1. அப்சரஸ் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் நடித்த படம், ‘மகர மஞ்சு’.
இந்தப் படத்தை தமிழில் அன்பு இமேஜின்ஸ் நிறுவனம் ‘அப்சரஸ்’ என்ற பெயரில்
டப் செய்துள்ளது. லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மது
அம்பாட், இசை, ரமேஷ் நாராயணன். வசனம், பாடல்கள்: மருதபரணி.
சரஸ்வதி, மகாலட்சுமி, திரவுபதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு உருவம் படைத்து வரைந்தவர், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மன். நாட்டியக்காரி, விதவை, தாசி, மன்னரின் மகள் ஆகிய பெண்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அந்த பெண்களாக கார்த்திகா, பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் நடித்துள்ளனர்
சரஸ்வதி, மகாலட்சுமி, திரவுபதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு உருவம் படைத்து வரைந்தவர், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மன். நாட்டியக்காரி, விதவை, தாசி, மன்னரின் மகள் ஆகிய பெண்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அந்த பெண்களாக கார்த்திகா, பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் நடித்துள்ளனர்
புருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலையாளப் படமான ‘மகரமஞ்சு”(தமிழில் அப்சரஸ்) ஒரு கில்மாப்படமா? - கார்த்திகா பேட்டி
2 கல்பனா ஹவுஸ் - அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம்
‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார்.
கல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது.
இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து
வருகிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு
செய்து வருகிறார்.
பிரபல என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன்
ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் வந்து
தங்குகிறார்.
அங்கு தங்கியிருப்பவர்களில் ஒவ்வொருவராக பழி வாங்கப்பட்டு கொலை
செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை மைசூர் காட்டுக்குள்
திகிலூட்டும் பேய் படமாக உருவாக்கி வருகிறார்கள்.
படத்தின் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக பாடல்கள் இல்லாத படமாக தயாரித்து வருகிறார்கள்.
3 ஒகேனக்கல் - எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன்,
எஸ்.மூர்த்தி, பி.டி.எஸ்.திருப்பதி ஆகிய மூவரும் இணைந்து
தயாரித்திருக்கும் படம் ‘ஒகேனக்கல்’.
இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஜோதிதத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பி.டி.எஸ்.திருப்பதி நடிக்கிறார். மற்றும் உமாபத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள்ரவி, டெல்லிகணேஷ், காதல்தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பி.ஜி.வெற்றி ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகா, எழில்வாணன், தென்றல் செந்தில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பி.மோகன்ராஜ் படத்தொகுபை கவனிக்க, துரைவர்மன் கலையை நிர்மாணித்துள்ளார். தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்தியன் பாஸ்கர் சண்டைப்பயிற்சி அமைக்க, சிவா தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஆர்.மூர்த்தி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் எம்.ஆர்.மூர்த்தி கூறுகையில், “ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டு கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை. இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். இப்படத்தின் பெரும்பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இப்படத்தின் மூர்த்தி கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம்.
4 “அதுவேற இதுவேற” -படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment