Friday, June 06, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 6 6.2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.மஞ்சப்பை : தாத்தா - பேரன் உறவுக்கதை!!

Manjapai story tell about Grandfather - Grandson relationship
 சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சப்பை ஷூட்டிங்குகள் முடிந்து விட்டது.

படத்தை பற்றி இயக்குனர் ராகவன் கூறியிருப்பதாவது: "நம்முடைய உறவுகள்லேயே மிகவும் உன்னதமானது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு, முதன்முறையா ராஜ்கிரண் தாத்தாவா நடிக்கிறார். அம்புட்டு வயசானவனா நடிக்கிறது நல்லா இருக்காதுன்னு முதல்ல யோசிச்சவரு கதைய கேட்டபிறகு உடனே ஒத்துக்கிட்டார். பேரனா விமல் நடிச்சிருக்காரு. ரெண்டு பேரும் பண்ற கலாட்டாக்கள்ல சிரிப்பு வெடிக்கும், சென்டிமெண்டுல அழுகை வெடிக்கும். லட்சுமிமேனன் மார்டன் பொண்ணா நடிச்சிருக்காங்க. கும்கியில பார்த்த மலைஜாதிப் பொண்ணா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்கும். கிராமத்துலேருந்து சென்னைக்கு வர்ற அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் லைஃப் ஸ்டோரி இது" என்கிறார் ராகவன்.
இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்துள்ள படம் - மஞ்சப்பை. தன் உதவியாளரை இயக்குநராக்கி சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி இப்படம் வெளியாகிறது. பல படங்களில் கதாநாயகனாகவும், சண்டைக்கோழி போன்ற சில படங்களில் அப்பா வேடத்திலும் நடித்த ராஜ்கிரணுக்கு மஞ்சப்பை படத்தில் புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். விமலுக்கு தாத்தாவாக நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.
மஞ்சப்பை படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ராஜ்கிரணுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அதாவது தாத்தா பேரனுக்கு இடையிலான பாசம்தான் மஞ்சப்பை படத்தின் கதையே..! அனாதையான விமலை எடுத்து வளர்க்கிறார் ராஜ்கிரண். விமல் பெரியவனாகி சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது அவரது கனவு.

இந்நிலையில் சென்னையில் உள்ள பேரன் விமலை பார்க்க வருகிறார் ராஜ்கிரண். ஒருமுறை பீச்சுக்கு சென்றபோது பிரட் டோஸ்டரை வைத்து பிரட் டோஸ்ட் செய்வதைப் பார்க்கும் ராஜ்கிரணுக்கு, வீட்டில் உள்ள விமலின் லாப் டாப் பிரட் டோஸ்டர் போலவே தெரிகிறது. ஒருநாள் அவருக்கு பசியெடுக்க, பிரட்டை எடுத்து லாப்டாப் உள்ளே வைக்கிறார். பிரட் டோஸ்ட் ஆகாதது கண்டதும், ஸ்டவ் அடுப்பை வைத்து அதன் மீது லாப் டாப்பை வைத்துவிடுகிறார். லாப் டாப் எரிந்துபோகிறது. இதனால் விமலின் அமெரிக்க பயணம் ரத்தாகிறது. அதனால் தன் தாத்தாவை வெறுக்கும் விமல், அவரது அவரது அருமை புரிந்து தாத்தாவிடம் சேருவதுதான் மஞ்சப்பை படத்தின் கதை.

பாட்டி பேத்தி பாசத்தை வைத்து பல வருடங்களுக்கு முன் வெளியான பூவே பூச்சூடவா படத்தைப் போல், தாத்தா பேரனின் பாசத்தை சொல்லும் மஞ்சப்பை படமும் பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறார்கள்.

விமல், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘மஞ்சப்பை’. ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் வருகிறார். ராகவன் இயக்குகிறார். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. படம் குறித்து விமல் அளித்த பேட்டி வருமாறு:–

தாத்தா, பேரன் இடையிலான உறவை சித்தரிக்கும் படம். ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் வாழ்ந்துள்ளார். அவர் சீனியர் நடிகர். எனவே சேர்ந்து நடிக்க பயமாக இருந்தது. பயந்தபடியே தான் முதல் நாள் சூட்டிங்குக்கு போனேன். ஆனால் நான் பயந்த மாதிரி அவர் இல்லை. எளிமையாக பழகினார். அன்பு காட்டினார். ராகவன் கதை சொல்லும் போதே கண்கலங்கியது. என் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் லிங்குசாமி கூறும் போது, எங்கள் நிறுவனம் தயாரித்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று. இதை பார்த்த எல்லோரும் கண்கலங்கி பாராட்டினர். கிளைமாக்சை மாற்றலாமா என யோசித்தோம். ராஜ்கிரண் இந்த கிளைமாக்ஸ்தான் நன்றாக உள்ளது மாற்ற வேண்டாம் என்று தடுத்து விட்டார். சண்டைக் கோழி படத்திலும் அவர் சில திருத்தங்கள் சொன்னார். அது பிரமாதமாக இருந்தது என்றார்.

டைரக்டர் ராகவன் கூறும்போது, ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் எம்.ஜி.ஆர்., ரசிகராக வருகிறார். படம் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா, பேரன் இல்லையே என்று ஏங்க வைக்கும் படமாக இருக்கும் என்றார்.
 
2 உன் சமையல் அறையில் -ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சால்ட் என் பெப்பர் படம், தமிழில் ''உன் சமையல் அறையில்'' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றன. முழுக்க முழுக்க சாப்பாட்டை மையப்படுத்தி இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
பிரகாஷ்ராஜ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரு படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார்.


இந்தப் படம் தமிழில் 'உன் சமையல் அறையில்', அதுவே தெலுங்கில் 'உலவச்சாரு பிரியாணி' மற்றும் கன்னடத்தில் 'ஒக்கரனெ' ஆகிய பெயர்களில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கிறார்.



மூன்று மொழியிலும் இப்படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோவை மார்ச் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



படத்தை மூன்று மொழியிலும் ஒரே நேரத்தில், மே மாத வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சால்ட் அண்ட் பெப்பர் என்கிற படம்தான் மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது. இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படமே இது.


ஒகேனக்கல் எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, பி.டி.எஸ்.திருப்பதி ஆகிய மூவரும் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ‘ஒகேனக்கல்’.
இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஜோதிதத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பி.டி.எஸ்.திருப்பதி நடிக்கிறார். மற்றும்  உமாபத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள்ரவி, டெல்லிகணேஷ், காதல்தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பி.ஜி.வெற்றி ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகா, எழில்வாணன், தென்றல் செந்தில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பி.மோகன்ராஜ் படத்தொகுபை கவனிக்க, துரைவர்மன் கலையை நிர்மாணித்துள்ளார். தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்தியன் பாஸ்கர் சண்டைப்பயிற்சி அமைக்க, சிவா தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஆர்.மூர்த்தி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் எம்.ஆர்.மூர்த்தி கூறுகையில், “ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.  சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டு கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை.  இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். இப்படத்தின் பெரும்பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இப்படத்தின் மூர்த்தி கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம்.

Holiday (2014)

A military officer attempts to hunt down a terrorist, destroy a terrorist gang and deactivate the sleeper cells under its command.Virat (Akshay Kumar) is among a battalion of military officers that comes to Mumbai on vacation. Virat is also a secret Defence Intelligence Agent who cannot lie low, much to the irritation of his friend and sub inspector. During a bus ride, an attempt to frisk passengers for a lost wallet leads Virat to something much bigger. Within minutes, the bus is blown into pieces and he helps cops nab the carrier of the bomb, who escapes from the hospital only to be caught by Virat again. Using tact, Virat follows one clue at a time hoping to track down the terrorist on whose orders the sleeper cell terrorists plan to cause mayhem in Mumbai.

தமிழில் சூப்பர் ஹிட் வெற்றிப் படமாக அமைந்த விஜய், காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' படத்தை இந்தியில் 'ஹாலிடே' என்ற பெயரில் அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க இயக்கியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அக்ஷய் குமார் இதற்கு முன் 'ஹவுஸ்ஃபுல் 2, ரவுடி ரத்தோர்' ஆகிய படங்களின் மூலம் 100 கோடி வசூலைத் தொட்டவர். இப்போது 'ஹாலிடே' படமும் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

அது பற்றி அக்ஷய் குமார் கூறுகையில், “நான் எனது படத்தின் பிசினஸை பற்றி பேச மாட்டேன். இந்த படம் 100 கோடியை வசூலிக்கிறதோ, அல்லது 50 கோடி வசூலிக்கிறதோ அது பற்றி கவலையில்லை. ரசிகர்கள் இந்த படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த படம் பல பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். சீருடைய அணிந்து கொண்டு மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொருவரையும் நாம் மதிக்க வேண்டும். காக்கிச் சட்டை அணிந்து கொண்டு சாலைகளில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் முதல் கொண்டு சீருடை அணிந்து பணி செய்யும் அனைவருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்,” என்கிறார் அக்ஷய்.

2008ல் ஆமீர் கான் நடிக்க 'கஜினி' இந்திப் படத்தை இயக்கியதற்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படமான 'ஹாலிடே' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. 'கஜினி' படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்து பாலிவுட்டில் இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று பாலிவுட்டே ஆச்சரியப்பட்டு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. படத்தை முன்னதாகவே பார்த்த விமர்சகர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.

0 comments: