நம்ம தமிழ்நாட்ல எப்படி கூடங்குளம் அணு மின் நிலையம் ஆபத்துன்னு சொல்றாங்களோ அது மாதிரி ஜப்பான்ல இருக்கும் ஆபத்தான அணு மின் நிலையம் ல ஹீரோவோட அம்மா,அப்பா வேலை செய்யறாங்க. ஒரு நாள் ஒரு பூகம்ப விபத்துல அணுக்கதிர்கள் வெளியாகி அதன் தாக்கத்தால ஆய்வுக்கூடத்திலேயே அம்மா அவுட் .
இந்த சம்பவத்துக்குப்பின் அந்த ஆய்வுக்கூடத்தை அரசாங்கம் க்ளோஸ் பண்ணிடுது.ஆனா அப்பாவுக்கு ஏதோ ஒரு டவுட். அம்மா இறந்ததுக்கு வேற ஏதோ காரணம்னு நினைக்கறாரு. அந்த மர்மத்தைக்கண்டு பிடிக்க 15 வருசமா அந்த ஏரியாவுலயே சுத்திட்டு இருக்காரு.( எதுக்கு 15 வருசம்னா அப்போ தானே ஹீரோ பெரிய ஆள் ஆக கால அவகாசம் கிடைக்கும் ? ) ஒரு நாள் போலீஸ் அவரை கைது பண்ணிடுது .
ஹீரோ அப்பாவைப்பார்க்க வர்றாரு.அவர் கிட்டே அப்பா எல்லா உண்மையையும் சொல்றாரு. 2 பேரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட இடத்துக்குப்போறாங்க. அங்கே ஒரு விநோத மிருகம் அணுக்கதிர் பொருட்களை சாப்ட்டு உயிர் வாழ்வதைக்கண்டு பிடிக்கறாங்க .
ஆராய்ச்சி மூலம் அதே போல் 3 மிருகங்கள் இருப்பது தெரிய வருது . அவற்றை அழிக்க முயற்சி செஞ்சா முடியலை . ஊழலை எப்படி இந்தியாவில் ஒழிக்க முடியலையோ அப்படி அங்கே மிருகங்களை அழிக்க முடியலை .
ஒரே குடும்பத்துல பிறந்தும் அழகிரி , ஸ்டாலின், கனிமொழி எல்லாரும் கேவலம் பதவிக்காக அடி ச்சுக்கும்போது 5 அறிவு ஜீவன்கள் அடிச்சுக்குவதில் ஆச்சரியம் என்ன?
ஒரே குடும்பத்துல பிறந்தும் அழகிரி , ஸ்டாலின், கனிமொழி எல்லாரும் கேவலம் பதவிக்காக அடி ச்சுக்கும்போது 5 அறிவு ஜீவன்கள் அடிச்சுக்குவதில் ஆச்சரியம் என்ன?
திடீர்னு ஒரு நாள் மிருகங்கக்களுக்குள் சண்டை வந்து நாடு பூரா கரண்ட் கட் ஆகிடுது . அழகிரி - ஸ்டாலின் பிரச்சனையால கட்சி காலி ஆன மாதிரி . இந்த ஜந்துக்கள் ஃபைட்ல நாடே நாசம் ஆகுது. இதே ஜெ ஆட்சின்னா இது எதிர்க்கட்சிகள் சதின்னு அறிக்கை விட்டிருப்பாங்க . அல்லது 5 வருடங்களூக்கு முன் கலைஞர் ஆட்சில கூட இதே மாதிரி நடந்ததுன்னு புள்ளி விபரம் குடுத்திருப்பாங்க . ஆனா கதை நடப்பது தமிழ் நாட்ல இல்லை . சீனா ல .அதனால அவங்க பொறுப்பா இதை சமாளிக்க என்ன வழி?னு பார்க்கறாங்க
ராணுவத்தால கூட ஒண்ணும் பண்ண முடியல . அப்போ தான் ஆபத்பாந்தவன் மாதிரி ஆழ்கடல்ல இருந்து காட்ஜில்லா வருது.
ஜில்லா ஜில்லா ஜில்லா காட்ஜில்லா ஜில்லா ஜில்லா -னு எந்த ஓப்பனிங்க் சாங்கும் பாடாம அந்த 3 மிருகங்களை ஸ்வாஹா பண்ணிடுது. இதுதான் காட்ஜில்லா கதை
படம் 2 மணி நேரம் ஓடுது.காட்ஜில்லாவைக்காட்டும்போது அரங்கமே அதிருது கை தட்டலால் . நல்ல கிராஃபிக்ஸ் ஒர்க் .அதன் பிரம்மாண்டமான உருவம் 60 மாடிக்கட்டிடத்துக்கு நிகராய் எழுந்து நிற்பது பிரமிப்பு . குழந்தைகள் குதூகலமாய்ப்பார்க்கும்.
ஓப்பனிங்க் ஷாட்டில் அந்த லேபில் (LAB) நடக்கும் விபத்து பதை பதைப்புடன் படமாக்கபட்டிருக்கு .
iஇதுவரை வந்த காட்ஜில்லா வில் அதை தீய சக்தியா காட்டினாங்க ./ இதில் ஹீரோ காட்ஜில்லாதான் நல்லவனா வருது ,
இப்போவெல்லாம் யார் ஹீரோ ஆவாங்க, யார் ஜீரோ ஆவாங்கனு யூகிக்கவே முடியறதில்லை .ஃபீல்டு ஒர்க்கே பண்ணாத அன்புமணி ஜெயிச்ட்டாரு. மாங்கு மாங்குனு வெய்யில்ல சுத்தி நல்லா பிரச்சாரம் பண்ண கேப்டன் வெறும் 5.2 % வாக்கு மட்டும் பெற்று தோத்துட்டாரு அது மாதிரி இந்தப்படத்துல காட்ஜில்லா நல்ல மிருகமா வருது
அணுக்கதிர் காட்ஜில்லாவை மட்டும் ஏதும் செய்யாமல் இருப்பது ஏனோ?
வானில் பறக்கும் விமானங்களில் இருந்து போர் வீரர்கள் பாரசூட்டுடன் குதிக்கும் காட்சி கலக்கல் ரகம் . என்னமோ ஆத்துல ட்டைவ் அடிப்பது போல் அவங்க வானத்தில் இருந்து குதித்து பின் சில கிமீ பயணித்து பாரசூட்டை விரிய வைப்பது செம த்ரில்
காட்ஜில்லா வெயிட் தாங்காம கடல் பொங்கி வரும் காட்சி அபாரம்
ஆனால் படத்தில் அனகோண்டா மாதிரி விறுவிறுப்பான காட்சிகளோ , ஜூராசிக் பார்க் போல ஒளிப்பதிவில் ஜால வித்தை புரியும் லொக்கேசன்களோ இல்லாதது பெரிய குறை .
சம்மர் லீவில் வந்திருக்கு . குழந்தைகளைக்கூட்டிச்செல்ல ஒரு ஜாலி படம்
ஈரோடு வி எஸ் பில படம் பார்த்தேன் ., 3 டி எஃபக்ட்ல இன்னும் நல்லாருக்குமுனு தோணுது
ரேட்டிங்க் = 2.5 / 5
Directed by | Gareth Edwards |
---|---|
Produced by |
|
Screenplay by | Max Borenstein |
Story by | David Callaham |
Based on | Godzilla by Toho |
Starring | |
Music by | Alexandre Desplat |
Cinematography | Seamus McGarvey |
Editing by | Bob Ducsay |
Studio | |
Distributed by |
|
Release dates |
|
Running time | 123 minutes[1] |
Country | United States[2] |
Language | English Japanese |
Budget | $160 million[3] |
Box office | $81,525,000 [3] |
0 comments:
Post a Comment