தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்: கருத்துக் கணிப்பு தகவல்
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் இருந்து 28 இடங்கள் வரை அதிமுக கைப்பற்றும் என சி.என்.என். - ஐ.பி.என். சேனல் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த
நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை பல்வேறு
தொலைக்காட்சி செய்தி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன.
சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா
தலைமையிலான அதிமுக 22-ல் இருந்து 28 இடங்களைக் கைப்பற்றும் என்று
சி.என்.என். - ஐ.பி.என். சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி 7-ல் இருந்து 11 இடங்களிலும், தேமுதிக, பாமக, மதிமுக
உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
4-ல் இருந்து 6 இடங்களையும் கைப்பற்றும் என அந்தக் கருத்துக் கணிப்பு
முடிவு தெரிவிக்கிறது. தனித்துப் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் ஒரு இடத்தை கூட
வெல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக 39 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளையும்,
பாஜக கூட்டணி 16 சதவீத வாக்குகளையும் பெறும் என்று சி.என்.என். - ஐ.பி.என்.
கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள்
இதனிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய
கருத்துக் கணிப்பில், அதிமுக 31 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக
கூட்டணி 7 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணி ஓர் இடத்தில்கூட வெல்லாது என்றும், காங்கிரஸ் ஓர் இடத்தைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - அட்டவணையில்:
சி.என்.என். - ஐ.பி.என்:
அதிமுக: 22 - 28
திமுக கூட்டணி: 7 - 11
பாஜக கூட்டணி: 4 - 6
காங்கிரஸ் - 0
டைம்ஸ் நவ்:
அதிமுக - 31
திமுக கூட்டணி - 7
காங்கிரஸ் - 1
பாஜக - 0
தொடர்புடையவை
நன்றி - த ஹிந்து- sadhasivasaravanan from Coimbatore
அதிமுக அதிகம் ஆதிக்கம் செல்லுதி சாதிக்கும்.பிஜிபி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாதிக்கும்.பாமக வேறு கட்சி மாறும்.மதிமுக இனி பாடம் கற்கும்.விஜயகாந்த தனித்து சில திணித்து விட படுவர்.நிச்சயம் இது அதனையும் தேர்தல் முடிவு பிறகு நடக்கும்.திமுக கதி பாதி அதன் விதி.தேர்தல் கருத்து கணிப்பு என்பது சில ஊடக,மதவாத அரசியல் கட்சி திணிப்பு.உண்மை என்பது மக்கள் மனசாட்சி மட்டும் தான்about 18 hours ago · (5) · (1) · reply (0)
Subash Up Voted - manikandan Nandhu at Student from Chennai
பிஜேபி பார்ட்டி அதிக இடங்களில் வெற்றி பெரும்about 19 hours ago · (4) · (4) · reply (0) - sivaagori from Mumbai
இந்த கருத்துக் கணிப்பு உண்மையானால், பணம்தான் வெற்றியை தீர்மானிக்கும் எனும் கசப்பான உண்மையை அரசியல்வாதிகள் உணர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பணநாயகத்தை அரங்கேற்றுவார்கள், பாவம் மக்கள் # எங்கள் தொகுதியில் அ.தி.மு.க ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தார்கள்about 19 hours ago · (3) · (1) · reply (0) - n krishnamoorthy from Thiruvarur
தமிழக பி ஜே பி சரியானத் தலைமைல்யில் ஓர் ஆண்டுக்கு முன்பிருந்தே பனி துவக்கி இருந்தால், 8~10 இடங்கள் கிடைத்திருக்கும். 2015 மாநிலத் தேர்தலுக்கு இப்போதிருந்து முனைப்புடன் செயல் பட்டால் பெரிய எய்தி கட்சியாக வைப்பு இருக்கிறது. கோமாளிக் கூட்டணிக் கூடாது.about 19 hours ago · (1) · (1) · reply (0) - tramakrishnan from Richmond
முந்தைய கணிப்பு 20 தொகுதிகளை அதிமுகவுக்குக் கொடுத்தது. இப்போது அவை 22 - 31 தொகுதிகள் என்கின்றன. வாக்குகள் எண்ணப் பட்ட பிறகு கணக்கு 40 க்கு 40 ஆகும். காங்கிரசுக்கு இந்தியா முழுதும் -0- என்பது உண்மை ஆகும். "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது திமுக இளவல்களுக்கு மட்டு மன்றி திருவாளர்கள் சிதம்பரம்-வாசனுக்கும் பொருந்தும். திரு. சோ ராமசாமி 'தமிழ் நாட்டுத் தேர்தல்கள் ஈழத் தமிழர் பிரசினையால் பாதிக்கப் படுவதில்லை என்று மீண்டும் அறிக்கை விடுவார். சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் பாஜக - வை விட்டு விலகி இது வரை சேர்ந்திராத கட்சிக்குத் தாவுவார். அல்லது, புதிய ஒரு நபர் கட்சியை ஆரம்பித்து, தன்னுடைய பழைய ஒரு நபர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உச்ச நீதி மன்ற வாயில் படியில் அலுவலகம் துவங்குவார். தேர்தல் பண்டிதர்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டு வாழ் நாள் முழுதும் "தமிழகத் தேர்தல்" ஊக மேதைகள் என்று புகழ் பெறுவர்!about 19 hours ago · (8) · (2) · reply (0)
vijai Up Voted - Senthilkumar Senthilkumar
பிந்தைய கருத்து கணிப்பு எவ்வளவு உண்மை என்பது தெரிய வில்லை ஆனால் தமிழகத்தில் மோடி அலை வேலை செய்ய வில்லை என்பது உண்மையாகிறது....... காத்திருந்து பார்போம் இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது.......about 20 hours ago · (6) · (5) · reply (0)
Subash Up Votedselvakumar Raman Down Voted - Sundaram
திமுக காங்கிரஸ் இரண்டுமே இந்த முறை டெல்லி இக்கு போககூடாது என்பதே தமிழ் மக்களின் ஒரு மித்த விருப்பமாகும். தமிழ் இன அழிப்பிற்கு துணை போன அணிகளுக்கு ஒரு போதும் இனி தமிழ் மக்கள் அதரவு நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள். தளபதி கூட நிதர்சனகளை புரிந்து கொள்ளமால் திமுக வை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற பாங்கில் நம்பிக்கொண்டு இருபது வியப்பை தருகிறது .கலைஞர்,தெரிந்தே செய்த வரலாற்று பிழையை, தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் -இதற்கு ப்ரியாசித்தத்தை தளபதி தேடவேண்டும்! -சுந்தரம்about 20 hours ago · (17) · (17) · reply (1)
Senthilkumar Senthilkumar Up Votedvaduvooraan Down Voted- vaduvooraan from Chennai
இவ்வளவு ஊழல் செய்து மக்களை ஏமாற்றிய கூட்டம் என்பது தெரிந்தும் இன்னும் அவருடைய பெயரை குறிப்பிடாது 'தளபதி'..'தளபதி' என்று மாய்ந்து போகிறீர்களே, உங்களைப் போன்ற ஆதரவாளர்கள் இருப்பதால்தான் உங்கள் தளபதி நிதர்சனங்களை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார், புரிகிறதா?about 19 hours ago · (3) · (0) · reply (0)
- siva from Chennai
எப்படியோ தமிழ் மக்கள் திரு மோடிக்கு 'நல்ல ஆதரவு' கொடுத்து உள்ளனர்..தமிழன் ஏமாறவில்லை..about 20 hours ago · (3) · (3) · reply (0)
Senthilkumar Senthilkumar Up Votedn krishnamoorthy Down Voted - Pandiyan Chinnaiyan at South Central Railway-S.C.R
ஆக்க பொறுத்த நாம் ஆற பொறுக்கவேண்டும். திராவிட கட்சிகள் பெரும் வெற்றியால் அக்கட்சிகளுக்கு வேண்டுமானால் பலன் பெற கூடும்.தமிழ் நாட்டுக்கு ஏதும் பலன் கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.மத்தியில் பூரண மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்து நிலையான அரசாங்கம் தந்தால்தான் மக்களுக்கு நல்லது.எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும் மோதல் போக்கை கைக்கொள்ளாமல்,அரசியல் முதிர்ச்சியுடன் அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து மக்களாட்சியை மக்களுக்காக நடத்தினால் நாடும் நன்றாக இருக்கும்.இந்தியாவின் மதிப்பும் மறுபடியும் பாரத்தின் புகழ் ஓங்கும்.about 21 hours ago · (2) · (1) · reply (0) - selvakumar Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research from New Delhi
கருது கணிப்பு பொய்க்கும்,about 21 hours ago · (2) · (2) · reply (0)
selvakumar Raman Up VotedSenthilkumar Senthilkumar Down Voted - Premnath Krishnan Managing Partner at BAKM lifestyle from Bangalore
என்கிட்டே கேக்கவே இல்ல.. அப்புறம் எப்படி முடிவு பண்ணிங்கabout 21 hours ago · (5) · (0) · reply (0)
Senthilkumar Senthilkumar Up Voted - D.Anandaraj from Mumbai
பண நாயகம் வெற்றி அடைவதில் வியப்பு என்ன? நீதிமன்றமே அடிபணியும் போது மக்கள் சலனம் அடைய மாட்டார்களா?about 21 hours ago · (3) · (3) · reply (0)
Senthilkumar Senthilkumar Down Voted - Thirumurthy Yogaamurthy Technician at TNEB from Bangalore
30 அதிமுக வெல்லும்about 21 hours ago · (5) · (5) · reply (0)
THANGAMANI Down Voted - tamil
வரவேற்க வேண்டிய தீர்ப்பாய்.. தெரிகிறது...இந்த தேர்தலுக்கு பிந்திய... கணிப்பு....ஆயினும்...திமுக வுக்கு இந்த இடங்களே... அதிகம்...மக்கள்...இன்னும் தெளிவடைய வில்லையோ... என்றே..தோன்றுகிறது...ஏனெனில்..திமுக வுக்கு மக்கள் தரும்.. அங்கீகாரம்...ஒரு போதும் தமிழக நலனுக்கு பயன் படாது.... இதுவே...கசப்பான உண்மை....about 21 hours ago · (17) · (21) · reply (0)
THANGAMANI Down Voted
0 comments:
Post a Comment