Tuesday, June 03, 2014

கல்பனா ஹவுஸ் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். அவருக்கு மேரேஜ் எல்லாம் ஆல்ரெடி ஆகி ஒரே ஒரு சம்சாரம். ட்யூட்டி ல இருக்கும்போது ஒரு நாள் 4 ரவுடிப்பசங்க வந்து  ஒரு லேடியை துரத்தறாங்க. சொந்தக்கதை சோகக்கதை காரணமா அந்த லேடி சரக்கு அடிச்சிருக்கு.யாரும்  ஜெர்க் ஆகாதீங்க. ஆண்களுக்கு இணையா பொண்ணுங்க எப்போதான்  முன்னேறுவது? அந்த 4 ரவுடிங்க  கிட்டே இருந்தும்  ஹீரோ அந்த லேடியை காப்பாத்தறாரு.காப்பாத்தி மப்பில்  இருக்கும் லேடியை தன் கெஸ்ட் ஹவுஸ்ல  தங்க வெச்சு அடைக்கலம் தர்றாரு.

கெஸ்ட் ஹவுஸ்ல  இருக்கும்போது ஏடாகூடமா என்ன ஆகிடுதுன்னா அந்த 4 ரவுடிகள் என்ன காரணத்துக்காக அந்த லேடியை துரத்துனாங்களோ அதே வேலையை ஹீரோவே செஞ்சுடறாரு.அடுத்த நாள் இப்படி நாம தப்பு பண்ணிட்டமே என்ற மன வருத்தத்தில்  ஹீரோவும் சரக்கு அடிச்சுட்டு வந்து  மப்பில்  இருக்கும்போது அந்த லேடி தன் பங்குக்கு ஒரு வாட்டி அவர் கூட தப்பு பண்ணிடுது . 

 தானிக்கு தீனி சரியாப்போச்சுன்னு  போய்ட வேண்டியதுதானே?அந்த லேடி அநியாயமா  மேரேஜ் பண்ணிக்கச்சொல்லி  ஹீரோவை டார்ச்சர் பண்ணுது. ஹீரோ  இல்லீகலா சம்சாரத்துக்கு  துரோகம் செஞ்சிருந்தாலும்   லீகலா துரோகம் செய்யமாட்டேனு சொல்லிடறாரு.


 அந்த லேடி தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு  சும்மா  மிரட்ட  பெட்ரோலை மேல ஊத்திக்குது, எதிர்பாராதவிதமா   தீ பத்தி டைரக்டா சொர்க்கம் போய்டுது. போகும்போது  ஒரு மிரட்டல் வேற , உன்னை பழி வாங்காம  விடமாட்டேன் அப்டிங்குது


இது வரை நாம பார்த்தது  ஃபிளாஸ் பேக் காட்சி .


இப்போ  ஹீரோ தன் சம்சாரம் , மச்சினி , தம்பி 3 பேர்  கூடவும்  அந்த பங்களாவுக்கு வர்றாரு. அந்தப்பேய் அவங்களை பயமுறுத்துது . என்ன ஆச்சு என்பதே  மிச்ச மீதிக்கதை 



ஹீரோவா யாரோ வேணு வாம். போலீஸ் ஆஃபீசர் அதுவும் என்கவுண்ட்டர் ஆஃபீசர்னா ஆள் எப்படி  இருக்கனும். ஒரு சீன் ல கூட அவர் போலீஸ் வேலையே பாக்கலை. யூனிஃபார்ம்ல ஒரு சீன் கூட காட்டலை . எப்போ பாரு  லேடி கூடயே இருக்காரு.அநேகமா படத்துக்கு இவர் தான் ஃபைனான்ஸா இருக்கனும்



ஹீரோயினா அவன் இவன் படத்தில் நடிச்ச மது ஷாலினி. ரொம்ப  சுமார் முக குமாரி . திகில் படத்துக்கு இந்த   ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் பாத்தாதும்மா .


ஹீரோவோட தம்பியா கார்த்திக் -னு ஒரு புதுமுகம் . இவர் க்ளைமாக்ஸ் ல  பேய் கூட  ஜெட் லி  ரேஞ்சுக்கு  ஃபைட் எல்லாம்  போடுவது  ஓவர்.


ஹீரோவுக்கு மச்சினியா யாரோ மஞ்சுனு ஒரு பிஞ்சு முகம். தேறாது 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 .போஸ்டர் டிசைனும்  , டைட்டில் வடிவமைப்பும் அருமை . ஏதோ நல்ல திகில் படம் போலவே நம்ப வைத்த விதம் 

2  பத்து காசு செலவில்லாம மொத்த படத்தையும்  ஒரே  ஒரு பங்களாவில் எடுத்த ஐடியா 


3 மொத்தமாகவே 7  கேரக்டரை வெச்சு நாடகம் மாதிரி படம் எடுத்து ஒப்பேத்தின விதம்  


 


 இயக்குநரிடம் சில கேள்விகள் 



1 ஹீரோ  ஓப்பனிங் சாட் ல  தன் சம்சாரம் கிட்டே “ நான் சென்னைக்குப்போகலை , மதுரைக்குதான் போறேன், வர 5 நாள் ஆகும்கறாரு. ஒரு பேக் கூட எடுத்துட்ட்டுப்போகாம வெறும் கையை வீசிட்டுப்போறாரு. அதே டிரஸை துவைச்சு துவைச்சு போட்டுக்குவாரா? 



2  ஹீரோ  கில்மா மேட்டர்ல கேடி , யாரோ ஒரு முகம் தெரியாத , பழக்கம் இல்லாத லேடியையே ஒரே நைட்ல கரெட்க்ட் பண்ணிடறாரு , ஆனா  லட்டு மாதிரி  இருக்கும் மச்சினியை , ஜிலேபி மாதிரி இருக்கும் வேலைக்காரியை கண்டுக்கவே இல்லை , இது ஏன்? 


3  போலீஸ் ஆஃபீசருக்கு  கன் வைக்க   இடுப்பு கிட்டே   ஒரு கவர் இருக்குமே , அங்க வைக்காம  ஏன் முதுகுக்குப்பின்னால சொருகிக்கறாரு ? ஸ்டைலா? சகிக்கலை 


4  சாமியார்   அந்த 2 லேடீஸ் கிட்டே பூஜைக்கு ஏற்பாடு பண்ணுனு மொட்டையா சொல்றாரு, எந்த டீட்டெய்லும்  இல்லாம அவங்க எப்படி கரெக்டா ரெடி செஞ்சாங்க ?


5  வீட்டை விட்டு  யாரும்  வெளில போகக்கூடாதுன்னு சாமியார் சொல்லும்போது  யார் யார் எல்லாம் வீட்டில் இருக்காங்கனு செக் பண்ணிக்க வேணாமா?  2 பேரை வெளில விட்டுட்டு அப்டி ஆபத்தான பூஜையை செய்வாங்களா? 

 



6 சாமியாரா வர்றவருக்கு  ஒட்டு  மீசை செட் ஆகலையா? கரியால் வரைஞ்சது நல்லாவே  தெரியுது. இந்த லட்சணத்துல அவருக்கு க்ளோசப் ஷாட் வேற 


 7  ஹீரோயின் பேரு ராஜி , வில்லி பேரு நாக வல்லி ,  கல்பனா என்பது யார் ? இயக்குநரோட சின்ன வீடா? டைட்டில இருக்கும் பேருக்கு நியாயம் கற்பிக்க வேணாமா? 


 8  டெட் பாடியை மறைப்பவர்கள்  மண்ணில் புதுசா  ஒரு குழி தோண்டி புதைச்சாதான் சேஃப்டி . அந்த நைட் டைம் ல ஆல்ரெடி  சமாதி கட்டிய இடத்தில் கல் மேல நங்க் நங்க் என கடப்பாறை ல இடிச்சா சத்தம்  வருதே , யாரும் பார்த்துட மாட்டாங்களா? 


9  பேய் க்கான க்ளோசப் காட்சிகள் மகா மட்டம் . மைதா  மாவை  பூசிட்டா பேய் எஃப்கட் வந்துடுமா? 


10 படம்  போட்டதில் இருந்து  பேய் வரும் எல்லா காட்சிக்கும் ஆஆஆஅ அப்டினு ஒரு கேவலமான ஹம்மிங்க் . இது  திகில் எஃபக்ட் மாதிரி தெரியல . கில்மா  எஃபக்ட் மாதிரி   தெரியுது


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  சினிமாக்காரங்க , போலீஸ்காரங்க  இவங்க பர்சனல் லைஃப்  பெரும்பாலும் மோசமா இருக்கும், அவங்க ஒயிஃப் பாவம் 


2 என்னை லவ் பண்றது உண்மைன்னா  கீழே  குதி பார்ப்போம்

அதான் உன் காதல்ல விழுந்துட்டனே, இங்கே இருந்தும் விழனுமா?



3 இந்தப்பொண்ணுங்களே  இப்படித்தான், தன்னை  ஒருத்தன் லவ்வறான்னு தெரிஞ்சிட்டா  ஏகத்துக்கும்  பிகு பண்ணிக்குவாங்க 



4 வாழ்க்கைல எதை எல்லாம் இழந்தோம்னு  யோசிப்பதை விட எதை எல்லாம் அடைஞ்சோம்னு யோசிப்பதுதான் நல்லது



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


 படம் பார்க்கும்போது ட்வீட்ஸ்  போடற அளவு படம் ஒர்த் இல்லை , தூங்கிட்டேன்









சி பி கமெண்ட் -கல்பனா ஹவுஸ் - திகில் படம்கற பேர்ல காமெடி பண்ணி இருக்காங்க , முடியல - விகடன் மார்க் = 35 , ரேட்டிங்க் = 1.5 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 35





குமுதம் ரேட்டிங்க் = சுமார்


 ரேட்டிங்  =   1.5  / 5



0 comments: