Sunday, May 25, 2014

சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ.3000 அபராதம்: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.
சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர், ''வழக்கை தீர்மானிக்கப் போகும் இறுதிவாதத்தை தயார் செய்ய எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.
தற்போது எவ்வித முன் தயாரிப்புகளும் இல்லாமல் திடீரென வாதத்தை தொடங்குவது கடினமானது. எனவே நீதிமன்றம் கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலணை செய்ய வேண்டும்''என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா,''சொத்துக்குவிப்பு வழக்கை தினமும் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
எனவே தான் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பை தொடர்ந்து இறுதி வாதம் தொடங்குமாறு கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும் மூவர் தரப்பிலும் இறுதிவாதம் தொடங்காமல் இழுத்தடிப்பது கண்டனத்திற்குரியது'' எனக்கூறி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட‌ மனுவை தள்ளுபடி செய்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி டி'குன்ஹா,''பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு இறுதிவாதம் தொடங்காமல், காலதாமதம் செய்வது கண்டனத்திற்குரியது. எனவே மூவருக்கும் தலா ரூ.3000 அபராதம் விதிக்கிறேன். வருகிற 26-ம் தேதி மூவரும் நேரில் ஆஜராகி இறுதிவாதத்தை கண்டிப்பாக தொடங்க வேண்டும்''என்றார். 

  • T V  from Kumbakonam
    எல்லா கோர்ட்டுகளிலும் மனுக்கள் தள்ளுபடி. கோர்டுக்கு வந்துவிட்டு கட்சி வழக்கறிஞர்கள். மோட்டு வலையை பார்த்துக்கொண்டு நாட்களை கடத்தும் வினோதம் யாரையாவது விட்டு மனுக்கள் போட்டு அல்லது தாங்களே மாற்றி மாற்றி மனுக்கள் போடுவது என சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி கோர்ட்டை அவமதிப்பவர்கள் மக்களுக்கும் எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் எதையாவது செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் சாகசம் நம் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயலாகும் தங்கள் குற்றங்களுக்கு ஜனநாயகத்தை துணைக்கு அழைத்து கொள்ளும் சாதுரியம் வேதனையின் உச்சம் . இந்த போக்கை கண்டிப்பதில் கூட நடுநிலை தவறும் மீடியாக்கள் இன்னொடு பக்கம் அதீத துதி பாடி அவர்களை பதவி மயக்கத்திலேயே இருத்திவிட முயல்கின்றன, சாதரனர்களுக்கு பரிந்து பேச தான் இங்கு யாரும் இல்லை
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Viswanathan Viswanathan  
    ரூ 3 கோடி அபராதம் என்றாலும் அவர்கள் கட்டுவார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோடிகள் ஒவ்வொரு கோடிக்கும் பறந்து சென்று விளையாடியது தெரியாதா? இவர்கள் தங்கள் தரப்பு வாதம் தொடங்க சண்டித்தனம் செய்து வழக்கின் தீர்ப்பு வராமல் முட்டுக்கட்டை போடுவதே நோக்கம்.
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Narayan  from Lutz
    3000 ருபாய் அபராதமா ? ரொம்ப பெரிய தொகை !
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • அ.மு.இக்பால்,ரியாத்  from Riyadh
    பாவம் ஏழைகள் பணம் கட்ட முடியாது என்று வெறும் 3000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி இருக்கிறார் மாண்புமிகு நீதிபதி
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • அ.மு.இக்பால்,ரியாத்  from Riyadh
    இப்படி 3௦௦௦ ரூபாய் மட்டும் அபராதம் என்றால் இனி கோர்ட்டுக்கு வராமல் வெறும் 3000 கட்டியே நாட்களைக் கடத்தி விடுவார்கள் நமது சட்டத்தை என்னவென்று சொல்வது
    about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • sivakumar  from Dubai
    கோடிகளில் ஊழல் செய்தவர்களுக்கு மூவாயிரம் ஒன்றும் பெரிதல்ல.
    about 23 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • vsankar Sankar  from Chennai
    adikkira maathiri அடி,அழுகிறமாதிரி azhugiren
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • R.M.Manoharan Manoharan  from San Ramon
    குற்றவாளிகல் ஆஜராகவில்லையென்றால் அவர்கள் தரப்பில் சற்றப்பட்ட குற்றத்திற்கு பதில் சொல்ல ஒன்றுமில்லை, குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டர்கள் என்றுதான் அர்த்தம்..ஆகவே ம்ற்றைய வழக்குகளில் முடிவு செய்கிறபடி எக்ஸ்பார்டே தீர்ப்பு வழங்கவேண்டியதுதானே. வழக்கே காரணமில்லமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பவர்களுக்கு -- அதுவும் 14 வருடங்கள்--- இப்படி எக்ஸ்பார்டே தீர்ப்பு வழங்கினால்தான் மற்ற குற்றவாளிக்ளுக்கும் ஒரு அச்சம் இருக்கும். ஆர் எம் மனோகரன்
    a day ago ·   (17) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Chinnappan  
    தினமும் 3000 ரூபாய் கட்டி இழுத்தடிக்க முடியுமானால் எவ்வளவு காலத்தும் இழுத்தடிப்பார்களே!
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜெய்.ரமணா  from Chennai
    வெறும்ரூ .3000 என்பது அவர்களின் கார் துடைப்புக்கு ஆகும் செலவு ! கொஞ்சம் அதிக படுத்தி நீதி மன்ற வருமானத்தை பெருக்கி இருக்கலாமே ! இதுவரை இவர்கள் வாங்கிய வாய்தாக்கள் !இவர்கள் போட்ட எதிர் மனுக்களுக்கு எல்லாம் அபராதம் விதித்து இருந்தாலே கிட்ட தட்ட இவர்களின் வழக்கு தொகையான 69 கோடியை தண்டி அதிக வருமானம் நீதி மன்றத்துக்கு கிடைத்து இருக்கும் !

    நன்றி - த தமிழ் இந்து

0 comments: