Sunday, June 01, 2014

ட்விட்டரில் பர்சனல் மேட்டரை ஷேர் செய்ததால் பிரச்சனையா? - பீட்சா நாயகி சஞ்சிதா ஷெட்டி பேட்டி

நான் புகைப்படங்களின் காதலி!: சஞ்சிதா ஷெட்டி பேட்டி

கோடை விடுமுறைக் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் இரண்டாமாண்டு மாணவி போல உற்சாகமாக இருக்கிறார், சஞ்சிதா. ‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2’ படங்களைத் தொடர்ந்து இவரை கோலிவுட் பக்கம் காணோமே என்று தேடினால், “அடுத்தடுத்து இரண்டு புதிய தமிழ்ப் படங்களின் அறிவிப்போடு சென்னைக்கு விரைவில் வருகிறேன்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்… 

 

பீட்சா 2 படத்திற்குப் பிறகு தமிழில் படங்கள் கிடைக்கவில்லையா? 



தமிழ் சினிமாவில் புதிது புதிதாக வருபவர்களுக்கு நல்ல இடம் இருக்கிறது. கிரியேட்டிவிட்டி தொடங்கி ஆர்டிஸ்ட் வரைக்கும் புதிய ஐடியாக்களோடு நல்ல மாற்றங்களைக் கொடுத்தால் வரவேற்கிறாங்க. இப்படியான ஒரு சூழல் உள்ள இடத்தைத்தானே நாமும் விரும்புவோம். அதனாலேயே எப்பவும் தமிழ் சினிமா என் மனசுக்கு நெருக்கமா இருக்கு. தமிழில் நல்ல கதைக்காகத்தான் இந்த வெயிட்டிங். இப்பவும் சும்மா இல்லை. ஜூன் இறுதியில் தொடங்க இருக்கும் புதிய படங்களின் கதாபாத்திரங்களுக்கான பயிற்சியில் இருக்கிறேன். அடுத்தடுத்து தொடர்ந்து படம் செய்துகொண்டே இருக்கும்போது கிடைக்காத ஒரு அனுபவமாச்சே இது. 



சஞ்சு என்றால் திகில் பட நாயகி என்று சொல்லும் அளவுக்கு மாறிட்டீங்களே? 



யாருக்கும் ஒரே மாதிரி படம் தொடர்ந்து நடிக்கப் பிடிக்காது. விதவிதமான கேரக்டர் பண்ண வேண்டும் என்பதுதான் விருப்பம். என் விருப்பமும் அதுதான். அதனால்தான் கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொண்டேன். அடுத்தடுத்த கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது அதை வியூவர்ஸே உணருவாங்க. 


 
சம்மர் டிரிப் எப்படிப் போச்சு? 



நிறைய பொழுது டிராவலிங்தான். அதில் அதிக மான நாட்கள் மங்களூர்ல இருக்கிற என் கிரேனி (அம்மாவின் அப்பாவோட அப்பா) வீட்டில் செலவழித்தேன். அங்கே ரிலேடிவ்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அப்படி ஒரு அனுபவம். இனி அடுத்த சம்மருக்குத்தான் கிடைக்கும். 



மாடலிங், ரேம்ப் வாக் எல்லாம் உங்களுக்கு ஆர்வம் இல்லையா? 



இல்லை. நான் கிராண்ட் மாடல் இல்லை. டிசைனிங் பற்றி அதிகமாகவே தெரியும். டிரெஸிங்ல நானே நியூ டிசைன்ஸ் நிறைய செய்திருக்கேன். நான் தியேட்டர் ப்ளே காதலி. அடிக்கடி தியேட்டர் ப்ளே பார்க்க ஓடிடுவேன். மற்றபடி வேறொன்றிலும் ஆசை இருப்பதில்லை. 


 
சமீபத்தில் பார்த்து ரசித்த படம்? 



எனக்கு எப்பவுமே ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்தான் பிடிக்கும். நானும் அப்படியான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில்தான் ஆசையாக இருக்கிறேன். இப்போ அதுக்கு நல்ல ஸ்பேஸ் இருக்கு. ‘குயின்’, ‘ஹை வே’ போன்ற படங்கள் எல்லாம் ரொம்பவே பிடித்தது. 



உங்களோட போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்க்கும்போது நீங்க கிராமத்து கேரக்டருக்கு செட் ஆகவே மாட்டீங்க போலிருக்கே? 



எல்லோருமே இதையே சொல்றாங்க. ஒரு நடிகை இப்படித்தான் செட் ஆவாங்கன்னு குறிப்பிட்டு ஒரு வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம். எனக்கு கிளாமர் ஓ.கே. ஆனால், அதையும் கடந்து நல்ல நல்ல கேரக்டர் செய்ய முடியும். வித்தியாசமான விஷயங்களைப் பிரதிபலிக்கத்தானே நடிப்புத் துறையைத் தேர்வு செய்கிறோம். 



மேக்கப் விஷயத்தில் நீங்க எப்படி? 



நார்மலா சன் ஸ்கிரீன், கண்ணுக்கு காஜல், லைட் லிப்ஸ்டிக். இதுதான் என் மேக்கப். மற்றபடி மேக்கப்னாலே எனக்கு அலர்ஜி. சின்ன சின்ன மீட்டிங்கு எல்லாம் இப்படித் தான். மற்றபடி ஷூட்டிங்கில் முக்கியத்துவம் இருந்தால் மட்டும்தான் அதைப் பத்தி யோசிப்பேன். 



சமீபத்தில் டிவிட்டரில் இணைந்திருக்கீங்க போல? 



ஆமாம். ஒரு வாரம்தான் ஆகுது. முன்ன எல்லாம் அதில் பெரிதாக ஆர்வம் இருந்த தில்லை. இப்போ டிவிட்டரில் சேர்ந்ததும் செம ஜாலியாக நேரம் போகுது. பிரண்ட்ஸோட பல விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியுது. ‘சாலு.. சாலு.. வெல்கம்’ என்று பிரண்ட்ஸ் எல்லாம் வரிசை கட்டி வரவேற்கிறார்கள். சோஷியல், பர்சனல், ஷூட்டிங் எல்லாமும் பகிர்ந்துக்கிறேன். ஹேப்பி... ஹேப்பி. 

 

அடிக்கடி ஃபோட்டோ ஷூட் எடுத்து குவிச்சுகிட்டே இருக்கீங்களே? 


புதிய புதிய லுக் டிபரெண்ட் வியூவ்ல டிரை பண்ணிப் பார்ப்போம் என்கிற ஆசைதான் காரணம். நார்மலாக இருக்கும்போது நாம எப்படி இருக்கோம் என்பதைப் பார்க்கத் தோணுவதே இல்லை. அதுவே இப்படி ஃபோட்டோ ஷூட் எடுக்கும்போது கனவுலகத்துல வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருக்கு. கூடவே நடிகை என்பதால் அதுக்கான வாய்ப்பு இயல்பாகவே உருவாகிறது. அதனால் இதைத் தொடர்ந்து செய்கிறேன். போரடிக்கல. என் படங்களைப் பாக்கறவங்களுக்கும் போர் அடிக்காதுன்னு நினைக்கிறேன். 



உங்க ஊர் நடிகை திவ்யா ஸ்பந்தனா மாதிரி உங்களுக்கும் அரசியல் ஆசை உண்டா? 



அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியறதில்லை. இப்போ பலரும் ஹீரோயின் ஆகணும் என்று வருவதில்லை. சாலையில் போகும்போது ஒருவர் அழகாக இருந்தால் அந்த நேரத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதுதான் இப்போ கான்சப்ட். எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வர வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக வந்துதான் ஆகணும். 


நன்றி - த இந்து



0 comments: