Monday, June 30, 2014

900 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கற்சிலைகள்: @ கும்பகோணம்

சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. 

 செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி.

எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். 


கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்றன. 



நெடுநாட்களாகவே அவை அந்த இடத்தில் இருப்பதால் அதன் முக்கியத்துவம் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது. இந்நிலையில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட் டத்தார் இத்தகைய கோயில்களைப் புனரமைத்து பூஜைக்குரியதாக்கும் அரும்பணியைச் செய்துவருவதை அறிந்த செருகுடி ஊர்மக்கள், அவர்களை அணுகி தங்கள் ஊரில் சிவலிங்க மூர்த்தி உள்பட கோயிலின் அடையாளங்கள் இருப்பதை தெரிவித்தனர். 


இதையடுத்து செருகுடி சென்ற இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி கள் அங்குள்ள சிவலிங்க மூர்த்தி, நந்திதேவர், சண்டிகேசுவரர் ஆகியவற்றையும், அவ்வூரில் உள்ள செல்லியம்மன் கோயி லில் வைக்கப்பட்டிருந்த சூரியன், விநாயகர், பைரவர் திருமேனி களையும் பார்வையிட்டார். அவற்றை முழுவதும் ஆய்வு செய்தபோது அவை 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும், விக்கிரமசோழன் காலத் தில் கருங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் அங்கு இருந்திருக்க வேண்டும் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

 சண்டிகேசுவரர்.

அதிலும் சண்டிகேசுவரரின் அழகு வார்த்தைகளில் சொல்ல இயலாத பேரழகுடன் இருக்கிறது. விரிசடை கேசமும், ஆழ்ந்த சிவ தியான முகமண்டலமும் கொண்டதாக வெள்ளைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது அந்தக் கால கலைநயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 


பழமைமிக்க சிவாலயம் இருந்த இடத்தை திரும்பவும் அவ்வண்ணமே ஆக்கிட ஊர்மக்களுடன் கலந்து பேசி முன்பு கோயில் இருந்த இடத்தில் புதிய கோயில் ஒன்றை நிர்மாணிக்க முதல் கட்டமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பேசிய திருவடிக்குடில் சுவாமிகள், “வழிபாடு நடக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு, அங்கு உபயம் செய்வதைவிட இப்படி தொன்மையும், தெய்வ கடாட்சமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, அழிந்துபோன நிலையிலும் உள்ள கோயில்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார். 


நன்றி - த இந்து

0 comments: