16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் நாளைய தினம் தனது ஜனநாயக கடமையை ஆற்ற
இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களின்
கள நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்:
பொன்.ராதாகிருஷ்ணன்:
கன்னியாகுமரி தொகுதியில் இவருக்கும் காங்கிரஸ் வேட் பாளர்
வசந்தகுமாருக்கும் பலமான போட்டி. பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால்
மத்திய அமைச்சர் எனப் பிரகடனம் செய்யப் படுவதாலும், மோடி அலை வீசுவதாலும்
நம்பிக்கையுடன் முன்னணியில் நிற்கிறார் பொன்னார்.
வைகோ:
திமுக-வின் தலித் வாக்கு வாங்கியை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரிப்பது போல்
அதிமுக-வின் முக்குலத்தோர் வாக்கு வங்கியை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்
தாகூர் பங்குபோடலாம். மக்கள் காங்கிரஸை ஒதுக்கித் தள்ளினால், விருதுநகரில்
வைகோ தனது வெற்றிக்காக சிரமப்பட வேண்டும். இவருக்கு பாதகமான ஒவ்வோர்
அம்சமும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக அமையும்
டி.ஆர்.பாலு:
சொந்த மண் கைகொடுக்கும் என்கிற தைரியத்தில் நின்றாலும், இவரை எதிர்த்து
நிற்கும் அதிமுக வேட்பாளர் பரசுராமனின் வெற்றியில் வைத்திலிங்கத்தின்
அமைச்சர் பதவியின் ஆயுள் நீடிப்பும் உள்ளதால், அதிமுக-வினர் பம்பரமாகச்
சுழல் கிறார்கள். ஆனால், டி.ஆர்.பாலு வெற்றி பெற் றால் தொகுதிக்கு நல்ல
காரியம் நடக்கலாம் என நடுநிலையாளர்கள் சிந்திக்கிறார்கள்.
எல்.கே.சுதீஷ்:
இவருக்கும், திமுக-வின் உமாராணி, அதிமுக-வின் பன்னீர் செல்வத்துக்கும்
கடும் போட்டி. உமாராணி சிறுபான்மையினர் வாக்கு வங்கியை வைத்தும்
பன்னீர்செல்வம் அதிமுக வாக்கு வங்கியை வைத்தும் மிரட்டினாலும் பாமக,
தேமுதிக கூட்டணி பலத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார் சுதீஷ்.
அன்புமணி ராமதாஸ்:
தருமபுரி தொகுதி யின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிப்பது வன்னியர் ஓட்டுகள்
என்பது இவருக்கு ப்ளஸ் பாயின்ட். மோடி அலை, தேமுதிக, கொங்கு கட்சிகளின்
கணிசமான வாக்கு வங்கியைக் கணக்குப் போட்டு தெம்பாகவே களத்தில் நிற்கிறார்
அன்புமணி.
திருமாவளவன்:
திமுக தெம்பில் மீண்டும் களம் இறங்கி இருக்கிற இவரை, அதிமுக-வும் பாமக-வும்
எளிதில் கரைசேரவிட மாட் டார்கள் போலிருக்கிறது. கடந்த முறை திருமாவுக்கு
ஆதரவாக விழுந்த ஓட்டுகளில் பெரும்பகுதி பாமக-வுக்கு பாயலாம். அப்படி
நடந்தால் அதிமுக-வுக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.
மணிசங்கர் ஐயர்:
ஒட்டுமொத்த காங்கி ரஸ் எதிர்ப்பு அலை இவரை இரண்டாம் இடத்தில் கூட நிற்க
விடாது போலிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும்
அதிமுக-வும் இங்கு நேரடிப் போட்டியில் உள்ளன
.
கார்த்தி சிதம்பரம்:
சிவகங்கையில் மற்ற கட்சிகளே வியக்கும் அளவுக்கு தேர்தல் பணியை காங்கிரஸ்
கட்சி செய்துள்ளது. ஆனாலும் கூட்டணி தோழர்கள் இல்லாததால் இங்கேயும்
காங்கிரஸுக்கு தள்ளாட்டம்தான். தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்ற காங்
கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கார்த்தியும் இடம்பிடிக்கலாம்.
ஆ.ராசா:
2ஜி ஊழலை மாற்றுக் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் ஆ.ராசா போட்டியிடும்
நீலகிரி தொகுதியில் அதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை. பாஜக வேட்பாளரின்
வேட்பு மனு தள்ளுபடியானதும் முகம் தெரியாத வேட்பாளரை அதிமுக நிறுத்
தியதும், ராசாவுக்கு ப்ளஸ் ஆகும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
திருப்பூரில் பெரும்பாலானவர்கள் மாற்றத்தை விரும்பி, மோடி என்ற மந்திரச்
சொல்லுக்கு கட்டுப் பட்டுக் கிடக்கிறார்கள். எனவே, இங்கு தேமுதிக-வுக்கும்
அதிமுக-வுக்கும்தான் நிஜ போட்டி என்பதால் இளங்கோவ னுக்கு எத்தனையாவது இடம்
என்று கணிக்கவே முடியவில்லை.
பாரிவேந்தர்:
பெரம்பலூரில் சுமார் 80 ஆயிரம் பார்க்கவ குல ஓட்டுகள், தேமுதிக ஓட்டுகள்,
மோடி அலை இவைகளை நம்பி களத்தில் நிற்கிறார். திமுக வேட் பாளர் சீமானூர்
பிரபுவும் அதிமுக வேட் பாளர் மருதைராஜாவும் முத்து ராஜா இனத் தவர்களாக
இருப்பதால் அந்த வாக்குகள் இரண்டாக பிரிகின்றன. இதுவும் ஐஜேகே தரப்பின்
தாராள பணப் புழக்கமும் வேந்தருக்கு சாதகமாக அமையலாம்.
சி.பி.ராதாகிருஷ்ணன்:
மின்வெட்டு பிரச்சினை அதிமுக; திமுக கட்சிகள் மீது கடும் அதிருப்தியை
உண்டாக்கி இருக்கின்றன. கோவை வாக்காளர்களிடம் தலைக் காட்டும் பாஜக
பற்றுதலும் ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக இருந்தாலும் அவரை மிக அருகில்
நெருங்கிக் கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜன். இந்த
அலையில், இங்கு போட்டியிடும் இன்னொரு வி.ஐ.பி-யான காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரன்
- பொள்ளாச்சி தொகுதியில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திமுக வேட்பாளர்
பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் மகேந்திரன் மூவருக்கும் இடையில்
சரிநிகர் போட்டி. மூவருமே கவுண் டர்கள் என்றாலும் ஈஸ்வரன் சாதி கட்சி
வேட்பாளராக தெரிவதால் கவுண்டர்களின் ஆதரவு இவருக்கு கூடுதலாகவே உள்ளது.
தேமுதிக; மதிமுக; பாஜக அலை இதெல் லாம் முழுமையாக கைகொடுத்தால் மட்டுமே
ஈஸ்வரன் வாகைசூடமுடியும். இல்லா விட்டால் அந்த வாய்ப்பை அதிமுக தட்டிச்
சென்றுவிடலாம்.
திருநாவுக்கரசர்:
இவர் எம்.ஜி.ஆர்.அதிமுக என்ற கட்சியை நடத்திய போது இங்கே கணிசமான
ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்களும் அதிமுக-வும் திமுக-வும் முஸ்லிம்
வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் அந்தக் கட்சிகளில் உள்ள முக்குலத்தோரும்
தன்னை ஆதரிக்கலாம் என நினைக்கிறார் அரசர். ஆனால், இவருக்கு விழும் ஓட்டுகள்
அனைத்துமே அதிமுக- ‑வுக்கு வேட்டு வைப்பதால் திமுக வேட்பாளர் ஜலீல்
ராமநாதபுரத்தில் தன்னெழுச்சியாக வெற்றிப் படிக்கட்டுகளை தொடும் சூழல்
நிலவுகிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி:
தென்காசி தொகுதியில் இவருக்கும் மதிமுக வேட்பாளர் சதன்
திருமலைக்குமாருக்கும்தான் போட்டி. ஏற்கெனவே இங்கு தனித்து நின்றே லட்சம்
வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ள கிருஷ்ணசாமி, அந்த வாக்கு வங்கியையும்
திமுக-வின் கூட்டணி பலத்தையும் நம்புகிறார். தொகுதியில் உள்ள
சிறுபான்மையினர் ஓட்டுகளில் பெரும்பகுதி இவருக்கு சாதகமாக விழலாம் என்று
கணிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் சதன் திருமலைக்குமாருக்கு
சிக்கல்தான்
Keywords: விஐபி தொகுதி, திருமாவளவன், டி.ஆர்.பாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற தேர்தல், பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, ஆ.ராசா
thanx - the hindu
- ச.புகழேந்திதஞ்சையில் மீத்தேன் எதிர்ப்பு டி.ஆர்.பாலுவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்..about 4 hours ago · (0) · (3) · reply (0)
- இரா.சிந்தன்சிபி ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன் எல்லாம் தமிழகத்தின் வி.ஐ.பிகள், உ.வாசுகி போன்ற கம்யூனிஸ்டுகள் விஐபி இல்லை?about 9 hours ago · (17) · (20) · reply (2)Nalavirumbi · ச.புகழேந்தி Up Voted
- annamalaiவாசுகியா யாரது? பிரச்சாரத்திற்கு போகும்போது ஜனங்கள் ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிவித்தபோது மகிழ்ச்சியோடு கழுத்தில் மாட்டிகொண்டாரே அவரா? ஆமாம் அவர் Very VIP தான். அவர் வெற்றி நிச்சயம். அவரை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும் டெபொசிட் காலிதான். போதுமா சிந்தன்? திருப்தியா?
0 comments:
Post a Comment