அ
அ
அ
மத்திய அரசு அறிவித்தபடி, எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு கட்டண உயர்வு
புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத
வகுப்பு மற்றும் புறநகர் ரயில் கட்டண உயர்வு வரும் 28-ம் தேதி முதல்
அமல்படுத்தப்பட உள்ளது. புறநகர் பகுதிகளில் மட்டும் 2-ம் வகுப்பு கட்டண
உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு குறைப்பு
சென்னையில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி வரையிலும், சென்னை
சென்ட்ரல் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்
பூண்டி வரையிலும் புறநகர் ரயிலில் 2-ம் வகுப்பில் செல்கிற பயணிகளுக்கு
கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அனைத்து வகுப்புகளுக்கான
ரயில் கட்டண உயர்வு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. புறநகர் ரயில்
கட்டணமும், சீசன் டிக்கெட்டும் கடு மையாக உயர்த்தப்பட்டன. இதற்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியதால், புற நகர் பகுதிகளில் மட்டும் 2-ம் வகுப்பு கட்டணம்
ரத்து செய்யப் பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட புற நகர் ரயில் கட்டணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-
முதலில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டபோது புறநகர் ரயில் 2-ம் வகுப்புக்கான
சீசன் டிக்கெட் கட்டணம் இருமடங்கும், முதல் வகுப்பு கட்டணம் 4 மடங்கும்
உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வை ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை
திடீரென திருத்தி அமைத்தது. அதன்படி, புறநகர் ரயில் சீசன் டிக்கெட் கட்டணம்
14.2 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்பு அறிவித்ததை விட
பெரு மளவு கட்டண உயர்வு குறைக்கப்பட்டிருக்கிறது.
புறநகர் பகுதி மற்றும் புறநகர் அல்லாத பகுதி
புறநகர் பகுதி மற்றும் புறநகர் அல்லாத பகுதி என இரண்டு விதமாக கட்டணம்
நிர்ணயிக்கப்படு கிறது. அதன்படி, சென்னையிலி ருந்து 42 கிலோ மீட்டர் தொலை
வில் உள்ள திருவள்ளூர், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு, 48
கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்மிடிப் பூண்டி, 20 கிலோ மீட்டர் தொலை
வில் உள்ள வேளச்சேரி ஆகியவை புறநகர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளுக்குள் புறநகர் ரயிலில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய கட்டண
உயர்வு இல்லை. இந்தப் பகுதிகளைத் தாண்டி செல்வோருக்கு புறநகர் அல்லாத
பகுதிக்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
புதிய கட்டண விபரங்கள்
புதிய கட்டண உயர்வின்படி, சென்னை டெல்லி ராஜதானி எக்ஸ் பிரஸில் மூன்றடுக்கு
ஏசி கட்டணம் ரூ.2,710, இரண்டடுக்கு ஏசி கட்டணம் ரூ.3,775, முதல் வகுப்பு
ஏசி கட்டணம் ரூ.6,270, சென்னை டெல்லி ஏழைகள் ரதம் (கரீப் ரத்) கட்டணம்
ரூ.1,365, சென்னை மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏசி சேர்கார் (இருக்கை வசதி)
ரூ.915, உயர்வகுப்பு ரூ.1,805, சென்னை கோவை சதாப்தி எக்ஸ் பிரஸில் ஏசி
சேர்கார் ரூ.960, உயர்வகுப்பு ரூ.1,870-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கை கட்டணம் ரூ.180, ஏசி
சேர் கார் ரூ.655, சென்னை திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு
இருக்கைக் கட்டணம் ரூ.165, ஏசி சேர்கார் ரூ.590, சென்னை பெங்களூர்
பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கை ரூ.150, சென்னை கோவை
எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கைக் கட்ட ணம் ரூ.180, ஏசி சேர்கார் ரூ.655
என புதிய கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
பயணிகளிடம் கூடுதல் வசூல்
எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன் பதிவு டிக்கெட் கட்டண உயர்வு புதன்கிழமை
அமல்படுத்தப்பட்ட தால் கூடுதல் கட்டணத்துக்கான தொகையை ஓடும் ரயிலில் பயணி
களிடம் இருந்து டிக்கெட் பரிசோத கர்கள் வசூலித்தனர்.
பயணிகளிடம் கட்டண உயர்வை நிதானமாக எடுத்துரைத்து கூடுதல் தொகையை வசூலிக்க
வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
- sutha from MADIPAKKAM
எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை செய்பவர்களுக்கு வருடம்தோறும் சம்பள உயர்வு,பராமரிப்பு செலவில் உயர்வு ,உதிரி பாகங்கள் உயர்வு என பல பிரச்சனைகளை கையாள வேண்டி உள்ளது.அதிலும் ரயில்வேயை பொறுத்த மட்டில் புதிய வழித் தடங்கள்,போனஸ் போன்றவட்டில் பெரிய நிதி சுமைகள் ஏற்படுகிறது.எனவே இது போன்ற துறைகளை நல்ல முறையில் செயல் படுத்த கண்டிப்பாக கட்டணத்தை முறைப் படுத்துவதில் தவறில்லை.a day ago · (1) · (0) · reply (0)
- Ben Johnson Site Engineer at Prince Foundations Ltd. from AMBATTUR
குளிர்சடன பேட்டிகள் மற்றும் 1ஆம் வகுப்பு கட்டணத்தை மட்டும் உயர்தி இருக்கலாம். வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களை இது மிகவும் பாதிக்கும். ஏழைகளின் சக்திக்கு உட்பட்ட ஒரே போகுவரத்து ரயில் தான்.2 days ago · (1) · (0) · reply (0) - Elangovan from SINGAPORE
No problem because most of the man drinking 100 rupees and some body drink 100 over so, without money we can't do anythink same government particularly central govt they want do something so we must wait to see what they want do ok . It's my personal opinion am not bjb guies2 days ago · (2) · (2) · reply (0) - Shabbeer Ali from VISHAKHAPATNAM
சும்மா கட்டனும் மட்டும் உயர்தினா போதாது. அதுக்கு ஏத்த சர்வீஸ் இருக்குனும். நான் நெத்து தான் கேர்ள'து சென்னை'கு வந்தேன். இரயில் லைட் எரில, பாத்ரூம்ல தண்ணீர் வரல, பேன் சுத்துல... அப்போ எதுக்கு கட்டணம் ஏதுனும்.2 days ago · (0) · (0) · reply (0) - Kumaradhas www.joydtp.webs.com from VELLORE
மக்களைக் கொள்ளை அடிக்க புதிய திட்டமா? மாற்ற வேண்டும் சட்டங்களை, திட்டங்களை.Points615 - Syed Mehdi Aga at Central Board of Excise and Customs from VENGAVASAL
Back to modi government3 days ago · (0) · (1) · reply (0) - gold govarthanan from CHENNAI
very very very வேஸ்ட் very very very வேஸ்ட் very very very வேஸ்ட் very very very வேஸ்ட் very very very வேஸ்ட்3 days ago · (3) · (2) · reply (0)
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment