Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன் - சினிமா விமர்சனம்

 

 விஷால் லட்சுமிமேனன் லவ் மேட்டர்  ஓடிட்டிருக்கும்போது வரும் படம் என்பதால் இது விஷாலுக்கு ஒரு முக்கியமான படம்.எப்டின்னா படம் ஹிட் ஆகிட்டா ராசியான ஜோடின்னு பேர் வாங்கி இதான் சாக்குன்னு கேப்டன் -ராதிகா மாதிரி ஏகப்பட்ட படங்கள்ல (26)  ஜோடியா போட்டுக்கலாம்



படத்தோட விமர்சனத்துக்குள்ளே போகும் முன்  நார்கொலாப்சி ( ஒரு வகை டிஸ் ஆர்டர் நோய் ) ன்னா என்ன?னு பார்த்துடுவோம்.அதாவது  நீங்க ஏதாவது  அதிர்ச்சியான செய்தியைக்கேட்டாலோ , பார்த்தாலோ டக்னு தூங்கிடுவீங்க.இன்னும் புளி போட்டு விளக்கனும்னா நீங்க உணர்ச்சி வசப்பட்டா தூங்கிடுவீங்க. முதல் இரவுல பொண்ணு பக்கத்துல வந்தா டக்னு தூங்கிடுவீங்க. இந்த மாதிரி ஒரு வியாதி வந்தா என்ன ஆகும் ?> ( ஒண்ணும் ஆகாது ஹி ஹி )


இந்த மாதிரி ஒரு கொடுமையான வியாதி  ஹீரோவுக்கு  இருக்கு .இந்த வியாதியை எதுக்கு மெனக்கெட்டு கூகுள் ல 13 அசிஸ்டெண்ட் டைரக்டரை விட்டு திரு தேடுனார்னா அப்போதான் ரஜினி நடிச்ச நான் சிகப்பு மனிதன்க்கும் , விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் க்கும் வித்தியாசம் காட்ட முடியும்  

ஹீரோ , ஹீரோயின் 2 பேருக்கும் அறிமுகம் ஆகுது . ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ். 2 பேர் வீட்லயும் திருமணத்துக்குத்தனித்தனியா  ஜோடி பார்க்கறாங்க .  2 பேருக்கும் செட் ஆகலை . எப்படி ஆகும்? இயற்கை எழுதி வெச்சது இவங்க 2 பேரும் தான் ஜோடி சேரனும்னு இருக்கு . 
 
ஹீரோயின் -ஹீரோ 2 பேரும் லவ்விங்க். ஹீரோயின் அப்பா இதுக்கு ஒத்துக்கலை. காரணம் இந்த நோய் இருப்பதால் ஹீரோவால அப்பா ஆக முடியாது . இதுக்கு என்ன தீர்வு?ன்னு எல்லாரும் யோசிக்கும்போது ஹீரோயின் ஒரு ஐடியா கண்டு பிடிக்குது. இந்த மாதிரி மேட்டர்கள் ல பொண்ணுங்க சமயோசித புத்தி  ஆண்களின் மூளையை விட 3 மடங்கு வேகமாகவும் , திறமையாகவும் வேலை செய்யுமாம். கொல்லிமலை சித்தர் வாக்கு . 

 அதாவது  ஹீரோவுக்கு மழை ல நனைஞ்சாலோ , தண்ணில நனைஞ்சாலோ அந்த நோயோட பாதிப்பு இருக்காது  டகார்னு அந்த ஹீரோயின் ஹீரோவை  ஒரு நீச்சல் குளத்துல தள்ளி  மேட்டரை முடிச்சுடுது . என்ன எல்லாம் திகைச்சுப்போய்ட்டீங்க / ? இன்னும் எத்தனை நாள் தான் பெண்கள் அடுப்பு ஊதிக்கிட்டே இருப்பாங்க ? முன்னேற வேண்டாமா? 


எல்லாம் சுபம்னு நினைக்கும்போது  பருத்தி வீரன் ல வர்ற மாதிரி 4 பேர் ஹீரோயினை கேங்க் ரேப் பண்ணிடறாங்க . ஹீரோயின் கோமா ல .  

 இடைவேளை . 

 ஹீரோ எப்படி அந்த 4 பேரைக்கண்டு பிடிச்சுப்பழி வாங்கறாரு என்பது தான் மிச்ச மீதிக்கதை . 


 ஹீரோ கம் தயாரிப்பாளர் விஷால் க்கு மீண்டும் ஒரு சமர் டைப் த்ரில்லர் கதை . பாஸ் ஆகிடும் . திமிரு பட பாதிப்பில் அவர் எப்போதும்  மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பது ஏனோ ? நல்ல நாள் ல யே விஷால் கழுவாத  முக காயத்ரி மாதிரி தான் இருப்பாரு . இதுல கேரக்டரே தூங்கி வழியும் ஆள் என்பதால் நல்லாப்பொருத்தமா இருக்கு . ரொமான்ஸ் காட்சிகளீல்  ஹீரோயினை   டாமிப்னேட் பண்ண விட்டுட்டு அண்ணன் அடக்கி வாசிக்கிறார் ( நல்லவராம். லேடீஸ் ஆடிய்ன்சை கவரவாம் ) 


 ஹீரோயினாக  கும்கி தேவதை லட்சுமிமேனன்.  பச்சைப்பசேல் வெள்ளரிக்காயைப்பாதி சாப்பிட்டு வெச்சுட்டு வெளில போய்ட்டு வந்தா அது வெள்ளரிப்பழமா மாறி இருந்தா எப்படி இருக்கும் ? அப்படி முகத்துல லேசான முதிர்ச்சி . நமக்கு கொஞ்சம் அதிர்ச்சி ! ஆனாலும் தமிழன் ரசிக்காம போக மாட்டான் . இவரது ஆடை அணியும் பாங்கு , கேமரா கோணங்கள் எப்படி வந்தாலும் கண்ணியம் காட்டும் லாவகம் மற்ற  ஹீரோயின்கள் பின்பற்ற வேண்டியது .


சரண்யா வழக்கம் போல் கலக்கும் அம்மா கேரக்டர். காமெடிக்கு ஜெகன். இன்னும் நல்லா அவரைப்பயன்படுத்தி இருக்கலாம் . 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. படத்தின் கதையோடு ஒன்றி வரும்  காமெடி காட்சிகள் ,  ஜெகனின் அளவான வசனங்கள் 


2   லட்சுமி மெனன் ஹீரோவோடு  கில்மாப்படத்துக்கு முதல் ஷோவுக்கு ப்போகும் காட்சியில்  தியேட்டர் அதிர்கிறது . இனி ஏகப்பட்ட படத்துல  இதே மாதிரி காட்சி வைப்பாங்க 


3  ஆர்த்தி  ஹீரோவிடம் வழியும் காட்சி பல படங்களில் வந்த காட்சி என்றாலும் ரசிக்க வைக்கும் காமெடி 


4   ரசிகர்களை சூடேற்றட்டும் என நினைத்து வைத்த லிப் லாக் கிஸ் சீன் ஆக்சுவலா கடுப்பைத்தான் கிளப்புது . எல்லாம் ஒரு பொறாமை தான். அந்த ஸ்விம்மிங்க் பூல் காட்சி செம கிளுகிளுப்பு 


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 முன் பின் அறிமுகம் இல்லாத 4 பேர் ரேப் பண்ணிிட்டாங்க   என்றாலே   போதும் . எதுக்கு அந்த   எக்ஸ்ட்ரா ஃபிளாஸ்பேக் ? 


2  பில்டிங்கில் மேலே வில்லன் , கீழே  ஹீரோ . வில்லன்   அந்த கொலையை செஞ்சிட்டு அப்படியே கமுக்கமா இருந்திருக்கலாம். எதுக்கு தன்னைத்தானே  வயிற்றில் கிழிச்சு  ஹீரோவைக்கூப்பிடறார் ? 


3 பில்டிங்கின் எட்ஜில்  நிற்கும்  வில்லன் பிம்பம்  கீழே ஹீரோவுக்கு தேங்கி  இருக்கும் மழை நீரில் தெரிவதும் நம்ப முடியாத கோணம் 


4  மாஸ் ரேப் , கேங்க் ரேப் எல்லாம்  மிக வக்கிரமான சிந்தனையாளர்கள் , ஒரு  ஃப்ளோ வில் செய்வது . வில்லன்  ஹீரோவைப்பழி வாங்கனும்னா  ஹீரோயினை அவன் மட்டும் ரேப் பண்ணி இருக்கலாம். அவனுக்கு சில ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவிய ஆட்கள் 3 பேருக்கு  பகிர்வது ஏற்றுக்கொள்ள முடியல 


5  வில்லன்  தன் மனைவியை தன் நண்பனுக்கு  தந்து மாமா வேலை பார்ப்பது , 2 கோடி கேட்டு மிரட்டுவது  இதெல்லாம்  ஹிந்திப்படத்துக்கு  சரி . தமிழ்ப்படத்துக்கு ஒத்து வராது 



மனம் கவர்ந்த வசனங்கள்


1. தாமஸ் ஆல்வா எடிசன் ,வின்ஸ்டன் சர்ச்சில் னு நிறையப்பேரு இப்டி இருந்தவங்கதான்.உங்க பையன் பெரிய ஆளா வருவான் # விஷால் க்கு ஓப்பனிங் பில்டப்


சில விஷ்யங்கள் நாம சம்பாதிச்ச காசில் செஞ்சாத்தான் மனத்திருப்தி # நா சி ம


3 தூக்கம் வராம கஷ்டப்படறவங்க ,தூக்கத்துக்காக தண்ணி அடிக்கறவங்க மத்தில தூக்க வியாதி எனக்கு வரம் # திரு


4  ட்ச் - எனக்கு ஆல் த பெஸ்ட் சொல்லுங்க .


 வி - எதுக்கு?


 லட்ச் - நாளைக்கு என்னைப்பொண்ணுப்பார்க்க வர்றாங்க # நா சி க


5 வீட்ல இத்தனை பேரு இருக்கீங்க.ஒரே சத்தமா இருக்காது ? 


கடல் கூட சத்தம் தான்.ஆனா உள்ளே அமைதி .அது மாதிரி கூட்டுக்குடித்தனம் # திரு


6  நான் தூங்கும்போது யார் எது பேசுனாலும் என் மைன்ட் ல ரெக்கார்டு ஆகிடும் # திரு


7  சரன்யா = டேய்.அவன் வீட்டுக்கு ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வந்திருக்காண்டா 


.ஜெகன் - நீ உடனே மொட்டை மாடிக்கு வத்தல் காயப்போட வந்திருப்பியே? 


8  லட்ச் - முத நாள் முத ஷோ வே  பார்க்க ஆம்பளைங்க ஏன் அலையறாங்க ? 


அடுத்த ஷோ ல முக்கிய சீன் கட் பண்ணிட்டா?


9    புருசனுக்கு த்தெரியாம தப்புப்பன்னுனா கள்ளக்காதலனுக்கு அவ நல்லவளாத்தெரிவா . புருசனுக்குத்தெரிஞ்சே தப்பு செஞ்சா அவ அவிசாரியாத்தான் தெரிவா? 


10  செக்சுக்காகப்பணம் செலவு பண்றது தப்புன்னா இந்த உலகத்துல எல்லா ஆம்பளைங்களும் அந்த தப்பைப்பண்ணிட்டேதான்   இருப்பாங்க, இருக்காங்க

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S



1. பாண்டிய நாடு ஹிட் ஆனதால் விஷால் இப்போ டைட்டிலில் போஸ்டரில் புரட்சித்தளபதி # நா சி ம


சமர் இயக்குநர் திரு கேரக்டரைசேசனில் டீட்டெயிலா கலக்கறார் # நா சி ம

3  ஹீரோயின் கள் எல்லோரும் பிராபோட்டுத்தான் ஜாக்கெட்.ஆனாஹீரோக்கள் யாரும்பனியன்போடாமசட்டை. வெய்யில்க்கு வேர்க்காது?


4 கேமரா மேன் கிரேன் ஷாட் வைக்கும்போது ராட்டன் தூரில மேல இருந்து கீழே இறங்கிட்டே படம் பார்க்கறமாதிரி இருக்கு


5  ஹீரோ இன்ட்ரோக்கு நோ பில்டப்.சிங்கிள் சிம்ப்பிள் ஷாட்.ஹீரோயின் இன்ட்ரோ க்கு 18 கட் ஷாட் 23 நொடி ல # லட்சுமிமேனன்


6 உடை அணிவதில் ,ஆடை விலகாமல் பார்த்துக்கொள்வதில் கண்ணியக்கன்னி # லட்சுமிமேனன்


7  உன் ஆசைக்காதல் சொல்ல பாட்டுக்கான க்ரூப் டான்சருக்கான காஸ்ட்யூம் டிசைன் கலக்கல்.மராத்தி,ஒடிசி பாரம்பரிய உடை


8 இதுக்கு முன்னால ஒரு பொண்ணு இவ்ளவ் ஆக்ரோசமா தன் காதலை சொல்லி இருப்பாளா?னு தெரியலை னு சொல்லி பச்சக் னு லிப் கிஸ் அடிக்குது லட்சு


9  தங்கச்சியைக்கண் முன் ரேப் பண்ணுன வில்லனை பழி வாங்னா அது ரஜினி வெர்சன்.காதலியை ரேப் செஞ்ச வில்லனை பழி வாங்குனா அது விஷால் வெர்சன்


10  இடைவேளை வரை போர் அடிக்கவில்லை.நா சி ம.இயக்குநருக்கு ச்வால் இனி தான் காத்திருக்கு


11  புரட்சித்தளபதி என்பதால் தளபதி சூர்யா மாதிரி விஷால் தலைக்குப்பின்னால சூரியன் அடிக்கடி வருது.அய்யோ!!

12 பனி மலைல டூயட் னா மத்த ஹீரோயின் கள் எல்லாம் கஷ்டப்படுவாங்க.லட்சுவுக்கு ஒரு ஷோபா செட் கொண்டாந்து இறக்கிட்டாரு.விஷால்.லவ் மேட்டர் உண்மைதான்



13  காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் குடும்பப்பெண்கள் தவிர்க்கவும் # நா சி ம





சி பி கமெண்ட் - நா சி ம = சுவராஸ்யமான முன் பாதி,ஜீரணிக்க கஷ்டமான கலாச்சார சீர்க்கேட்டின் அடையாளப்படுத்தும் பின் பாதி -



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் - 2.5 / 5


விருதாச்சலம்  பிவிஜி யில்  படம் பார்த்தேன் 





உள்ளூர்ல படம் பார்த்தா சாதாத்தமிழன்.வெளியூர் போனாலும் டைம் டேபிள் போட்டுட்டு படம் பார்த்தா அவன் தான் வெட்டித்தமிழன்


    

4 comments:

Anbazhagan Ramalingam said...

Jet speed review. Congrats and thank u.

christo said...

Pvg Sound romba mosama irukume!

christo said...

PVG Bad sound and picture quality anga padam patha onnume puriyathey?!?

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...