மாமூல் மசாலாப்படங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு அவ்வப்போது அபூர்வமான கலைப்படங்கள் வியாபார ரீதியான அம்சங்களுடன் மின்னி மறையும் . அப்படிப்பட்ட அபூர்வமான படங்களில் தாராபுரம் பெண் இயக்குநர்-ன் இந்தப்படமும் இடம் பிடித்ததில் மெத்த மகிழ்ச்சி .
ஒரு கிராமம்.அதுல ஆறாவது படிச்ச 3 பசங்க,3 பேரும் புத்திசாலிங்க , தனித்திறமைகள் உள்ளவங்க.கிராமத்தில் ஒரு மழை நாளில் ஆத்தோரமா விளையாடிட்டிருக்கும்போது சலவைத்தொழிலாளியின் மனைவியை 4 பேர் கேங்க் ரேப் பண்றதைப்பார்த்துடறாங்க.அடுத்த நாள் ஊரே கூடி ஆத்தில் அடிச்சுட்டுப்போன பிணம்னு முடிவு கட்டிடறதைப்பார்த்து குற்றவாளீகளை ஆதாரத்துடன் பிடிக்க முடிவு பண்றாங்க.
ரிட்டயர்டு மிலிட்ரி தாத்தா ஒருவர் மிலிட்ரில இருந்து கொண்டு வந்த தொலை தொடர்புக்கருவி 1 இவங்க கைக்கு சிக்குது.அதை வெச்சு பீப்பி எஃப் எம் அப்டினு அங்கீகாரம் இல்லாத ரேடியோ உருவாக்கி தினமும் மாலை 4 மணிக்கு கிராமத்து மக்களுக்கு ஒரு புரோகிராம் பண்றாங்க .அதுல அந்த ஊர் மக்களின் நடைமுறை வாழ்க்கை , கிண்டல் கேலியோட சொல்லி மக்கள் மனம் கவர்றாங்க .
க்ளைமாக்சில் அந்தக்கொலையாளிகளை அந்த எஃப் எம் மூலமாவே எப்படி பிடிக்கறாங்க என்ப்தே கதை .
சும்மா சொல்லக்கூடாது , இயக்குநர் இது முதல் படம் என்ற தடுமாற்றமோ தயக்கமோ ஒரு சீனில்; கூட காட்டாம பிரமாதமா திரைக்கதை எழுதி இயக்கி இருக்காரு . சின்ன வயசில் சுபா, பி கே பி , சுஜாதா நாவல்கள் அதிகம் படிச்சிருப்பார் போல . க்ரைம் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் சீன் பை சீன் நாவல் படிப்பது போலவே இருக்கு
சின்னப்பசங்க எப்படி இந்த மாதிரி செய்ய முடியும் ? என்ற கேள்வியே எழாத வண்ணம் இவர் அமைத்திருக்கும் திரைக்கதை புருவங்களை வியப்பால் உயர்த்தச்சொல்லும்
இயக்குநர் மிஷ்கின் , சமுத்திரக்கனி ,புஷ்பா -காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குநராக 7 வருடங்கள் பணி ஆற்றிய ஹலீதா சாமீம் தாரபுரத்துக்காரர் என்பதால் படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க தாராபுரம், பொள்ளாச்சியில் முடித்திருக்கிறார் . இவர் எலக்ட்ரானிக்ஸ் ல் டிகிரி முடித்திருப்பதால் அதே சப்ஜெக்ட் நாலெட்சை யூஸ் பண்ணி திரைக்கதை அமைத்திருக்கிறார். டி ஆர் பாணியில் இவரே எடிட்டிங்க் , கலரிங்க் , பாடல்கள் ,கதை , திரைக்கதை , வசனம், இயக்கம் என 7 பணிகளை செய்திருக்கிறார்.இவருக்கு ஒரு அழகிய பூங்கொத்து வரவேற்பு
3 பசங்களோட அறிமுகக்காட்சி , அவங்களுக்குள் ஏற்படும் சினேகம் , பின் ஒரு சிறுமியால் ஏற்படும் பிரிவு என சின்னப்பசங்க உலகத்தில் புகுந்த மாதிரி ஒரு குட் ஃபீல் வருது . அபாரம்
3 பசங்க நடிப்பும் பிரமாதம் .குறிப்பா ஆரண்ய காண்டம் , வெயில் படத்தில் வந்த வசந்த் கலக்கறார். பிரவீன் கிஷோர் , கவுரவ் காலை இருவரும் அவருக்கு சளைத்தவர்கள் இல்லை என முதல் பட புதுமுகம் என்ற பயம் இல்லாமல் அசால்ட்டாக நடித்து அரங்கு நிறைந்த கை தட்டல் பெறுகிறார்கள்
வில்லன்களாக வரும் காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் 4 பேரும் நல்லா பண்ணி இருக்காங்க .கிராமத்து ஆட்களிடம் காணப்படும் முரட்டுத்தனம் அப்படியே கண் முன் நிறுத்தறாங்க
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. பசங்க 3 பேரும் சந்தையில் பொன் வண்டு விற்கும் காட்சியும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும்
2 பட்ட மரத்தில் காதலிக்குப்பிடித்த பட்டம் தனை பல கலரில் தொங்க விட்டு பட்ட மரத்தை பட்டம் மரமாக்கிய அழகியல் ரசனை கவிதையான காட்சி . பாரதிராஜா படத்துக்கு இணையான ஒளிப்பதிவு
3 க்ளாஸ் லீடரான பொண்ணு தினமும் இவங்க 3 பேரை போர்டில் எழுதி போட்டுக்குடுக்கும் போது ஒரு நாள் “ ஏம்மா இன்னைக்கு அவன் லீவ்” என கலாய்க்கும் இடம் . குறிப்பா ஸ்கூலில் நடக்கும் எல்லாக்காட்சிகளுமே கொண்டாட்டமான காட்சிகளே
4 வில்லனில் ஒருவன் மேரேஜ் ஆனவன் என்பதை அவ புதுக்காதலிக்கு தெரியப்படுத்த அவன் வீட்டின் முன் டயர் எல்லாம் போட்டு பஞ்சர் கடை போல் செட்டப் செய்து புதுக்காதலி மோகனா வரும் வழியில் பஞ்சர் ஆக்குவது,அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலாட்டாக்கள்
5 கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் எக்சாம் பேப்பர் அபேஸ் பண்ணி மரம் பூரா ஒட்ட வைத்த ஆர்ட் டைரக்சன் அபாரம்
6 வில்லன்கள் துரத்தும்போது ஓடி வரும் 3 சிறுவர்களூம் மரத்தில் மாட்டிய பட்டத்தை பிடிக்கவே வந்தார்கள் என டைவர்ட் செய்யும் காட்சி கை தட்டலை அள்ளியது
7 மதக்கலவர காச்ட்சிகளை அனிமேஷனில் காட்டியது . அது ஒரு சிறுகதை போல் பிரமாதமாக அமைந்தது
8 சுடர்க்கொடியை சுடர்மணி என மாத்தி க்கூப்பிட்ட பின் கோபித்த காதலிடம் இனி சுடர் மணி சம்பந்தப்பட்ட எந்த டிரஸ்ம் போட மாட்டேன் என கூறுவது ( இந்த சீனில் ட்விட்டரில் இருக்கும் சுடர்க்கொடி நினைவு வர்லை, நல்ல வேளை )
9 எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் வயசுக்கு வரும் பையனின் உணர்வை செம காமெடியாக , கவிதையாக சொல்லி இருக்கும் இயக்குநருக்கு ஒரு ஷொட்டு /. இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் இந்த சீன் வரவில்லை
10 லாலிபாப் ஆக வரும் வர்ஷினி , அகல்யா இருவர் நடிப்பும் கண்ணுக்குள் நிக்குது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. சம்பவம் நடந்ததை நேரில் பார்க்கும்போது அவர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள் சரி , ஏன் சத்தம் போட்டு ஊரைக்கூட்டலை? 3 பேரும் 3 திசையில் ஓடிப்போய் ஆட்களை வர வைக்கலாமே?
2 அந்த சின்ன கிராமத்தில் 3 பேரும் ரெகுலராக மாலை 4 மணிக்கு அந்த மலையில் போய் எஃப் எம் ஒலிபரப்புவதை யார் கண்ணிலும் மாட்டாமல் எப்படி செய்ய முடியும் ?
3 இடைவேளைக்குப்பின் காட்சிகள் ரொம்ப நீளம் , இன்னும் எடிட்டிங்க் பண்ணி இருக்கலாம். கடைசி 30 நிமிடங்கள் லேசாக போர் அடிக்குது
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஜெட் விமானம் , சாதா விமானம் என்னடா வித்தியாசம்?
ஜெட் விமானம் போற பக்கம் எல்லாம் குசு விட்டுட்டே போகும் . சாதா விமானம் சும்மா போகும்
2 பொன் வண்டு எப்படி டால் அடிக்குது பாத்தியா ? பி டி வாத்தியார் மண்டை மாதிரி
3 தலை நரைச்சு 4 மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே தத்துவம் சொல்ல வந்துடறாங்க
4 கண்ணும் காதும் உனக்கு அவுட்டு , நாக்கை மட்டும் நீட்டு
5 நீங்க என்ன பச்சா பாய்ஸா? \\
பின்னே வயசுக்கு வந்துட்டு வர்லைன்னா சொல்றோம் ?
6 வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் என்ன செய்யப்போறே ?
யாருக்குத்தெரியும் ?
7 நாங்க பெரிய ஆள் ஆனாலும் , நீ எப்பவும் இதே மாதிரி சின்னப்பொண்ணாவே இருக்கனும்
8 லைஃஃப் பாய் சோப் மட்டும்தான் ஆம்பளைங்க சோப், மீதி எல்லாம் பொம்பளைங்க போடுவது
உனக்கெல்லாம் 501 தாண்டா சரி ., டபுள் பர்பஸ்
9 உனக்காக வானவில்லையே வளைச்சுத்தருவேன்
தேங்க்ஸ், ஆனா அது ஆல்ரெடி வளைஞ்சுதானே இருக்கு?
சரி, நேராக்கித்தர்றேன் # பூவரசம்பீப்பீ
10 நீயே உன் மன்சை ஓப்பன் பண்ணிடு,இல்லாட்டி மத்தவங்க உன் மன்சை கிழிச்சு ஓப்பன் பண்ணற மாதிரி ஆகிடும் # பூவரசம்பீப்பீ
11 ஏம்மா , எல்லாரும் செத்துத்தான் ஆகனுமா?
12 ஏண்டி. என்னதா உனக்குத்தெரியாது ?
என்னைத்தான் உனக்குத்தெரியாது
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. மிக எளிமையான ,அழகான டைட்டில் டிசைன் # பூவரசம்பீப்பீ
2 பசங்க ,கோலிசோடா வரிசையில் சின்னப்பசங்க ராஜ்ஜியம் # பூவரசம்பீப்பீ
3 கலர் கோட்டிங் வெயில் வசந்தபாலன் பாணி ,பாடல் படமாக்கத்தில் அஞ்சலி மணிரத்ன
உற்சாகம்.அறிமுக இயக்குநர் தாராபுரம் தாரகை ராக்கிங் # பூபீப்பி
4 13 வயசுப்பையன் வயசுக்கு வரும் காட்சியை மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடாமல்
சூட்சுமமாய் உணர்த்தும் இயக்குநருக்கு ஷொட்டு # பூவரசம்பீப்பீ
சி பி கமெண்ட் -பூவரசம்பீப்பீ - அழகியல் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்ட மாறுபட்ட கிராமத்துப்பின்னணி த்ரில்லர் மூவி - விகடன் மார்க்=45 ,ரேட்டிங் = 3/5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =45
குமுதம் ரேட்டிங்க் =நன்று
ரேட்டிங்= 3 / 5
டிஸ்கி - வழக்கமா அட்ரா சக்க ல ஹீரோயின் ஃபோட்டோஸ் நிறைய போடுவோம், ஆனா இது சிறுவர்களுக்கான மழலை சினிமா. நோ ஹீரோயின் .ஆனா நமக்கு கொள்கை தானே முக்கியம்? அதனால இயக்குநரை ஹீரோயின் ஆக்கிட்டேன் . இந்தியாவிலேயே இது முதல் முறை . ஹி ஹி
டிஸ்கி 2 -
05/32-34-36.html
கரூர் கலையரங்கம் pic.twitter.com/IJnJ8WuNaK
டிஸ்கி - வழக்கமா அட்ரா சக்க ல ஹீரோயின் ஃபோட்டோஸ் நிறைய போடுவோம், ஆனா இது சிறுவர்களுக்கான மழலை சினிமா. நோ ஹீரோயின் .ஆனா நமக்கு கொள்கை தானே முக்கியம்? அதனால இயக்குநரை ஹீரோயின் ஆக்கிட்டேன் . இந்தியாவிலேயே இது முதல் முறை . ஹி ஹி
டிஸ்கி 2 -
அப்சரஸ் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/Track listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
No. | Title | Singer(s) | Length | |||||||
1. | "Gnayiru Dhinangalin (Version 1)" | Abhay Jodhpurkar | ||||||||
2. | "Angry Birds" | Ranjith, Aajeedh Khalique, Gautham | ||||||||
3. | "En Ulagam" | Karthik | ||||||||
4. | "Ko Ko Ko" | Aajeedh Khalique, Gautham, Vignesh, Iyshwarya, Swetha, Reagan | ||||||||
5. | "Enakkondrum Vaanveli" | Aajeedh Khalique | ||||||||
6. | "Gnayiru Dhinangalin (Version 2)" | Karthik | ||||||||
7. | "Theme Music" | Instrumental |
- Gaurav Kalai as Venu Kanna
- Pravin Kishore as Harish
- Vasanth as Kapil Dev
- Varshini as 'Lollypop'
- Agalya
- Kaali Venkat as Magudi
- Sai Hari as RS Shanmugam
- Sundar as Manjunathan
- Karthik as Muniyan
- Samuthirakani (Cameo appearance)[7]
Directed by | Halitha Shameem | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Produced by | Manoj Paramahamsa Sujatha Chenthilnathan |
|||||||||
Written by | Halitha Shameem | |||||||||
Starring | Gaurav Kalai Pravin Kishore Vasanth |
|||||||||
Music by | Aruldev | |||||||||
Cinematography | Manoj Paramahamsa | |||||||||
Editing by | Halitha Shameem | |||||||||
Studio | V Talkies Baby Shoe Productions |
|||||||||
Distributed by | SPI Cinemas | |||||||||
Release dates |
|
|||||||||
Country | India | |||||||||
Language | Tamil | அ |
1 comments:
விமர்சன வீரன் செந்தில் வாழ்க. . .
Post a Comment