நம்மில் ஒருவரைப் போல் தோற்றமளிக்கும் யதார்த்த முகங்களுக்கு முன்னெப்போதை
விடவும் சினிமா தற்போது சிவப்பு கம்பளம் விரிக்கிறது. 'பக்கத்து வீட்டுப்
பையன் மாதிரி இருக்காப்புல' என்ற பாராட்டுடன் ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநராக
'வத்திக்குச்சி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் திலீபன்.
அறிமுகப் படம் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை என்றாலும் நடிப்பில் திலீபன்
பாஸ்மார்க் வாங்கத் தவறவில்லை. அடுத்த படத்தில் தன்னை நிலைநிறுத்திக்
கொள்ளும் ஆர்வத்தோடு தற்போது 'குத்தூசி' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து
வருகிறார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு நான் தீவிர வாசகன் சார்.. என்று
உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்...
இரண்டாவது படம் இன்னொரு தலைப்பிரசவம்னு கோலிவுட்ல சொல்வாங்க. குத்தூசி படத்தில் என்ன விசேஷம்?
நிறைய கதை கேட்டேன். காமெடி, சீரியஸ், காதல், எமோஷன் எனப் பல ரகம். ஆனா
அத்தனை எமோஷன்களும் கச்சிதமா கலந்தமாதிரி ஒரு கதை கிடைக்கனுமே!? ஆனா
கிடைச்சது என்னோட லக். எல்லாமே கலந்திருந்த கதை ‘குத்தூசி '. முக்கியமா இது
சமூகச் சிந்தனையுள்ள ஆக்ஷன் படம். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல
சீனு ராமசாமிகிட்ட இணை இயக்குநரா வேலை செஞ்சவர் சிவசக்தி.
அவர்தான் இந்தப்
படத்தை இயக்குறார். ‘வத்திக்குச்சி’க்குப் பிறகு என்னை அடுத்த
கட்டத்துக்குத் தூக்கிட்டுப் போற படமா இது இருக்கும். நடிப்பை வெளிப்படுத்த
நல்ல களம் அமைச்சுக் கொடுக்கிற விதமா கதையை ரெடி பண்ணியிருக்கார். இன்னும்
சில நாட்கள்தான் படப்பிடிப்பு மிச்சமிருக்கு. எடுத்த வரைக்கும் படம்
பக்காவா வந்திருக்கு.
அறிமுகப் படம் வழியா நீங்க தெரிஞ்சுக்கிட்டது என்ன?
‘வத்திக்குச்சி’ படம் மூலமாதான் சினிமாவைக் கற்றுக் கொண்டேன்னு சொல்லலாம்.
நாம என்னதான் படப்பிடிப்புக்கு முன்னாடியே திட்டமிட்டாலும் ஸ்பாட்ல எல்லாமே
மாறிடும். லைட்டிங், பொசிஷன், எப்படி நிக்கனும், க்ளோஸ் எது, லாங் ஷாட்
எதுன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. நாம என்னதான் ப்ளான் பண்ணிட்டுப்
போனாலும் லொக்கேஷனுக்குத் தக்கபடி, அங்கே நடக்கிற மாற்றங்களுக்கு
ஈடுகொடுக்கக் கத்துக்கணும்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன். மற்றபடி ஒரு
ஸ்கூல் பையனோட மனநிலையில தொழில்நுட்ப விஷயங்களைக் கேட்டுக் கேட்டுத்
தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு நடிகனைத் தூக்கி சுமக்கிற அத்தனை தொழிலாளர்களோட
கஷ்டங்களையும் கண் முன்னால பார்க்கிறப்போ நம்ம பொறுப்பு ரொம்ப பெரிசுனு
தெரிஞ்சுகிட்டேன்.
திலீபன் ‘வத்திக்குச்சி’ படம் மூலமாதான் சினிமாவைக் கற்றுக் கொண்டேன்னு
சொல்லலாம். நாம என்னதான் படப்பிடிப்புக்கு முன்னாடியே திட்டமிட்டாலும்
ஸ்பாட்ல எல்லாமே மாறிடும். லைட்டிங், பொசிஷன், எப்படி நிக்கனும், க்ளோஸ்
எது, லாங் ஷாட் எதுன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. நாம என்னதான் ப்ளான்
பண்ணிட்டுப் போனாலும் லொக்கேஷனுக்குத் தக்கபடி, அங்கே நடக்கிற
மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கத்துக்கணும்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்.
மற்றபடி ஒரு ஸ்கூல் பையனோட மனநிலையில தொழில்நுட்ப விஷயங்களைக் கேட்டுக்
கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு நடிகனைத் தூக்கி சுமக்கிற அத்தனை
தொழிலாளர்களோட கஷ்டங்களையும் கண் முன்னால பார்க்கிறப்போ நம்ம பொறுப்பு
ரொம்ப பெரிசுனு தெரிஞ்சுகிட்டேன்.
மார்க்கெட்டிங் டு ஆக்டிங்... எப்படியிருக்கு இந்த இந்த மாற்றம்?
‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின எனக்கு முன்னாடியே தெரியும். அவர் ஒரு
கதை இருக்கிறதா சொன்னவுடன் ஒரு ரசிகனா ஆர்வமானேன். ‘ஒரு ஆட்டோ டிரைவர்
ரோல் இருக்கு, நீ நல்ல பொருத்தம்மா இருப்பன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே
என்னைய ஆட்டோ டிரைவரா மாத்திக்கிட்டேன். மார்கெட்டிங் துறைல இருந்ததால
நடிப்பு பத்தி பெரிசா தெரியாது. அவரே ஒரு எட்டு மாசம் அவரது நண்பர் உதவியோட
எனக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தார். ஆட்டோ ஒட்டுறது, அவங்க சிலாங்ல
எப்படிப் பேசறதுன்னு நிறையக் கத்துக்கிட்டேன். படப்பிடிப்பு நடக்கிறப்ப
என்கூட நடிச்சவங்க எல்லாரும் நடிப்புல அனுபவம் உள்ளவங்களேனு பயந்தேன்.
ஆனால், அவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க . காதல் காட்சிகள்ல
நடிக்க இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கனும்னு சொன்னாங்க. ஆக்ஷனைப் பொருத்த
வரைக்கும் முதல் படத்துலயே நல்லா பண்ணியிருக்கேன்னு சொன்னாங்க. ஆனா இது
போதாதுன்னு எனக்கே தெரியுது. ஆனா நான் விடுறதா இல்ல.
‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின எனக்கு முன்னாடியே தெரியும். அவர் ஒரு
கதை இருக்கிறதா சொன்னவுடன் ஒரு ரசிகனா ஆர்வமானேன். ‘ஒரு ஆட்டோ டிரைவர்
ரோல் இருக்கு, நீ நல்ல பொருத்தம்மா இருப்பன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே
என்னைய ஆட்டோ டிரைவரா மாத்திக்கிட்டேன். மார்கெட்டிங் துறைல இருந்ததால
நடிப்பு பத்தி பெரிசா தெரியாது. அவரே ஒரு எட்டு மாசம் அவரது நண்பர் உதவியோட
எனக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தார். ஆட்டோ ஒட்டுறது, அவங்க சிலாங்ல
எப்படிப் பேசறதுன்னு நிறையக் கத்துக்கிட்டேன். படப்பிடிப்பு நடக்கிறப்ப
என்கூட நடிச்சவங்க எல்லாரும் நடிப்புல அனுபவம் உள்ளவங்களேனு பயந்தேன்.
ஆனால், அவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க . காதல் காட்சிகள்ல
நடிக்க இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கனும்னு சொன்னாங்க. ஆக்ஷனைப் பொருத்த
வரைக்கும் முதல் படத்துலயே நல்லா பண்ணியிருக்கேன்னு சொன்னாங்க. ஆனா இது
போதாதுன்னு எனக்கே தெரியுது. ஆனா நான் விடுறதா இல்ல.
நடிக்கப் போறேன்னு சொன்னவுடன் உங்கள் அண்ணன் ஏ.ஆர். முருகதாஸ் என்ன சொன்னார்?
இயக்குநர் கின்ஸ்லின்தான் அவர்கிட்ட பேசினார். ‘எது பண்ணாலும் சின்சியரா
பண்ணக் கூடிய ஆள்'னு சொல்லி நமக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்திருக்கார்.
எனக்கு இயல்பிலேயே ஒரு விஷயம் ரொம்ப பிடிக்கும். எதுவா இருந்தாலும் நாமளே
போராடி முன்னுக்கு வரணும்; யாரோட முதுகுலயும் பயணம் பண்ற ஆளா இருந்திடக்
கூடாதுன்னு நினைப்பேன். இதில் இன்னொரு பிரச்சினை என்னன்னா... நான் செய்யிற
தப்பு அவங்களையும் பாதிச்சிடக் கூடாது. ஏ.ஆர். முருகதாஸ் எனக்குச் சொந்தச்
சகோதரர் கிடையாது. உறவினர். இன்னிக்கு அவர் சினிமாவில் இருக்கிற உச்சம்
ரொம்ப பெரிசு. நான் சைபர்ல இருந்து கணக்கைத் தொடங்கப் போற நடிகனா
இருந்தேன்.
எனக்குக் கிடைச்சஇந்த வாய்ப்பு மெரிட்ல கிடைச்ச டாக்டர் சீட் மாதிரி. அதை
வீணாக்கக் கூடாது. எத்தனை பேர் நடிக்க வாய்ப்பு தேடி அலைஞ்சிட்டு
இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்காதது எனக்குக் கிடைச்சிருக்கிறப்ப அதைச்
சரியா பயன்படுத்தணும்னு நினைச்சேன். ஒரு வருஷப் பயிற்சிக்கு அப்புறமாதான்
படப்பிடிப்பு ஆரம்பிச்சாங்க. சுயம்பா ஜெயிக்கிறப்ப அந்த வெற்றியோட சந்தோஷமே
வேற!
முதல் படத்தில் அஞ்சலி உங்களுக்கு ஜோடியாக நடிச்சது எப்படியிருந்துச்சு?
அஞ்சலிக்கு ஈடு கொடுத்துக் காதல் காட்சிகள்ல நடிக்கிறது கொஞ்சம் கஷ்டமா
இருந்துச்சு. அஞ்சலியும் எனக்கு நிறைய ஐடியா கொடுத்தாங்க. நாங்க ரெண்டு
பேர் வசனம் பேசுற மாதிரி காட்சிகள் வரும்போது அந்த ஷாட்டுக்கு முன்னாடியே
பேசிப் பார்க்க வந்துடுவாங்க. அப்படி எனக்கு அவங்க செஞ்ச உதவிகள் நிறைய.
ஏ.ஆர்.முருகதாஸ் படத்துல அறிமுகமாகியிருக்கலாமே?
“முருகதாஸ் அண்ணன் எப்பவுமே கதைக்குப் பொருத்த மான ஹீரோவைத்தான்
தேர்ந்தெடுப்பார். கிடைக்கிற ஹீரோவுக்குக் கதை பண்ற ஆள் இல்லை அவர்.
இன்னொன்னு நானும் அவர் என்னைய வைச்சுப் படம் பண்ணனும்னு எதிர்பார்க்கலை.
அதுக்கு என்னோட திறமைகளை நான் இன்னும் வளர்த்துக்கிட்டு நிற்கணும். ‘என்
கதைக்கு நீதான் சரியா இருப்ப'ன்னு அவர் சொன்னா, நிச்சயம் அப்போ அவரோட
பண்ணலாம். அவர் வெற்றியைத் தக்க வைச்சுக்கப் போராடிக்கிட்டு இருக்கார்.
நான் வெற்றியைத் தேடிப் போராடிக்கிட்டு இருக்கேன். இரண்டு பேரோட
போராட்டமும் வேற.
இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகனா இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. எந்த ஒரு
இயக்குநரும் இவன் நம்ம கதைக்குப் பொருந்த மாட்டான்னு சொல்லிடாத அளவுக்கு
நடிப்புல நாம வெரைட்டி காட்டணும். இதை அடிப்படையா வெச்சிதான் என்னோட பயணம்
ஓடிக்கிட்டு இருக்கு.
‘குத்தூசி' உங்களை எப்படி வெளிப்படுத்தும்னு நம்புறீங்க?”
‘வத்திக்குச்சி’யில எதெல்லாம் குறைன்னு சொன்னாங்களோ அதெல்லாம் குத்தூசியில
சரி பண்ணி இருக்கேன். நல்ல பயிற்சி எடுத்து டான்ஸ் ஆடி இருக்கேன் . இப்போ
டேக்வாண்டோன்னு ஒரு தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்குறேன். அதனால்
சண்டைக் காட்சிகள் ரொம்ப நல்லா வந்திருக்கு. நடிப்பில் எனக்குத்
திருப்தியாகிற அளவுக்குப் பண்ணியிருக்கேன். எமோஷன் நல்லா வந்திருக்குன்னு
இயக்குநர் சொல்றார். கதையாவும், நடிப்பாவும் எனக்குப் பெரிய படம்.
ரசிகர்களுக்கு என்னை இந்த முறை இன்னும் ரொம்ப பிடிக்கணும். அதுக்காகத்தான்
இந்த வேகம்
thanx - the hindu
0 comments:
Post a Comment