சினிமாத் துறையினரை அரசியலில் வளர விடுவதில்லை என்று, பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அழகிரியை சந்தித்த எஸ்.வி.சேகர், ’கட்ட’ ஜாதகம் எல்லாம் சொல்லி, ’ஏப்ரல் 14-க்கு பிறகு அழகிரியின் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்’ என்று ஆருடம் சொன்னார். ‘தி இந்து-வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
இப்போது நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்? ஏதாவது பதவியில் இருக்கிறீர்களா?
இதிலென்ன சந்தேகம்? பாஜக-வில்தான். மோடி எனக்கு நண்பர். அவரது ஆசியுடன் பாஜக-வில் சேர்ந்தேன். பாஜக பிரச்சார அணிக் குழுத் தலைவர் பதவி தருவதாக, மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதியளித்தார். இது இல.கணேசனுக்கும் தெரியும். இதுவரை பதவி தரவில்லை. சிறு குழந்தை போல் தினமும் சென்று, பதவி கொடுங்கள் என்று கேட்க முடியாது.
ஒவ்வொரு கட்சியாக மாறு கிறீர்கள்? எந்தக் கட்சியில் இருக் கிறீர்கள் என்று கேட்கும் நிலை உள்ளதே?
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பின்பும் கட்சிகளும் அரசியல்வாதி களும் கூட்டணி மாறுவதும், கட்சி மாறுவதும் இல்லையா. போலி வாக்குறுதிகள், ஏமாற்று வேலை கள் தெரியாது, அப்படிப்பட்ட அரசி யல் எனக்குத் தேவையில்லை. நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எந்த அமைச்சரிடமோ, அதிகாரி களிடமோ, அதை செய்து கொடு, இதை செய்து கொடு என்று போய் நின்றது இல்லை.
உங்களை எம்.எல்.ஏ-வாக்கிய அதிமுக-வில் நீடிக்காமல், திமுக-வுக்கு ஆதரவான நிலையை எடுத்தீர்களே?
ஜெயலலிதாவை நான் சீட் கேட்டு விண்ணப்பிக்காத நிலை யில், என்னை அழைத்து மயிலாப் பூர் எம்.எல்.ஏ. ஆக்கினார். அவரிடம் நல்ல பெயர் எடுத்ததால், அவருக்கு அடுத்த கட்டத்தில் இருந்தவர்கள் எனக்கு கட்சியிலிருந்து வெளி யேறும் நிலையை உருவாக்கினர். நான் தொகுதி வளர்ச்சி சம்பந்த மாகவே அப்போதைய முதல்வ ரான கருணாநிதியைச் சந்தித்தேன்.
பிரபல சினிமா நடிகராக, பேச்சாள ராக இருந்தும் கூட அரசியலில் உங் களால் சாதிக்க முடியவில்லையே?
தமிழகத்தில் சினிமா நடிகர் களை அரசியலில் வளரவிடா மல் தடுக்கின்றனர். நடிகர்களின் பிரபலத் தன்மையை தங்கள் அரசி யல் வளர்ச்சிக்கு பயன்படுத் துவதை மட்டுமே அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்.
நடிப்புத் துறையிலிருந்த எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் அரசியல் தலைவர்களாகி முதல்வராகியுள்ள னர். தற்போது விஜயகாந்த் பெரிய அரசியல்வாதியாக உருவெடுத் துள்ளாரே?
உண்மைதான். எம்.ஜி.ஆர்., வளர்ந்து வந்ததால்தான் அவரை திமுக-விலிருந்து வெளியேற்றினர். ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சிக்கல் ஏற்படுத்தினர். அனைத்து எதிர்ப்புகளிலிருந்தும் அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் கள். விஜயகாந்த், சொந்தக் கட்சி தொடங்கியதால் அவருக்கு இந்தப் பிரச்சினை இல்லை. பிரபலமான நடிகரும், அரசியல்வாதியும் தெரு வில் நடந்து சென்றால் நடிகரைச் சுற்றித்தான் கூட்டம் வரும்.
பாஜகவில் உங்களுக்கு முக்கியத் துவம் இருப்பதாகத் தெரிய வில்லையே?
சுயமரியாதையை இழந்து எந்தக் கட்சியிலும் இருக்க மாட் டேன். டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் பகுதியில் பிரச்சாரம் செய்ய பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் அழைத்தார். அமெரிக்காவில் நாடக நிகழ்ச்சியை விட்டுவிட்டு இந்தியா வந்தேன். வந்த பிறகு பிரச்சாரத்துக்கு அழைக்க வில்லை. மோடி போட்டியிடும் வாரணாசியில் 10 சதவீதம் தமிழர் கள் வசிக்கின்றனர். வாரணா சிக்கும், காந்தி நகருக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழ கத்தில் கட்சித் தலைமை அழைத் தால் பிரச்சாரம் செய்வேன்.
உங்கள் நாடகப் பெயர் போல், இந்தத் தேர்தலில் ஆயிரம் உதை வாங்கும் அபூர்வ சிகாமணி எந்தக் கட்சியாக இருக்கும்?
பாஜக-வைத் தவிர தோல்வி யுறும் கட்சிகள்தான் உதை வாங்கும் சிகாமணிகள்.
மோடி மீது கோத்ரா கலவரக் குற்றச்சாட்டு உள்ளதே?
அது ஒரு எதிர்வினை சம்பவம். குஜராத் அருகிலுள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் வேண்டு மென்றே உதவி செய்யாமல், வன் முறையை வேடிக்கை பார்த்த சம்ப வம். முஸ்லிம் கட்சிகளை வைத்துக் கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி என திமுக பேசுவது அபத்தம். இந்து, முஸ்லிம் பிரிவினையைப் போக்கத்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் கொண்டுவர உள்ளது.
உண்மையில் அழகிரியை எதற் காகத்தான் சந்தித்தீர்கள்?
அவர் என் நண்பர். மதுரை அருகே நாடகம் நடத்தச் சென்றேன். டென்ஷனை விட்டுவிட்டு, சிறிது நேரம் சிரிக்க வாங்க என்று அழைத் தேன். அரசியல் பேசவில்லை.
மோடி போட்டியிடும் வாரணாசியில் 10 சதவீதம் தமிழர்கள் வசிக்கின்றனர். வாரணாசிக்கும், காந்தி நகருக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழகத்தில் கட்சித் தலைமை அழைத்தால் பிரச்சாரம் செய்வேன்.
0 comments:
Post a Comment