Friday, April 18, 2014

தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

 
ஒரு வெற்றிப்படத்தைப்பார்த்து அது போல் இன்னொரு படம் பண்ண நினைப்பது  வேறு, அதே போல் எடுப்பது வேறு . இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் ஹீரோவாகக்கலக்கிய வைகைப்புயல் வடிவேலு  கேப்டன் , ஜெ ஆக்ரமிப்பால்  3 வருட வனவாசம் போனார் . இப்போ வெல்கம் பேக் வடிவேலு என எல்லோராலும் வரவேற்கப்பட்டு  அதே போல்  டபுள் ரோலில்  ஒரு மன்னர் படம் தந்திருக்கார் . என்னா ஆச்சுனு பார்ப்போம். 


ஹீரோ கிருஷ்ண தேவராயருக்கு 36 சம்சாரம் , 52  குழந்தைங்க . மாசம் 31 நாள்-னு கணக்கு வெச்சாக்கூட  ஒரு மாசத்துல  31 பேரைத்தான் கவனிக்க முடியும் , மீதி 6 பேர் ஷார்ட்டேஜ்  வருது . இந்த மாதிரி சிக்கலான சூழலில்  ராஜா எப்படி மக்களைக்கவனிக்க முடியும் ? 3 சம்சாரம்  இருக்கறவங்க , ஒரு சம்சாரம் மட்டும்  இருந்தும் பிரிஞ்சு வாழ்றவங்க , கூட எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய  நல்லாட்சியைத்தர முடியறதில்லை 


அமைச்சர் குழுவுல  9 பேரு.அதுல ஒரு ஆள் கொலை செய்யப்படறார். அந்த காலி இடத்துக்கு  பை எலக்சன் வைக்காம ஒரு புது அமைச்சர் எடுக்கறாங்க . தன் சமயோதிசத்தால் தெனாலி ராமன் அமைச்சர் ஆகிறார். 


ஒரே நேரத்தில் மன்னரையும் , மன்னர் மகள் இளவரசியையும் கவர்றார்.  மீதி  இருக்கும் 8 அமைச்சர்களும்  சீனர்களுடன் சேர்ந்து சதி செய்து நாட்டை திராவிட கழகம் ஆக்கறாங்க. அதாவது குட்டிச்சுவர் ஆக்கிடறாங்க . அவங்க சதி வேலைகள் எப்படி முறியடிக்கப்படுது ? என்பதுதான் கதை , 




ஹீரோவாக மன்னர், அமைச்சர் என இரு மாறுபட்ட தோற்றத்தில் வடிவேல் அசால்ட்டா கலக்கி இருக்கார் .  எல்லா ஹீரோக்களையும் போல இவருக்கும்   ஓப்பனிங்க் சீன் ., காமெடி , டூயட் , பஞ்ச் எல்லாம் உண்டு . அதகளம் பண்ணி இருக்கார் ., இவர் என சொன்னாலும் ஆடியன்ஸ் சிரிப்பது  இவர் சேர்த்து வைத்த சொத்து . போயஸ் தோட்டத்தில் வாங்கிவராத வரம்


ஹீரோயினாக மீனாட்சி தீட்சித் . 24 மணி நேரமும்  லோ கட் ஜாக்கெட் , லோ ஹிப்  சேலை யில் வரும்  கிளாமர்  நாயகி . ரொம்ப சாதாரண தோற்றம் . வர்ணிக்க  வைக்கும் அளவு அழகு இல்லாத  சாதா நாயகி . 


 ராதா ரவி யின்   கம்பீரக்குரல்  , மனோபாலாவின் காமெடி படத்துக்கு பிளஸ்



 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.   படத்துக்கான ப்ரமோ , போஸ்டர் டிசைன்கள் , பரபரப்புக்காக தெலுங்கர்கள் எதிர்ப்பு டிராமா  எல்லாம் அற்புதம் 


2    ஏப்ரல் மாதத்தில்   ஸ்கூல்  லீவ் டைமில் டைமிங்காக படத்தை  ரிலீஸ் செய்தது 


3  திரைக்கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல்  தெனாலி ராமன் கதைகள்  நீதிக்கதை  புக்கில்  இருந்து அசலாட்டாக  12 சின்னக்கதைகளை எடுத்து கோர்த்தது 


4  கூச்சமே இல்லாமல் இம்சை அரசன் 23 ம் புலிகேசி  திரைக்கதையையே திருப்பிப்போட்டு எடுத்தது 


5 இளைஞர்கள் கூட்டத்தை இழுக்க   நாயகியை எப்போதும் மேலாக்கு இல்லாத  லோலாக்கா அலாக்கா காட்டியது 


6   டி இமான் -  இசை  கூட லைட்டா காப்பியா இருந்தாலும் கண்டுக்காம  ஃபுல் சம்பளமும் குடுத்தது 





இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஒரே ஒரு  ஜோடி உள்ள தெனாலி ராமன்க்கு 2 டூயட் வெச்ச நீங்க  36  ஜோடி உள்ள மன்னர் க்கு ஏன்  டூயட்டோ , கில்மா சீனோ வைக்கலை ? 


2  மன்னர் மாதிரியே தோற்றத்தில்  இருக்கும் அமைச்சர் வடிவேலுவை முக ஜாடை பார்த்து யாரும் ஏ கேள்வி கேட்கலை ?   ஒரு வேளை  36 ல் தப்பி 3 வதா யாருக்காவது  பிறந்தவரா? 


3  சராசரியா   ஒரு சம்சாரத்துக்கு  ஒரு தக்கச்சின்னாக்கூட   மொத்தமா 36 மச்சினிங்க  இருந்திருக்கும் . அது பற்றிய வரலாற்றுபதிவு ஏன் இல்லை ? 


4   காதலரா , அப்பாவா  வடிவேலு   நாயகியை கட்டிப்பிடிக்கும்போது  ஹீரோவுக்கு சங்கடமா  இருந்திருக்காதா? 


5  அப்பா வடிவேலுவை கட்டிப்பிடிக்கும் மகள்  நாயகி  அப்போக்கூட  லோ கட் , லோ ஹிப்பில் தான்  வரனுமா?  24 நேரமும்   இடை வெளி இல்லா இடை காட்டும் தடை இல்லா சீன் காட்டும் சீனு ராமசாமியா ஒளிப்பதிவாளர் ? 


6   ஓப்பனிங் சீனில் வரும்  சீனப்பொண்ணு அட்டகாசமா தமிழ் பேசுது. அது எப்படி ? அடியாளுங்க  கிட்டே  தன்  புருஷன் முன்னாடியே “ நீங்க எங்க சதித்திட்டத்துக்கு இணங்குனா  நீங்க எது கேட்டாலும்  தருவேன்னு  பூடகமா சொல்லுது .புருசன்  மிக்சர் பார்ட்டியா? 


 7 மன்னர் காலத்தமிழில் ஆங்காங்கே   தற்கால ஸ்லாங்க் புகுந்தது எப்படி ? 





மனம் கவர்ந்த வசனங்கள்



 1.இவன் கிடக்கான் ஏமாளி.இவன் இடத்துக்கு வருவான் ஒரு கோமாளி# வடிவேலு ஆரவாரமான ஓப்பனிங்

2. ஏய் வாயாடி வழியில் போகும் ஆம்பளைங்களை வம்பிழுக்கும் வாயாடி பாட்டு நயன் க்கா?

3. அப்பா! நாங்க 52 வாரிசு.யார் நாட்டை ஆள்வது ? வருடத்துக்கு 52 வாரம்.வாரம் ஒருவர் ஆட்சி செய்யலாம்

4. எங்கே போறீங்க? ராணிகள் மூவருக்கு இடுப்பில் வலியாம்.போய்பார்த்துட்டு வரேன் # தெ ரா 



5  நீங்க போடும்  சட்டங்களும்  திட்டங்களும்  செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் தான் பயன்படும் 


6 நான்  கேட்காமயே ஏன் உதவி செஞ்சே? 


 கேட்காம செய்யறதுக்குப்பேர் தான்  உதவி 


7  ஒருத்தர் பிடிச்சுப்பார்த்தாலே  எல்லாம்  தெரிஞ்சுடும் \


 என்னாது ? 


 வலியைச்சொன்னேன்



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. 1150 சீட் அபிராமில மான் கராத்தே காத்து வாங்குது.380 சீட் தேவி அபிராமில தெனாலிராமன் ரிலீஸ்.செயற்கை டிமாண்ட் .பிளாக் டிக்கெட் டெக்னிக்

2. எந்தத்தியேட்டருக்கு எந்த ஷோ போனாலும் எல்லாப்பயலும் ஏதோ ஒரு பிகரோட ஜோடியாத்தான் வாராங்க.தனியாப்போவது நாம மட்டும்தான் போல#தெ ரா

3. புதையல் இருக்குனு பொய் சொல்லி தூர் வாரவெச்சு கிணறு தோண்டும் மொக்கை ஜோக்

4. தமிழ்த்தாய் மகன் ,நகைச்சுவைப்புதல்வன் வைகைப்புயல் வடிவேலு # டைட்டில் பில்டப் 

5. மீனாட்சி தீக்சித் . மிக சாதாரணமான புருவ அழகு கிளுகிளுப்பு ஊட்டத்தவறிய சின்ன உதடுகள்,செழுமையான மத்தியப்பிரதேசம்

6. கிருஷ்ண தேவராயர் க்கு 36 சம்சாரமாம். அவனவன் ஒண்ணைக்கட்டிட்டே செலவு பண்ணி மாளலை

7. நாம் ஸ்கூலில் படிச்ச அதே தெனாலிராமன் கதை காமெடிதான்.ஆனா தியேட்டர் ஆடியன்ஸ் செம ரெஸ்பான்ஸ்

8. இம்சை அரசன் திரைக்கதை நோட் ,தெனாலிராமன் நீதிக்கதைகள் புக் 2 லிருந்தும் இப்டி ஒரு சீன் அப்டி ஒரு சீன்

9. பானைக்குள் யானை காட்சி யில் வடிவேல் நடிப்பு டாப் கிளாஸ்

10. கிருஷ்ணதேவராயர் காலத்துல இளவரசி யு நெக் லோ கட் ஜாக்கெட் போட்டிருக்கு.யாரும் லாஜிக் மிஸ்டேக்கை பாக்கலை.ஜாக்கெட்டைத்தான்

11. மன்னர் கிருஷ்ணதேவராயர் ,அமைச்சர் தெனாலிராமன் இரு வடிவேலுவையும் புத்திசாலிகளாக வடிவமைத்தது திரைக்கதையில் முதல் சறுக்கல்



சி பி கமெண்ட் -  தெனாலிராமன் - குழந்தைகளுக்கான லோ பட்ஜெட் கோச்சடையான் -திரைக்கதை , சம்பவங்களில் புதுசரக்கு இல்லை -தெனாலிராமன் - இந்திரலோகத்தில் நா அழகப்பன் க்கு ஒரு படி மேலே , இம்சை அரசன் க்கு பல படி கீழே- முதலுக்கு மோசம் வராத வசூல் அள்ளிடும்
விகடன் மார்க் -40 , ரேட்டிங்க்-2.25 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங்=  2.25  / 5 


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

சிபி எஸ் சின் வீடியோ விமர்சனம் - தெனாலிராமன்  



3 comments:

jananiantonyraj said...

தலைவன்னு ஒரு படம் வந்துருக்கு விமரசன்ம் எழுதலயா தலைவா
உஙக விமரசனம் படிச்சிட்டுதான் படம் பார்க்கனும் சீக்கிறம்ன் தீயா வேலை பாருங்க பா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!

Gopes said...

Sir, Aachi oorugaai ad-la "Saapidunga. Jammunu Irukum" nu solradhu idhu dhaane?

Indha tamil makkalin doubt theerthu veiyungal