Sunday, June 15, 2014

தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும் - தமயந்தி-காதல் கதை

வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது. “ஆம்பிளைப் பசங்கல்லாம் கோமாளிப்பசங்க’னு அவ அடிக்கடி சொல்லுவா. ஆனாலும் ஆம்பிளைப் பசங்களோடப் பழகுத அவ ஒருநாளும் விடலை. அவளுக்கான கதைகளையும் அவர்களே தர்துனாலயும் அவங்க கூட அவ பழகியிருப்பானு நினைக்கிúன்.
ஆனாலும் அவங்ககூட ரொம்ப நேர்மையா அவ பழகியிருக்க முடியாதுன்னே தோணுது. ராத்திரி வெளிமுத்தத்துலே அவிச்ச வேர்கடலையை பொக்குபொக்குனு உடைச்சிக்கிட்டே ஒவ்வொருத்தன் பண்ணக் கூத்தையும் கிசுகிசுப்பா சொல்லுவா.
நான் கேட்ட மாதிரியும் கேக்காத மாதிரியும் உக்காந்திருப்பேன். எங்க வீடும் அவ வீடும் பக்கத்துப் பக்கத்து வீடுனதுனால கொஞ்சம் நெருக்கம் ரொம்ப அதிகம்தான். ரெண்டு வீட்டுக்கு நடுலயும் ஒரு கம்பி வேலி- உண்டு. அத ஒருநாள் மேல மிதிச்சு மிதிச்சு சப்பிட்டோம். எங்க அப்பாமார் வேலைக்குப் போய் வந்துட்டு முதல்ல வேலி-யைக் கோவமா பாத்துட்டு பெகு சிரிச்சிக்கிட்டாங்க. தேனோட அப்பா ரொம்ப நல்ல மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். சாயந்தரந்தோறும் பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வருவார். தேனோட அப்பா நல்ல மாதிரினா என்னோட அப்பா மோசம்னு அர்த்தப்படுத்திக்கக் கூடாது. அதுக்கு சொல்லவரலை நான் தேனோட அப்பாவுக்கு தேன் மாதிரி ஒரு பொண்ணுனா எனக்கே ஆச்சரியமாத்தானிருக்கு.
தேன் என்கி தேன்மொழி ரொம்பப் பிரமாதமான அழகெல்லாம் இல்லை. அதுக்காக அழகில்லாமலும் இல்லை. மாநித்துக்கும் ஒருநிம் கம்மினாலும் கண்ணு ரெண்டும் மட்டும் வெட்டுவெட்டுனு வெட்டும். அப்பல்லாம் பாலஸ்þடிþவேல்ஸ்ல பழையபடம் போட்டா ரெண்டு குடும்பமும் சேர்ந்துதான் போவோம். ஜங்ஷன்ல இங்கி அப்பா அப்பாவோடயும், அம்மா அம்மாவோடயும், நான் தேனோடயும், அவ தங்கச்சி மட்டும் அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும் நடுவுல பேந்தப்பேந்த விழிச்சிட்டும் மேம்பாலத்துக்கடில நடந்து வரிசையா வத்தல் கடை, அல்வா கடைனு தாண்டி தியேட்டர் போவோம்.

அநேகமா தேனு ஒரு நீலக்கலர் சின்னாளம்பட்டு பாவாடை கட்டுவா, சினிமாவுக்கு வரும் போதெல்லாம். பாலஸ்þடிþவேல்ஸ்ல அஞ்சே முக்காலுக்கு முன்னயே போயிருவோம். ஆறு மணிக்கு ஒரு பெல் அடிக்கும். அந்தத் தியேட்டர் வளாகத்துக்குள்ள இருக்கி கண்ணன் சிலைக்கு மாலை போட்டப் பிகுதான் டிக்கெட் கொடுக்க ஆள் வரும்.
தேனோட தங்கச்சிதான் டிக்கெட் எடுக்க ஆலாப் பப்பா. தேனு இதெல்லாம் தூசி மாதிரிங்கிது போல ஒரு பார்வை பாத்துட்டிருப்பா. தியேட்டர் முறுக்கு, கடலைமிட்டாய் எதுவும் சாப்பிட மாட்டா. அவளைப் பார்த்து வெளியபோனா ஏதாவது சாப்பிடுத நானும் நிறுத்திட்டேன்.
ஆனாலும் முறுக்குக்காரன் இண்டர்வெல்ல சீட்டுக்கு இடையே முன்சீட்டுப் பள்ளத்திலும், இந்த வரிசை நடைபாதைக்குமிடையில் காலைக் கெந்திகெந்தி போப்போது முறுக்குவாசம் கிக்கும்.
ஒருதடவ அப்படி போயிருக்கும்போதுதான் அம்மாமார் வெளியே போயிட்டாங்க. அம்மாமாருங்க ஒருத்தருக்குத் துணையா இன்னொருத்தர் பாத்ரூமுக்குப் போனாங்க. தேனு தங்கச்சியும் அவங்க கூடவே போயிட்டா. அப்பத்தான் எங்களைக் கடந்து போன ஒருத்தன் திடீர்னு கவனிச்சாப்ல நின்னு, தேனுவைப் பார்த்து சிரிச்சி “ஹாய்’ன்னான். தேனும் ரொம்ப சகஜமா சிரிச்சா.
“எங்க இப்படி தேன்மொழி’ன்னான். “பரிட்சைக்குப் படிக்க வந்தேன்’னா கிண்டலா. அவன் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்ட மாதிரி சிரிச்சான். பிகு வர்úன்னுட்டுப் போயிட்டான். அவன் பேர் ரங்கசாமின்னும் அவ ஸ்கூல் தான்னும் சொல்லி-ட்டு, ரொம்பகிசுகிசுப்பா, “சீக்கிரமா ஐ லவ் யூ சொல்லி-றும்’னா. கெட்ட வார்த்தை கேட்ட தினுசில் காதிரண்டையும் மூடிக் கொண்டேன். என்னப் பேசுன்னேன். அடப்போடின்னா. அதுக்கப்பும் ஏனோ அவளோட பழய மாதிரி சகஜமா பழக முடியலை.
அந்த வார ஞாயிúா, சனியோ ரங்கசாமி நோட்டு வாங்க அவ வீட்டுக்கே வந்துட்டான். தேனோட அம்மா காப்பியும், காளிமார்க் கடலைமிட்டாயும் வச்சாங்க. அவன் ஒரே ஒரு கடலைமிட்டாயை நாசூக்காக அரைமணிநேரம் மென்னான்.
நான் அவங்க வீட்ல டிவி பாத்துட்டிருந்தேன். இந்திராகாந்தி ஊர்வலத்தை டிவில காட்டிட்டிருந்தாங்க. எங்க வீட்ல டிவி கிடையாது. அவன் ஒருமணி நேரத்துல போயிட்டான். தேனு என்னைப் பார்த்து விஷமமா சிரிச்சா. நான் பழிப்பு காட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டேன்.
ஒரு வாரம் கழிச்சு, ஸ்கூல்லேர்ந்து வந்ததும் வராததுமா தேனு என்னக் கூட்டிட்டுப் போய் மொட்டை மாடில வச்சு அவளோட ஜியாமெட்டரி நோட்டக் காண்பிச்சா. அந்த ரங்கசாமி அவளுக்கு லெட்டர் எழுதியிருந்தான். எனக்கு வந்தது இல்லைனாலும் முதன் முதலா லவ்லெட்டரப் பார்த்தது அன்னைக்கித்தான்னதுனால கை காலெல்லாம் நடுங்கிருச்சு.

இது நல்லதில்லை’ன்னேன். “”எல்லா ஆம்பிளைப் பசங்களும் இப்படித்தாண்டி, ப்ரெண்டும்பான், சிஸ்டர்னு கூட சொல்வான், கடைசில இப்படி எழுதுவான்”.
“”எங்கூட என் ஸ்கூல் ப்ரெண்ட்சில்லே? இப்படியா எழுதுதுங்க”னு கேட்டேன்.
“”மனசுல எழுதுவாங்க. ரொம்ப நம்பிாத’னு மாடி இங்கிட்டுப் போயிட்டா. அதென்னமோ அதுக்கப்புமா கூட அவ பழகின எல்லா ஆண்களும் சொல்லிவச்ச மாதிரி பழக நடந்துக்கிட்டாங்க.
பத்தாங்கிளாஸ் முடிச்ச லீவ்ல அதிகமா கிரிக்கெட் விளையாடுவோம் நாங்க. கடைத்தெரு இருக்கி நாச்சந்திலதான் ஆட்டம் நடக்கும். அந்தத் தெரு முதல்ல ஜார்ஜ்சார் வீடிருந்தது. ஜார்ஜ் சார் எலி-மெண்டரி ஸ்கூல் வாத்தியார். அவர் வீட்டுக்குள்ள அடிக்கடி பால் போயிறும். முதல்லல்லாம் எரிச்சல்பட்டு ரொம்பக் கோவிச்சிப்பார். பிகு, எங்கத் தொல்லைய ரசிக்க ஆரம்பிச்சார்னு நெனைக்கேன். சிரிச்சிப்பார். அவர் பையன் சாமுவேல்தான் எப்பவும் பந்தை வெளிய வீசுவான்.
ஒரு நாள் நானும் வரட்டான்னான். பாலாஜி உடனேயே வாங்களேன்னான். சாமுவேல் கிரிக்கெட் விளையாடுவான்னு நாங்கல்லாம் நெனைச்சதே இல்லை. ஜார்ஜ்சார் சினிமால்லாம் பாக்க மாட்டார். பாவம்பார்.
ஞாயித்துக்கிழமைதோறும் கோவிலுக்கு காலைல போயிட்டு சாயந்தரம் வருவார். ஒரு தடவ விகடனை நான் வாசிச்சிட்டிருக்கித பார்த்து இதல்லாம் பாவமில்லையா? உங்க மதப்புத்தகங்களைக் கூட வாசிக்கலாமில்ல?ன்னார். எதிலதான் பாவமில்லன்னு கேக்கத்தோணிச்சிது. ரொம்ப சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். கிரிக்கெட்ல எந்தப் பாவமுமில்லனு அவர் தீர்மானிச்சிருந்தாலொழிய சாமுவைக் கிரிக்கெட் விளையாட விட்டிருக்க மாட்டார் என்பது ஒருபுமிருந்தாலும், கிரிக்கெட், அவரது பாவங்கள் குறித்த லி-ஸ்டில் இல்லை என்பதும் தெளிவாயிற்று.
சாமு கிரிக்கெட் விளையாட வந்ததைவிட தேனக் கிட்டப் பார்க்கத்தான் வந்திருந்தான் என்பது ரண்டு மூணு நாள்லயே தெரிஞ்சிப்போச்சு. தேனுட்ட அனாவசியமா அவன் சிரிக்க சிரிக்க, அவளும் பேசிக் கொண்டதுதான் ஆச்சர்யமா இருந்துச்சு.
ஒருநாள் ராத்திரி சாப்பிட்டுட்டு முத்தத்துல உக்கார்ந்திருந்த போது என்னால கேக்காமயி-ருக்க முடியல.
“”சாமுவேல் உங்கிட்ட வே மாதிரி பழகான்னு நெனைக்கிúன்”.
“”தெரியுதுடி”
“”அவனக் “கட்’ பண்ணிúன்”
“”எதுக்கு?”
கேட்டுட்டு பளிச்சினு சிரிச்சா. “நான் தெளிவாருக்கேன்’னா. அவள மாத்த முடியும்னு தோணல. சாமுவேல் அவமேல கிறுக்குப்புடிச்சாப்லயே ஆயிட்டான். ஜார்ஜ் சாருக்கு வருஷந்தோறும் ஏப்ரல் மாத தொடக்கத்துல ட்ரான்ஸ்பர் பயம் வரும். அவர் வேலை பாத்த ஸ்கூல் ஒரு கிறிஸ்தவ அமைப்பின் கீழிருந்தது. அதனால் பிஷப்பையும், பாதிரிமார்களையும் கேக் பொட்டலங்களோடு அவர் ஏப்ரல் மாதம் முழுக்கப் போய்ப் பார்த்து, ட்ரான்ஸ்பர் இல்லாம ஆக்கிறுவார்.
அந்த வருஷம் அவருக்கு மார்ச் கடைசிலயே அம்மன் வந்துருச்சு. ஏப்ரல் நடுவரைக்கும் எழும்ப முடியாம சாத்திருச்சு. அதுக்கப்புமாவும் அவரால எல்லாரையும் போய்ப் பார்க்க முடியல. மே நடுல அவர சாத்தான்குளத்துக்கு மாத்திட்டாங்க. அதுக்கப்பும் அவங்களுக்கெல்லாம் “கேக்’ வாங்கிட்டுப் போய்ப் பார்க்க சார் தயாரா இல்லை. “”கேக் தின்னுத் தின்னு பாதிரி புள்ளைங்கல்லாம் பெருத்துறும். வேùன்ன பலனிருக்கும்”"னு வேடிக்கையா எங்ககிட்ட சொன்னார். கன்னத்துல ரொம்பக் குழியா தழும்புத்தழும்பாயிருந்தது, மே கடைசில வேன் வச்சி சாத்தான்குளத்துக்குப் போனாங்க. சாமுவேல் ஊர்திருப்பத்துல தேனை சந்திச்சி அழுதானாம். உன்னை மக்க முடியாதுன்னதுக்கு, யார் யாரை மக்க? யார் யாரை நினைக்கன்னு ரொம்ப தத்துவார்த்தமா பேசியிருக்கா தேனு. நல்லா குழப்பி மண்டைகாய வைக்கணும்டி இவனுகளன்னா எங்கிட்ட. எனக்கு சாமுவேலை நினைச்சி ரொம்ப பாவமாருந்துச்சு. ஆப்பிளைக்காகப் பரிதாபப்படாத. அவன் உன்னை உன்மேலயே பரிதாப்பட வச்சிறுவான்னா தேனு. எனக்கெதுக்கு இதெல்லாம்னு நான் அவகிட்ட இது பத்தி பேசுதயே கொச்சிட்டேன். ஆனா நம்மூர்ல காத்துக்கு வாயில்லாம போகுமா? அவளப் பத்திய எல்லாமே காதுக்கு சுதா, கல்பனா, பாலாஜினு யார் மூலமாவது வந்துக்கிட்டேதானிருந்து.
சாமுவேலுக்கு அப்புமா கவிதை எழுத ஒருத்தன் ப்ரெண்ட் ஆனான் தேனுக்கு. பேரு கூட சரியா ஞாபகமில்லை. ஜெயந்தனோ ஜெயபாலனோ ஏதோ ஒண்ணு. போன மாசம் எதேச்சையா பார்க்க நேர்ந்துச்சு, புதுசா டுவீலர் லைசன்ஸ் வாங்கணும்னு கதிர் தான் ஒரு புரேக்கரப் பிடிச்சு ஆர்டிஒ ஆபிஸ் கூட்டிட்டுப் போனான். மொத்தம் எல் எல்ஆருக்கும் இருநூறுரூவா. ரிட்டன் டெஸ்ட்ùல்லாம் உண்டுனு உக்கார வச்சிட்டாங்க. இன்ஸ்பெக்டர் பத்தேமுக்கால் வரைக்கும் வரலை. பதினொண்ணு அடிக்க வந்தா, இந்த ஜெயந்தனோ ஜெயபாலனோ. முன்னுக்கு நல்ல தளதளனு சரீரம். ஏற்கனவே வழில புரோக்கர், இன்ஸ்பெக்டர்னு இவனோட லஞ்சலாவண்யத்தை சொல்லி-ட்டேதான் வந்தான். ஜஸ்வின் ஹோட்டல்ல ரூம் போட்டு சாயந்தரமா புரோக்கர்கள் கிட்டருந்து கலெக்ஷன் போயிறுமாம், ரிட்டன் டெஸ்ட்டுக்கு வந்தவங்க எல்லார்கிட்டயும் பிட் இருந்துச்சு, கடகடனு எழதிட்டு கொடுத்திட்டாங்க, மொத்தம் பதினைஞ்சி கேள்விங்க. எனக்கு மூணு கூட தேலை, அவன் என்னை பெயிலாக்கிட்டு நாளைக்கு வாங்கன்னான். என்னை அவன் கண்டுப்பிடிச்ச மாதிரி தெரியலை. பிட் வச்சி எழதினவங்கள கண்டுக்கலையே நீங்கன்னேன். அவன் நிமர்ந்து பார்த்து சிரிச்சான். நமட்டாக, லைசன்ஸ் வாங்கணும்னு இஷ்டமில்லையான்னான்.
இருக்கு. இப்ப கவிதைல்லாம் எழதது உண்டான்னேன். அவன் ரொம்ப கூர்ந்துப் பார்த்து யாருன்னான். எம் பேரைச் சொல்லி-ட்டு உடனேயே மந்து போகாம தேனு பேரையும் சொன்னேன். அவன் மலைப்பா பார்த்து, தேனு எப்படிருக்கான்னான். உக்கார சொன்னான். செவன் அப் ஒண்ணு சில்லுனு வாங்கிவரச் சொன்னான்.
தேனு -கல்யாணமாகி தூத்துக்குடில இருக்கான்னேன். அவ புருஷன் மில்லுல டிரைவர் வேலைன்னதும் அவன் முகம் சுருங்கிச்சு. “பச்’சுன்னான். அவனைக் கல்யாணம் பண்ணியிருந்துருக்கலாமின்னு நினைச்சிருப்பான். அப்பல்லாம் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை அவன் நடத்திட்டிருந்தான். பேர் கூட அபாயமாக இருக்கும், புரியாத மொழியெல்லாம் எழுதுவான். தேனு சீரியசா அர்த்தம் கேப்பா. அப்பல்லாம் அவன் பார்வை அவமேல மேஞ்சிட்டே இருக்கும். இதையெல்லாம் தேனு பொருட்படுத்தவே மாட்டா.
நியை வாசிக்க தேனு ஆரம்பித்தது அப்பயிருந்துதான். அவன் கூட இலக்கிய கூட்டத்துக்கெல்லாம் போவா. ஒரு முû அப்படித்தான் போனப்ப அவங்க சிங்கப்பூர் மாமா அனுப்பினார்னு கொக்கோ கோலா கொடுத்திருக்கான். அப்பல்லாம் இந்தியால கோக் கிடைக்காது. தடைசெய்யப் பட்டிருந்தது. இவளும் குடிச்சிருக்கா. கொஞ்சா நேரத்துல கூட்டத்துல பேசுவங்கல்லாம் ஒரு பள்ளத்துல இருக்கிாப்லயும், இவளுக்கு சிகு முளைச்சி மேலமேல பக்கி மாதிரியும் இருந்திருக்கு. வெளிய வந்ததும் பீர் எப்படிருந்ததுன்னானாம். சொல்லி-ட்டு எங்கிட்ட பக்பக்குனு சிரிச்சா. எனக்கு எரிச்சலாவும் கோவமாவும் வந்துச்சு. “அடப்போடி’ன்னா அலட்சியமா. ஆனா அவன் லவ் பண்ணுதா சொன்னப்பா அவன் கிட்டயும் “போடா’னுட்டா. எங்கிட்ட சொல்லுப்போ, ஒரு பீர் பாட்டில் சப்ளை பண் ரூம்பாய் நின்னுப் போயிட்டான்னு நினைச்சிக்கúன்னா. அவளை விட்டு விலகிணும்னு எவ்ளோ தடவை நினைச்சாலும், என்னால முடிஞ்சதே இல்லை.
அவ எந்த சமயத்துலயும் யார் கிட்டயும் எல்லை மீறுனதில்லைனு பாலாஜி சமயத்துல பெருமைப்பட்டுப்பான். அவன் கூட அவமேல கழண்டு கிடக்கானேனு அப்படி அவன் சொல்லுப்ப தோணுனாலும், அப்படில்லாம் அவகிட்ட வழிஞ்சு நான் பார்த்தில்லை. கல்லுரியில் தேனு கூட நான் படிக்க நேர்ந்துச்சு. அப்ப அறிமுகமானவன் தான் இந்த கதிரு. நான் இடையிலேயே ரெண்டாம் வருஷம் அப்பா செத்துப்போனதை ஒட்டி படிப்பை விட வேண்டியதாப் போச்சு. அப்பா ஆபிஸ் வேலையே கிடைச்சது. அம்மாவுக்கு என் சம்பளம் ரொம்பவே பயன்பட்டுச்சு, அக்காவுக்குக் கல்யாணம் பண்ண, ஆயிரங்காலத்து கடனை அடைக்க, வீட்டு ஒழுக்கல்களை சரிசெய்ய. அதனாலயே என்னை கல்யாணம் பண்ணிவைக்க அவ தயாராயில்லை. மாசமானா, முதல் தேதி சம்பளப் பணத்தை வாங்கிட்டு அக்கா வீட்டுக்கபó போயிறுவா. ஏதோ பேர் சொல்ல முடியாத நெருக்கம் போலன்னு நெனைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ள வயசும் முப்பத்தஞ்சுக்கு மேல போயிறுச்சு. தேனுவுக்கு சரியா இருபத்திமுணு வயசுல கல்யாணமாயிருச்சு. கதிர் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணுமின்னு ரொம்ப சீரியசாயிருந்தான். அவ ஒத்துக்கலை. கதிர் எங்கிட்ட பொலம்பாத நாளில்லை.
- அக்டோபர் 2000 
thanx  - sirukathaikal.com

0 comments: