யோகா குரு பாபா ராம்தேவின் 'தேனிலவு' பேச்சு எதிரொலியாக, தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச்
செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த யோகா குரு ராம்தேவ் மீது
உத்தரப் பிரதேச போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகா குரு பாபா
ராம்தேவ், லக்னோவில் பேசும்போது, "ராகுல் காந்தி தனது தொகுதியில் உள்ள
தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் செல்கிறார். அவர்
ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்தால், அந்த அதிர்ஷ்டத்தில்
பிரதமராகியிருப்பார். ஆனால், அவர் அதிர்ஷ்டமில்லாதவர்.
அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் பிரதமராக முடியாது என்று
தாயார் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், ராகுலோ இந்தியப் பெண்ணை
திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறார். அதனால், முதலில்
பிரதமராகும்படியும், அதன் பின்பு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம்
செய்துகொள்ளும்படியும் இப்போது சோனியா கூறி வருகிறார்" என்று ராம்தேவ்
பேசினார்.
ராம்தேவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சின் எதிரொலியால், தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம்
செய்யக்கூடாது என்றும், இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள
அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு பேசுவோர் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மத உணர்வைத் தூண்டும் வகையிலும்
பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ராம்தேவ் பிரச்சாரம் செய்ய தடை
யோகா குரு ராம்தேவ் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம்
மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில்,
உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை
விதிக்கப்படவில்லை.
இதனிடையே, தலித் சமுதாயத்தை இழிவுபடுத்திய ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நன்றி - த இந்து
Vasudevan Venugopal from Chennai
ஆத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பதுதான் யோகா என்று பதஞ்சலி யோக சாஸ்திரம் சொல்கிறது. எப்படிப் பத்மாசனத்தில் அமர்ந்து குண்டலினியை எழுப்பி மனதை ஒருநிலைப் படுத்தி "சாதனா" செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை விளக்குகிறது. இதை கற்றுக்கொள்ள ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு spiritual குருவின் வழிகாட்டல் தேவைப்படும். இதற்க்கு ஏதுவாக உடலைத் தயாராக்கிக் கொள்ளும் சில குறிப்பிட்ட உடற்ப் பயிர்ச்சிகளையே யோகா என்று நாளடைவில் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த ராம்தேவ் போன்ற கிராமத்துப் பாமரர்கள் உடலை அஷ்ட கோணலாக முறுக்கியும், வயிற்றை உள்ளிழுத்தும் டிவியில் காட்டி 'யோகா குரு" என்று பெயர் வைத்துக்கொண்டு மக்களின் அறியாமையைப் பணம் பண்ணினார்கள். ஆகவே, இப்படிப்பட்ட ஆசாமிகளிடமிருந்து கண்ணியமான பேச்சுக்களை எதிர்பார்க்க முடியாது. இவர்களையெல்லாம் பிரச்சாரத்திர்க்குப் பயன்படுத்திக்கொள்ளும் பிஜேபியைச் சொல்லவேண்டும்.about a month ago · (0) · (0) · reply (0)Manohararaj
இப்போதே இப்படி என்றால் மோடி வெற்றி பெற்றால் இந்தமாதிரி போலிகளின் இம்சைகள் கட்டுகடங்காமல் போய்விடும்.about a month ago · (4) · (2) · reply (0)Ahmad from Jeddah
போலி சாமியார் ராம்தேவ் ஒரு குடும்பஸ்தராக இருந்தால் இப்படிப்பட்ட தகாத வார்த்தைகளை அள்ளி வீச மாட்டார்.துறவறம் அவரை பக்குவப்படுத்தியதாக தெரியவில்லை.எப்போதும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது இவரின் வாடிக்கை ஆகி விட்டது.இவர் பிஜேபி இக்கு பிரச்சாரம் செய்வது மட்டும் மதச் சார்பு ஆகாதா?இவரின் சர்ச்சைக்குரிய பேச்சை பூசி மெழுகும் பிஜேபி,அது அவரின் சொந்த கருத்து என்று சொல்லுவது நயவஞ்சகத்தனம்.யோகாவை சொல்ல வேண்டிய இவருக்கு அரசியல் எதற்கு?about a month ago · (0) · (1) · reply (0)a.s.ragunathan from Mumbai
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் நிஜமாகவே அடக்கத்துடனும் ஓரளவு கட்டுப்பாடுடனும் பேசுவதாக தெரிகிறது. மற்றவர்கள் குறிப்பாக பிஜேபி லீடர்ஸ் நரேந்திர மோடி உள்பட அனைவரும் கண்ட மேனிக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே பேச்சில் மிகவும் திமிர் தெரிகிறது. ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தவறினால் அப்போது தெரியும் சேதி.about a month ago · (3) · (0) · reply (0)ssm Up Votedguna from Chennai
குரு என்கிற வார்தையியே இழிவுபடுத்தி விட்டார் .சாதாரண மக்கள் வார்த்தைகளை அளந்து பேசும்போது இத்தகைய பிரபலங்கள் இப்படி பேசுவது சமூகத்தையே இழிவுபடுத்தும் செயலாகும்.எந்த முகத்தை கொண்டு இனி ஆயிரக்கனக்காநோருக்கு இவர் யோகா பயிற்றுவிப்பார் ?சட்ட வல்லுனர்கள் அரசியல் சட்டத்திற்குட்பட்டு குறைந்த பட்ச தண்டனையாவது இவருக்கு பெற்று தரவேண்டும் .about a month ago · (0) · (0) · reply (0)
0 comments:
Post a Comment