Friday, April 25, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (25 4.2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. என்னமோ ஏதோ’
கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் ரவி தியாகராஜன் (பிரியதர்ஷனின் முன்னாள் உதவியாளர்). பாடல்களை எழுதியிருப்பவர் கார்க்கி. 



இந்தப் படத்தில் சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள். ‘நீ என்ன பெரிய அப்பாடக்காரா?’ என்ற அந்தப் பாடலைப் பாடியிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். ஆனால், அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா கிருஷ்ணன்தான்.
 


டீ.இமானே பாடியுள்ள ‘முட்டாளாய் முட்டாளாய்’ ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.
 


"ஷட் யுவர் மவுத்’ பாடலில் ஸ்ருதி ஹாசனின் குரலை வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தீபக், பூஜா பாடியுள்ள ‘மொசலே மொசலே’ பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.
 


"புதிய உலகை’ பாடல் மூலம், கடந்த ஆண்டின் புகழ்பெற்ற மலையாளப் பாடலான ‘காட்டே காட்டே’ (செல்லுலாய்டு) பாடலைப் பாடிய மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம். 



ஈரோடு அபிராமி
 

2 வாயை மூடிப்பேசவும் -
துல்கர் சல்மான், நஸ்ரியா மற்றும் பலர் நடித்திருக்கும் வாயை மூடிப் பேசவும் திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இப்படம் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படமாகும்.

வாயை மூடிப் பேசவும் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிள்ளது. குறிப்பாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை எதிர்பார்ப்பினைக் கிளப்பும் வண்ணமாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீன் ரோல்டன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் நடிகையான மதுபாலா இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார்.

வாயை மூடிப் பேசவும் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை - ஏப்ரல் 25- வெளியாகவுள்ளது.


ஈரோடு  வி எஸ் பி

 
3 என்னமோ நடக்குது'. டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி. வினோத்குமார் தயாரிக்கும் படம் 'என்னமோ நடக்குது'. இதில் நாயகனாக விஜய் வசந்த், நாயகியாக மகிமா நடிக்கின்றனர். பிரபு, ரகுமான், தம்பி ராமையா, கும்கி அஸ்வின், சரண்யா, சுகன்யா, நமோநாரயாணா, திருமுருகன், அழகம் பெருமாள், வின்சென்ட் அசோகன், சவுந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது தன் காதலியின் பிரச்சினைக்காக ஒரு வேலையை ஒத்துக்கொள்கிறான்  நாயகன். அதன் பிறகு அவ்வேலையை அவன் ஏற்றதற்கான பின்னணி தெரிய வருகிறது. அதில் இருந்து வெளியே வருவதற்குள் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான். பிரச்சினை பின்னால் இரு பெரிய தலைகள் இருப்பது புரிகிறது. அதில் இருந்து எப்படி தப்பி காதலியுடன் சேருகிறான் என்பது கதை.

இப்படத்துக்காக குட்டி ரேவதி ஆகாயம் விழுகிறதே என்ற பாடலையும் யுகபாரதி ஓரக்கண்ணா சாய்ச்சு நீ என பட பாடலையும் விவகோ மீச கொக்குதான் பாடலையும் கங்கைஅமரன் வா இது நெத்தி அடிதான் என்ற பாடலையும் யுகபாரதி மணி, மணி பாடலையும் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு: ஏ. வெங்கடேஷ், இசை: பிரேம்ஜி அமரன், எடிட்டிங்: பிரவீன் கே.எல்.ஸ்ரீகாந்த்.



வெங்கட்பிரபுவின் படங்களில் தலைகாட்டும் காமெடி நடிகராகவே பிரேம்ஜியை அறிந்த பலருக்கு, அவர் ஒரு இசையமைப்பாளர் என்பது தெரியாது. ஆனால், அப்பா கங்கை அமரனின் வழியைப் பின்பற்றி அவரும் 5 தமிழ்ப் படங்கள், ஒரு தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய லேட்டஸ்ட் படம், அவருடைய நண்பர் விஜய் வசந்த் நடிக்கும் "என்னமோ நடக்குது".



குட்டி ரேவதி எழுதியுள்ள "ஆகாயம் வீழ்கிறதே" என்ற முதல் பாடலை பிரேம்ஜியே பாடியுள்ளார். பியானோவின் வருடலுடன் தொடங்கும் அந்தப் பாடல், உத்வேகம் தரும் இனிமையான ஒன்று. ஆனால், இடையிடையே வரும் அந்த முரட்டுக் குரல் தொந்தரவு செய்தாலும் இந்தப் படத்தின் ஹிட் பாடலாக இது மாறலாம்.


யுகபாரதி 2 பாடல்களை எழுதியிருக்கிறார். "மணி மணி" பாடலை ரஞ்சித்தும் பிரேம்ஜியும் பாடியிருக்கின்றனர். தாளம் போட வைக்கும் பாடல். யுகபாரதி மற்றொரு பாடலான "ஓரக்கண்ண சாச்சு நீ"யை ஹரிசரண்தான் பாடியுள்ளாரா என்று சந்தேகம் வருகிறது. வழக்கமாக ஹைபிட்ச் பாடல்களைப் பாடும் ஹரிசரண், இந்த மாறுபட்ட பாடலைப் பாடியுள்ளார்.



"வா இது நெத்தியடிதான்" பாடலை மனோவுடன் இணைந்து பாடியிருப்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி. "கலாசலா"வுக்குப் பிறகு அவர் பாடியுள்ள ஹாட் பாடல். அநேகமாக இந்தப் படத்தின் குத்துப் பாடல் தேவையை இது நிறைவு செய்யும்.
விவேகா எழுதியுள்ள "மீச கொக்குதான்" பாடலை விஜய் யேசுதாஸ், சைந்தவியுடன் இணைந்து பாடியுள்ளது சரண்யா பொன்வண்ணன். கிராமத்து மெட்டில் அமைந்த இந்தப் பாடல் ஓகே ரகம்.



சில பாடல்கள் பழைய மெட்டுகளை ஞாபகப்படுத்து கின்றன. அதேநேரம், பிரேம்ஜியின் அக்மார்க் அடையாளமான ராப் இசையை இந்த ஆல்பத்திலும் பார்க்க முடிகிறது. பல பாடல்கள் கவர்கின்றன. இவ்வளவு திறமை இருந்தும் ஏன் பிரேம்ஜியை இசையமைப்பாளராக பலரும் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது புரியவில்லை.


 


 4 போங்கடி நீங்களும் உங்க காதலும் -குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும், கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். உதவி இயக்குனரான இவர் இயக்குனர் வாய்ப்பு கிடைக்காததால் ஹீரோவானார். ஆனால் நடிப்பதற்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஒரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு சில வருடங்களாக சுற்றித்திரிந்தார். ஆனால் கதையைக்கேட்டவர்கள், கதை நன்றாக இருக்கிறது அந்த நடிகருக்கு பொருத்தமாக இருக்கும். இந்த நடிகருக்கு பொருத்தமாக இருக்கும் என்றுதான் சொன்னார்களாம். யாருமே தாங்கள் நடிக்க முன்வரவில்லையாம். அதன்பிறகுதான் தனது கதையில் தானே நடிக்க முடிவெடுத்தாராம் ராமகிருஷ்ணன்.

அப்படி முடிவெடுத்தபிறகு அவர் சந்தித்த தயாரிப்பாளர்கள் வேறு யாராவது மார்க்கெட் இருக்கிற நடிகரை வைத்து படம் பண்ணலாமே என்றார்களாம். இப்படியாக ஆளாலுக்கு ஒரு கருத்தினை சொல்ல வெறுத்துப்போன ராமகிருஷ்ணனுக்கு கடைசியாக ஒரு தயாரிப்பாளர் கிடைகக் இப்போது 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற அந்த படத்தை இயக்கி தானே நாயகனாகவும் நடித்து விட்டார்.

அவரிடத்தில், படத்தின் டைட்டிலே பெண்களுககு எதிரானது போல் தெரிகிறதே? என்று கேட்டதற்கு, இது முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவான படம் என்கிறார். திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமின்றி, திருமணமான பெண்களுக்கும் ஆதரவான படம் இது. நண்பனை நம்பி ஏமாந்த பெண், காதலனை நம்பி ஏமாந்த பெண் என்று ஏமாற்றப்படுகிற பெண்களைப்பற்றியான படம். பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் என்கிறார்.

போங்கடி நீங்களும் உங்க காதலும் என்பது ஒரு ஆண் பெண்களைப்பார்த்து சொல்வது அல்ல, பெற்றோர் மகள்களைப்பார்த்து சொல்வது போன்றுதான் கதை பண்ணியிருக்கிறேன். அதனால் இப்படம் பெண்களுக்கு எதிரானது என்று யாரும் கருத வேண்டாம் என்கிறர்ர் ராமகிருஷ்ணன்.


 ஈரோடு கிருஷ்ணா
 

SUN OF GOD -சென்னை,ஏப்.15 (டி.என்.எஸ்) இயேசு நாதரின் வாழ்க்கை படமான 'சன் ஆஃப் காட் (Sun of God) என்ற ஆங்கிலப் படத்தை இயேசு அழைக்கிறார் ஊழிய சேவை நிறுவனமும், இண்டோ ஓவர்சீஸ் ஃபிலிம் நிறுவனமும் இணைந்து இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.

தமிழில் 'இயேசு' என்ற தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று இந்தியாவில் உள்ள முக்கிய திரையரங்குகளில் வெளியாகிறது.

இயேசு நாதரின் போதனைகள், அவருடையா வாழ்க்கை, அவருடைய மறிப்பு உள்ளிட்டவையைக் கொண்டு பல படங்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மிக அதிக பொருட்ச்செலவில் இப்படம் உருவாகியிருந்தாலும், எதார்த்தத்தை மீறாமல் காட்சிகள் அனைத்தும் மக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

இயேசு அழைக்கிறார் ஊழிய சேவையின் நிறுவனர், டாக்டர்.பால் தினகரன், இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் வெளிப்படுத்தின அன்பையும், மனதுருக்கத்தையும் இந்தியா முழுவதும் கொண்டுச் செல்வதற்காக 'இயேசு'திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியபோது, அவருக்கு பக்கபலமாக நின்றுள்ளனர் இண்டோ ஓவர்சீஸ் பிலிம் நிறுவனத்தினர்.

இப்படம் குறித்து டாக்டர். பால் தினகரன் கூறுகையில், "இயேசு என்கிற இந்த திரைக்காவியம் பார்த்து மகிழ வேண்டிய பொழுதுபோக்குத் திரைப்படமல்ல, மாறாக உன்னத அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த பரிசுக் காவியம். இந்த திரைப்படத்தினை பார்வையாளர்கள் ஆர்வத்தோடு, உற்சாகத்தோடும் கண்டுகளிப்பார்கள்.

இப்பொழுதும், தனிச்சிறப்பு வாய்ந்த இயேசு திரைப்படமானது இயேசுவின் வாழ்க்கைச் சரித்திரத்தை தெளிவாக சித்தரித்து, அனைவரும் விரும்பும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. தெளிவாகவும், விவரமாகவும் சேர வேண்டிய எலையை அநேக திருப்பங்களுடன் நிறைந்த இந்த பிரம்மாண்ட காவியம், வலிமையான நடிப்புகளோடும், வெளிநாட்டு சூழ்நிலைகளையும் அருமையாகப் படம் பிடித்து, ஆஸ்கார் பரிசு பெற்ற ஹான்ஸ் ஜிம்மரின் தனிச் சிறப்பு வாய்ந்த இசைக் கலவைக் கொண்டும் இயேசு உருவாக்கப்பட்டிருக்கிறது.

போர்ர்த்தூகீசிய நடிகரான டியாகோ மொர்கடோ, தத்ரூபமாக இயேசுவைப் போன்று நடித்துள்ளார்.இப்படம் இயேசுவின் எளிமையான பிரதிபிலிருந்து, அவருடைய போதனைகள், சிலுவைப்பாடுகள் மற்றும் அவருடைய உயிர்தெழுதல் என சகலத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திரைப்பட காவியமானது சமுதாயத்தில் பல நிலையிலிருக்கும் அனைத்து தரப்பட்ட தலைவர்களையும் ஒன்று சேர்த்து, அவர்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளது. இப்படத்தை தயாரித்தவர்கள் இப்படத்தின் துவக்கத்திலிருந்தே மற்றெல்லோரோடும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உன்னத அனுபவத்தை வைத்திருக்கிறார்கள்." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)This major motion picture event is an experience created to be shared among families and communities across the U.S. It brings the story of Jesus' life to audiences through compelling cinematic storytelling that is both powerful and inspirational. Told with the scope and scale of an action epic, the film features powerful performances, exotic locales, dazzling visual effects and a rich orchestral score. The film spans from Jesus' humble birth through his teachings, crucifixion and ultimate resurrection


 ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை  , கோவை பிக் சினிமா
 

6 HOLLYWOOD GIRLS 2- தமிழில் நர பலி நாயகி என டப் செய்யப்பட்டு வருது

7Brick Mansions (2014)
n a dystopian Detroit, abandoned brick mansions left from better times now house only the most dangerous criminals. Unable to control the crime, the police constructed a colossal containment wall around this area to protect the rest of the city. Undercover cop Damien Collier is determined to bring his father's killer Tremaine to justice and every day is a battle against corruption. For Lino, every day is a fight to live an honest life. Their paths never should have crossed, but when Tremaine kidnaps Lino's girlfriend, Damien reluctantly accepts the help of the fearless ex-convict, and together they must stop a sinister plot to devastate the entire city.
 ி
 நன்றி -  தினமலர் , மாலை மலர் , அனைத்து சினிமா நெட் இதழ்கள்

 Brick Mansions Movie HD Wallpaper 16

0 comments: