Tuesday, May 06, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - மாஸ் ஹீரோ சந்தானம் கிளாஸ் பேட்டி

எனக்கு நான்தான் போட்டி: நடிகர் சந்தானம் பேட்டி 

 

 

காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் ‘வல்ல வனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துக் கான பத்திரிகையாளர் சந்திப்பு ஞாயிற் றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம், படத்தின் இயக்குர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த் விபில் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் கூறியதாவது: 



காமெடி, ஹீரோ எது கஷ்டம்? 


 
ஹீரோதான் ரொம்பவே கஷ்டம். காமெடியில் யோசிப்பது, பஞ்ச் டயலாக் மட்டும்தான் இருக்கும். நாயகனாக நடிக்கும்போது டான்ஸ், ஆக் ஷன், செண்டிமெண்ட் என்று எல்லாவற்றையும் ஆடியன்ஸ் சரியாக எதிர்பார்ப்பாங்க. நாயகன் அவதாரம் எடுக்கும்போது அதையெல்லாம் கொஞ்சமும் சொதப்பாமல் சரியாகக் கையாள வேண்டும். 



கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் யாருடைய காமெடி சிறந்தது?

 
அதை நீங்க எல்லோரும்தான் சொல்ல வேண்டும் 


இயக்குநர் ராஜ்குமாரை நடிக்க வைத்திருக்கிறீர்களே? 


 
பவர் ஸ்டாரைப்போல சினிமாவுக்குள் வந்ததுமே இவரையும் சரியான காமெடிக்கு பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். 


தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்கப்போகிறீர்களாமே? 


 
டி.வி. ஷோவில் இருந்து காமெடி யனாக வந்தேன். அப்புறம் ப்ரொடக்‌ ஷன் கம்பெனி தொடங்கினேன். அதன்பின் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இயக்குநர் ஆக வேண்டும் என்றாலும் நிச்சயம் அதையும் செய்வேன். எப்படியோ சினிமாவில் பயணிக்க வேண்டும். 


விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவர்களில் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார்? 


 
இவங்க எல்லோருமே எனக்கு அண்ணன்கள்தான். என்னைவிட கொஞ்சம் சீனியர்ஸ் என்பதால் அவர்களை அண்ணன்களாகவே நினைக்கிறேன். இளம் ஹீரோக்கள் ஆர்யா, ஜீவா, சிம்பு, உதயநிதி என்று பலரும் நான் நாயகனாகப்போகிறேன் என்றதும் டான்ஸ், ஹேர் ஸ்டைல், சண்டை வரைக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தார்கள். 


உங்களுக்கு போட்டி யார்? 

 
எப்போ நான் ஓ.பி. அடிக்க ஆரம்பிக்கிறேனோ அப்போ ரசிகர்களே என்னை ஓரங்கட்டிவிடுவார்கள். உழைக்கும் வரை நான் நம்பர் ஒன். வாழ்க்கையில் எப்பவும் உழைத்துக் கொண்டே இருக்கவே சிலர் விரும்பு வார்கள். அப்படித்தான் நானும். எனக்கு நான் தான் போட்டி. 


வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என்று காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசை கட்டி வருகிறதே? 


 
இப்போ குழந்தைகளுக்கு விடு முறை காலம். குழந்தைகள் கொண்டாடும் நேரத்தில் காமெடி படங்கள் தொடர்ந்து வருவது நல்லது தானே. இவ்வாறு சந்தானம் கூறினார். 


நன்றி - த இந்து 



  • vijay  
    Do it Better U Will Get Next Step go ahead
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • விமலா  
    எல்லாம் சரி -கொஞ்சம் அல்ல நிறையவே காமடியில் நல்ல வார்த்தைகளை பயன் படுத்துவது மிக குறைந்து போய் விட்டது -டபுள் மீனிங் /கெட்டவார்த்தைகள் மலிந்து போய் விட்டன. அதில் சந்தானமும் ஒன்று --இப்போ குழந்தைகளுக்கு விடு முறை காலம்-ஒழுங்காக பேசுங்கள் --விமலா வித்யா
    about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Narumanam  from Chennai
    சிரிப்பு உண்டாகுமாறு நடிப்பதே ஒரு நடிகனின் திறமைக்குச் சான்று. சந்தானம் அதில் சேராதவர். பேச வேண்டாம். முக பாவமே போதும் என்னும் அளவுக்கு, சந்திர பாபு, தங்கவேலு, கவுண்டர், செந்தில், நாகேஷ் போன்றோர் அந்த வரிசையில் உள்ளவர்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் விஞ்சிய ஒருவர்தான் வைகைப் புயல் வடிவேலு. துப்பறியும் நிபுணராக மின்சாரத் தொடர்வண்டியில் பயணிக்கும் விஜயின் பின்னல் ஒரு பல்லில்லாது கிழிந்த உடையில் குடுமியோடு வந்து "அய்யா!" என்று அவர் கையேந்தி பிச்சை கேட்கும் அந்த பாவனையை சந்தானம் அடைய ஒருபோதும் முடியாது. சில தனிமொழி வசனங்களி ( soliloqui ) தனக்குத்தானே புயல் பேசும் கலையழகே தனிதான். போதாக் குறைக்கு புயலிடம் உள்ளது ஒரு பெரிய வல்லாயுதம். அது அவருடைய குரல். அதற்காகவே அவர் கலைக்குருசிலின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றவர். "டேய், என் குரல் உன்னிடம் எப்படியடா வந்தது?" என்று அவரே வியந்தாராம். புயல் இல்லாத காலத்தில் சந்தானம் சர்க்கரையாகிவிட்டார். அவ்வளவுதான். இப்போதே சந்தானத்தின் ஸ்டாக் எம்டி. இவருக்குப் பொட்டிஎன்று எவரும் வரவே மாட்டார்கள். அந்த அளவுக்கு சினிமா சிரிப்பு தரமிரங்காது.
    about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • piramanayagam Nayagam  
    கவுண்டமணி, வடிவேலு இவர்களோடு சந்தானத்தை ஒப்பிடாதீர்கள். காமெடி என்ற பெயரில் போரடிக்கும் ஒரு ஆள்.கதாநாயகனாக நடித்தால் படம் எப்பிடி இருக்கும். சினிமா உலகை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.


0 comments: