ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’ பட்டறையில் இருந்து புதிதாக புறப்பட்டிருக்கும் தோட்டா, இயக்குநர் ஆனந்த் சங்கர். அரிமா நம்பி படத்தை இயக்கி வரும் அவர், தனது குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸைப் போலவே அமைதியாக இருக்கிறார். சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில் படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘அரிமா நம்பி’ எந்த மாதிரியான கதைக் களத்தில் தயாராகி வருகிறது?
இது ஒரு சஸ்பென்ஸ் கலந்த ஆக் ஷன் த்ரில்லர். இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு கொஞ்சம் புதுசாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களை அமரவைக்கத் தேவை யான அனைத்து விஷயங்களும் இப்படத்தில் உள்ளது. தயாரிப்பாளர் தாணு மற்றும் விக்ரம் பிரபு இருவருக்குமே கதை பிடித்ததுக்கு காரணமே இது தான்.
ஆக் ஷன் காட்சிகளில் விக்ரம் பிரபு எப்படி செய்திருக்கிறார்?
மிக நன்றாகச் செய்திருக்கிறார். அவருக்கும் ப்ரியா ஆனந்துக்கும் நிச்சயம் இப்படம் பெரிய திருப்பு முனையைக் கொடுக்கும்.
காமெடி படங்கள் ஹிட்டாகி வரும் நேரத்தில் முழுக்க முழுக்க ஒரு ஆக் ஷன் படம் எடுக்கிறீர்களே?
திகில் படமா இருந்தாலும் சரி, ஆக் ஷன் படமா இருந்தாலும் சரி, காமெடி படமா இருந்தாலும் சரி ரசிகர் கள் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை ஏதோ ஒரு சுவாரசியமான விஷயத்தை எதிர்ப்பார்ப்பாங்க. அது படத்துல இருந்தாலே போதும், ரசிகர்களுக்கு பிடிச்சிடும். என்னோட படத்தில் அது இருக்குன்னு நம்பறேன்.
உங்கள் திரையுலக பயணத்தைப் பற்றி சொல்லுங்கள்?
நான் இன்ஜினீயரிங் படித்துவிட்டு நியூயார்க் பிலிம் அகாடமியில் படித் தேன். ரன்பீர் கபூர், ப்ரியங்கா சோப்ரா நடிச்ச ‘அஞ்சானா அஞ் சானி’ இந்திப் படத்தில் உதவி இயக்கு நராக இருந்தேன். பிறகு முருக தாஸ் சாரிடம் ‘ஏழாம் அறிவு’ படத் திலும், ‘துப்பாக்கி’ படத்திலும் பணி யாற்றினேன். தயாரிப்பாளர் தாணு விடம் ‘அரிமா நம்பி’ கதையை பத்தி ஆலோசிக்கத்தான் சென்றேன். ஆனால் அவர், இந்தப் படத்தை தானே தயாரிப்பதாக கூறினார்.
இயக்குநர் முருகதாஸிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
அவரிடம் இருந்து முதலில் கடின உழைப்பைக் கற்றுக்கொண் டேன். சினிமாவில் நிறைய புகழ் கிடைக்கும் என்று மட்டும் தான் முதலில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் புகழைப் பெற எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை முருக தாசிடம் இருந்துதான் கற்றுக்கொண் டேன். காலையில் ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரைக்கும் கவனத்தை கொஞ்சம் கூட கலயவிடாமல் அவர் வேலை பார்ப்பார்.
ரசிகர்கள் ஒரு படத்தை எப்படி பார்ப்பார்கள், அவர்களுக்கு என்ன புடிக்கும் என்றெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவரிடம் இந்த இரண்டரை வருடங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றி யதில் எனக்கு கிடைத்த மற்றொரு நல்ல விஷயம் சந்தோஷ் சிவன், ரவி.கே.சந்திரன் போன்ற பெரிய ஒளிப்பதிவாளர்கள் மற்றும் விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு.
இந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில், விஜய்க்கு ரொம்ப பிடிச்ச உதவி இயக்குநர் ஆனந்த் சங்கர் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினாரே?
விஜய் சார் ஒரு சூப்பர் நடிகர். ‘துப்பாக்கி’ படம் பண்ணும் போது நிறைய சிரமங்கள் இருந்தது. மும் பையில எந்த பகுதிக்கு போனாலும் 30 சதவீதம் தமிழ் மக்கள் இருப் பாங்க. அதனால சீக்கிரமா கூட்டம் கூடிடும். அதனால் விஜய் வருதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போய் படப்பிடிப்புக்கு தயாராக இருப்பது என்று திட்ட மிட்டோம். ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நாங்க முன்னாடியே போய் தேவையான ஏற்பாடுகள் செய்வோம். விஜய் சார் வருவதற்குள் கேமிரா எல்லாம் செட் பண்ணி வெச்சிடுவோம். அவர் வந்ததும் மின்னல் வேகத்தில் காட்சி களை ஷூட் செய்வோம். இதைப் பார்த்த விஜய், ‘நல்லா ப்ளான் பண்ணி ஷூட் செய்றீங்க, எந்த காலேஜ்ல படிச்சீங்க’ என்று கேட் டார். விஜய் பாசிட்டிவா இருக்கிறவங் ககிட்ட பாசிட்டிவா தான் இருப்பார். அதைத் தான் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார்.
அப்படின்னா விஜய்யை வைத்து கூடிய சீக்கிரத்தில் படம் பண்ணுவீங் கன்னு சொல்லுங்க..
விஜய் சாரை வைத்து படம் பண்ணு
வது சூப்பரான ஒரு விஷயம். அது ஒவ்வொருத்தரும் கனவு காணக் கூடிய ஒன்று. அது நடப்பது ‘அரிமா நம்பி’யோட வெற்றியை வைத்துதான் இருக்கிறது.
0 comments:
Post a Comment