பெண்களைப் பற்றித் தமிழ் சினிமா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? ஒரு
பக்கம் பெண்களை வெறும் உடலாகப் பாவித்து முடிந்தவரையில் அவர்களைப் பாலியல்
ரீதியாகச் சுரண்டுவது. இன்னொரு புறம் தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்று
பாச அபிஷேகம் செய்து ஆராதிப்பது. இவற்றுக்கு இடையே அடக்கம், பண்பு,
நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிப் பாடம் எடுப்பது. இப்படியாகப் பெண்களைப்
‘பன்முகம்’ கொண்ட கோணங்களில் அணுகும் தமிழ் சினிமா இவற்றுக்கிடையில்
இருக்கும் உள் முரண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
இவை ஒரு புறம் இருக்க, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களைக்
கேவலப்படுத்துவதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பல திரைப்பட
இயக்குநர்களும் வசனகர்த்தாக்களும். அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’
படத்தில் ஒரு காட்சி. நாயகனை ஒரு போட்டியில் இடம்பெற வைப்பதன் மூலம் பணம்
சம்பாதிக்க நினைக்கும் ஒரு குழுவினர் அவனுக்குப் பணம் தருவதுடன் பல
வசதிகளையும் செய்துதருகிறார்கள். இதுதான் சாக்கு என்று அவன் மேலும் பல
வசதிகளைக் கோருகிறான். அப்போது அந்தக் குழுவில் இருக்கும் ஒருவன் தன் அருகே
இருக்கும் பெண்னைக் காட்டி இப்படிச் சொல்கிறான்: “விட்டா இவளையும் கேப்ப
போலருக்கே?”
அந்தக் குழுவினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள்.
தங்களைப் போலவே படித்த, தங்கள் குழுவில் ஒரு அங்கமாக உள்ள சக மனிதப்
பிறவியைச் சட்டென்று ஒரு பண்டத்துக்கு நிகராகப் பேச அவனால் முடிகிறது.
அதைக் கேட்டுக்கொண்டு அந்தப் பெண் சும்மாதான் இருக்கிறாள். அதற்கு நாயகன்
சொல்லும் பதில் என்ன தெரியுமா?
“நல்லா இருந்தா கேட்டிருப்போம்ல?”
ஒருவன் தன்னுடைய சக ஊழியரும் தோழியுமான ஒரு பெண்ணைப் பண்டமாக்குகிறான்.
இவனோ அந்தப் பண்டம் நன்றாக இல்லை என்கிறான். அவளோ இதையெல்லாம்
கேட்டுக்கொண்டு அசட்டுத்தனமாக நிற்கிறாள். பார்வையாளர்கள் கைதட்டிச்
சிரிக்கிறார்கள்.
அதே படத்தில் இன்னொரு காட்சி. ஒரு பெண் தன் கணவனுடன் தொலைபேசியில்
பேசுகிறாள். குளிக்கும்போது யாரோ தன்னை எட்டிப் பார்ப்பதாகப் புகார்
செய்கிறாள். “விடுடி, அவன் ரசனை கெட்டவன்”“ என்கிறான் அந்தக் கணவன்.
இதற்கும் திரையரங்கில் வெடிச் சிரிப்பு.
என்ன எழுத்து இது? இதை எழுதுவது, நடிப்பது, ரசிப்பது ஆகியவற்றுக்குப்
பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன? இந்த அளவுக்கா தமிழ் சினிமாவும் சினிமா
ரசனையும் சொரணை கெட்டுப் போகும்?
கல்யாணத்துக்குப் பிறகு நிம்மதியே போச்சு, சுதந்திரமே போச்சு என்று ஆண்கள்
புலம்புவதும் திரை நகைச்சுவையின் தவிர்க்க முடியாத அம்சங்களாக இன்று
ஆகியிருக்கின்றன. கல்யாணத்துக்குப் பிறகு பெண்களின் நிம்மதி பற்றியோ
சுதந்திரம் பற்றியோ ஒருவர்கூடப் பேசுவதில்லை. தமிழ் சினிமா என்பது திமிர்
பிடித்த ஆண்களால் அப்படிப்பட்ட ஆண்களுக்காகவே எடுக்கப்படும் சமாச்சாரம்
என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதில் வசீகரம் கூட்டவும் கேவலப்பட்டு
நிற்கவும் மட்டும் பெண்கள் இவர்களுக்கு வேண்டியிருக்கிறது.
பெண்களை எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்தும் உரிமையை
சினிமாக்காரர்களுக்கு யார் கொடுத்தது? பண்பாட்டைக் காப்பதற்காகச்
செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தணிக்கைத் துறை இவற்றை எப்படி
அனுமதிக்கிறது? பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் யதார்த்த்த்தில் இருக்
கிறார்கள் என்பதை வைத்து இதை நியாயப்படுத்த முடியாது. ஜாதி, மதம், மொழி,
இனம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையாவது இழிவுபடுத்திப் பேசுபவர்களும்
யதார்தத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இழிவுகளைப் பரிகாசம் என்ற
பெயரிலோ யதார்த்தம் என்ற பெயரிலோ தணிக்கைத் துறை அனுமதிக்குமா? பெண்களை
இழிவுபடுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறது?
இவற்றை ஒப்புக்கொண்டு நடிக்கும் நாயக நடிகர்களும் நகைச்சுவை நடிகர்களும்
இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று பெண்கள்
தைரிய மாகக் கூற வேண்டும். புதிதாக நடிக்க வருபவர்களால் அல்லது தனக்கென்று
ஒரு இடத்தைப் பெறப் போராடிக்கொண்டிருப்பவர்களால் எதிர்த்துக் குரல் எழுப்ப
முடியாமல் இருக்கலாம். ஆனால் முன்னணி நாயகிகளாவது இவற்றை எதிர்த்துக் குரல்
எழுப்ப வேண்டும். இப்படிப்பட்ட வசனங்களைப் பேச மாட்டேன் என்று முன்னணி
நயகர்கள் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிஜமான நாயகர்கள் இங்கே யாராவது
இருக்கிறார்களா?
“பெண்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் வெளியில் வரு கிறார்கள். அவர்களிடம்
மிருகத்தனமாக நடந்துகொள்வதன் மூலம் ஏன் அவர்களை மீண்டும் வீட்டுக்குள்
தள்ளுகிறீர்கள்?” என்ற பொருள்படும் வசனம் ஒன்று கஜினி திரைப்படத்தில்
வரும். அந்த வசனத்தை எழுதியவர் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
அவரது தயாரிப்பில் வந்திருக்கும் படம்தான் மான் கராத்தே. அதன் கதையை
எழுதியவரும் அவரே. பெண்களைப் பண்டங்களாகவும் அழகாக இருந்தால்தான் அந்தப்
பண்டங்களுக்கு மதிப்பு என்றும் ஒரு பெண்ணைக் குளிக்கும்போது எட்டிப்
பார்ப்பது வெறும் ரசனை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் எழுதப்படும்
வசனங்களும் பெண்கள் மீதான வன்முறைதான் என்பது முருகதாஸின் ஏழாம்
அறிவுக்குப் புரியாதா?
இதே முருகதாஸ் தான் இயக்கிய துப்பக்கி படத்தில், நாயகன் உயர் அதிகாரியை
மிரட்டும் இடத்தில் இப்படி வசனம் எழுதியிருப்பார்: “நான் உன்னை சுட்டா உன்
பிள்ளைங்க சிக்னல்ல நின்னு பிச்சை எடுப்பாங்க, உன் மனைவி தெருவோரம் நின்னு
கையைக் காட்டிக் கூப்பிடுவா” என்பார். அதாவது கணவனை இழந்த பெண்ணுக்குப்
பாலியல் தொழிலே கதியாம். கஜினி வில்லனைவிடவும் மோசமான விதத்தில்
பெண்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறை அல்லவா இது? அவன் வெறுமனே
மண்டையில்தான் அடித்தான். நீங்கள் அவள் சுயமரியாதையை, ஆளுமையை, நேர்மையை,
கௌரவத்தை அல்லவா அடித்து நொறுக்குகிறீர்கள்?
அசிங்கம் என்று அப்பட்டமாகச் சொல்லி ஒரு பெண்னையோ ஒரு ஆணையோ திரையில்
இழிவுபடுத்தி அதை வைத்துப் பலரைச் சிரிக்கவைக்க முயல்வதும் அருவருப்பான
ரசனை என்பது ஒரு புறம் இருக்க, இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.
மேற்படிக் காட்சிகளில் இழிவுக்கு ஆளாகும் நடிக, நடிகைகளின் உளவியலில் இது
ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தைப் பற்றி யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.
கறுப்புத் தோல், எடுப்பான பற்கள், குண்டான உடல், மாறுகண், குள்ளமான உருவம்
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவர்களைக் காட்டிக் கதாநாயகனையோ
கதாநாயகியையோ உயர்த்தி வைக்கும் காட்சிகளில் மேற்படி இழிவுக்கு
உள்ளாகுபவர்களின் மன வேதனையை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு சில
சித்தரிப்புகள் வாழ்நாள் முழுவதும் போக்க முடியாத கறையாக ஒருவரது ஆளுமையின்
மீது படிந்துவிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சினிமாவில் வாய்ப்பு வேண்டுமே
என்பதற்காகச் சிலர் இத்தகைய இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளலாம். அது அனுதாபம்
கொள்ள வேண்டிய சமரசம். ஆனால் இப்படி இழிவுபடுத்துவது மன்னிக்க முடியாத
அத்துமீறல்.
பெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் உடல் குறைபாடு உள்ளவர்
களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமைக்குச்
சினிமாக்காரர்களே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான நாகரிகமும்
தீர்க்கமான சிந்தனையும் தைரியமும் கொண்ட நபர்கள் அங்கே
இருக்கிறார்களா?
tha nx- the hindu
santhanam from Humble
பெண்களை கேலி மற்றும் கேளிக்கை பொருளாக நோக்கும் தன்மைக்கு ஆண்களும் பெண்களுமே காரணம் பணமே பிரதானம் என்ற உலகத்தில் தனிமனித ஒழுக்கத்தில் இருந்து நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு வழுவாமல் இருவரும் செயல் பட்டால் இச்செய்கை நீங்கிவிடும் கீழ்தர சிந்தனைகள் அழிந்துவிடும் ஆனால் பணத்திற்காக மனதை அடமானம் வைக்கும் பாவி மனிதர்களுக்கு இது தானே நாகரிகம் வார்த்தைக்கும் வடிவுக்கும் வேலை இல்லை இந்த தனிமனித நாகரிகத்தில் . தன் மனதை கட்டு படுத்த சட்டங்கள் தேவை இல்லை2 months ago · (0) · (0) · reply (0)SARAVANAN saravanan from Chennai
தினமும் அணைத்து தொலைகாட்சி சேனல்களிலும் வெளிவரும் BODY SPRY விளம்பரத்தில், பெண் என்பவள் ஓர் ஆண் ரூ.150க்கு Body Spray வாங்கி அடித்துக்கொண்டால் போட்டிருக்கும் ஆடைகளை களைந்து ஓடிவருவது போலவும், துணி உலர்த்தும் பக்கத்துக்கு வீட்டு பெண் மயங்குவது போலவும், நிமிடம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதுவரை எந்த பெண்கள் அமைப்புகளோ, சமுக ஆர்வலர்களோ எதிர்ப்பு தெரிவித்ததாக தெரியவில்லை.2 months ago · (8) · (0) · reply (0)Rathi Up Votedjanardhanan from Mumbai
கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் எப்படி கேள்வி கேட்பார்கள்? தன் சதையைக் கதையாக்கப் பார்ப்பவர்கள். தற்காலிக புகழுக்கு அலைபவர்கள்.அவர்கள் அப்படிதான்.இங்கு யாருக்கும் வெட்கமில்லை.2 months ago · (1) · (0) · reply (0)பூபாலன்
பெண்களை இழிவுபடுத்துவதில் திரைப்படம் மட்டுடல்லாது விளம்பரங்களும் தங்கள் பங்கிற்கு அவிழ்த்து விடுகின்றன.... ஐ.பி.எல். விளம்பரத்தில் படுக்கையில் இருக்கும் ஒரு தாய் தன் மகனைப் பாா்த்து ”உங்கப்பா இவரு இல்லை....”என்று பிறகு ”இவராக இருக்கலாம்” மற்றும் பல புகைப்படங்களைக் காட்டி ”இவற்றில் யாராவதாக இருக்கலாம்” என்று கூறுகிறாா்....எவ்வளவு கேவலமான ஒரு சிந்தனை அந்த விளம்பரத் தயாாிப்பாளருக்கு....இதுபோன்ற விளம்பரங்களை தடைசெய்ய வேண்டும்..2 months ago · (2) · (0) · reply (0)prakash jothiprakash from Chennai
ஒரு சிறந்த விமர்சனத்தை படித்தேன் . பெண்களை வெறும் போகபோருளாக பார்க்காமல் சக உயிரினமாக பார்க்கும காலம் என்று வருமோ ?2 months ago · (1) · (0) · reply (0)Arul Gajendra
''பெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் உடல் குறைபாடு உள்ளவர் களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமைக்குச் சினிமாக்காரர்களே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான நாகரிகமும் தீர்க்கமான சிந்தனையும் தைரியமும் கொண்ட நபர்கள் அங்கே இருக்கிறார்களா? '' அருமையான வரிகள் !ஆழமான கருத்துக்கள்!வாழ்த்துக்கள்!2 months ago · (1) · (0) · reply (0)Rajarajan Rajan from Chennai
இதற்கெல்லாம் ஒரே வழி நடிகைகளும் சங்கம் ஆரம்பித்து அந்த சங்கத்தில் இணைந்த பிறகுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்து இது போன்ற காட்சியமைப்புகளோ, வசனங்களோ இருக்கும் எந்த படத்திலும் இனி பெண்கள் நடிக்க மாட்டார்கள் என்ற தீர்மானம் இயற்ற வேண்டும்.அனால் இதை பெண்களே செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.ஏனென்றால் முக்கியமாக அவர்களுடைய நவநாகரிக வாழ்க்கை கெட்டுவிடும் அதனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்...2 months ago · (0) · (0) · reply (0)Eswar from Jülich
அவர்களின் கருத்துச் சுதந்திரத்திலும் இற்றுப் போன எதார்த்தம் மாதிரியானச் சிந்தனைகளிலும் கை வைக்கிறீர்களே! மிக அருமையானக் கட்டுரை. படம் எடுப்போர் எல்லோரையும் வயிற்றைக் காய விட்டால் தெரியும் எது எதார்த்தம் என்று! படத்தைப் பார்த்து இற்றுப் போகிறது பள்ளி, கல்லூரி சமுதாயம். இவர்கள் வளர்ந்த பின் எடுக்கும் படத்தை நினைத்தால்... சமூகம் ஏற்கனவே, தனிமனிதத் தன்மையை (கேடுகெட்ட வழிகளில்) அமைக்கத்துடிக்கும் வேளைகளில், அடுத்தவர் பற்றிய இழிவான போக்குகளைக் கொண்டிருப்பதுபோல் பேசுவது போல் படம் எடுப்பது பற்றி யோசிப்பது அவர்களின் சமூகக் கடமை.2 months ago · (0) · (0) · reply (0)K.Mani Mani
இது மாதிரியான மூன்றாம் தர சினிமாக்களை பார்க்காமல் இருப்பது மேல். சினிமாவின் தரம் தாழ்ந்து ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது2 months ago · (0) · (0) · reply (0)வீரராகவன் from Mumbai
பிறர் மனம் மட்டும் அல்ல, தன் மனதறிய புண்படுத்துவது இல்லை என்பதே நல்ல நகைச்சுவை ஆகும். தங்கவேலு காலத்திலேயே சுருளிராஜன் போன்றோர் ஆரம்பித்த வன்முறை நகைச்சுவை மனதை புண்படுத்துவதாகத்தான் அமைகிறது. ஒரு சமயத்தில் கேலி பேசுவதும் பகடி செய்வதும் மட்டுமே நகைச்சுவை என்று வரையறை செய்கிறார்கள். இதை மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. வடிவேலுவின் துன்பங்களை கண்டு சிரிக்க ஆரம்பித்ததே தவறு அல்லவா? இதற்கு சந்தானம் சிவகார்த்திகேயன், விவேக் முதலியோரின் இரட்டை அர்த்த வசனங்கள் (அவை ஒரே அர்த்தம்தான் - இரண்டு அல்ல - அனர்த்தம்) சகிக்க பழகி விட்டோம். தவறு பலகாலமாக தொடர்கிறது. இதில் பெண்களையும் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஒட்டுமொத்தமாக இழிவு படுத்துதல் கேலி செய்தல் நகைச்சுவை என்பதை எதிர்க்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும். உரத்து குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?2 months ago · (1) · (0) · reply (0)Albert Arul Prakash Rajendran Project Manager/Scrum Master at GT Nexus
அதற்காக, தமிழ் படத்தில் வன்கொடுமை இல்லை என்று கூறவில்லை, அது இருக்கிறது. இதே மக்கள், வடிவேலு என்பவர், கோவை சரளாவிடம் மிதி வாங்கும் காட்சியையும் ரசிப்பார்கள். அதை பத்தி ஏழுத யாரும் கிடையாது ஏன் என்றால் அதை எழுதினாலும், நம்மை அறிவாளி, உரிமைக்கு போராடுபவன் என்று யாரும் நினைக்க போவது கிடையாது2 months ago · (0) · (0) · reply (0)Albert Arul Prakash Rajendran Project Manager/Scrum Master at GT Nexus
இதை எழுதிய அன்பர் அரவிந்தன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் ஏளுதியவை, நிறைய நியாயங்கள் உள்ளது. ஆனால் ஒன்று, கெட்டவன் பார்ப்பது எல்லாம் கெட்டதாக தெரியுமாம். நீங்கள் கூறிய கணவன் மனைவி உரையாடல் இன்றைய நகரங்களில் இது போன்ற சீண்டல்கள் தம்பதியினரிடம் உள்ளது. என்னுடைய மனைவியை நானும் சீன்டிகொண்டுதான் இருக்கிறேன். அதே போல் உங்கள் துப்பாக்கி வசனம், ஒருவன் தன்னுடைய நாட்டிற்கு துரோகம் செய்யும் பொது, அப்படி செய்து அவன் மக்களுக்கு நடுவில் கொல்லப்படும்போது, அவனுடைய குடும்பத்தை ஒருவரும் கவனிக்க மாட்டார்கள், உதவி செய்ய மாட்டார்கள். அப்படி பட்ட சமையத்தில் அவர்களுடைய வீடு சிதைந்து பாலியல் தொழில் செய்யும் அளவிற்கு தள்ள படுவர். இது உன்னை போன்ற மக்களுக்கு தேவையா என்று வரும். நீங்கள் கூறிய இந்த வசனங்கள் உங்கள் சௌகரியத்திற்கு ஏடுத்துள்ளீர்கள், சில மத தலைவர்கள் போல, தனக்கு ஏது தேவையோ அதை மட்டும் ஏடுத்து, இது கெட்டது என்று கூறுகிறீர்கள். எந்த ஒரு வசனமும், முழுமையாக அதன் பொருள் பட பார்த்தால் மட்டும் தான் அதன் அர்த்தம் சரியான விதத்தில் அமையும். இல்லையேல், இதுபோலத்தான் அமையும்.2 months ago · (1) · (6) · reply (0)எஸ்.ஏ.ஸ்ரீதர் from Colombo
தமிழ் சினிமா மட்டும் இந்தத் தவறைச் செய்து கொண்டிருக்கவில்லை. அனைத்து வணிக ஊடகங்களுமே இதைத்தான் செய்கின்றன! முதலில் தமிழர்கள் தம் பண்பாட்டையும் மொழியின் பெருமையையும் அறிய வேண்டும். சொரணை இல்லாத மனிதன் தன் தாயின் மானம் பற்றி அஞ்சுவதில்லை. எட்டுக் கோடி தமிழர்களும் வெட்கித் தலைகுனிவதையே தொடர்ந்து அடையாளப்படுத்துவதும் தமிழர்கள்தானே! நல்லவற்றை அங்கீகரித்து ! தீயதை புறக்கணிக்க வேண்டும். அனைவரது சொந்த வாழ்விலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை விடுத்து... ஒரு படத்தில் இப்படி சொல்லிவிட்டார்களே என்று கொந்தளித்து விட்டு - மறுநாள் நம் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவதுதானே இதுவரை நடந்து வருகிறது.2 months ago · (0) · (0) · reply (0)Rathi
இது மட்டும் அல்ல, வகுப்பு அறையும் கோவில் கருவறையும் ஒன்று என்பார்கள். அந்த புனித தன்மை வாய்ந்த வகுப்பு அறையை இந்த சினிமாகாரர்கள் காட்டிய விதம். சற்று எண்ணி பாருங்கள். உதாரணம், கடந்த ஆண்டு வந்த ஒரு மூன்றாம் தர படம். டியூஷன் மையத்தில் வகுப்பு எடுக்க ஒரு நடிகையை (அவரும் நிறைய A சேர்டிபிகட் படத்தில் நடித்தவர்) வேலைக்கு அமர்த்தும் கதாநாயகன். முகம் சுளிக்கும் இந்த காமெடிதான் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. எண்ணிப்பாருங்கள், ஆசிரியை குறித்த மாணவர்களின் பார்வையை இந்த காட்சி எப்படி சிதைத்து இருக்கும். ஆசிரியைகளுக்கு, இன்று மிகவும் சிரமமான வேலை என்ன தெரியுமா, கரும் பலகையை நோக்கி பாடம் எடுப்பதுதான். ஒரு சாதி குறித்த, ஒரு மதம் சார்ந்த ஒரு வார்த்தை வந்தால், படத்தை நிறுத்தும், இந்த சமூகம், வகுப்பறையை எவ்வளவு இழிவு படுத்தினாலும் போருதுகொல்வது ஏன்?2 months ago · (1) · (0) · reply (0)Ravi from San Francisco
முன்னால் ஒருத்தர் கூறியது போல தமிழ் படம் பார்ப்பதை விடுத்து பல வருடங்கள் ஆகி விட்டது.(NKPK போன்ற சில படங்களை தவிர. முன்னேற இன்னும் சில தலமுறைகள் ஆகும் என்று தோன்றுகிறது. காமம் குறித்து, ஆண் பெண் உறவு குறித்து நமது சமுதாயத்தின் அடிப்படை கண்ணோட்டத்த்தையே ஆராய வேண்டும். கட்டுரையில் சொன்னது போல் பெண்ணை ஒன்று தெய்வமாக அல்லது ஒரு பொருளாக கருததுவதற்க்கு காரணம் என்னவாக இருக்கும். சிறு வயதிலேயே தனியாக பிரித்து பெண்களை ஒரு எட்டாத கனீயாக ஆக்கி விடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு கல்யாணம் ஆக 30 வயது ஆகி விடுகிறது. இடைப்பட்ட உச்ச இளமை காலத்தில் சராசரி ஆணுக்கு வேறு outletம் கிடையாது. ஒன்று பழைய தலைமுறை போல கட்டுப்பெட்டித்தனமாக இருக்க வேண்டும் அல்லது மேற்கட்திய சமுதாயம் போல liberal society ஆக இருக்க வேண்டும். ரெண்டும் கெட்டான் காலத்தில் வாழ்கிறோம்.2 months ago · (1) · (0) · reply (0)Ravi from San Francisco
முன்னால் ஒருத்தர் கூறியது போல தமிழ் படம் பார்ப்பதை விடுத்து பல வருடங்கள் ஆகி விட்டது.(NKPK போன்ற சில படங்களை தவிர. முன்னேற இன்னும் சில தலமுறைகள் ஆகும் என்று தோன்றுகிறது. காமம் குறித்து, ஆண் பெண் உறவு குறித்து நமது சமுதாயத்தின் அடிப்படை கண்ணோட்டத்த்தையே ஆராய வேண்டும். கட்டுரையில் சொன்னது போல் பெண்ணை ஒன்று தெய்வமாக அல்லது ஒரு பொருளாக கருததுவதற்க்கு காரணம் என்னவாக இருக்கும். சிறு வயதிலேயே தனியாக பிரித்து பெண்களை ஒரு எட்டாத கனீயாக ஆக்கி விடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு கல்யாணம் ஆக 30 வயது ஆகி விடுகிறது. இடைப்பட்ட உச்ச இளமை காலத்தில் சராசரி ஆணுக்கு வேறு outletம் கிடையாது. ஒன்று பழைய தலைமுறை போல கட்டுப்பெட்டித்தனமாக இருக்க வேண்டும் அல்லது மேற்கட்திய சமுதாயம் போல liberal society ஆக இருக்க வேண்டும். ரெண்டும் கெட்டான் காலத்தில் வாழ்கிறோம்.2 months ago · (0) · (0) · reply (0)suvanappiriyan
இதனால்தான் நான் தமிழ் சினிமாக்களை பார்ப்பதில்லை. சில பழைய படங்கள் இதில் விதி விலக்கு!2 months ago · (0) · (0) · reply (0)raajaa from Sharjah
வளர்ப்புத் தாயிடமே, மகன் அத்துமீறுவதாக ஒரு படம், கணவனின் தம்பியை மனைவி விரும்புவதாக ஒரு படம், தம்பியின் மனைவியை அடைய துடிக்கும் அண்ணன் என்று ஒரு படம், மாமனார், மருமகளிடையே தகாத உறவுள்ளதைச் சொல்லும் படம் என்றெல்லாம் படம் எடுப்பார்கள், யாராவது எதிர்த்தால் சமூகத்தில் நடப்பதைத் தானே சொல்கிறோம், படத்தைப் படமாகப் பாருங்கள் என்று தத்துவம் பேசுவார்கள்.2 months ago · (0) · (0) · reply (0)
3 comments:
பெண்களை இழிவு படுத்தும் புதிய Trend இப்போது தமிழ் சினிமாவில் வந்ததற்கு காரணமே சந்தானம் தான். இதை உங்களால் முடிந்த வரை உரக்க சொல்லுங்கள் இந்த உலகிற்கு. சந்தனத்தின் காமெடி-யைஅங்கீகரிப்பதை நிறுத்த வேண்டும்.
பெண்களை இழிவு படுத்தும் புதிய Trend இப்போது தமிழ் சினிமாவில் வந்ததற்கு காரணமே சந்தானம் தான். இதை உங்களால் முடிந்த வரை உரக்க சொல்லுங்கள் இந்த உலகிற்கு. சந்தனத்தின் காமெடி-யைஅங்கீகரிப்பதை நிறுத்த வேண்டும்.
பெண்களை இழிவு படுத்தும் புதிய Trend இப்போது தமிழ் சினிமாவில் வந்ததற்கு காரணமே சந்தானம் தான். இதை உங்களால் முடிந்த வரை உரக்க சொல்லுங்கள் இந்த உலகிற்கு. சந்தனத்தின் காமெடி-யைஅங்கீகரிப்பதை நிறுத்த வேண்டும்.
Post a Comment