Monday, May 19, 2014

பாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர் பேட்டி

பாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர் பேட்டி

மணிசங்கர் அய்யர் 
 
 
பாஜக.வின் வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து என்றார் மயிலாடுதுறை தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் அய்யர். 


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்திற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வெள்ளிக்கிழமை வந்திருந்த மணிசங்கர் அய்யர் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அவருக்கும், அதிமுக வேட்பாளர் பாரதிமோகனுக்கும் 22,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்ட நிலையில் நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளி யேறினார். 


அப்போது அவர் ‘தி இந்து’விடம் கூறியது: 


“தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். வாஜ்பாய் காலத்தில் காங்கிரஸ் தோற்றபோது கூட வருத்தம் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தோல்வி கிடைத்திருப்பதுதான் வருத்தம். 1885-ல் இருந்து காங்கிரஸ் கட்சி காப்பாற்றி வந்த அமைதிக்கு ஆபத்து, நாட்டின் சித்தாந்தத்துக்கு ஆபத்து. 


இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் மோடிக்கு பணத்தை அள்ளி இறைத்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந் துள்ளனர். கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் இந்த தேர்தலில் பாஜக செலவழித்திருப்பதாக சொல்லப் படுகிறது. அந்த பணம் என்ன வெள்ளையா? ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற வர்கள் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?. எனது கணக்குப் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை. அத்தனை பேர் ஏற்றுக் கொள்ளாத மோடி எப்படி நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்? சிறிய பிரச்சினைகளைகூட ஊதிப் பெரி தாக்குபவர்களால் நாட்டில் எப்படி அமைதி நிலவச்செய்ய முடியும். பேராபத்தாகத்தான் எதுவும் முடியும். 



தற்போது வெற்றிபெற்றுள்ள பாரதி மோகன் டெல்லிக்குப் போவ தால் ஒன்றுமே பலன் கிடைக்கப் போவதில்லை. என் கணக்குப்படி சட்டமன்ற தேர்தலுடனே சேர்த்து மக்களவைக்கும் தேர்தல் நடக்க லாம்” என்றார் மணிசங்கர் அய்யர். 


  • seliyan  
    போபர்ஸ் தொடங்கி 2ஜி ,நிலக்கரி என காங்கிரஸ் சாதனைகளையும்,பரம்பரை மன்னராட்சி கற்பனைகளையும் எவ்வளவு காலம்தான் மக்கள் பொருத்துக்கொண்டிருபார்கள்
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • gnanavel.s Shanmugam at Govt. of Puducherry 
    பொதுவாக தமிழக காங்கிரசுக் காரர்கள் (இப்போதுள்ளவர்கள் ) தமிழர் ,தமிழகம் பற்றி சிந்திக்காமல் கட்சியைப் பற்றியே சிந்தித்ததால்தான் , தமிழகத்தில் காங்கிரசு ஜீரோ ஆனது! இனியாகிலும் தமிழர்களே தமிழகத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்! நல்லது நடக்க !!!1!!!!!!!!!
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • n.mathivanan  
    நாட்டை பிடித்திருந்த இருள் நீங்கி விட்டது.பீடை ஒழிந்தது.மீனவர்களுக்கும் தமிழர்களுக்கும் இழைத்த கொடுமைக்கு மக்கள் தந்த பரிசு இது.இவர் சென்று கிழித்தது இருக்கட்டும்.நீங்கள் என்ன கிழித்தீர்கள் ?நாடு pizhaiththathu உங்களிடமிருந்து.
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sinbad Arumugam  from Singapore
    உங்க பெயரில் இருக்கும் சாதியை எடுத்து விட்டு வாரும் பழைமைவாதி அவர்களே நாட்டை நல்லவர்கள் பார்த்துக்கொள்வர் .
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Srinivasan Bhargavan at Enjoying Retirement from Reston
    ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்!!! வாக்கு அளித்த மக்களின் எண்ணிக்கை எப்போதெல்லாம் அதிகமாக இருக்கின்றதோ அதுவே தற்போது ஆளும் கட்சி மீது உள்ள அதிருப்தியை கண்கூடாக தெரிவிக்கின்றது.மேலும் காலை வெகு சீக்ரம் ஒட்டு அளிக்க மக்கள் வந்தால் அவர்களது ஆவேசம் மற்றும் எதிர்ப்பும் (ஆளும் கட்சிக்கு ) அதிகம் என அறியவும்
    about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • spr  from Lakeville
    39 சீட்டுகளிலும்
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vasudevan Venugopal  
    உங்கள் கட்சியின் ஆட்சியினால் இந்தியாவுக்கு ஏற்படாத ஆபத்தா மோதியின் ஆட்சியினால் ஏற்பட்டுவிடப் போகின்றது? காங்கிரசின் உலகறிந்த கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிப்பதைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா? "சிறுபான்மையினர் மோதிக்கு ஓட்டளிக்கவில்லை", "பாரதி மோகன் டெல்லிக்குப் போவதால் ஒன்றுமே பலன் கிடைக்கப் போவதில்லை" போன்ற வார்த்தைகள் உங்களைப்போன்ற ஒருவர் வாயிலிருந்து வரக் கூடியவைதானா? இருப்பினும் "1885-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி காப்பாற்றி வந்த அமைதி" என்ற உங்கள் ஜோக் நன்றாகவே இருந்தது!!
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • பொன்.முத்துக்குமார் Ponnambalam  
    . ஐ.எஃப்.எஸ் படித்திருந்தால் மட்டும் பத்தாது ஐய்யரே, நடைமுறை அறிவும் மக்களை புரிந்துகொள்ளும் திறனும் வேண்டும். இது எந்த எழவுமே இல்லாமல் எங்கள் மயிலாடுதுறையை துபாயாக்குவேன் என்று வாய் கிழிய பட்டா போட்ட வெத்துவேட்டு ஆசாமிதானே நீவிர். உமது திருவாயை இனி அழுந்த மூடிக்கொண்டு போய் வேறு வேலை (அப்படி ஏதாவது ஒன்றிருந்தால்) பாரும்.
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • parama Ram  
    ஒரு சாய்வாலா பிரதமராக வரலாமா என்று கேட்டவர். இப்போது மைய்லாடுதுறையில் சாயாக்கடை வைக்கலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார். இப்படிப்பட்ட அதி மேதாவிகளின் ஆணவத்துக்கு மக்கள் கொடுத்த மரண அடி இது.
    about 15 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
  • senthilkumar  from Noida
    நீங்கள் இது பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள்.தயவு செய்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
    about 16 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)
  • S.  from Chennai
    நாடே தங்களுடையது, இந்தியா என்றால் காங்கிரஸ்தான் என்று நினைத்து, நினைத்துப் பழகிப் போய்விட்டது, இந்த ஆளுக்கு! அந்த நினைப்பில்தான், காங்கிரசுக்கு ஆபத்து என்று சொல்ல நினைத்து, இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்லியிருக்கிறார்! மணி அய்யர்வாள், மோடி கொடுத்த மரண அடியில்,இந்தியாவையும், காங்கிரசையும் பிரித்தாகி விட்டது! மனதை தேற்றிக்கொண்டு, நிகழ் காலத்துக்கு வாரும்!
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • senthil kumar  
    மோடி ய எந்த அளவுக்கு எதிர்க்கின்றீர்களோ அந்த அளவுக்கு அவர் பலம் பெறுவார் .
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    மணி ஷங்கர் ஐயருக்கு தேர்தலில் தோற்ற பின்பும் புத்தி வரவில்லையே?
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Varadhu  from Bangalore
    இந்த மாதிரி பேசிதான் மரண அடி வாங்கினீர்கள் .அடுத்த தேர்தலில் நீங்கள் பேச வேலையே இருக்காது .ஏனெனில் மோடி அதற்குள் உங்கள் முகத்தில் தன் செயல் திறனால் கரியை பூசிவிடுவார்.உம்மை போன்ற அரசியல் வாதிகளுக்கு அடுத்த தேர்தலில் வேலையே இருக்காது.
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • A.SESHAGIRI  from Sulur
    என்ன ஒரு துடுக்குத்தனமான பேட்டி.இவ்வளவு பட்டும் உமக்கு இன்னும் புத்தி வரவில்லையே !
    about 17 hours ago ·   (4) ·   (2) ·  reply (0)
    senthil kumar  Up Voted
  • rramamurthy  from Chennai
    தமிழர்களை சிறிதும் மதிக்காத ஒரு கட்சிக்கு வோட்டே வீண். காங்கிரஸ் கட்சி தனது நடைமுறைகளை பரிசீலிக்க வேண்டும். ஒரு பாரம்பரிய கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர். அதை விடுத்து பிஜேபியை அல்லது மோடியை பழிப்பது சரியில்லை மணி சங்கர் அமைச்சராய் இருந்த சமயத்தில் பல திட்டங்களை செயல் படுத்தினார்கள். தொழிலதிபர்களை கண்டு அச்சபடாமல் செயலாற்றுபவர். இருப்பினும் மக்கள் வாக்களிக்கவில்லை. இதன் காரணத்தை அவரே நன்கறிவார்.
    about 17 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • sadhasivasaravanan  from Salem
    நிச்சயம் மோடியால் இந்தயாவில் உள்ள நல்ல ஒற்றுமைக்கு பல ஆபத்து வர வாய்ப்பு உள்ளது.அதற்கு காரணமும் நீங்களும் தான்.இப்போது இந்த அமைதியான இந்தியாவில் ராமர் கோவில் காட்டினால் கலகம் உருவாக வாய்ப்பு உள்ளது. அவசியம் ராமர் கோவில் தேவையா?.மோடியா சில இடங்களில் வங்கதேச மக்களை வெளியாரா சொல்லவது என்ன நீயாம்?.
    about 17 hours ago ·   (6) ·   (5) ·  reply (0)
  • rgg  from New York
    காங்கிரசின் மாபெரும் தோல்வியும், மணியின் மாபெரும் தோல்வியும் இன்னும் இவர் மண்டையில் ஏறவில்லை, இவருடைய மடமையும் குறையவில்லை... மணி சங்கர் ஐயரே, தயவு செய்து வீட்டுக்கு போங்க சார்... நாடு கொஞ்சம் உருப்படட்டும்...
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Mohan Ramachandran at I am doing my own business 
    அய்யர் ஆரம்பித்தார் . "If Modi wants to Sell tea Congress will find a place for him". ஆணவத்தின் உச்ச கட்ட பேச்சு .மோடியை தனிப்பட்ட முறையில் திட்ட திட்ட கோடி கோடி வாக்குகளாக அவருக்கு குவிந்தது .அவருக்கு அணைத்து தரப்பு மக்களும் வாகளிதனர்.மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் கட்சி நடத்தியவர்கள் படு தோல்வி அடைந்ததே இதற்க்கு சான்று .மேலும் இதையே சொல்லி காலம் தள்ளாதீர்கள் .எப்படி இருந்த காங்கிரஸ் இன்று இப்படி ஆகி விட்டது .அதல பாதாள வீழ்ச்சி அல்லவா .பரம்பரை ஆட்சி,ஒரு வார்ட் செயலாளரை நியமிக்க வேண்டுமென்றாலும் அன்னை சோனியாவிடம் டெல்லியில் அனுமதி பெற்றே நியமிக்கும் அடிமைத்தனம்.கட்சிக்கும் உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கும் தலைமைக்கும் தொடர்பே இல்லாத நிலை .டெல்லியை நாளும் அண்டி நிற்பது ,மாநில அளவில் தலைவர்களை வளர விடாமல் அவர்கள் எந்நாளும் டெல்லியை அண்டி நிற்பது இவைகள் தான் சில முக்கிய காரணம் .இடம் போதாது என்பதால் சுருக்குகிறேன்
    about 18 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • sridhar  from Chennai
    இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் மோடிக்கு பணத்தை அள்ளி இறைத்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந் துள்ளனர். கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் இந்த தேர்தலில் பாஜக செலவழித்திருப்பதாக சொல்லப் படுகிறது. அந்த பணம் என்ன வெள்ளையா? ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற வர்கள் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?. எனது கணக்குப் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை. அத்தனை பேர் ஏற்றுக் கொள்ளாத மோடி எப்படி நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்? சிறிய பிரச்சினைகளைகூட ஊதிப் பெரி தாக்குபவர்களால் நாட்டில் எப்படி அமைதி நிலவச்செய்ய முடியும். பேராபத்தாகத்தான் எதுவும் முடியும். பாவம் மணிசங்கர் ஐயர் இந்தியா என்ன தூங்கிட இருக்கு வருமானவரி துரயி,தேர்தல் ஆணையம் , என்ன சும்மவா இருகிங்க 70,0000 லக்சம் மேலா செலவு செய்த நிலையில் மக்கள் எல்லாருக்கும் தெரியும் இது ஜனநாயக நாடு ஜனநாயக படி தான் நடக்குது
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • V.Shanmuganathan  from Mumbai
    திரு.மணிசங்கர் அவர்கள் கூறிய கருத்துக்கள் உண்மையிலும் உண்மை,எனினும் ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க.எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை தெரிந்து அப்புறம் கருத்து தெரிவிக்கலாம்,அதுதான் ஜனநாயகத்தின் மரபு.
    about 19 hours ago ·   (0) ·   (2) ·  reply (0)
  • saravanan  from Bangalore
    இந்த பயத்தை தான் தேர்தலில் நீங்கள் காட்டினீர்கள். மக்கள் உங்கள் கூற்றை அறவே நிராகரித்து விட்டனர். பயம் காட்டுவதை நிறுத்துங்கள். இங்கே பிறந்த அனைவரும், எந்த மதம்-இனமாக இருந்தாலும், இந்த மண்ணின் மைந்தர்கள் தான். உள்நாட்டு சட்டம் ஒழுங்கை காக்கும் முழு பொறுப்பு மாநில அரசுக்கு தான் உண்டு. நடுவண் அரசுக்கு அல்ல. ஆக்கப்பூர்வமான யோசனைகள் ஏதும் இருந்தால் கூறுங்கள். இல்லை, அமைதியாக இருங்கள். டீ-கடை காரர் என்ற ஏளன பேச்சுக்கு மோடி கொடுத்த பதில் ஒன்றே போதும். உங்களை நீங்களே மேலும் சிறுமை படுத்திக்கொள்ள வேண்டாம்
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • selvanayagam  from Coimbatore
    மணிசங்கர் ஐயர் அவர்களே, மோடி அவர்கள் டி விற்றார் என எகத்தாளமாக இகழ்ந்தீர்களே அதன் பலனைத்தான் இப்பொழுது மண்ணைக் கவ்வி அனுபவிக்கிறீர்கள். இஸ்லாமியர்கள் வோட்டு இல்லாமலா உ பி யிலும் பீகாரிலும் BJP அமோக வெற்றி பெற்றுள்ளது...? காதில் பூ சுத்துவதை விட்டு விட்டு எதாவது நன்மை செய்ய முடியுமா என்று பாருங்கள் .....ஐயர் ..உமது காங்கிரீஸ் கட்சி கிழித்த சாதனையால் ..இன்று எந்த பக்கத்து நாடுகளும் இந்தியாவை மதிபதில்லை தெரியுமா ? அல்லது தெரியாத மாதிரி நடிகிறீங்களா?
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • ponnaiah  from Tuticorin
    உண்மையிலும் உண்மை
    about 20 hours ago ·   (1) ·   (4) ·  reply (1)
    Mohan Ramachandran  Down Voted
    • rgg  from New York
      "பாஜகவால் ஆபத்து" என்று பாஜகவால் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்விய மணி சங்கர ஐயருக்கு தெரிந்த "ஞானம்", பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட 17 கோடிப் பேருக்கு தெரியாமல் போய் விட்டதே... நீங்க ரொம்ப அறிவாளிங்க.. கொஞ்சம் ஒய்வு எடுத்துகங்க, அப்புறமாவது தெளிவு கிடைக்குதான்னு பார்க்கலாம்.. :)
      about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Palani  
    காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் பேராபத்து . மக்கள் அதிலிருந்து தப்பித்ததே பெரும் பாக்கியம்.
    about 20 hours ago ·   (9) ·   (0) ·  reply (0)
    Indian   Up Voted
  • Ranga  
    இஸ்லாமியர்கள் வோட்டு இல்லாமலா உ பி யிலும் பீகாரிலும் BJP அமோக வெற்றி பெற்றுள்ளது...? காதில் பூ சுத்துவதை விட்டு விட்டு எதாவது நன்மை செய்ய முடியுமா என்று பாருங்கள் .....
    about 20 hours ago ·   (6) ·   (2) ·  reply (1)
    Ranga   Up Voted
    • raj N  from Bangalore
      அருமை ! காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 வருடங்களில் தான் பூ சுற்றினார்கள் என்றால் இனியும் பூ சுற்றி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று என்னும் இவரைப்போன்றவர்கள் பேசுவதற்கு ஒரு யோகியதையும் இல்லை என்பது கூட புரியாமல் பேசுகிறார் .
      about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • SARAVANANA madras  from Chennai
    நீங்கள் சொல்வதைஎல்லம் வைத்து பார்க்கும்பொழுது என் கணக்குப்படி உங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய சங்கு ஊதிவிட்டது (கடவுளுக்கு நன்றி) இல்லையென்றால் திரும்பவும் ஒரு காங்கிரஸ் அதன் கூட்டாளி திமுக அப்புறம் என்ன நடக்கும் என்று நான் சொல்லி இங்கே தெரியவேண்டியதில்லை இனியும் உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் பேசாமல் அதிமுக அல்லது பிஜேபிக்கு தாவிடுங்கள் இல்லையென்றால் ஒரு நல்ல மருத்துவரை பாருங்கள் .
    about 21 hours ago ·   (8) ·   (0) ·  reply (0)
    E JAGANNATHAN  Up Voted
  • gurumurthy-hyderabad  
    இவர் ஒப்பிடும் 1885 காங்கிரஸ் வேறு, 2014 காங்கிரஸ் வேறு. இவர் நல்ல மனிதர், புத்திசாலிதான். ஆனால் இவர் தேர்தலில் தோற்றதினால் ஏற்ப்படும் விரக்தி இவரை இப்படி பேச வைக்கிறது.
    about 21 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • Raman  from Chennai
    சீ சீ. இந்த பழம் புளிக்கும்.
    about 22 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
    navin   Up Voted
  • Subramanyam  
    என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி ! இவரை விடவும் அகங்காரமான, ஆணவம் பிடித்த ஒரு மனிதரைப் பார்ப்பது அபூர்வம். தன்னை விடவும் ஒரு அறிவாளி இருக்க முடியாது, மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற எண்ணத்திலேயே இவர் எப்போதும் பேசுவார். இப்பொழுதும் அவ்வாறே பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்குகள் பதிவான இடத்தில் வெறும் 57000 வாக்குகள் மற்றுமே பெற்று டெபொசிட் இழந்த இவருக்கு எவ்வளவு செருக்கு இருந்தால் வெற்றி பெற்ற வேட்பாளரை வாழ்த்த மனமில்லாமால், 'இவரால் ஒன்றும் பலன் கிடைக்கப் போவதில்லை' என்று கூறுவார்? காங்கிரஸ் என்றாலே 'ஆணவம்' என்பது மறுபடியும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர் மோடி பற்றிப் பேசத் தகுதி இல்லாதவர் என்பதால் அவர் பற்றிய இவர் கருத்துக்கு மதிப்பளித்து பதிலடி கொடுக்க விரும்பவில்லை.

 நன்றி -த இந்து

0 comments: