Tuesday, May 20, 2014

MR FRAUD (2014) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )


கடவுளின் சொர்க்க பூமின்னு சொல்லப்படும் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில்  பத்மநாபபுரம் கோவில் ல சமீபத்தில் ஏராளமான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கபட்டன, இன்னும் திறக்கப்படாத  கதவுகள் இருக்குன்னு சொல்றாங்க . இந்த நியூசை பேப்பர்ல படிக்கும்போது மங்காத்தா   ரிலீஸ் ஆகி ஓடிட்டு இருக்கு. ஆர் கே செல்வமணி மாதிரி  நிகழ்கால பர பரப்ப்புச்செய்தியை சினிமா ஆக்கும் இயக்குநர்  எடுத்த முயற்சிதான் திரைக்கதை ஆகி இருக்கு. படத்தோட  ஒன் லைன் என்னான்னா ஒரு பெரிய ஜமீன்  குடும்பத்துக்கு  சொந்தமான  செல்வத்தை , புதையலை எப்படி  ஹீரோ  பிளான் பண்ணி கொள்ளை அடிக்கறார் என்பதே!


இந்த கதையை அப்டியே எடுத்தா  இது மங்காத்தா டைப்னு எல்லாரும் சொல்லிடுவாங்களேனு யோசிச்சு இயக்குநர் அப்டியே ஆல்ரெடி  மோகன் லால் நடிச்ச ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா பட காட்சிகள் ல  இருந்து  கொஞ்சம்  சுட்டு ஜமீன் கதைல  ஒரு கொலை , அதுக்கான ஃபிளாஸ்பேக்னு கதம்பம் ஆக்கி இருக்காரு


ஹீரோவா மோகன் லால். த்ரிஷ்யம் மெகா  ஹிட்டுக்குப்பின்  வரும் த்ரில்லர் படம்  என்பதால் அதீத எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம்.இயக்குநர் உன்னிகிருஷ்ணனுடன் இவர் இணையும் 3 வது படம் இது . ஹாட்ரிக் வெற்றிக்காக பாடு பட்டிருக்காங்க 

 4 கெட்டப் ல வர்றார். அதுல  மங்காத்தா அஜித் கெட்டப்ப்பான சால்ட்  பெப்பர்  லுக்கை மலையாள ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிப்பார்கள். இந்தப்படத்தில்  மோகன் லாலுக்கு   ஒன் லைனர்கள் , பஞ்ச் அதிகம் . பில்லா  -2 ப்டத்தில் வருவது போல் ஷார்ப்பான வசனங்கள் 

ஒரு பிரமதமான ஃபைட் வேற  இருக்கு . ஓப்பனிங்க் சாங்க் பார்க்கும்போது கலைஞன் படத்தில்  கமல் பாடும் பாட்டு போல் மைக் மோகன் ஆகி இருக்காரு 





 ஹீரோயின்கள்  3 பேரு .மியா ஜார்ஜ். இவர் மஞ்சளா  இருக்கும் மஞ்சுளா.கடமை கண்ணீயம் கட்டுப்பாடு நாயகி  கீதா  போல் அழகிய உதட்டழகி . டூயட் ஏதும்  இல்லை 


மஞ்சர் பதனிஸ்  - இவர் பனை மரத்துப்பதநீர் மாதிரி  தெளிவான முகம்.மிக மெல்லிய   திருத்தப்பட்ட புருவங்கள் 


பல்லவி புரோகித் - மந்திரம் சொல்லும் புரோகிதரே சரி வாம்மா  போலாம் என அழைத்துச்செல்லத்தகுதியான அழகி 

 ஆனா  திருப்பதி லட்டு ,மாதிரி  3 பேரை  புக் பண்ணியும்  அவங்களை பெரிய அளவில்  உபயோகிக்கலை , சும்மா அங்கெயும் , இங்கேயும்  உலாவ விட்டிருக்காங்க 


 பாடல் காட்சிகள் இந்தப்படத்துக்குத்தேவையே  இல்லை . த்ரில்லர்  மூவிக்கு எப்பவும் பாடல்கள் ஸ்பீடு  பிரேக்கர் தான்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. மிக தெளிவான  திரைக்கதை படத்துக்குப்பெரிய பலம் . செயற்கையான திருப்பங்கள் எதுவும் இல்லாமல்  வைகை நதி போல் நிதானமாகப்பயணிக்கிறது


2 ஹீரோவுக்கான  பில்டப் கன கச்சிதம் . கடைசி வரை அவர் பெயர் என்ன என்றே சொல்லாமல்   கொண்டு போவது  புதிய உத்தி 


3 கண்ணுக்கு லட்சணமாக  3 நாயகிகளை  கதைக்கு சம்பந்தம்  இருக்கோ , இல்லையோ சும்மா பேருக்காகவாவது  புக் செய்தது 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஜமீனில்  உள்ள சொத்துகளை மதிப்பீடு செய்யும்  ஆளாக  ஹீரோ ஆள் மாறாட்டம் செய்து  உள்ளே  போகிறார் .  ஐடெண்ட்டி கார்டோ , ஃபோட்டோ வோ  யாரும் வெரிஃபை பண்ண மாட்டாங்களா? 


2  இண்ட்டர்நெட்டில்  உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன் என  ஹீரோவைப்பார்த்து ஜமீன் ஆள் சொல்வது போல் ஒரு வசனம் வருது . அப்போ அவர்  ஃபோட்டோ பார்த்திருப்பாரே? எப்படி ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிக்கலை ? 


3 ஹீரோ  தன் கொள்ளை அடிக்கும் படலத்தை நடு நிசி  12 58  க்கு ஆரம்பிச்சு 1 30  க்கு முடிக்கறார் . அது ஆள் நடமாட்டம் உள்ள மெயின் இடம். செகண்ட் ஷோ சினிமா  விட்டு ஆட்கள் நடமாடும் நேரம். பொதுவா  திருடங்க 2 டூ 3 தானே   திருடுவாங்க ? 


4 பொக்கிஷப்பெட்டிகள் 12 பழங்கால வேலைப்பாட்டில்  செய்யப்படிருக்கு . அதை  ஃபாரீனில் ஆர்டர் கொடுத்து 20 நாட்களில் எப்படி டெலிவரி எடுக்க முடியும் ? 


5 பொக்கிஷங்கள் உள்ள 12 பெட்டிகளை  ஒரு ரோலிங்க் ட்ராலியில்   ஹீரோ தள்ளிட்டு வர்றார். படிக்கட்டுகள் உள்ள ஏரியாவில் அது எப்படி வரும் ? சிதறி விழாதா? 12 பெட்டிகளையும் கயிற்றால் கட்டி இணைக்கவே இல்லை .


6 ஹீரோ  பெட்டிகளை மாற்றும்போது வில்லன் ஏன் கூட ஆட்களை அனுப்பலை ?


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

 1 வாவ்.இங்க்லீஷ்ல சப் டைட்டில் போடறாங்க.# MR FRAUD



மனம் கவர்ந்த வசனங்கள்

1. மரண தேவனை யாரும் கேள்வி கேட்கவே முடியாது.நானும் அப்டித்தான்.என்னை கேள்வி கேட்டா எனக்குப்பிடிக்காது FRAUD

=====================



2  ஈ லோகத்துல அழையா விருந்தாளிகள் 2 பேர் தான் 1 மரண தேவன் 2 போலீஸ். fraud


================


3  வில்லன் -  II AM IMPRESSED

ஹீரோ - BUT I AM NOT  Fraud



==================


4 உங்களை நான் எப்படிக்கூப்பிட?

 என்னை எப்படி வேணாலும் கூப்பிடலாம், எனக்கு ஏகப்பட்ட முகங்கள், நிறைய பெயர்கள் இருக்கு Fraud


=====================


5 ஹீரோ = We are equal,


நண்பன் -but you are the first among the equals'  Fraud



=====================


6 நீங்க எல்லா கலைகளிலும் வல்லவராமே?

லால் - அப்டித்தான் மக்கள் பேசிக்கறாங்க
===========================



7 லால் - THE WORST ALWAYS SURVIVES  Fraud


========================


8   மாட்டை கர்ப்பம் ஆக்க காளையை கூட்டிட்டு யாரோ வர்றதா  சொன்னாங்க அது நீங்க தானா? 

 மிஸ்! நான் மாட்டையோ , அல்லது  வேற  யாரையோ கர்ப்பம் ஆக்க இங்கே வர்ல


=====================


 9   ஹீரோயின்  டூ  ஹீரோ = Your salt and pepper is hot, really hot'.



======================


10 "I have done this so many times. So this time, let's skip this."



=======================



11  வில்லன்  டூ  ஹீரோ - யாருய்யா நீ? மனிதனா? சிங்கமா? நரசிம்மாவோட அவதாரமா? 



====================== 








சி பி கமெண்ட் - த்ரில்லர்   மூவி ரசிகர்கள் , மோகன் லால்  ரசிகர்கள் பார்க்கலாம்.


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5 / 5 


 ஈரோடு  தேவி அபிராமியில் படம் பார்த்தேன்











Directed by B. Unnikrishnan
Produced by A. V. Anoop
Written by B. Unnikrishnan
Starring Mohanlal
Dev Gill
Mia George
Manjari Phadnis
Pallavi Purohit
Music by Gopi Sunder
Cinematography Satheesh Kurup
Editing by Manoj
Studio A.V.A Productions
Distributed by Maxlab Entertainments
PJ Entertainments (Overseas)
Release dates
  • 17 May 2014
(India)
  • 23 May 2014அ









(Overseas)
Running time 138 minutes
Country India
Language Malayalam

1 comments:

Unknown said...

நீர் பார்த்ததே போதும்! பரம திருப்பதி!