1. ஒற்றுமை அவசியம்: தோழமைக் கட்சிகளுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் # சரக்குக்குக்காசு ஒருத்தர் தந்தா சைடு டிஷ்க்கு இன்னொருத்தர்,அதானே முறை?
=======================
2 மீனவர் நலனுக்காக பாடுபடுவது திமுகதான்: மு.க.ஸ்டாலின் # எம் ஜி ஆர்க்கு அடுத்து மீனவ நண்பன் நம்ம கலைஞர் தானா? சபாஷ்!
=====================
3 காற்றாலை உற்பத்தி சரிவு: ஒரு மணி நேர மின்வெட்டு அமல் # ரைட்டு , எலெக்சன் டைம்,பார்த்துக்குங்க, தமிழன் அதை வெச்சு பழிவாங்கிடப்போறான்
=====================
4 மத்திய அமைச்சர் சிதம்பரம் உங்களுக்கு ஏதாவது செய்தாரா? முதல்வர் ஜெ # இல்லைங்க , மேடம், அவரும் உங்களை மாதிரி தான் எதுவும் செய்யலை
======================
5 பாஜ.வை,ஜெ விமர்சித்து பேசாதது ஏன்?சிதம்பரம் கேள்வி.# ராகுலை விமர்சித்து நீங்க யாரும் பேசலையே , ஏன்? அது மாதிரி தான்
======================
6 :தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பட்சம் - விஜயகாந்த் # மகன் சம்முவப்பாண்டியை ஹீரோவாப்போட்டு படம் எடுக்கறதையா சொல்றீக?
=======================
7 மோடியிடம் சண்டை போடுவேன்: விஜயகாந்த் # ஹலோ, அப்போ எனக்கு என்ன வேலை இங்கே ? - அத்வானி
========================
8 தமிழகத்தில் மீண்டும் 10 மணி நேர மின் தடை: # கிலி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
====================
9 திமுகவில், குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை, பிரச்சாரம் செய்வார்-கலைஞர் # நன்றி தலைவா! சீனியர்களுக்கு மரியாதையும், வாய்ப்பும் தரும் ஒரே கட்சி
=======================
10 விக்ரம் +விஜய் மில்டன் = ‘இடம் மாறி இறங்கியவன்’ # டைட்டில்லயே இறங்கு முகம் இருக்கே?
=======================
15 கோச்சடையான் ட்ரெய்லரில் பொம்மைத்தோற்றத்தை கிண்டல் செய்யாமல் ரஜினி யின் குரல் கேட்டதும் ஆர்ப்பரிக்குது தியேட்டர் # ரஜினி மாஸ்
====================
16 தேர்தல் 2014: யாருக்கும் ஆதரவில்லை.. நடுநிலை வகிக்க ரஜினி முடிவு! # கோச்சடையான் எந்தக்கட்சிக்கும் ரீச் அடையான்
====================
17 மதிமுகவுக்கு ஆதரவு: ஆதரவாளர்களுடன் பேசி முடிவு - அழகிரி # சட்டுபுட்டுனு
அந்த 60,ஆதரவாளர்ட்டயும் பேசிடுங்க.பெரிய புரட்சி வெடிக்கட்டும்
====================
18 68 வயசாச்சு.. இனி காந்தி வழியில் பணியாற்றப் போகிறேன்.. ப.சிதம்பரம் #
அதெப்பிடிங்க ஒரு அரசியல்வாதியால பொய்யே பேசாம காலம் தள்ள முடியும்?
====================
19 அதிமுகவும் திமுகவும் நதிகளைக் கூட இணைக்கவில்லை! - கேப்டன் # இல்லையே!
இரு துருவமா இருந்த இருவரை ஒரே அணில இணைய வெச்சிடுச்சே கஜேந்திரரே!
====================
20 2ஜி ஊழல் ஒரு பெரிய ஊழலே கிடையாது! - மு.க.ஸ்டாலின் # ஓஹோ! கழகம் செஞ்ச ஊழல்லயே இது தான் சின்ன ஊழல் னு சொல்ல வர்றார் போல
===================
0 comments:
Post a Comment