கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான அழகிரியைத்திடீர்னு ஒரே நாள் ல நம்ம தலைவர் கட்சியை விட்டு வெளில போ-னு அனுப்பின மாதிரி ஒரு ஐ டி கம்பெனில ஹீரோவை வேலையை விட்டு அனுப்பிடுது .இப்போ அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை . இந்த சமயம் பார்த்துத்தான் அவர் காதலி அவளோட அப்பா கிட்டே லவ் மேட்டரை சொல்லி அப்பாவை மீட் பண்ணச்சொல்லுது . இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் ஏதாவது பிரச்சனைல நம்மளைக்கொண்டு வந்து மாட்டி விட்டுடுவாங்க .
இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல ஹீரோ குடி இருக்கும் அபார்ட்மெண்ட் வாசல்ல 5 கோடி ரூபா பணம் உள்ள ஒரு பெட்டி அநாமத்தா கிடக்கு . உடனே ஹீரோ கூட்டணிக்கு கதவைத்தட்டுன ஒரே ஜீவனான கார்த்திக்கை காங்கிரஸ் டபார்னு இழுத்துப்போட்டுக்கிட்டா மாதிரி அந்தப்பாக்சை உள்ளே எடுத்துக்கறார். அது ஆக்சுவலா 2 கேங்க் இடையே நடக்க வேண்டிய பண பரிவர்த்தனை .
அந்த 2 குரூப்பும் ஒருத்தரை ஒருத்தர் துரோகின்னு நினைச்சு தேடல் ல இருக்கும்போது எதிர்பாராத விதமா 3 ரடிங்க ,ஒரு போலீஸ் ஆஃபீசரை ஹீரோ கொலை செய்ய நேருது .அவர் வீட்லயே விழுந்த 4 டெட் பாடியை அவர் எப்படி டிஸ்போஸ் பண்றாரு , இந்த மேட்டர் காதலிக்கு தெரிஞ்சு அவ என்னா பண்றா , போலீஸ் ல மாட்னாரா ? இல்லையா? இதுதான் மிச்ச மீதிக்கதை
ஹீரோ வா வைபவ் நல்லா பண்ணி இருக்கார் . ஐ டி கம்பெனில ஒர்க் பண்ற இளைஞனைக்கண் முன் நிறுத்தறார். ஆனா சேசிங்க் சீன் , த்ரில்லர் காட்சிகள் ல அவர் முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் கம்மி
ஹீரோயின் ரம்யா நம்பீசன் ....கண்ணியமான உடைகளில் வலம் வரும், மற்றும் ஒரு அழகிய நாயகி ( நாம எந்தக்காலத்துல ஹீரோயினைக்குறை சொல்லி இருக்கோம் ? ) லவ் சீனை விட அதிர்ச்சிக்காட்சிகளீல் , நாயகன் தன்னை விட்டு விலகிடுவாரோ என பதறும் காட்சிகளில் நல்லா பண்ணி இருக்கார்
சார்லி ஒரு ரோல் பண்ணி இருக்கார். கோட்டா சீனிவாசன் ,சாயாஜி ஷிண்டே இருவரும் வில்லன் ரோல். கோட்டா நல்லா காமெடி சென்சோட நடிச்சிருக்கார். அடியாட்களா வரும் 4 பேர் நடிப்பும் செம .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. படத்தோட ஓப்பனிங்க்லயே கதைக்கு வந்துவிடுவது
2 போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்க் பக்கா
3 படத்தின் ஓட்ட அளவு ( டியூரேஷன் டைம்) சரியா 2 மணி நேரம் தான் . ஷார்ட் ஸ்வீட்
4 படத்தில் சீரியசான காட்சிகளில் கேரக்டர்கள் இயல்பா காமெடி பண்ணுவது , குறிப்பா வில்லனின் அடியாட்கள்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தன் வீட்டில் விழுந்த 2 டெட் பாடிகளையும் ரூம்ல வெச்சுட்டு ஹீரோ வெளில போறார். டெட் பாடில இருக்கும் செல் ஃபோனை டீ ஆக்டிவேட் பண்ணாம ., அதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணாம யாராவது போவாங்களா?
2 ஒரு காமெடி சீன் ல ஒரு பொண்ணு முன்னால பிஎஃப் கேசட் கேட்டு அவமானப்படுத்திட்டீயேனு வசனம் வருது . ஆனா அந்த காட்சியில் பஸ் ஸ்டாப்பில் 2 ஃபிகருங்க பேசிட்டு இருக்கும்
3 ஹீரோயின் பீச்ல ஹீரோவை சந்திச்சு பேசிட்டு தன் ஸ்கூட்டில அவ பாட்டுக்கு போயிடுது . ஹீரோவை டிராப் பண்ணலை ? வீட்டுக்குத்தெரிஞ்ச லவ் தானே?
4 ஹீரோ ரூம் ( அபார்ட்மெண்ட் ) E 6 ஆனா அங்கே குழந்தைங்க கிரிக்கெட் விளையாண்டு ஒரு கோடு கட் ஆகி F 6 ஆகிடுது . அதுனால நடக்கும் குழப்படிகள் தான் பல சம்பவங்கள் .ஆனா அவர் வீட்டுக்குப்பக்கமே அடுத்தடுத்து ஈ 5 , ஈ 7 இருக்கே . அதைப்பார்க்க மாட்டாங்களா?
5 தனக்கு 5 கோடி கிடைச்ச மேட்டரை ஹீரோ ஏன் லவ்வர் கிட்டே சொல்லலை?
6 நண்பனின் காதல் தோல்வி அனுபவத்தைக்கேட்டு ஹீரோ தன் காதலி கிட்டே அவ மனம் புண் படும் படி சம்பந்தமே இல்லாம அவ காதலை சந்தேகிப்பது அபத்தம்
7 ஜீப் ல ஓப்பனா 4 சவப்பெட்டியை ஏத்திக்கிட்டு மெயின் ரோட்ல போறார். யாரும் அவரைக்கண்டுக்கவே இல்லை. அவர் என்ன ஆளுங்கட்சி எம் எல் ஏவா?
8 டெட் பாடிக்கு எந்த வாசனைத்திரவியமும் அடிச்சு விடலை . டெட் பாடி ஸ்மெல் பக்கத்து வீட்டுக்கு அடிக்காதா? யாருமே எதுவும் கேட்கல?
9 மாசம் 20,000 ரூபா சம்பளம் வாங்கும் ஹீரோ 15,000 ரூபா வாடகைக்கு ஒர்த்தான வீட்டில் தங்குவது எப்படி ? பொதுவா என்ன சம்பளமோ அதுல 25% தான் அதிக பட்ச வாடகையா பார்ப்பாங்க
10 ஹீரோ சாப்பிடும் பிரியாணி சிந்தி தவறி விழுந்துடுது. அந்த சாதம் வழுக்கி அடியாள் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறப்பது போல் காட்சி . சாதம் வழுக்கி விழ சாத்தியக்கூறுகள் கம்மி . வாழைப்பழத்தோல் சீனா மாத்தி இருக்கலாம்
மனம் கவர்ந்த வசனங்கள்
1. என்ன சார் திடீர் னு வேலையை விட்டுத்தூக்கிட்டீங்க?
பிரமோசன் ,இன் க்ரிமென்ட் எல்லாம் சொல்லிட்டா குடுத்தோம் ? # டமால் டுமீல்
2. ஐ டி ல ஒர்க் பண்றவங்க எப்டி பணத்தை செலவு பண்றதுனு தெரியாம பண்றாங்க # டமால் டுமீல்
3. என்னை மாதிரி ரவுடிங்க சட்டத்தை மதிக்க மாட்டோம்.ஆனா சொன்ன வார்த்தையை மீறமாட்டோம் # ட டு
4. வாழ்க்கைல நல்லா செட்டில் ஆனவன் ,வசதியானவன் அப்டினுதானே என்னை லவ் பண்றே?
எனக்கு வேலை போய்ட்டா வேற் வசதியான பையனை பிடிச்சுக்கமாட்டே?#டடு
5 பாஸ் ! நான் போலீசை போட்டுத்தள்ளிட்டேன்
என்னால நம்ப முடியலை
சத்தியமா பாஸ் !
டேய். போலீஸ் நம்ம நடமாட்டத்தை மோப்பம் பிடிச்சதை நம்ப முடியலைனு சொன்னேன்
6 இது எதுக்கு இவ்ளவ் பெரிய பொட்டி ?
புக்ஸ் வைக்க
அடேங்கப்பா . இதே மாதிரி 4 பொட்டி போகுதே . அப்போ நிறையா படிப்பார் போல ( ஆக்சுவலா அது டெட் பாடி வைக்கும் சவப்பெட்டி )
7 சார்லி = பொட்டில என்ன?
புக்ஸ் தான்
பொண கனம் கனக்குதே
8 என் money எங்கே ?
இவன் தான் உன் ஆள் மணி
அய்யோ , என் மணி பணம் எங்கே?
9 இவனைப்பார்த்தா புத்திசாலியாத்தெரியறான் . எ அடியாளுங்க இப்படிப்புத்திசாலியாவா இருப்பாங்க ? யோசிச்சுப்பாரு
10 நிரந்தர நண்பன் னு எனக்கு யாரும் இல்லை.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல யாராவது துரோகி ஆகிடறாங்க #,டமால் டுமீல்
11 . நீண்ட கால நண்பன் உதவி எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் .பணம் தான் தக்க சமயத்தில் உதவும் # ட டு
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1. மல்லாக்கா படுத்திருக்கும் நாயகி திரும்பி குப்புறக்கா படுக்குது.எப்டி ஹீரோயினுக்கு ஓப்பனிங் சீன் ? # டமால் டுமீல்
2. யாமிருக்க பயமே - ட்ரெய்லர் கலக்கல்.த்ரில்லர் மூவி லைக் பீட்சா
சி பி கமெண்ட்
டமால் டுமீல் - மதி நுட்பமான காமெடிக்காட்சிகள் நிறைந்த ஏ செண்ட்டர்
ரசிகர்களுக்கான த்ரில்லர் ,மூவி -
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் =41 ,
குமுதம் ரேங்க்கிங்க் = ஓக்கே
\
ரேட்டிங்க் = 2.5 / 5
ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்
2 comments:
கடமை வீரனே . . . வாழ்க . . . உமது விமர்சன தொண்டு . . .
உமக்கு வேறு வேலை இல்லையா?
Post a Comment