Thursday, May 15, 2014

கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்

யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். 


வழிகாட்டும் ஒளி 

 
ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்கலாம். 


நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண், இருவேறு கோணங்களில் பார்க்கும்போது இருவேறு வண்ணங்களில் தெரியும் வகை யில் விசேஷ மை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 



நோட்டைக் கிடை மட்டத்தில் வைத்துக்கொண்டால் இந்த எண் பச்சை நிறத்திலும் சாய்த்தால், நீல நிறத்திலும் இருக்கும். நோட்டின் கீழ்ப்புறத் திலும் வலது ஓரத்திலும் இருக்கும் எண் கட்டங்களின் மீது வெளிச்சத் தைப் பாய்ச்சினால் அது ஒளிரும். 



நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் பாரத் (இந்தி), ஆர்.பி.ஐ. என்ற எழுத்துகளும் ரூபாய் நோட்டின் எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டைச் சாய்க்கும்போது நூலின் நிறமும் பச்சையிலிருந்து நீலமாக மாறும். வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கும்போது நூல் அறுபடாமல் முழுதாகத் தெரியும். 



நல்ல நோட்டுகளில் பின்புற முள்ள பூ வேலைப்பாடும் ஊடு ருவிப் பார்க்கும் வகையில் இருக் கும். முதல் பக்கமுள்ள பூ வேலைப் பாட்டுடன் அது பொருந்தும். வெளிச்சத்துக்கு நேராக நோட்டை வைத்துப்பார்க்கும்போது ரூபாய் நோட்டின் எண், கண்ணாடிக்கு நேராகக் காட்டினால் தெரிவதைப் போன்ற பிம்பத்தில் இருக்கும். 


புடைப்பான மை 


 
நல்ல நோட்டுகளில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்களும் கைகளால் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலேயும் ரூபாய் நோட்டின் மதிப்பு நடுவில் இந்தியிலும் மகாத்மா காந்தியின் உருவமும் இப்படி இன்டாக்ளியோ முறையில் புடைப்பாக இடம்பெற்றிருக்கும். மகாத்மா காந்தியின் படத்துக்கு வலதுபுறத்தில் ஆர்.பி.ஐ. என்ற எழுத்தும் ரூபாய் எண்களும் சிறிய வடிவிலான எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியுடன் இவற்றைப் பார்க்கலாம்.
இடதுபுறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். வெவ்வேறு வகையிலான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இது மாறும். பார்வையற்றவர்கள் இதைத் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறிவார்கள். 



ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. பழைய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறைவு என்பதால்தான் அவற்றைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஆர்.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது. 


சோதித்துப் பாருங்கள் 


 
1,000 ரூபாய் நோட்டில் மட்டுமே ரூபாய் நோட்டின் எண், பாதுகாப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் எண், நிறம் மாறும் மையில் அச்சிடப்படவில்லை. எனவே இவற்றைச் சாய்த்துப் பார்த்தாலும் எண்ணின் நிறம் அப்படியே இருக்கும். 10 ரூபாய் நோட்டில், பார்வையாளர்கள் தடவிப் பார்த்து அறியும் வகையி லான மையில் எண் அச்சிடப்பட வில்லை. செங்குத்தான கோட்டில் மறைக்கப்பட்ட படமும் இல்லை. 



கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகு அவற்றைக் கொண்டு எதையும் வாங்க முயற்சிக்காதீர்கள். (நீண்ட நாள் கடனையும் அடைத்துவிடா தீர்கள்!). தெரிந்தோ தெரியா மலோ நீங்கள் கள்ளநோட்டைக் கொடுத்தால், அதை வைத்திருந் ததற்காகவே உங்களைக் கைது செய்யலாம். எங்கிருந்து உங்கள் கைக்கு வந்தது, யார் கொடுத்தார்கள் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்.


இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது, விவரங்கள் தேவை என்று கருதினால் பின்வரும் இணையதள முகவரி யைத் தொடர்பு கொள்ளவும்: www.paisabolthai.rbi.org.in 



  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    நாம் ஒருவரிடமிருந்தோ அல்லது வங்கியிலிருந்தோ பெறுவது ஒரே ஒரு நோட்டாக இருந்தால் நீங்கள் கூறும் 11 வழிமுறைகளை பின்பற்றுவது சுலபம். ஆனால் பெரும் தொகை அதிகமாகயிருந்தால் 11 வழிமுறைகளை வொவொரு நோட்டுக்கும் கடை பிடிப்பது சாத்தியக்கூறா?
    about 4 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • SHAN  
    நல்ல கருத்துக்கள்.அத்தோடு நல்ல நோட்டுக்களை சம்பாதிக்க எளிய வழிகள் என்ற கட்டுரை வந்தால்பலர் மகிழ்வர்
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • jay  from Bangalore
    ஒரு முறை, மருத்துவமனை பில் கவுன்டரில் ஒரு வயதான அம்மா பணம் கட்டும்போது கள்ளநோட்டு என்று திருபிகொடுது விட்டார்கள். அந்த தாளை பார்க்கையில், அதிர்ச்சியாக இருந்தது. அதில் "Reserve Bank of India " என்பதற்கு பதில், "Reserve bank of Azad " என்று இருந்தது.
    44 minutes ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • BGI BGI  
    Plastic notes is best .. Used in Australia
    about an hour ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • Richard  from Bangalore
    ATM மெஷின்னில் கள்ள நோட்டு வர வாய்ப்பிருக்கிறதா?
    about 2 hours ago ·   (6) ·   (0) ·  reply (0)
    Richard  · jay   Up Voted
  • sathish sandhru  from Mumbai
    migavum payanulladhaga irundhadhu mikka nandri
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Mannan Mannen  from Chennai
    தற்காலத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை இது இங்கு குறிப்டப்பட்டுள்ள இணணய விலாசம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    about 5 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
     
     
    நன்ன்றி  -த ஹிந்து

0 comments: