வித்யா பாலன் நடிச்சு ஹிந்தில ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட கஹானி படத்தின் தெலுங்கு ரீ மேக் தான் அனாமிகா. நயன் தாரா தனது தார்மீகக்கொள்கைகளில் ஒன்றான கர்ப்பிணியா ந்டிக்க மாட்டேன் என்பதை கறாராகக்கடைப்பிடித்ததால் இயக்குநர் கதையை சாரி கேரக்டரை மாற்றி நடிக்க வைத்த படம்/ தமிழில் சத்தமே இல்லாம டப் ஆகி நேரடித்தமிழ்ப்படம் போலவே வருது நீ எங்கே என் அன்பே.
ஓப்பனிங்க் சீன் ல இப்போ சென்னைல பாம் வெடிச்ச மாதிரி ஹைதராபாத் ல ஒரு வெடிகுண்டு சம்பவத்தை காட்டறாங்க. அப்பவே படத்தோட கதை டெரரிசம் பேஸ் பண்ணியதுனு தெரிஞ்சுடுது
ஹீரொயின் ஃபாரீன் ல இருந்து ஹைதரா பாத் வர்றாங்க . அவர் வந்ததும் நேரா ஏர்போர்ட்ல இருந்து போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு புகார் தர்றாங்க . என் புருஷனைக்காணோம் . கண்டு பிடிச்சுத்தாங்க அப்டினு
அவர் ஒரு சாஃப்ட்வேர் ஆசாமி . இங்கே லவ் மேரேஜ் பண்ணி பெற்றோர் எதிர்த்ததால் ஃபாரீன் போனவர். இந்தியா வந்தவர் காணாமப்போய்ட்டார். அவரைத்தேடி சம்சாரம் வந்திருக்கு .
போலீஸ் என்ன நினைக்குதுன்னா வெடிகுண்டுச்சம்பவத்துக்குக்காரணமே ஹீரோயினோட புருசன் தான் அப்டினு . ஹீரோயின் என்ன நினைக்கறா-ன்னா தீவிரவாதியைக்கண்டு பிடிக்க துப்பு இல்லாம புருஷன் மேல பழியைப்போட்டு கேசை , ஃபைலை க்ளோஸ் பண்ணப்பார்க்கறாங்கன்னு
இந்த லட்சணத்துல ஒரு போலீஸ் ஆஃபிசர் என் கூட ஒரு வாட்டி கில்மாக்கு வந்தா நான் உன் புருஷனை கண்டுபிடிச்சுத்தர்றேன்கறார்.
இந்த சிக்கல்ல இருந்து நாயகி எப்படி வெளீல வர்றார் ? ஹீரோயின் புருஷன் சாயல்ல வேற ஒரு ஆள் தான் தீவிரவாதியா? என்பதை க்ளைமாக்ஸில் 2 ட்விஸ்ட் உடன் காண்க
இசை அமைப்பாளர் மரகத மணி தான் முதல் பாராட்டுக்கு உரியவர் . பிரமாதமான பின்னணி இசை . பின்னிப்பெடல் எடுத்துட்டார் . ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பிஜிஎம்
அடுத்து நாயகி நயன் தாரா . சும்மா சொல்லக்கூடாது . தீர்க்கமான பார்வை , அசால்ட்டான பாடி லேங்குவேஜ் ( சால்ட் ஆன பாடி லேங்குவேஜ்க்கு எதிர்ச்சொல் தான் அசால்ட் ஆன பாடி லேங்குவேஜோ? ) அவர் நடிப்பில் புதிய பரிமாணம் தொட்டிருக்கிறார் . இன்னும் 5 வருசத்துக்கு அவரை யாராலும் அசைச்சுக்கு முடியாது ( ஷூட்டிங்க் ஸ்பாட்ல போய் அசைச்சுப்பார்த்துட்டு நான் அசைச்சுட்டேன்னு எல்லாம் கடிக்கக்கூடாது )
பசுபதி உயர் அதிகாரியா வந்து கை தட்டலை அள்ளீக்கறார் . அவர் வசன உச்சரிப்பு பக்கா லோக்கல்
கில்மா வுக்கு கூப்பிடும் அதிகாரி சுமார் நடிப்பு . நயனின் கூடவே வந்து உதவும் இன்ஸ்பெக்டர் நல்ல நடிப்பு . நயனுக்கு புருசனாக வருபவர்க்கு அதிக வாய்ப்பில்லை . படம் முழுக்க இவரைச்சுற்றித்தான் கதை ந்கர்கிறது . ஆனால் இவர் வருவது 4 காட்சிகள் தான்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. டெட் பாடியை அடையாளம் காட்டச்சொல்லும் அந்த மார்ச்சுவரி சீன் கலக்கல் . பி ஜி எம் எம்மில் மிரட்டிட்டாங்க . பயம் , சோகம் , திகில் கலந்து நடிப்பில் நல்ல ஸ்கோர் நயனுக்கு
2 நயன் தாராவுக்கு ஃபிளாஸ் பேக் காட்சி கொடுத்து டூயட் எல்லாம் போட்டு சொதப்பாததற்கு நன்றி. செம த்ரில்லிங் பின் பாதியில்
3 க்ளைமாக்சில் வரும் ட்விஸ்ட் நல்லாருக்கு . ஓரளவு யூகிக்க முடிந்த திருப்பம் தான் என்றாலும் பதட்டம் இல்லாமல் நிதானமாக அதை அவிழ்த்த விதம் அருமை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 முன் பாதி திரைக்கதை மிக மெது. சி செண்ட்டர் ஆடியன்ஸ் உக்கார்வது கஷ்டம்
2. தனது கணவன் தங்கி இருக்கும் அறைக்கு வந்து அதே ஹோட்டலில் தங்கும் நாயகி அந்த சின்னப்பையனிடம் ஏன் ஆரம்பத்திலேயே விசாரிக்கவில்ல்லை ? அவன் தான் கணவனிடம் பேசியவன் என்பது முதலிலேயே தெரிந்தும் ஏன் கண்டுக்கலை ?
3 அவ்ளவ் பெரிய போலீஸ் ஆஃபீசர் ஏன் நயனிடம் அப்படி கெஞ்சிக்கிட்டு இருக்கார் ? இந்தக்காலத்துல சாதா கான்ஸ்டபிளே சர்வ சாதாரணமா ரேப் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கார். நயனுக்கு பாதுகாப்பா யாரும் இல்லை , அம்மா அப்பா இல்லை ,. ஃபாரீனில் இருந்து தனியா வந்து தனியா ஒரு பாடாவதி ஹோட்டல் ல தங்கி இருக்கார் / 10 நிமிசத்துல முடிக்க வேண்டிய மேட்டரை ஒரு மணீ நேரமா பம்முவது ஏனோ ?
4 முஸ்லீம் பெரியப்வர் ஒரு மேரேஜ் ஃபங்க்ஷனுக்கு வரச்சொல்றார். அங்கேஎ கொலையாளீ வருவாங்கங்கறார். நயனும் , நண்பரும் போறாங்க . அப்போ ஃபோன் வந்து நண்பர் ஏன் கிளம்பனும் ? அங்கேயே இருந்து ஆளைப்பிடிக்கலாமே? கொலை ஆனது ஆகிடுச்சு. அரை மணீ நேரம் லேட்டாப்போனா என்ன ?>
5 ஸ்கூட்டர் கொலையாளீ ஆள் செம குண்டு . போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆள் ட்ரிம்மா ஒல்லி. குண்டு ஆள் மெதுவா ஓடறான். இவரு செம வேகமா ஓடறார். 10 நிமிச சேசிங்க் ல ஏன் பிடிக்க முடியலை ?
6 க்ளைமாக்ஸில் அவ்வளவு பெரிய தீவிரவாதி நயன் கையால் குத்தப்படுவதை நம்ப முடியலை . அவன் உடல் செல் பூரா அலர்ட்டா இருக்காதா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. போலீஸ் ஸ்டேஷன் வந்தா மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரனும்.ஆனா நீங்க பேசறதை எல்லாம் பாத்தா பயம் தான் வருது # அனாமிகா
2. என் கணவர் எல்லார் கிட்டேயும் சகஜமா பழகுவார்.
ஓ.உங்க கிட்டே? # அனாமிகா
3. தீவிரவாதிங்க எல்லாரும் மசூதில இருந்தும் ,பள்ளி வாசல்ல இருந்தும் தான் வர்றாங்கனு பலர் தப்பா நினைச்ட்டு இருக்காங்க # அனாமிகா
4. ஒரு பெண்ணை கஷ்டப்படுத்திக்கண்ணீர் விட வெச்சவங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல # அனாமிகா
5. ஒரு பொண்ணுக்கு மரியாதை தராத யாருக்கும் நான் மரியாதை தரனும்னு அவசியம் இல்லை # அனாமிகா
6. 400 பேர் சாவுக்குக்காரணமான ஒரு தீவிரவாதியையே உங்களால பிடிக்கக்கையாலாகலை.காணாமப்போன என் கணவரை எப்டி கண்டுபிடிக்கப்போறீங்க?#அனாமிகா
7. போலீஸ் காரன் பேச்சை என்னைக்கும் நான் நம்ப மாட்டேன் # அனாமிகா
8. ஒரு பொண்ணு எப்போ பூவா இருப்பா.எப்போ புயலா மாறுவா னு அவ மாறும் வரை சொல்ல முடியாது # அனாமிகா
9 ஏன் சார் > புருஷன் இறந்த துக்கத்துல டிரஸ் பத்தி கவலைப்பட முடியுமா? புகார் குடுத்தா அதைக்கண்டுபிடிக்காம என் டிரஸ் பத்தி கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க ?
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. அதிரச நாயகி கம் நவரச நாயகி நயன் தாரா வின் அனாமிகா ( தெலுங்கு) ( தமிழில் நீ எங்கே என் அன்பே) ( வித்யா பாலன் ன் கஹானி ஹிந்தி ரீமேக் )
2. ஒரு அடி தடி இல்லை.தள்ளு முள்ளு இல்லை.இப்டி டீசன்டான ஆடியன்ஸ் இருந்தா படம் பார்க்கும் மூடே வராதே ;-))
3. வெடிகுண்டு தயாரிப்பு பற்றி இவ்வளவு விஸ்தீரணமாகக்காட்டுவது தடை செய்யப்படவேண்டும்.எடுத்துக்கொடுத்தது போல் ஆகிடும் # அனாமிகா
4. பிஜிஎம் கலக்கல்.சவுண்ட் இஞ்சினியர் வெல்டன் ஜாப் # அனாமிகா
5. வாவ்! திரைக்கதை = பிரபல நாவல் ஆசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் # அனாமிகா
6. இசை அழகன் புகழ் மரகதமணி .பின்றாரு மனுசன்
7. 11 மணிக்கு படம் போட்டாச்சு.11 41 க்கு ஒரு காதல் ஜோடி தியேட்டருக்கு வருது.இனி எப்டி படம் புரியும்?( சப்போஸ் படம் பாக்க வந்திருந்தா)
8. மேலே ஜெர்கின்ஸ் ,கீழே லெக்கின்ஸ் ,மொத்தத்துல கின்ஸ் # நயன் தாரா காஸ்ட்யூம் கலக்கல்கள் @ அனாமிகா
அனாமிகா (தெலுகு)=நீ எங்கே என் அன்பே (தமிழ் டப்டு) = குட் த்ரில்லர் மூவி - நயன் நடிப்பு, BGM குட் = விகடன் மார்க் =41 ,ரேட்டிங் =3 / 5
சி பி கமெண்ட்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 3 / 5
a
Directed by | Sekhar Kammula |
---|---|
Written by | Sekhar Kammula Sai Prasad |
Based on | Kahaani by Sujoy Ghosh |
Starring | Nayantara Pasupathy Vaibhav Reddy Harshvardhan Rane |
Music by | M. M. Keeravani |
Cinematography | Vijay C. Kumar |
Editing by | Marthand K. Venkatesh |
Studio | Endemol India Logline Productions Select Media Holdings |
Release dates | 1 May 2014[2] |
Country | India |
Language | Telugu Tamil |
தஞ்சை ஜி வி காம்ப்ளெக்ஸ்
4 comments:
நல்ல விமர்சனம். ஹிந்தியில் பார்த்தபோது அருமையாக் இருந்தது. தமிழிலும் பார்க்க தூண்டியது உங்கள் விமர்சனம். பின் குறிப்பு: அசால்ட் (assault) என்ற வார்த்தைக்கு 'அலட்சியமாக' என்று பொருள் வருமாறு உபயோக்கிறோம். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பொருளே இல்லை. assault என்றால் 'Sudden attack' என்றே பொருள். அதனால், 'சால்ட்', 'அசால்ட்' குழப்பம். இந்த வார்த்தையை (assault) தமிழில் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து. நன்றி.
நல்ல விமர்சனம். ஹிந்தியில் பார்த்தபோது அருமையாக் இருந்தது. தமிழிலும் பார்க்க தூண்டியது உங்கள் விமர்சனம். பின் குறிப்பு: அசால்ட் (assault) என்ற வார்த்தைக்கு 'அலட்சியமாக' என்று பொருள் வருமாறு உபயோக்கிறோம். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பொருளே இல்லை. assault என்றால் 'Sudden attack' என்றே பொருள். அதனால், 'சால்ட்', 'அசால்ட்' குழப்பம். இந்த வார்த்தையை (assault) தமிழில் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து. நன்றி.
நல்ல விமர்சனம். ஹிந்தியில் பார்த்தபோது அருமையாக் இருந்தது. தமிழிலும் பார்க்க தூண்டியது உங்கள் விமர்சனம்.
பின் குறிப்பு: அசால்ட் (assault) என்ற வார்த்தைக்கு 'அலட்சியமாக' என்று பொருள் வருமாறு உபயோக்கிறோம். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பொருளே இல்லை. assault என்றால் 'Sudden attack' என்றே பொருள். அதனால், 'சால்ட்', 'அசால்ட்' குழப்பம். இந்த வார்த்தையை (assault) தமிழில் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து. நன்றி.
அதெல்லாம் சரிங்க பாஸ் படம் பார்க்கலாமில்ல அதென்ன பார்க்கலாமா நயனுக்காக பார்த்தே ஆகனும் ..
Post a Comment