Tuesday, May 13, 2014

செவ்வாய் கிரகத்தில் குடியேற கேரள பெண்கள் இருவர் தேர்வு!

பாலக்காடு: செவ்வாய் கிரகத்தில் குடியேற, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்தாண்டு பயிற்சிக்குப் பின், ௨௦௨௪ல் முதல் பயணம் துவங்குகிறது.

நெதர்லாந்து நாட்டை மையமாக கொண்டு செயல்படும், 'ஒன்ஸ் இன் மெனி லைப் டைம் ஆப்பர்ச்சூனிட்டி' என்ற அமைப்பு, 'மார்ஸ் வன்' எனும் போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தது. செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வமுள்ளவர்களின் பட்டியலை, இந்த அமைப்பு தயாரித்து வருகிறது.ஆபத்தான பயணம் என்பதை அறிந்தும், உலகம் முழுவதையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து, இந்த அமைப்புக்கு விண்ணப்பித்தனர். பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த லேகா, திரதா ஆகிய இரு பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின், இதில் 706 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 பெண்கள் உட்பட 44 இந்தியர்கள் இப்பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் பாலக்காட்டை சேர்ந்த திரதா மற்றும் லேகாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இணையதளத்தில் விளம்பரத்தை பார்த்து, இருவரும் விண்ணப்பித்துள்ளனர்.
Advertisement

பதிவு செய்த நாள்

12 மே
2014
01:01

பத்து ஆண்டு பயிற்சிக்கு பிறகு தயாராகும் இறுதி பட்டியலில், 24 பேருக்கு செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதிலிருந்து முதல் கட்டமாக, நான்கு பேர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். செவ்வாய் கிரகத்தில் 'மனித காலனி' அமைப்பதே, இத்திட்டத்தின் நோக்கம். ரூ.600 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் முதல் பயணம், வரும் 2024ல் நடைபெறவுள்ளது.கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியில், பிளஸ் ௨ முடித்து மேல்படிப்புக்கு காத்திருக்கும் திரதாவின் தந்தை பிரசாத், ஒரு ரயில்வே ஊழியர்; பாலக்காடு மாவட்டம் சித்துார் வடவனுாரை சேர்ந்தவர். ஆகாசவாணியில் பொறியாளராக பணிபுரியும் ராமகிருஷ்ணனின் வளர்ப்பு மகள் லேகா. பாலக்காட்டை சேர்ந்த இவர், மைக்ரோபயாலஜியில் பி.எச்.டி.,முடித்துள்ளார். இவரது கணவர் விமல்குமார் அயர்லாந்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.செவ்வாய் பயண திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து லேகாவும், திரதாவும் கூறுகையில், ''உலகின் கவனத்தை கவர்ந்த இத்திட்டத்தில், நாங்களும் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி தருகிறது,'' என்றனர்.

0 comments: