Tuesday, May 27, 2014

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் தான் பெருமிதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.
ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.
இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


  • chandran  from Chennai
    கண்ணைனம்பாதே.....உன்னை ஏமாற்றும் .உன்னை ஏமாற்றும் ..நீ காணும் ... எப்பையோ கேட்டது . இன்று ஞாபகம் வருகிறது
    about 2 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Kandasamy  
    "கானல் நீரருந்த மானலைவதுபோல், மாநில மாய சுகம் விரும்பாமல், பஜனை செய்வாய் மனமே!" ----------- பாபநாசம் சிவன்.
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    Anonymus   Up Voted
  • IBRAHAM Ali  from Jeddah
    இப்படியெல்லாம் ஒரு முதல்வர் அவருடைய அறிக்கையில் எந்த ஒரு உண்மையும் இல்லை. ஒரு முதல்வரே இப்படி பொய் சொன்னால் இவருடைய அமைச்சர்கள் யப்படியல்லாம் பொய் சொல்லுவார்களோ. கேட்பதற்கு தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார்.
    about 3 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Kandasamy  
    கழுத்தை நன்றாக உயர்த்தி வானத்தைப் பாருங்கள். நான் சொன்னமாதிரி பன்றிகள் பறப்பது நன்றாகத் தெரியும். LOOK AT THE SKY STRETCHING YOUR NECK. YOU WILL SEE AS I SAID, "PIGS FLY". DON'T YOU SEE THAT?
    about 3 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Kandasamy  
    என்னமோ போங்க, இப்படி கேட்டுக் கேட்டு காது மரத்துப்போய் விட்டது. ஆனால் ஒன்று புரிகிறது. இந்த 3 ஆண்டுகளும் வாக்கு வங்கியைத் தக்க வைக்கவே கழிந்திருக்கிறது. இனியுள்ள 2 ஆண்டுகளுக்கும் அதை மட்டுமே குறியாகக் கொண்டு இம்மாதிரி அறிவிப்புக்கள் அவ்வப்போது வரும். இதெல்லாம் சகஜமப்பா!
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • gopalakrishnan vilathikulam  from Mumbai
    தமிழக முதல்வர் திட்டமிட்டபடி தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறினால் தமிழகம் வளர்ச்சி பாதைக்கு சென்று விடும் ஏராளாமான விவசாயிகள், , தறிநெசவாளர்கள், மின்சாரம் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் மற்றும் சிறிய குறிய தொழில் முனைவர்கள் அனைவரும் மின்வெட்டு இல்லாத நிலையினை எதிர்நோக்கி இருக்கிறார்கள். வெறும் வார்த்தை அளவில் விளம்பரமாக இல்லாமல் முதல்வர் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு அதிகாரிகளும் துணை நிற்க வேண்டும்
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • eral mani  
    ஜெ அவர்களின் மைனாரிட்டி என்கின்ற இந்த வார்த்தைகளில் வன்மம் இருக்கிறது இது அவரின் உடல் நலத்திற்கும் . நாட்டின் நலத்திற்கும் கேடு .நம்முடைய நல்லசெயல்களை மட்டும் நாம் பேசுவதுதான் நல்லது .தீயவற்றை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் .
    about 3 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • baskaran Karan  from Chennai
    37 இடங்களில் வெற்றி பெற்று விட்டதால் மக்கள் என்ன சொல்லிவிட்டாலும் நம்புவார்கள் என்று நம்பி விட்டார்கள் போலும். நீங்கள் ஆட்சிக்கு வரும் முன் 3 மாதங்களில் செய்வதாக கூறியதை மூன்று வருடங்களில் செய்த இருப்பாதாக கூறி உள்ளீர்கள். ஆனால் காற்றலை மூலம் ஜூன் முதல் மின்சாரம் கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே. 2015 ஜனவரிக்கு பிறகு மின்வெட்டெ இல்லாமல் இருந்தால் தான் நீங்கள் சொன்னது உண்மையாகும். அதுவரை இந்த செய்தி கானல் நீர்தான்.....
    about 3 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    Rajasekar   Up Voted
  • AbdulHameed  from Muscat
    மின்வெட்டு இருந்தாலும் காசு கொடுத்து மற்றும் 144 உத்தரவுகளின் மூலம் நீங்கள்தான் வெற்றிபெற்றீர்கள் ஆகையால் மின்வெட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை நீங்களும் கவலைபடதேவையில்லை.
    about 3 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • மு.நாட்ராயன்  from Madurai
    காற்றாலை மின்சாரத்தை எப்படி நம்புவது. காற்று நின்றுவிட்டால் மின்சாரமும் நின்றுவிடும். ஆகையால் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும். உடனடி தேவை!
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Abul Hassan  from Livingston
    "புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது." அண்ட புளுகு ஆகாச புளுகு என்பார்களே அது இதுதானா? இன்று காலை 9 மணி முதல் என் வீட்டில் மின்சாரம் இல்லை.
    about 4 hours ago ·   (2) ·   (3) ·  reply (0) ·  promote to News Feed
    Kandasamy   Up Voted
  • முஹம்மது  from Suri
    நன்றி..நன்றி.. நன்றி இது மட்டும் நிறைவேறி விட்டால் தமிழ் நாடு என்றும் உங்கள் பின்னால் தான்.
    about 4 hours ago ·   (4) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
  • Sudhakar  
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் எமற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்...மக்கள் விழிப்பது எப்போது என்று தெரியவில்லை...
    about 4 hours ago ·   (3) ·   (7) ·  reply (0) ·  promote to News Feed
  • kailawsh  
    ஜூன் மாதம் முதல் காற்றாலைகளை முழுமையாக இயங்க செய்து தமிழக மின் பற்றாக்குறையை, சதி பல வென்று, நீக்கிய முதல்வர் அவர்களுக்கு தமிழக மக்கள் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்...
    about 4 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  •  abuadnan.ksa. baharudeen  
    நல்ல காமெடி? இன்னும் மூன்று ஜூன்கள்தான் பாக்கி இருக்கிறது?
    about 4 hours ago ·   (16) ·   (12) ·  reply (0) ·  promote to News Feed
    kannan  · Mauroof, Dubai  Up Voted
  • AR Raja Sr. Sales Executive at ARR Seeval Factory, Kumbakonam from Bangalore
    ////// இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ///////// அடேங்கப்பா..! என்ன சாமர்த்தியம்டா ராமா..! ஏம்மா.. அவங்க போட்ட தலைமைச் செயலகத்தைத் தூக்கி எறிஞ்சதுபோல, இந்தக் கட்டுப்பாட்டையும் தூக்கிப் போட்டிருக்கலாமேம்மா..? ஏம்மா 3 வருஷமா வச்சிருந்தீங்க..? நீங்க அறிவாளியா இருங்க.. மக்களை ரொம்ப மடையர்கள் ஆக்காதீர்கள்..
    about 4 hours ago ·   (14) ·   (9) ·  reply (0) ·  promote to News Feed
  • Mannan Mannen  
    தமிழக முதல்வர் அவர்களக்கு மிக பெரிய நன்றி

3 comments:

Ramakrishnan said...

நீங்கள் எந்த முயற்சி எடுக்கா விட்டாலும் இன்னும் 6 மாதங்களுக்கு மின்வெட்டு இருக்காது. காரணம் காற்று மழை. அடுத்த Summer வரட்டும் அப்போ தெரியும் உங்க யோகிதை. ஆட்சிக்கு வரும் முன் 3 மாதங்களில் செய்வதாக கூறியதை மூன்று வருடங்களில் செய்த இருப்பாதாக கூறி உள்ளீர்கள். ஆனால் காற்றலை மூலம் ஜூன் முதல் மின்சாரம் கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

Rajasubramanian S said...

நகைச்சுவைப் பகுதின்னு சொல்லவே இல்ல!

Rajasubramanian S said...

நகைச்சுவைப் பகுதின்னு தலைப்பிலேயே போட்டிருக்கலாமே. நான் நிஜம்னு நம்பிட்டேன். இன்னைக்கு காலையில் இருந்து 6 மணி நேரம் கரன்ட் கட், இன்னும் ரென்டு நாளில் என்ன ஆகும் ?