களே படத்தில் வாக்குமூலம் கொடுத்து விட்டாலும் அவர்கள் சூசகமாக யாரைச்சொல்கிறார்கள் என புரிகிறது . சன்னிலியோனின் குத்தாட்டம் படத்துக்கு நல்ல பிளவுஸ் சாரி பிளஸ் .
2 ரேடியோஜாக்கி பாலாஜியின் டைமிங்க் சென்ஸ் , ஹீரோவின் சுறு சுறுப்பான நடிப்பு , ஸ்வாதியின் அழகு பிளஸ்
3 முன் பாதி செம ஜாலி காதல் காமெடி கலாட்டா , பின் பாதி சேசிங்க் காட்சி என பிரித்து சரியான கலவையில் கதை அமைத்த விதம்
4 செல் ஃபோன் ரிங்க் டோனை வைத்து அமைக்கப்ட்ட இய்லபான காமெடி டிராக் கதையோடு ஒன்றி கலக்குகிறது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. 15,000 ரூபா சம்பளம் வாங்கும் மெடிக்கல் ரெப் 2000 ரூபா ஃபோனுகே வழி இல்லாமல் இருக்கார் , ஓக்கே , ஆனா அவர் 60,000 ரூபா புது பைக்கில் வர்றார் , போறார் . போட்டிருக்கும் டிரஸ் எல்லாம் 10,000 ரூபா சர் ட் , பேண்ட் . காஸ்ட்லி லுக் வேற , எப்படி ? ரேபான் கிளாஸ் எல்லாம் போட்டுட்டு வர்றார் .
2 ஹீரோ லபக்கிய ஃபோன் அவருது இல்லை என நிரூபிக்க் வழி இருந்தும் அவர் எந்த முயற்சியும் ஏன் எடுக்கலை ? அந்த சிம் மை வெச்சு அது யார் பேரில் எடுக்கப்பட்டிருக்கு ? என்ன அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கு என பார்க்கலாமே?
3 க்ளைமாக்ஸ் ல ஹீரோயின் ரயில்வே ஸ்டேஷன் ல வெய்ட்டிங்க் . குறிப்பிட்ட டைம்க்கு ஹீரோ வர்லைன்னா த்ற்கொலை செஞ்சுக்கறதா மிரட்றாங்க . ஹீரோ வில்லன் க்ரூப் ல இருந்து எஸ் ஆக தாமதம் ஆகிடுது . அவர் பைக்ல வேக வேகமா வர்றாரு . அவர் ஏன் ஹீரோயினுக்கு ஃபோன் பண்ணி இதோ வந்திட்டிருக்கேன்னு சொல்லலை ? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் கூட அனுப்பலை ?
4 பல பேர் எப்பவும் அப்ரோச் பண்ணிட்டிருக்கும் அழகு தேவதை ஹீரோயின் மிடுக்குடன் இருக்கார் . திடீர்னு லூஸ் மாதிரி பிஹேவ் செய்வது ஏன் ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. எம் ஜி ஆர் FANனா நேர்மையா இருப்பீங்களா? நான் கூடத்தான் சிம்பு
FAN.அதுக்காக அவர் பன்றதை எல்லாம் நான் பண்ணிட்டிருக்கேனா? #வடகறி
2. இந்தக்காலத்துப்பொண்ணுங்க பசங்க வெச்சிருக்கும் ரிச்சான போன் மாடல் பாத்துத்தான் உஷார் ஆவாங்க # வடகறி
3 ஒரு பிரச்னைனு வந்தா அதுல இறங்கி கேள்வி கேட்பவன் ,அதை தீர்க்க நினைப்பவன் லோ க்ளாசா இருந்தாலும் அவன் தான் ஹை க்ளாஸ்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1 அங்காடித்தெரு அஞ்சலியின் நேற்றைய லவ்வர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் ஜெய் யின் வடகறி ஓப்பனிங் சீனே காமெடி கலக்கல்
2 குணச்சித்திரக்குன்று சன்னி லியோன் ன் குத்தாட்டம்.இதுக்கு யூ சர்ட்டிபிகேட் கொடுத்த கேனயன் யாரோ?
3 செல்போன் காஸ்ட்லியா வெச்சிருந்தா பிகர் செட் ஆகும் கற கேவலமான கான்செப்ட் ல திரைக்கதை போய்க்கிட்டு இருக்கு #,வடகறி
4 தெத்துப்பல் தேவதை அழகி ஸ்வாதி தான் ஹீரோயின். # வ க
5 ஆர் ஜே பாலாஜி மொக்கை போடறார்.சொந்த ஜோக் போல . தியேட்டர் ல சி செண்ட்டர் ரசிகர்கள் கை தட்றாங்க . அடுத்த சந்தானம் ஆகிடுவார் போல
6 காமெடி ,மொக்கை,கலாட்டா,காதல் னு போய்ட்டிருந்த திரைக்கதை த்ரில்லர் மூவி ட்ராக் ல் போகுது # வடகறி இடை வேளை
சி பி கமெண்ட் -வடகறி - போலி மருந்து கம்பெனி பற்றிய த்ரில்லர் மூவி , முன் பாதி காமெடி, பின் பாதி ஸ்பீடு- விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 / 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.5 / 5
விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்
டிஸ்கி -
வெற்றிச்செ
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_8644.html
http://www.adrasaka.com/2014/
http://www.adrasaka.com/2014/
விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்
டிஸ்கி -
வெற்றிச்செ ல்வன் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/
நேற்று இன்று - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_5435.html
சூறையாடல் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_7814.html
விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ் pic.twitter.com/8TT2eHzuiY
a
1 comments:
ஊர் ஊராய் சென்று படம் பார்த்து விமர்சனம் எழுதும் உமது தொண்டு வாழ்க
Post a Comment